Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி தெரியாக் காயங்கள்

Featured Replies

நண்றாக இருக்கிறது கதையின் போக்கு. உங்களின் வலைப்பதிவையும் இப்பதான் படிக்க ஆரம்பித்தேன். இன்னும் முடிக்கவில்லை.

  • Replies 120
  • Views 14.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரு நாள் துர்க்கையம்மன் கோவிலுக்குப் போக ஆயத்தபடுத்தும் போது, அம்மாவுக்கு கோவிலுக்கு வரமுடியாத சூழ்நிலை துர்க்கையம்மன் தேருக்காக விரதம் இருந்த வேணிக்கும் கோவிலுக்கு போக துணையாக யாரும் இல்லை.

அப்போ தான் சைக்கிளில் சிவப்பழமாக வேட்டியுடன் வந்தான் சண். அவனைப் பார்த்த வேணியின் அம்மா "தம்பி தயவுசெய்து வேணியையும் கூட்டி கொண்டு போறீங்களா?" என்று கேட்டா. !சரியம்மா வேணியை அவவின் சைக்கிளில் வர சொல்லுங்கோ" என்று சொல்லி விட்டு இருவருமாக துர்க்கையம்மன் கோவிலுக்கு போகும் போதுஇ அத்தனை சந்தோசம் வேணிக்கு. இன்று 7வது செவ்வாய் கிழமை தான் நேர்ந்தது போல் இந்த முறை சண் கூட வருவது மகிழ்ச்சிய்யாகவும் இருந்தது வேணிக்கு.

அவ்வழியாக வந்த அவள் நண்பிகள் சந்தோசமாக அவளை பார்த்து சிரித்தார்கள் கடவுளே நாளைக்கு சரி பள்ளிக்கூடத்தில் என்னை நக்கலடித்தே ஒரு வழி பண்ணப்போகினம் என்று நினைக்கவே ஏதோ வெட்கம் அவளை பிடுங்கித் தின்றது.

ஒருவாறு சண் உடன் கதைத்தபடியே கோவிலில் அவனுடன் வீதியை சுற்றும் போது, அவள் மனதார அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. அவளைத் தெரிந்தவர்கள் எல்லாம் அவளை பொறாமையுடன் பார்த்தார்கள். கூட படிக்கும் தோழிகள் மெல்ல வந்து காதில் "ம்ம் நல்ல இருக்கிறார் புளியங்கொம்புதான்டி வேணி" என்று கிசுகிசுத்து விட்டு போனார்கள் 8 முழவேட்டியுடன் மார்பு முழுவதும் சால்வையால் மறைத்து இருந்தாலும் அவன் ரோமமும் அகன்ற நெஞ்சும் ம்ம் அழகான ஆம்பிளை தான் என்று தன் கண்களாலே விழுங்கினாள் வேணி. தேர் முட்டியில் அர்ச்சனை பண்ண நின்றபோது சண் இடிபாட்டுக்குள் அவனுடன் நெருங்கியே நிற்க வேண்டி வந்தது. கோழிகுஞ்சை அடைகாக்கும் கோழி போல அவளில் யாரும் இடிக்கமால் கவனமாக பாதுகாத்துஇ அவள் பேருக்கும் அவனே டிக்கெட் எடுத்து தன் குடும்பம் அவள் குடும்பம் என்று சேர்த்து அர்ச்சனை செய்யும் போது கூட படிக்கும் தோழியும் அப்போதுதானா அருகில் வர வேண்டும் ஜயர் சொன்ன பேர்கள் எல்லாமே அவள் காதிலும் விழுந்துவிட்டது அவள் இவளைப் பார்த்து கண்ணடித்தாள்.

-தொடரும்-

  • தொடங்கியவர்

வலி தெரியாக்காயங்கள் பாகம் 11

கண்ணடித்த நண்பி அருகே வந்து அவளிடம் மெல்ல "நல்ல காதலனடி, காதலி குடும்பத்துக்கும் பார்த்து கடவுளை கும்பிடும் நல்ல ஆளு தான்" என்று சொல்ல வேணியோ என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தாள்.

ஆறுதலாக கும்பிட்டு விட்டு வெளியே வந்த சண் வேணியிடம் "வேணி எனக்கு ஒரு ஆசை என்றான்" "என்ன ஆசை சொல்லுங்கோ" என்று ஆவலுடனும் ஆசையுடனும் கேட்டாள் வேணி "ம்ம் எனக்கு கோவில் மடத்தில் சாப்பிட ஆசையா இருக்கு வாறிங்களா சாப்பிடுவோம்" என்று கேட்ட போது அம்மா சமைத்து வைத்திருக்கும் சமையல் நினைப்ப்பு வந்தது ஆனாலும் சண்ணுடன் சேர்ந்து சாப்பிடுவது சந்தோசமாக இருந்தது "சரி வாங்கோ சாப்பிடுவோம் என்று அவனையும் அழைத்துக் கொண்டு போனாள். அங்கேயும் அவளுக்கு விதி விளையாடியது. பக்கத்து வீட்டு அங்கிளும் வாசலில் நின்றார் அவளை பார்த்து விட்டு தடை இல்லாமல் உள்ளே சாப்பிட விட்டார். சண்னையும் சேர்ந்து பார்த்தவர் நமுட்டு சிரிப்புடன் வழி விட்டார். நாளைக்கு அவரின் மனைவி அன்னம்மாக்கா ஊர் முழுக்க பறை தட்டப்போறா என்ற யோசனையுடன் பந்தியில் சண்ணுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். அங்கேயும் அப்பாவின் சினேகிதர் தான் சாப்பாடு போட்டார் "ஓ பிள்ளை எப்படி சுகம் இதுயாரு? என்று கேட்ட போது" எனக்குத் துணையா கோவிலுக்கு வந்தவர் என்று மட்டும் சொன்னாள் வேணி. அவர் சந்தேகத்துடன் திரும்பி திரும்பி பார்த்தபடியே போனார்.

சாப்பிட்ட சண் க்கு இவர்களின் பொடிவைத்த பேச்சு புரியவில்லை ஆனால் வேணி மட்டும் ஏதோ அவஸ்தை படுவது புரிந்தது. "என்ன வேணி மூட் குழம்பி இருக்கிறீங்க சொல்லுங்கோ?" என்று கேட்டவனிடம் வெளியே போனதும் சொல்கிறேன் என்று சொன்னாள்.சாப்பிட்டுமுடிந்தத

  • தொடங்கியவர்

அடுத்த நாள் காலையிலேயே அன்னம்மாக்கா வந்து விட்டா விடுப்பு கேட்க. வேணியின் அம்மாவிடம் "என்ன அக்கா என்ரை மனிசன் நேற்று வேணியைய்யும் அந்த கொழும்புத்தம்பியையும் ஒண்டா பார்த்தவராம்.ஏன் நீங்கள் போகேல்லை" என்று சொல்ல அம்மா சொன்னா "நான் தான் அனுப்பினான் கூட்டி கொண்டு போக ஆரும் இல்லை என்ன செய்ய உதவிக்கு அந்த தம்பியுடன் போனா" என்று அவ வாயை அடைத்தா அம்மா.

ஆனால் நேற்று சண் சொன்னது அவளால் நம்ப முடியவில்லை அவனிடம் திரும்பவும் அந்த வார்த்தைகளை கேட்க ஆசையா இருந்தது ஆனால் எப்போ திருப்பி சண்ணை பார்ப்பது அவர்கள் வீட்டுக்கும் போக வெட்கமாக இருந்தது. ஆசை வெட்கமறியாது அம்மாவிடம் சொல்லி விட்டு நோட்ஸ் புத்தகம் வாங்க போவதாக சொல்லி விட்டு போனாள்.

அவர்கள் வீட்டுக்கு கிட்ட போகும் போது கால்கள் பின்னியது மெதுவாக அன்னம் போல் நடந்து போனாள். அங்கே வாசலில் நின்றான் சண் வேணியை பார்த்ததும் அவன் ஒரு கனிவுடன் "வாங்கோ வேணி அம்மா வீட்டை இல்லை ஏதும் வேணுமா? ஓம் உங்களிட்டை கலாநிதி சித்திர வடிவேல் எழுதிய விலங்கியல் புத்தகம் இருக்கா? இருந்தால் தாங்கோ" என்று உளறினாள் "ம்ம் அது உங்களிடம் தானே தந்து விட்டேன் என்ன இது குழப்பமா நான் நேற்று சொன்னது உண்மை தான் யோசிக்காமல் இருங்கோ அம்மா வந்தால் பிறகு வாங்கோ "என்று அவளை அனுப்பினான்.

-தொடரும்-

இந்திரஐித் அருமையாக போகின்றது.. தொடர்ந்து எழுதுங்கள்.. காத்திருக்கின்றோம்.

நன்றாக எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள் இந்திரயித் தொடருங்கள் காத்திருக்கின்றோம்.

அடுத்து என்ன நடக்குமோ என்று அறிய ஆவலாக இருக்கிறது.

இந்திரஜித் கதை நன்றாக உள்ளது.

தொடர்ந்து எழுதுங்கள்.. காத்திருக்கின்றோம்

இந்திரஜித் கதையை நகர்த்திசெல்லும் விதம் நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு வாசிக்கும் போது ஒரு சின்ன உறுத்தல் வந்தது. சினிமா மாதிரி கீரோயிசம் கதையில் தலைதுக்குகிறாதா என. தப்பா தெரியலை. வாசிக்கும் போது என்மனதில் தோன்றியது.

கதை நன்றாக போகிறது.. அடுத்தபாகம் எப்போ

போடுவீங்கள்?

இந்திரஜித் கதை மிகவும் சுவாரிசியமாக நன்றாக போகிறது. தொடர்ந்து எழுதுங்கள்

இந்திரஜித் அடுத்த பாகத்தை எங்களை தவிக்க விடாமல் இணையுங்கள் :lol:

  • தொடங்கியவர்

தாமதத்துக்கு மன்னிக்கவும் மற்றவர்களின் கதைகளும் நன்றாக போகின்றபோது சற்று இடைவெளி விட்டு விட்டேன் நாளை முதல் அமர்க்களமாக தொடரும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

வலி தெரியாக்காயங்கள் பாகம் 12

வேணியின் மனதில் மெலிதான ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. சண் யோசிக்க வேண்டாம் என்று சொன்னாலும் சராசரி ஒரு இளம் பெண்ணின் ஆசாபாசங்கள் இருக்கும் தானே.? கூட படிப்பவர்கள் வேறு பகிடியாக சண் ணுடன் இணைத்து பேசும் போது அவள் அறியாமல் மனதில் சண் மேல் அன்புவளர்ந்தது என்னவோ நிஜம் தான்.

ஒரு நாள் எதேச்சையாக சண்ணை யாழ் டவுணுக்குள் கண்ட போது குப்பென்று மனது துடிக்கத் தொடங்கியது. அருகேவந்த சண் "என்ன வேணி சுகமா?" என்று அன்புடன் கேட்டு விட்டு "அவசரமாக வீட்டை போறீங்களோ?இல்லை நேரம் இருக்கோ?" என்று கேட்டான்.

அவள் "இல்லை அவசரம் ஒன்றும் இல்லை" என்று சொன்னாள். "அப்ப சரி வாங்கோ ஐஸ்கிறPம் குடிக்க கூல்பாருக்கு போவோம்" என்று கேட்டான். சரி என்று ஏதும் மறுப்புச் சொல்லாமல் அவனின் பின்னாலே போனாள் வேணி. அவனுக்கு சமனாக நடக்கும் படி சொன்ன சண் அவளிடம் சொன்னான் "துர்க்கையம்மன் கோவிலில் ஐஸ்கிறிம் சாப்பிட்ட பிறகு இப்போ தான் உங்களுடன் தனியா கதைக்கிறேன்" என்று விட்டு வேணியின் முகத்தை பார்த்தான்.அவள் முகத்தில் ஒரு சந்தோசம் மனதுக்கு பிடித்தவன் கூட நடக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம் மறுபக்கம் தெரிந்தவர்கள் யாரும் பார்த்தால் வீட்டுக்கு தெரிய வருமே என்ற பயமும் அவள் மனதை சற்றே குழப்பியது.

ராஜா கூல்பார் கூல்பாரினுள் வந்து எதிர் எதிராக அமர்ந்தர்கள் இருவரும். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த சண் முகத்தை பார்க்க முடியாமல் சைட்டில் இருந்த கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்தாள் வேணி. அவர்களின் அமைதியை குழப்பியபடி வந்த வெயிட்டர் என்ன சாப்பிட போறீங்கள் என்று கேட்ட போது சண் வேணியிடம் "உங்களுக்கு என்ன விருப்பம் சொல்லுங்கோ" என்று கேட்டான். அவளுக்கு அவன் தன்னை மதித்துக் கேட்டது பிடித்து இருந்தது. இல்லை "உங்களுக்கு பிடித்ததை சொல்லுங்கோ " என்று சொன்ன வேணியிடம் "சரி உங்களுக்கு பிடித்தது என்ன என்று தெரியும்" என்று சொல்லிவிட்டு ஒரு புருட் சலாட்ஜெலிவனிலா ஐஸ்கிறீமும் தனக்கு ஜஸ்கிறீம் சர்பத்தும் ஓடர் பண்ணினான். அவைகள் வரும் வரை அவளுடன் கதைத்தபடியே மேசையில் அவள் கை வைத்து இருந்த போது யாரும் பக்கத்திலோ பார்வையிலோ இல்லை என்ற தைரியத்தில் ஆசையாக அவள் கைகளைப்பற்றினான் சண். அதிர்ந்து விட்டாள் வேணி அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவன் கை பட்ட போது என்னவோ செய்தது கையை விடுங்கோ யாரும் வர போகினமெல்லெ என்று சொன்னலும் வேணிக்கு அவன் கையை அப்படியே பிடித்து இருக்க வேணும் என்று ஆசையாக இருந்தது கையை பிடித்த சண் உங்க கை சரியான மென்மையாக இருக்கு வேணி என்று தடவினான் மெல்ல அவள் விரல்களை தடவிய படியே பேசினான் சண் ரகசியமாய் "வேணி என்கூட பழகவிருப்பமா" என்று கேட்ட சண்னை சின்ன பிள்ளையை பார்ப்பது போல் பார்த்து விட்டு நாணத்துடன் கேட்டாள் "பிடிக்காமல நான் உங்களுட்ன் இங்கே வந்தேன் இது தான் முதல் முறை நான் கூல் பாருக்கு வந்தது" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது வெயிட்டர் ஐஸ்கிறிம் கொண்டு வருவது கண்டு "கையை விடுங்கோ" என்று சொன்னாள் வேணி. ஆள் வருகுது என்டு கையை பிடித்து இருந்த சண் இக்கு கையை விட மனமில்லை இருந்தாலும் வேணிக்கு சங்கடம் வேணாமே என்று கையை விட்டான் இப்படி எத்தனை ஜோடியை பார்த்த அந்த வெயிட்டர்க்கு இவர்கள் தவிப்பு புரிந்தது. புரியாத மாதிரி ஐஸ்கிறீமை கொடுத்து விட்டு அகன்றார். இருவரும் மௌனமாக ஐஸ்கிறீம் சாப்பிடத் தொடங்கினர்கள். அப்போது சண் கேட்டான் "வேணி நீங்க சாபிட்ட ஐஸ்கிறீமை எனக்கு தாங்கோ" என்று "சீ என்ன இது நான் சாப்பிட மிச்சம் வேண்டாம்" என்று வேணி மறுத்தாள்.

  • தொடங்கியவர்

வேணி மறுத்தாலும் அவளிடம் இருந்து அவளின் சாப்பிட்ட ஜஸ்கிறீமை வாங்கி சாப்பிட்ட படியே சொன்னான் "வேணி நீங்க வேறு நான் வேறு இல்லை என்று நல்லா இருக்கு வேணி நீங்க சாப்பிட்ட ஜஸ்கிறிம்" என்று சிரித்தான்.

அவன் குடித்த சர்பத்தை அவளுக்கும் குடிக்க ஆசையாக இருந்தது அதை அவனுக்கு புரியம் படி "சரி இது என்ன நியாயம்" என்று கேட்ட வேணியை புரியாமல் பார்த்த சண்ணிடம் "நீங்க மட்டும் என்னொட மிச்சம் சாப்பிடலாம் என்ன இது" என்று கேட்டபோது "சரி இந்தாங்கோ" என்று தன்னிடம் இருந்த சர்பத்தை அவளிடம் நீட்டின்ண் சண். வெட்கத்துடன் அதை குடிக்க தொடங்கினாள் வேணி.

அன்புடன் பார்த்து கொண்டு இருந்த சண் "வேணி நாங்க பழகுவது உங்க வீட்டுகு தெரியவந்தால் இதை அவர்கள் ஓம் என்று சம்மதிப்பினமா" என்று கேட்டான் வேணி சொன்னா "அப்பா பிரச்சைஅனை இல்லை அம்ம தன் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவா அவ தம்பி மகன் வெளி நாட்டிலை அவருக்கு தான் என்று அன்டைக்கு வீட்டிலை கதைத்தவை இருந்தாலும் என்னொட விருப்பம் என்றும் பார்ப்பினம் தானே" என்று அன்புடன் சொன்ன வேணியின் கைகளை பிடித்த படியே "வேணி ஜ லவ் யூ டா" என்று முதல் முறையாக வேணியிடம் சண் சொன்ன போது "ம்ம் இப்போ தான் சொல்லுறிங்கள் ஆனல் முதலே கையை பிடித்து விட்டிங்க" என்று சொன்ன வேணி "துர்க்கையம்மன் கோவிலில் சொன்ன போதே எனக்கு புரிந்தது இப்போ தான் நேரா சொன்னிங்க" என்று சொன்ன வேணியிடம் அவள் கைகளிலே அன்புடன் முத்த மிட்டான் சண்

-தொடரும்-

ம்ம்ம் கதை அருமை எங்கே அடுத்தபாகம்??

வணக்கம் இந்திரஜித்... உங்களுடைய கதையில். முன்பைவிட ஆக்கும் நேர்த்தி மிக நண்றாய் இருக்கிறது..

உங்களின் மிகுதிக் கதைக்காய் நானும் காத்திருக்கிறேன்.

ம்ம் அண்ணா கதையை நன்றாகவே நகர்த்திச் செல்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கின்றோம்? :lol::lol:

ம்ம்ம் கதை அருமை எங்கே அடுத்தபாகம்??

அக்கா என்ன அவசரமா? :lol::lol:

கொஞ்சம் பொறுங்கள் அண்ணாவும் பாவம் அல்லா? அதைவிட ஒரேயடியாக எழுதினால் தொடர் கதையில் ஒரு ஆவல் இல்லாமல் போய்விடும் அல்லா?

கதை அருமையாக போகிறது.

மேலும் தொடர வாழ்த்துக்கள்...

கதை விறுவிறுப்பாய் போகின்றது. அடுத்த பாகத்துக்காக வெயிட் பண்ணுகின்றோம்....

  • தொடங்கியவர்

வலி தெரியாக்காயங்கள் பாகம் 13

மண்ணுக்கு அடியில் ஓடும் நீரோட்டம் போல் அவன் மனதினுள்ளே தன்னை பற்றிய அன்பான காதல் உணர்வுகள் ஓடுவது, வேணியின் கைகளை சண் பற்றி இருக்கும் போது... வேணியால் அதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

இருவரும் ஒன்றாகவே பஸ்ஸில் வீடு வந்தார்கள் வரும் போது பக்கத்து இருக்கைகளில் அமர்ந்த படியே கதைத்தபடியே வந்தார்கள் அப்போ சண் "வேணி உங்கடை படிப்பு முடியும் வரை நாங்கள் கவனமாக இருக்கவேணும் நீங்களும் கவனமாக படியுங்கோ அடிக்கடி நான் உங்களை பார்க்கவோ, நீங்கள் எங்கள் வீட்டுக்கோ வராமல் இருக்க வேண்டும் இது தான் இப்போதைக்கு நல்லது எங்களுக்கு" அவன் பேச்சில் வேணிக்கு தன்னால் எந்த சங்கடமும் வராமல் இருக்க வேணும் அதனால் அவள் பாதிக்க படக்கூடாது என்ற அக்கறையை புரிந்து கொண்ட வேணிக்கு மனதுக்குள்ளே பெருமையாக இருந்தது.

ஒரு நாள் யாழ் நகரில் டியூசன் முடிந்து வரும் போது அவளுக்கு அருகே வந்த சண் "வேணி நேரம் இருக்கோ என்னுடன் துணிக்கடைக்கு வரமுடியமா" என்று கேட்டான். "ஓ நான் வாறேன்" என்று சொல்லி அவனுடன் துணிக்கடைக்கு போனாள் வேணி. "என்ன வாங்க போறீங்கள்" என்று கேட்டா வேணியிடம்" இல்லை தீபாவளி வருகுது அது தான் உங்களுக்கு ஒரு சாறி வாங்கித் தர ஆசையாக இருக்கு அது தான் உங்களுக்கு பிடித்த சாறி வாங்குங்கோ நான் காசு கொடுக்கிறேன்" என்று சண் சொன்னான்.

அதைகேட்ட வேணிக்கு உண்மையாகவே அவனை அணைத்து முத்தமிட மனதில் ஒரு உத்வேகம் வந்தது இருக்கும் சூழ்நிலை அவள் ஆசையை கட்டிப் போட்டது. "என்னப்பா நீங்கள் என்னை இப்படியெல்லாம் கேட்கிறீங்க உங்களுக்கு எனக்கு என்ன சாறி பொருத்தம் என்று நினைக்கிறீங்களோ அதை எடுத்து தாங்கோ அதை நான் கட்டுறேன்" என்று வேணி சொல்ல சண் அவள் பேச்சை கேட்டுச் சிரித்தான் "ஏனப்பா சிரிக்கிறீங்க " என்று வேணி கேட்க " இல்லையப்பா உங்கள் விருப்பப்படியே வாங்கி தாறன் " என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தான் "இல்லை நீங்கள் ஏதோ நக்கலாக சிரிக்கிறீங்க" என்று வேணி சொல்லி விட்டு நடந்து கொண்டு போகும் போதே அவனை நெருங்கி யாருக்கும் தெரியாதபடி அவன் விரல்களை பிடித்த படியே நடக்க தொடங்கினாள்.

அவளுக்கு ஊராக்கள் பார்த்தாலும் பயமில்லை என்ற உணர்வு வந்தது அப்போ அவளிடம் "வேணி வீட்டில் அம்மா அப்பா அன்புடன் கதைக்கிறது போலத் தான் நீங்கள் என்னுடன் கதைச்சீங்கள் அது தான், அதை நினைத்து மனதுக்குள்ளே நினைத்து சிரித்தேன்" என்று சொல்ல "ம் ம் எப்போதும் நீங்கள் எனக்கு உரியவர் தானே பிறகு என்ன தனிய இருக்கும் போது "அத்தான் என்று உங்களை கூப்பிட ஆசையா இருக்கு கல்யாணத்துக்கு பிறகு அப்பிடித்தான் கூப்பிடுவேன்" என்று காதலுடன் அவன் விரல்களை பிடித்தபடியே சொன்ன வேணியை "அதுக்கு என்ன இப்போதே கூப்பிடுங்கோ நல்ல இருக்கும்" என்று சொல்லி கண்னடித்தான் சண்.

"வலி தெரியாக்காயங்கள்" இன்னும் காயங்களை காணவில்லை மிகுதியை தொடருங்கள்.

  • தொடங்கியவர்

வலி தெரியாக்காயங்கள் பாகம் 14

காதலுடன் வேணியின் படிப்பும் இனிதாகவே தொடர்ந்தது.அவள் வீட்டுக்கு அந்த கடிதம் வரும் வரைஇலண்டனுக்கு அகதியாய் போன அவள் மச்சான் அனுப்பிய கடிதம் தான் வந்து இருந்தது. அதை உடைத்துப் பார்த்த அவள் அப்பா அம்மாவிடம் கதைத்தது இவளுக்கும் கேட்டது."இஞ்சையப்பா உம்மட மருமோன் விசா கிடைத்து இலங்கைக்கு வாறாராம்.நல்ல நாள் பார்த்து வீட்டை உம்மட தம்பியாக்கள் பொம்பிளை கேட்டு வருவினமாம் தான் அவையளுக்கு கடிதம் போட்டவராம்.எங்கள் விருப்பத்தை உம்மட தம்பியிட்டை சொன்னால் போதுமாம் .எழுத்து முடித்து விட்டு திரும்பி போவhராம் படிப்பு முடிய வேணியும் லண்டனில படிப்பை தொடரலாம்" என்று எழுதி இருக்கு நாங்கள் என்ன சொல்லுவோம் வாற கிழமைக்குள் சொல்லட்டாம்.அப்போ வேணி அம்மா சொன்னா மருமோனும் நல்ல விருப்பம் தானே அவயளின்ரை விருப்பபடி செய்வோம் அப்பா" என்று கதைத்து கொண்டு இருக்க வேணிக்கு உடனே சண்ணை பார்க்கவேனும் என்ற ஆவல் வந்தது " அம்மா நோட்ஸ் கொப்பி வாங்கி கொண்டு வாறன்" என்று சொல்லி விட்டு அவசரமாக் சண் வீடு நோக்கி போன வேணியை அப்போ தான் பஸ்ஸில் இருந்து இறங்கிய சண் கண்டான்

அவனை கண்டதும் வேணிக்கு ஆறுதலாக இருப்பதற்கு பதிலாக அழுகை தான் வந்தது அவள் முகத்தை பார்த்த சண் உடனே கேட்டான் "என்ன வேணி பிரச்சனை" என்று கேட்டபடியே அவளை நெருங்கினான்இ "வாங்கோ எனக்கு தலை வெடிக்குது இண்டைக்கு லண்டன்னிலை இருந்து கடிதம் வந்தது என்னை பொம்பிளை கேட்டு" என்று சொன்ன வேணியின் முகத்தை அதிர்ச்சியுடன் பார்தான் சண்.

-தொடரும்-

இந்திரஜித் உங்கள் கதை நன்றாக உள்ளது எங்கே மிகுதி? சீக்கிரம் போடுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.