Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர் போகும் ஈழப்போராட்டம் - குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

94238644.jpg

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர எந்த மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.இது ஈழ ஆதரவாளர்களிடையே வேதனையான விஷயமாக இருந்து வந்தது.

இந்நிலையில் ஈழப் போராட்ட வரலாற்றை காஷ்மீர் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறார் பேராசிரியர் கிலானி.

‘மே 17 இயக்கம்’ சார்பில் ஈழப் போராளி திலீபன் நினைவு நாள் நெல்லையில் அனுசரிக்கப்பட்டது.இதில் காஷ்மீர் விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் மனித உரிமைப் போராளி கிலானி கலந்து கொண்டார்.யார் இந்த கிலானி டெல்லி பல்கலைக்கழகத்தின் உருதுப் பேராசிரியரான கிலானி நாடாளுமன்றத் தாக்குதலின் போது கைது செய்யப்பட்டார்.தாக்குதலுக்கு இவர்தான் மூளையாகச் செயல்பட்டார் என்று கூறி தூக்குதண்டனை வரை கொண்டுபோய் நிறுத்தியது காவல்துறை.விசாரணையில் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளானார்.உயிர் பிழைத்துக் கொண்டாலும் இன்னமும் அவர் உடலில் நான்கு புல்லட்டுகள் இருக்கின்றனவாம். துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் எனத் தெரியவில்லை என போலீஸ் சொன்னாலும் ‘ரா’ வின் வேலைதான் என்கிறார்கள் கிலானி ஆதரவாளர்கள். அவர் பேசும்போது,

‘‘காஷ்மீர் என்பது ஒரு தனி நாடு. 1850-களில் அங்கு செல்ல வேண்டுமென்றால் விசா அவசியம்.விசா இல்லாமல் சென்ற ஜன சங் தலைவரையே கைது செய்து சிறையிலடைத்தது காஷ்மீர் அரசு. இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் போது ஐ.நா.தலையிட்டு போர் நிறுத்தம் செய்ததோடு ராணுவம் நிற்கும் இடத்தில் லைன் ஆஃப் கண்ட்ரோலை உருவாக்கியது. அந்த லைன் ஆஃப் கண்ட்ரோல் என்பது ஒரு கற்பனைக் கோடு. நிலத்தில் கோடு எதுவும் வரையவில்லை. ஆனால், இந்தியாவும் பாகிஸ்தானும் லைன் ஆஃப் கண்ட்ரோல் வரை உள்ள பகுதி தங்களுக்கே சொந்தம் என்று கூறி வருவதுதான் பிரச்னையின் ஊற்றுக்கண்.

1950-ம் ஆண்டு நேருவும், ஷேக் அப்துல்லாவும் கலந்து கொண்ட கூட்டத்தில் ‘காஷ்மீர் மக்கள் விரும்பும் வரைதான் இந்திய ராணுவம் காஷ்மீரில் இருக்கும்’என்றார் நேரு.ஆனால் 1994-ல் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இன்றைக்கு உலகிலேயே அதிக ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் நாடு காஷ்மீர்தான். 450 தீவிரவாதிகள் இருப்பதாய்ச் சொல்லி அவர்களைப் பிடிக்க 7லட்சம் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு 70 வயது பிச்சைக்காரரைக் கொன்று விட்டு, அவரை முன்னாள் லக்ஷர் இதொய்பா தளபதி என்கிறார்கள்.எட்டு வயதுச் சிறுவன் கூட ராணுவத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.

பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கிறார்கள்.

சமீபத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் அங்கு சென்ற போது காஷ்மீர் மக்கள் எழுப்பிய கோஷம் எங்களுக்கு விடுதலை வேண்டும் என்பதுதான்’’ என்று காஷ்மீர் விடுதலையின் அவசியத்தைத் தெளிவாக கூறி விட்டு அமர்ந்தார்.

22ayo.jpg

தமிழகத்தில் திலீபன் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஈழப்பிரச்னை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை அப்செட்டாக்கியது.

அடுத்துப் பேசவந்த கவிஞர் காசி ஆனந்தன்,‘‘காஷ்மீரிலாவது இரண்டு தடவை ஐ.நா. தலையிட்டது. ஆனால், ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது யாருமே கண்டு கொள்ளவில்லை. இன்றைக்கும் முள்வேலிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.பெண்கள் பாலியல் ரீதியாய் துன்புறுத்தப்படுகிறார்கள்.சுமார் நாற்பதாயிரம் புலிகளை அழித்து விட்டோம் என்று குதூகலிக்கிறார்கள்.அந்தப் புலிகளுக்கு நெருங்கிய ரத்த உறவினர்கள் இரண்டு லட்சம் பேரின் இதயத்திலாவது தீ கனன்று கொண்டிருக்கும்.அது தனி ஈழம் அமையும் வரை ஓயாது’’ என்றவர்,பேராசிரியர் கிலானியைப் பார்த்து,‘‘காஷ்மீர் மக்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தமிழ்நாட்டில் தமிழர்கள் மேடை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.அதுபோல் நீங்கள் காஷ்மீரில் எங்களுக்கு மேடை அமைத்துத் தாருங்கள்’’ என்றார்.

மறுநாள் தான் தங்கியிருந்த ஓட்டலில் காசி ஆனந்தன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களிடம் ஈழப்பிரச்னை குறித்து வெகுநேரம் உரையாடியிருக்கிறார் கிலானி. இதில் விடுதலைப்புலிகள், பிரபாகரன், ஈழ வரலாறு குறித்து அவருக்கு தெளிவாக விளக்கியிருக்கிறார் காசி ஆனந்தன். அதனை கவனமாகக் கேட்ட கிலானி, ‘காஷ்மீரில் ஈழ ஆதரவுக் களம் அமைக்க ஒப்புக் கொண்டார்’ என்கிறார்கள்.

இதுபற்றி மே 17 இயக்கத்தின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லேனா.குமாரிடம் பேசினோம்.‘‘ஈழ மக்களின் துயரம் கேட்டு அதிர்ந்து போன கிலானி, காஷ்மீர் மக்களும், ஈழ மக்களும் படும் துன்பங்கள் ஒரே மாதிரியானவைதான்.இந்திய ராணுவத்தால் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே காஷ்மீரில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிப் பேசினால் அந்த மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

அது சம்பந்தமான ஆடியோ, வீடியோக்களை எனக்கு அனுப்பி வையுங்கள். காஷ்மீரில் உள்ள பத்திரிகைகளில் அதை பிரசுரம் செய்வோம்.

அப்போதுதான் காஷ்மீர் மக்கள் பிரச்னையைப் புரிந்து கொண்டு ஈழ விடுதலைக்கு ஆதரவு தருவார்கள் என்றபோது எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி’’ என்றவர் தொடர்ந்து,

‘‘முள்ளிவாய்க்காலில் அவ்வளவு பெரிய துயரம் நடைபெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் எந்த ரியாக்ஷனும் இல்லை.

எனவேதான் தனி ஈழப் போராட்ட வரலாற்றை இந்தியா முழுக்க கொண்டு செல்லப் போகிறது மே 17 இயக்கம். அதன் முதல்கட்டமாக பேராசிரியர் கிலானியைப் பேச வைத்திருக்கிறோம்.அடுத்தகட்டமாக தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர் வரவரராவ்,பஞ்சாப் பத்திரிகையாளர் ஜக்மோகன்சிங், காஷ்மீர் ஹூரியத் தலைவர் கிலானி ஆகியோரையும் அழைத்து வந்து பேச வைக்கப் போகிறோம்.இதன் மூலம் இந்தியா முழுக்க தனி ஈழக் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதுதான் எங்கள் திட்டம்’’ என்றார்.

ஈழ மக்களின் நல்வாழ்வு இந்தியாவைத் தவிர்த்து சாத்தியமில்லை என ஈழ ஆதரவாளர்களே ஒப்புக்கொள்ளும் நிலையில், மே 17 இயக்கத்தினரின் இந்த முயற்சி நிச்சயம் பயனளிக்கும் என நம்புவோம்.

ஏ.டி. சாமி

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரத்து விடுதலைபோராட்டத்தை அழித்துவரும் இந்திய மத்திய அரசு ஒருபோதுமே ஈழப்போராட்டம்பற்றிய விழிப்புணர்வு அங்கு ஏற்படுவதை விரும்பப்போவதில்லை. இது புலிகளையும், எமது சுதந்திரப் போராட்டத்தையும் மேலும் மேலும் இந்தியாவில் தடைசெய்து, எமக்கு அழிவுகளை ஏற்படுத்தவே உதவும். இஸ்லாமியப் போராளிகளுக்கும், புலிகளுக்கும் தொடர்பிருக்கிறது. ஆகவே அவர்களைத் தொடர்ந்தும் தடை செய்து வைத்திருக்க வேண்டும் என்கிற இந்திய நாய்களின் ஊளை தொடரப்போகிறது.

அவசியம்/தேவையற்ற அரசியல்!

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டில் நான்கு புறத்தாலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும்போது இந்திய சோனியா அரசு வழிக்கு வந்தே ஆகவேண்டும். அந்த வகையில் மே 17 இயக்கத்தவரின் செயற்பாடுகள் ஆக்கபூர்வமாக உள்ளன..! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசியம்/தேவையற்ற அரசியல்!

நாட்டாமை தீர்ப்பு சொல்லி விட்டார் எல்லாரும் மூடிக்கொண்டு போக வேண்டியதுதான் :wub::lol:

நாட்டாமை தீர்ப்பு சொல்லி விட்டார் எல்லாரும் மூடிக்கொண்டு போக வேண்டியதுதான் :wub::lol:

:D:D:):):)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு வெத்து வெட்டுகள் மைக்கு கிடைத்தால் அதை எச்சில் தெறிக்க பேசி அதை நனைப்பதோடு.... கேட்பவர்கள் அனைவரும் மறுநாள் ENT ஸ்பெசலிஸ்டை பாக்க வேண்டியிருக்கும்... :D அதை விடுத்து இவரை போன்ற ஆட்களை... மனித உரிமை ஆர்வர்களை... வெளிநாடுகளுக்கு வரவழைத்து ஈழம் சார்பாக பேச வைக்கவேண்டும்.. அப்போது தான் ஏதோ நடக்கிறது என் இந்திய கூட்டமைப்பு திரும்பி பார்க்கும்... தமிழ்நாட்டு கத்தல் கோஸ்டிகளை வரவழைத்தால் ... இவர்கள் கத்திவிட்டு போய்விடுவார்கள்... நமக்கு ஒன்றும் பாதகம் இல்லை யென்றே நினைக்கும் :)

டிஸ்கி:

முடிந்தால் கிசண்ஜி மாவோ தலைவரை வரவழைத்து பேச வைக்க வேண்டும்... இல்லாத பிரிவினைவாததிற்கு முன்பு புலிகளைகாட்டி பூச்சாண்டி காட்டினார்கள்... இன்று புலிகள் இயக்கம் செயலற்ற நிலையில் யாரை கைகாட்டுவார்கள்? ஒரு ஒட்டு மொத்த சமூகத்தினையா?

டிஸ்கிக்கு டிஸ்கி:

இவ்வாறான செயலில் அமைப்பின் ஊடாக செயல்படுபவர்கள்..." மனித உரிமை காப்போர் சங்கம் " மற்றும் "உலக ஜனநாய்க காப்போர் சங்கம்"," காந்திஜி அகிம்சை நல சேவா சங்கம்"... என்ற பதங்களை தங்கள் அமைப்புக்கு பாவித்தல் வேண்டும் அத்தோடு மாநாடு கருத்தரங்கம் போன்றவற்றிக்கும் இதே பெயரை சூட்டவேண்டும்.. காசுமீர் மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளவாதாக அடித்து விடவேணும்....சுருக்கமாக சொன்னால் முள்ளை முள்ளால் எடுக்க வேணும்:o:lol:

83221294.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சர்வதேசம் யார் யாரை பயங்கரவாதிகள் என்கிறதோ??? ... அவர்களோடு எதிரி மட்டுமல்ல, நாமே போட்டி போட்டு எம்மைச் இணைத்து முத்திரை குத்துவோம்!! ... தொடர்ந்து எம் அரசியல்களை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரிவினைவாத சக்திகளுடன் சேர்ந்து நடத்துவோம்!!! .... எமக்கு விடிவு நிட்சயம்!!!!!!!!!??????? ....வாவ்வ்வ்வ்வ்வ் .... யூதனுக்கு அடுத்த மூளையுள்ளவர்களல்லாவா நாம்????????

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லைக்கு அடுத்தமுறை இந்திய விசா தரமாட்டானோ எண்டு கவலை வந்துட்டுது..! :o:lol::)

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

இது கிந்திய கூட்டமைப்பு விசுவாசிகளுக்கு :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி,

ரோஜா, நான் கனவிலும் பார்க்க விரும்பாத ஒரு திரைப்படம். இதியத் தேசியத்துக்காக தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க விரும்புகிறானாம் ஒரு திருநெல்வேலித் தமிழன். இறுதியில் எதிரிகளிடம் எரிபடும் இந்தியத் தேசியக் கொடியையும் தனதுடலைப் போர்த்தே காப்பாற்றுகிறானாம். சரி, அதை விடுங்கள்.

தமிழீழப் போராட்டத்துக்கும் காஷ்மீரத்து விடுதலைப் போராட்டத்துக்கும் பாலம் அமைப்பது என்பது எம்மை இன்னும் இக்கட்டில் மாட்டிவிடும் ஒரு நடவ்டிக்கை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியப் பயங்கரவாத அரசைப் பொறுத்தவரை நாம் இருவருமே எதிரிகள். அதன் வேலை இன்னும் இலகுவாகிவிடும். சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாகக் காட்டப்படும் காஷ்மீரத்து இஸ்லாமியப் போராளிகளுடனானான எமது பாலம் என்பது எம்மை மேலும் மேலும் தடைகளையும், தடை நீட்டிப்புகளையும் முகம் கொடுக்கச் எய்யப்போகிறது என்பதே எனது வாதம்.

எமக்குத் தேவையெல்லாம் தமிழகத்துச் சகோதரன் உணர்வுபெற்று எழுவதுதான். அப்போதுதான் நம் எல்லோருக்குமான விடிவு பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி,

ரோஜா, நான் கனவிலும் பார்க்க விரும்பாத ஒரு திரைப்படம். இதியத் தேசியத்துக்காக தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க விரும்புகிறானாம் ஒரு திருநெல்வேலித் தமிழன். இறுதியில் எதிரிகளிடம் எரிபடும் இந்தியத் தேசியக் கொடியையும் தனதுடலைப் போர்த்தே காப்பாற்றுகிறானாம். சரி, அதை விடுங்கள்.

தமிழீழப் போராட்டத்துக்கும் காஷ்மீரத்து விடுதலைப் போராட்டத்துக்கும் பாலம் அமைப்பது என்பது எம்மை இன்னும் இக்கட்டில் மாட்டிவிடும் ஒரு நடவ்டிக்கை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியப் பயங்கரவாத அரசைப் பொறுத்தவரை நாம் இருவருமே எதிரிகள். அதன் வேலை இன்னும் இலகுவாகிவிடும். சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாகக் காட்டப்படும் காஷ்மீரத்து இஸ்லாமியப் போராளிகளுடனானான எமது பாலம் என்பது எம்மை மேலும் மேலும் தடைகளையும், தடை நீட்டிப்புகளையும் முகம் கொடுக்கச் எய்யப்போகிறது என்பதே எனது வாதம்.

எமக்குத் தேவையெல்லாம் தமிழகத்துச் சகோதரன் உணர்வுபெற்று எழுவதுதான். அப்போதுதான் நம் எல்லோருக்குமான விடிவு பிறக்கும்.

ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு ... இங்கு தினசரி ஊடகம் தொலைகாட்சி தொடங்குகிற வழியைபாருங்கள் அவன் காசுமீர் மக்கள் இன்னல்களை உலகம் பூரா வெளிச்சம் போட்டு காட்ட பாகிஸ்தான்ரனின் பி.டி.வி இருக்க்கு உம்மவருக்கு... ஏதோ சானல் 4 காட்டினார்கள் எனறால் கைதட்டிவிட்டு போய்விடுவீர்களா? சார்புள்ளவர்களிடத்தில் ஊடகம் தொடங்குவது த்னிசிறப்பு...

kizhakku_kadar_m.jpg

கிழக்கு கடற்கரை சாலை என்று ஈழத்து முதலாளி படம் எடுக்கிறராம் அந்த படம் 1 நாளாவது ஒடியிருக்குமா ? சொல்லுங்கள் அந்த காசை தினசரி வரும்படி பேப்பரையாவது 5 கிசுகிசு போட்டு வெளியிட்டு இருந்தால் நன்மை வரும் ...

ayngaran_logo.gif

இதில் அய்யங்காரன் பிலீம்ஸ் இன்டரேசனல் வேறு.... வெளிநாட்டு உரிமையை மொத்தமாக வாங்கி கொள்பவர்கள்... இவர்கள் போன்ற்வர்கள் ஊடகம் தொடங்க வைக்கோ... நெடுமாறன்... சீமான் ....போன்றவர்களுக்காவது உதவி செய்யலாம்... :D

வெளிநாட்டில் இன்னும் கோப்பைதான் கழுவி கொண்டு இருக்கிறார்கள் என்றால் எனக்கு கோவம் வரும்(உரிமையில் சொல்லுகிறேன் ).... :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசம் யார் யாரை பயங்கரவாதிகள் என்கிறதோ??? ... அவர்களோடு எதிரி மட்டுமல்ல, நாமே போட்டி போட்டு எம்மைச் இணைத்து முத்திரை குத்துவோம்!! ... தொடர்ந்து எம் அரசியல்களை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரிவினைவாத சக்திகளுடன் சேர்ந்து நடத்துவோம்!!! .... எமக்கு விடிவு நிட்சயம்!!!!!!!!!??????? ....வாவ்வ்வ்வ்வ்வ் .... யூதனுக்கு அடுத்த மூளையுள்ளவர்களல்லாவா நாம்????????

ஏன் நாங்க நோர்வே மற்றும் மேற்குலக நாடுகளுக்கு வன்னியில் செங்கம்பள உபசரிப்பளித்து அவர்கள் சொன்ன சொல்லெல்லாம் கேட்டு அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்கவேண்டும் என்று எத்தனையோ விட்டுக்கொடுப்புகளைச் செய்து, அவர்கள் மூதூரில் இருந்து பின்வாங்கு என்றால் பின்வாங்கி ..... இப்படியெல்லாம் நடந்தும் அவர்கள் எங்களுக்குப் பரிசளித்ததெல்லாம் என்ன? முள்ளிவாய்க்கால் அவலம் தானே?

என்று புலி தன் பாயும் குணத்தை கைவிட்டு மென்மையாக மாற வெளிக்கிட்டதோ அன்றிலிருந்து தான் புலியின் அழிவு ஆரம்பமானது.

இன்று நாம் பின்பற்றவேண்டியது ராஜபக்ச வழி. அவன் ரொபேர்ட் ஓ பிளேக்க்குடன் விருந்து சாப்பிட்டு விட்டு பின் அகமிதினிஜாட்டை கட்டியணைப்பான்.

ஒருவர் காஷ்மீரோடு சேரட்டும். இன்னொருவர் இந்தியாவின் காலில் விழட்டும். மற்றொருவர் சீனாவுக்கு செங்கம்பளம் விரிக்கட்டும். அப்போது எம்மை கேட்டு கேள்வியில்லாமல் அழிக்க எவனும் யோசிப்பான்!

.......

என்று புலி தன் பாயும் குணத்தை கைவிட்டு மென்மையாக மாற வெளிக்கிட்டதோ அன்றிலிருந்து தான் புலியின் அழிவு ஆரம்பமானது.

......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.