Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை எதனை கூறுகின்றதோ அதனை நாம் செய்ய சொல்வோம் அவ்வளவுதான் எம் கடமை - சிவசங்கர் மேனன்

Featured Replies

சனிக்கிழமை , அக்டோபர் 9, 2010

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலாரி கிளின்டன் அழைப்புவிடும் வகையில் அவருக்கு 58 உறுப்பினர்கள் மகஜரை கையெழுத்திட்டு அனுப்பிவைக்கக்கூடியதாக அவர்களைத் தூண்டக்கூடியதாக விடுதலைப் புலிகள் சார்புக் குழு செயற்பட்டதாக ரெடீவ்.கொம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், இந்த விடயத்தில் இந்தியாவின் அனுதாபத்தை விடுதலைப்புலிகள் சார்புக் குழுவினர் பெற்றுக்கொள்வது தொடர்பாக எதிர்பார்த்திருந்தார்களேயானால், அவர்கள் முழுமையாக ஏமாற்றமடைந்திருப்பார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வாஷிங்டனுக்கு இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விஜயம் மேற்கொண்டிருந்தார். மோதலினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடமாகாணத்தின் புனர்வாழ்வு புனர்நிர்மாண நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா செயற்பட்டு வருகின்றபோதிலும் இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விடயங்கள் முற்று முழுதாக அந்த நாட்டின் உள்விவகாரம் என சிவ்சங்கர் மேனன் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன் மூலம் புலிகள் சார்புக் குழுக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக ரெடீவ்.கொம் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவிற்கு ஜனாதிபதி ஒபாமா விஜயம் செய்யவுள்ளமை தொடர்பாகவும் இந்தியஅமெரிக்க உறவுகள் குறித்தும் சிவ்சங்கர் மேனன் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த உரையாடலின் போது இலங்கையில் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்துவது தொடர்பாக எந்தவொரு கரிசனையையாவது இந்தியா பகிர்ந்து கொள்கின்றதா? என்று விடுதலைப்புலிகள் சார்புக் குழுவினர் ஒருவர் கேட்டிருந்தார்.

இலங்கையில் இந்தியத் தூதுவராக முன்னர் பணியாற்றியிருந்த மேனன் இதற்கு துரிதமாக பதிலளித்திருக்கிறார்."நாங்கள் வெளிப்படையாக உள்ளோம் குழப்பகரமான வரலாற்றைக்கொண்டிருந்த அயலவருடன் நாங்கள் விடயங்களைக் கையாண்டு வருகிறோம் அந்த அயல்நாடு இப்போதுதான் உள்நாட்டு யுத்தத்திலிருந்து வெளிவந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தின் பாதிப்பை சீர்படுத்த வேண்டியுள்ளது. இரு விடயங்கள் முக்கியமானவையாக உள்ளன. சமூகங்களிடையில் நல்லிணக்கம் முக்கியமானதொன்றாகும். அந்த நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நாம் மிகக் கடுமையாக முயன்றிருந்தோம். இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம. யுத்தம் வட, கிழக்குப் பகுதியிலேயே இடம்பெற்றிருந்தது என்று மேனன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

இந்த விடயத்தை மேற்கொள்வதற்கு எம்மிடம் பாரிய நிகழ்ச்சித் திட்டம் இருக்கிறது. இதனை அமெரிக்காவுடன் நாம் கலந்தாலோசித்துள்ளோம். அமெரிக்காவும் இந்த முயற்சியில் பங்கேற்றுக்கொள்கிறது. இதனைச் செய்வதற்கு நாம் மிகவும் கடுமையாக முயற்சித்திருந்தோம். இந்த விடயமானது அமெரிக்காஇந்தியாவுக்கு யதார்த்தபூர்வமாக பொதுவான விடயமாகும். இதன் மூலம் இலங்கையிலிருந்து பயங்கரவாதம் வெளிக்கிளம்பாமல் எம்மால் தடுக்க முடியும்.

இதற்கு சமனாக இலங்கையில் அரசியல் மீட்சி தொடர்பான பணியையும் பார்க்கின்றோம். இந்த விடயமானது ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது மாத்திரமன்றி அதற்கும் அப்பாற்பட்டதாகும். அதாவது தமது சொந்த எதிர்காலத்தை தங்களால் தீர்மானித்துக்கொள்ள முடியும் என்று சகல சமூகங்களும் உணரும் வகையிலும் தமது வாழ்க்கையை பாதிக்கும் விடயங்களில் தாங்கள் தெரிவுகளை மேற்கொள்வதற்கான பாத்தியதையைக் கொண்டிருக்கவுமான ஒழுங்கு முறையை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விடயமானது மிகவும் உணர்வுபூர்வமான இலக்காகும். இலங்கை கூறுவதை செய்யுமாறு நாங்கள் தொடர்ந்து ஊக்குவிப்போம். எமக்கு இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து உறுதியாக எதனைக் கூறியிருந்தார்களோ அவர்கள் எதனை செய்ய விரும்புகிறார்களோ அந்த விடயமானது அவர்களின் உள்விவகாரமாகும். அவர்களே இந்த விடயம் குறித்து சில கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதென்ற உண்மை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று கூறியுள்ள மேனன் 27 வருட உள்நாட்டு யுத்தத்தை இலங்கை சமாளித்து வந்திருக்கிறது. தனது அரசியலை ஜனநாயக ரீதியில் பேணி வந்திருக்கிறது என்றும் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: அப்ப உன்ர மனுசியை வைச்சு வியாபாரம் பண்ணவேனுமெண்டு கோத்தா கேட்டால் என்ன செய்வாய்? குடுப்பியா?? நீ குடுத்தாலும், குடுப்பாய், ஏனெண்டால் உன்ர விசுவாசம் அப்பிடி !!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: அப்ப உன்ர மனுசியை வைச்சு வியாபாரம் பண்ணவேனுமெண்டு கோத்தா கேட்டால் என்ன செய்வாய்? குடுப்பியா?? நீ குடுத்தாலும், குடுப்பாய், ஏனெண்டால் உன்ர விசுவாசம் அப்பிடி !!!!

[/quote ]

:D :D :) இந்தியாகாறன் உதில கில்லாடி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்விவகாரம் எண்டால் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய் நாதாரி..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கேரளா பார்சி கூட்டத்தின் கொட்டம் தாங்க முடியவில்லை. இவர்கள் இந்திய வெளியுறவு கொள்கை பகுதியை தமது கைக்குள் வைத்திருக்கிறார்கள். எப்போதும் தமிழருக்கு எதிராக இயங்குவது தான் இவர்களுக்கு வேலை. தமிழ் நாட்டு செல்லாக்காசுகளால் இவர்களை சமாளிக்க முடியாது.

இந்திய விடிவு பெற அங்கெ சாதியை ஒழிக்கவேண்டும். அப்போது தான் இந்த பார்சி பிராமண கூட்டத்தின் கொட்டம் அடங்கும்.

இன அழிப்பு வழக்குகளில் இவர்களது பெயர்களையும் சேர்த்து உலகத்திற்கு இவர்களின் கொடூர முகத்தை காட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி

அதற்கேன் தமிழ் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத்தாறேன் என்றும் புலம்புகிறாய்

இதற்கு காரணம் எமது தமிழ்நாட்டுத்தலைவர்களின் சொறி குணம் தான்

இவரை நொந்து என்ன பலன்......???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.