Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக உண்ணா விரதம் இருப்போம். பாராளுமன்றில் செல்வம்

Featured Replies

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 24, 2010

Selvam Telo

தமிழர் பிரதேசங்களில் காணி அபகரிப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழர் பகுதிகளில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அங்கு விகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முறையற்ற வேலை வாய்ப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீள் குடியேற்றப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மழைக் காலம் தொடங்கி விட்டமையால் அவர்கள் மீண்டும் அகதிகளாகவுள்ளனர். மழைக்கு ஒதுங்குவதற்கு பாடசாலையோ கோவிலோ இல்லை.

யுத்தம் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகின்ற போதிலும் மன்னார் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கு தற்போதும் பாஸ் நடைமுறையில் உள்ளது. கடலுக்குள் இறங்குவதற்கு பாஸ் பெற வேண்டும். புலிகள் அழிக்கப்பட்டு விட்டால் இந்த கட்டுப்பாடு எதற்கு?, பாஸ் எதற்கு? வடக்கு, கிழக்கில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அதுவும் ஒரு சிறு பிரிவினருக்கே வழங்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கில் வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களில் விகிதாசாரம் பேணப்பட வேண்டும். இல்லையேல் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம் முறையற்ற, தகுதியற்ற வேலை வாய்ப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

தமிழ் பகுதியில் காணி அபகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலைமை தொடர்ந்தால் இதற்கெதிரான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்ணா விதரம் இருக்கும்.

Eelanatham.net

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் அண்ணை சும்மா சொல்லமாட்டார்.

சொல்வதை என்றும் செய்து காட்டுபவர்.

கட்டாயம் உண்ணாவிரதம் இருப்பார்.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் திலீபன் போன்று யாராவது அங்கு களமிறங்கினால் தான் இப்ப உள்ள நிலைமை சாத்தியபடும்.. அகில உலக ஜன நாய்க ம் என பீற்றி கொள்ளும் நாடு(ய்)களுக்கு கொஞ்சம் ஏறும்... ஏறும் என்பதை விட போட்ட நாய் வேசத்திற்காக குரைத்துதான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படும்.. அதனை முன்பு போல இல்லாமல் இந்த முறை அனைத்து ஊடகங்களிலும் வரசெய்து உலகத்தின் கவனத்தினை திருப்பவேண்டும்..

டிஸ்கி:

நான் உண்ணாவிரதம் என்று குறிப்பிட்டது தமிழக கைத்தடிகளின் செரிக்காத சாப்பாட்டுக்கு 3 மணி நேரம் பீச்சில் காத்து வாங்கும் நிகழ்ச்சி அல்ல.. அத்தோடு சிங்களத்தின் ஜில் ஜிலிப்பா பொய் வாக்குறிதிகளை நம்பியும் கைவிடலாகாது..

... முதலில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலைமைகள் ... யூ.என்.பி, ஜே.வி.பி, முஸ்லீம் காங்கரஸ் போன்றன சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது! ... சிங்கள கட்சிகளுக்கே இந்த நிலைமையாயின் தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்குள்ள இன்றைய சூழலில் செயற்படுவதில் இருக்கும் அழுத்தங்களை நாம் உணர வேண்டும்!! ... தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதை அல்ல சிங்களம் இல்லாமல் செய்யவே விருப்பப்படுகிறது!!! அதை கடந்த காலங்களில் மகிந்த போன்றோரின் உரைகளே ... "இலங்கையில் மொழிசார் கட்சிகள் இனி தேவையில்லை" ... தெளிவாக சொல்லியிருக்கிறது!!! அங்கு அவர்களின் இருப்புகளுக்கே என்ன நடைபெறும் என்றே தெரியாத நிலையில் அவர்கள்!!!! அதை தெளிவாக புரிந்து கொள்வோம்!!! ....அதை விடுத்து ...

.. கஜேந்திர குதிரைகளுக்கு காசை கட்டி விட்டு, கூட்டமைப்பின் பாராளுமன்ற ஆசனங்களை உடைத்து டக்லஸுக்கு கொடுப்பதையும், சிங்களம் விரும்பும் செயலான இக்கூட்டமைப்பை உடைப்பதையும், அவர்களுக்கு நாம் புலி முலாம் பூசி, சிங்களத்தின் வலையில் மாட்ட வைப்பதையும், மக்கள் அவர்களை வெறுக்கும் தேவையற்ற விமர்சனங்களை வைப்பதையும்..

நிறுத்த வேண்டும்!!!..

இன்று அங்கு, புலம்பெயர் மக்களாகிய எமக்கிருக்கும் ஒரே ஒரு தமிழ் மக்கள் நலன்சார் நம்பிக்கையான செயற்பாட்டாளர்கள தமிழ் தேசிய கூட்டமைப்பே!!! அவர்களை நாம் ஒதுக்கக்கூட்டாது! அதே நேரம் அவர்களின் பொறுப்புகளையும், அவர்கள் செய்ய வேண்டியதையும் சுட்டிக்காட்டுவோம் ... தொடர்ந்து!!!

... ஒன்றை புரிவோம் ... தமிழ் தேசிய கூட்டமைப்பு... அங்கு நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள், மக்களின் அவலங்கள், இராணுவ அச்சுறுத்தலுகளை, ... போன்றவற்றை இவ்வாறு பகிரங்கப்படுத்தாவிடில் ... அங்கு எஞ்சியிருக்கும் மாற்றுக்கருத்து ஒட்டுக்குழுக்களை வைத்தே, வெளியே குரல்கள் வராமல், சிங்களம் தான் விரும்புவதை எல்லாம் நிறைவேற்றி விடும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.