Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீனகம் இணையத்திற்கு பலரின் வாழ்த்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரம் நீயானாய்; மீனகமே!!- பாவலர் வித்யாசாகர்

ஈழத்து சுவடுகளை முகத்திலெழுதி

உண்மை நிகழ்வுகளை செய்தியாக்கி

உணர்வு பிழம்புகளுக்கு உயிர் தந்து

எளியோரையும் கவர்ந்தாய்; இமயம் தொட்டாய்!

தமிழர் நிலையை காட்சியாக்கி

தமிழின் வளமையை உலகின் விழிகளிலெழுதி

உனை படிப்பதை எங்களுக்கு – தலையெழுத்தாக்கினாய்

உலகின் தெருவெல்லாம் மீனக பெயரெழுதினாய்!

ரகசியம் உடைத்தும் – சமரசம் செய்தாய்

அரசர் ஆண்டியாயினும் நீதியுரைத்தாய்

தவறென்று வந்தாலோ முகம் பாராமல்

மன்னிக்கவும் சொன்னாய், பண்பில்; மாண்பு பெற்றாய்!

வரலாற்றினை பதிவுகளாக்கி -

அரசியலுக்கு அடிபணிய மறுத்து -

தரத்தில் குன்றிடாத உழைப்பினால், தரணி முழுக்க

வளம் வந்தாய்; வரம் நீயானாய்!

செய்ய இரண்டென்றும், பேச ஒன்றென்றும் – குவித்த உன் வெற்றியில்

படைப்பவர் உன் கைக்குள் அடங்கிப் போனார்; நீ

படைப்பாளிகளுக்குள் அடங்கி போனாய்; உலகம்

கொட்டக் கண் திறந்து உன்னை தனக்குள் அடக்கிக் கொண்டது!

நன்றி பூப்பதில் நலிவின்றி வள்ளலானாய்

இன்றியமையாத செய்திக்கு நீயே முதன்மையானாய்

காலம் தவறாத பணியால் -

ஞாலம் புகழட்டும்; தமிழர் வாழ்வும் மலரட்டும்;

வாழிய வாழிய; மீனகமே!!!

————————————————————————————————————-

வித்யாசாகர்

http://vidhyasaagar.com/

சிறிய நம்பிக்கை கீற்றாக தோன்றிய மீனகம் – save tamils movement

September 24th, 2010 Edit

savetamils

தமிழரின் வாழ்வில் வேதனையும் சோதனையும் நிறைந்திருந்த 2009 ஆம் ஆண்டில் , எல்லா நம்பிக்கைகளும் தகர்த்தெரியப் பட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் சிறிய நம்பிக்கை கீற்றாக தோன்றிய மீனகம் தன் காத்திரமான பங்களீப்புடன் இன்று தமிழின் முன்னணி இணைய தளமாக ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. நேரலை என்கிற புதுமையை புகுத்தி எல்லோருக்கும் செய்திகளையும் கருத்துகளையும் கொண்டு சேர்க்கும் மீனகம் தொடர்ந்து தன் பணியைத் தொடர எங்கள் வாழ்த்துகள்.

Save Tamils Movement

Website: http://save-tamils.org/

Google groups: http://groups.google.co.in/group/save-tamils

Facebook: http://www.facebook.com/profile.php?ref=profile&id=100000523099231

Twitter: http://twitter.com/savetamils

Orkut: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=58284862

Blog: http://save-tamils.blogspot.com/

YouTube: http://www.youtube.com/user/Tamilsfortamileelam

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் த.செ.மணி அவர்கள் மீனகம் தளத்தின் ஓராண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தங்களின் நடனக்கலையின் மூலம் ஈழ நிலவரத்தினை உலகக்கு தெரியப்படுத்திவரும் பிறேம் பிறேமினி ஆகியோ மீனகம் தளத்தின் ஓராண்டுக்கு தங்கள் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

http://www.youtube.com/watch?v=K8mpEzO6Wy4&feature=player_embedded

www.meenakam.com

  • கருத்துக்கள உறவுகள்

8801.gif

வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து ஊடகத்துறையில் எத்தகைய சவால்களையும் சவாலோடு ஏற்று மேலும் தமிழ் மக்களுக்கு பணியாற்ற வேண்டுகிறேன். மேலும் வளர இனிய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே

வணக்கம்

தமிழர்களுக்கான இணைய ஊடகங்கள் பல இருப்பினும். கடந்த 24.09.2009 அன்று தொடங்கப்பட்ட எமது www.meenakam.com இணைய ஊடகம் தமிழர்களை எவ்வித குழப்பத்துக்குள் ஆளாக்காமல் செயல்பட்டு ஓராண்டை நெருங்கவுள்ளோம்.

பல்வேறு ஊடகங்களுக்கு நடுவில் தனித்துவமிக்கதாக உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக சேவையாற்றிவருகிறோம். “வரலாறே எமது வழிகாட்டி” என்பதற்கிணங்க தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை திரட்டி பதிவு செய்துவருகிறோம். இணைய ஊடகங்களில் முதன் முறையாக எவ்வித கட்டணமின்றி இலவயமாக தொடர்ச்சியாக நேரலை ஒளிபரப்பிலும் ஈடுபட்டுவருகிறோம்.

எமது இச்சேவையின் வளர்ச்சிக்கு உலகத்தமிழர்களாகிய நீங்களே காரணம். உலகத்தமிழ் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஒரே ஊடகம் எமது மீனகம் இணைய ஊடகம் மட்டுமே என்பது உலகத்தமிழர்களாகிய நீங்கள் அறிந்ததே.

இவ் ஓராண்டில் எமது ஊடக சேவைக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும் சே.பாக்கியராசன், பாவலர் வித்தியாசாகர், செல்லையா பரராஜசிங்கம், தயாளன் சபாரத்தினம், பெயர் வெளியிட விரும்பாத சிங்கப்பூர் மற்றும் தமிழக தமிழர்களுக்கும் அவ்வப்பொழுது எமக்கு பங்களித்துவரும் உறவுகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதே போல் எமது ஊடகத்தினை சிறப்புடன் நடத்த ஆலோசனை வழங்கி உதவிவரும் தரவு விமல், மலர்வனம் நிரோ, தமிழம் பொள்ளாச்சி நசன் மற்றும் எமது ஊடகம் மக்களிடம் சென்றடைய உதவிய தமிழ்வெளி புருசோத்தமன், தமிழ்மணம், தமிழிசு, தமிழ்10 , பகலவன், நாம் தமிழர் கூகுள் குழுவினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது தளத்தினை தொடர்ச்சியாக பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிந்துவரும் இலக்குவனார் திருவள்ளுவன் மற்றும் அசோக் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்களின் விடியலுக்காக செயல்பட்டுவரும் அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் எமது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

2010 செப்டம்பர் 24 அன்று ஓராண்டை நெருங்கும் எமது தளத்தினைப்பற்றிய நிறைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம்.

நன்றி

மீனகம் குழுவினர்

meenakam.com@gmail.com

+44 121 288 5334

*********************************************************

எமக்கு வந்த மின்னஞ்சல்கள்:

1) இனிய மீனகம் குழுவினருக்கு,

மீனகம் இணையதளம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

பேரன்புடன்,

சக்தி.

*********************************************************

2) Best Wishes Rupan

Ithayachandran

( ithayachandran@hotmail.co.uk )

*********************************************************

3) அன்பு வணக்கம்,

தன் உழைப்பாலும், தனி திறத்தாலும் செம்மையுறுகிறீர்கள். எனவே உங்களை சார்ந்து தமிழர் நலனும் தமிழர் சார்ந்து ஒரு உழைப்பின் வெற்றியும் அனைவரின் பார்வையில் வெள்ளப் படுமென்றே உதவ எண்ணி நீண்ட இக்கரங்கள் உங்களின் நற்பணிக்கும், தமிழ் தமிழர் சார்ந்து கொடுக்கும் குரலுக்குமென எப்பொழுதுமே நீளும்!!

உங்களை விரிவு படுத்தி எங்களையும் கெளரவிப்பதில் நாங்களும் நன்றியானோம்!

வித்யாசாகர்

குவைத்

http://meenakam.com/about

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.