Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றைக்கையும் இயங்காத கால்களுடனும் 5நாளாக சோற்றுக்கு அவதிப்படும் போராளிகுடும்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
audio.gif2006ம் ஆண்டு காயமுற்று இடுப்பின் கீழ் உணர்வுகள் அற்றுப் போனது. 15வருட களவாழ்வுக்கு ஒய்வு கொடுத்தாற்போல அவன் ஒரு சுழல்கதிரைக்குள் அடங்கிப்போனான். மனதளவில் தனது ஊனம் பற்றிய வருத்தம் இருந்த போதிலும் அவனை புதுப்பித்து வாழ்வின் மீது அவனுக்கு நம்பிக்கையை எற்படுத்திய அவனது துணைவியே அவனுக்கு எல்லாமுமாகியிருந்தாள். இயலாத போதும் அவ்வப்போது கொடுக்கப்படும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். மாதக்கொடுப்பனவாகக் கிடைத்த 6ஆயிரம் ரூபாவோடு போனது காலங்கள். கடைசியுத்தம் இவர்களையும் முள்ளிவாய்க்கால் வரை துரத்தியது. எறிகணையும் மரண ஒலிகளும் பிணங்களும் நிறைந் த நாட்களில் சிறுகுழந்தைகளையும் அவனையும் அவனது துணைவியே காவித்திரிந்தாள். போரின் உக்கிரம் ஒரு பொழுது அவனது கையைச் சிதைத்தது எறிகணையொன்று. சிதைந்த கையோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். தொடர் மருநதுகளோடு இருந்தவன் கடந்தமாதம் அவனது ஒற்றைக் கையையும் எடுத்துவிட்டார்கள். இப்போது ஒற்றைக்கையும் இயங்காத கால்களும் வறுமை நிறைந்த வாழ்வுமாக கடலை விற்றுவரும் அம்மா வரும்வரை அவனும் அவனது குடும்பமும் காத்திருக்கிறார்கள். அண்மையில் அம்மாவும் முகாமுக்குத் திரும்பிவிட அம்மாவின் கடலை வியாபாரமும் இல்லாது 5நாட்களாக எதுவித உணவுக்கும் வழியற்றுள்ளதாக எம்மிடம் வந்திருக்கிறான் இந்த 30 வயது முன்னாள் போராளி.

Edited by shanthy

சாந்தி சிறு தொகை பணம் அனுப்பியுள்ளேன் கிடைத்ததும் விபரம் தெரிவிக்கவும்

உங்கள் சேவைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஐப்பசி மாதம் 16 ம் திகதி உலக உணவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் வேளையில் நம் ஈழத்துப் போராளிகள்

உணவிற்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் இருப்பதை நினைக்கும் போது மனம் மிக வருந்துகின்றது.

சாந்தி அக்கா உங்கள் முயற்சி வீண் போகாது.

உலகத்தில் எங்காவது ஒரு முலையில் இருக்கும் ஒரு நல்ல இதயம் நிச்சயம் இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்யும் .

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு, மக்கள் பேரவை போன்ற ஈழத்து மக்களின் விடிவிற்காகப் போராடும்

அமைப்புக்கள் இந்த விடயத்தில் அக்கறையில்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கின்றது .

இன்றைய காலகட்டத்தில் அவர்களின் முதற்பணியாக இந்த விடயங்கள் இருக்க வேண்டும் என்பதே எனது அவா.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மீண்டும் ஒரு சிறிய தொகை மூலம் நேசக்கரத்துடன் இணைந்துகொள்கின்றேன்.

நானும் என்னாலான தொகையை கொடுக்கலாம் என விரும்புகிறேன். யாராவது அவுஸ்ரேலியாவில் (சிட்னியில்) இருந்து உதவினால்/ உதவ விரும்பினால் அவர்களுக்கூடாக மாதம் மாதம் அனுப்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழ்களத்தில் கள உறவுகள் நேசக்கரத்துடன் இணைந்து தாயகத்து உறவுகளிற்கு உதவத் தெடங்கியிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றது . கடந்த காலங்களில் அந்த மக்களிற்காக உதவிகேட்டு வானெலியிலும் யாழ்களத்திலும் வேறு தளங்கள் மின்னஞ்சல் தொலைபேசிகள் என்று தெடர்ந்து கேட்டும் உதவிகள் கிடைக்காத தருணங்களில் மனச்சேர்வும் விரக்தியும் ஏற்பட்டு பேசாமல் நேசக்கரத்தினை நிறுத்தி விடலாமா என நான் சாந்தியிடம் கேட்டதுமுண்டு.ஆனால் தாயகத்தில் உள்ளவர்களில் குரல்கள் நிறுத்தவும் முடியாமல் தடுத்துக்கொண்டிருந்தது. அந்த மக்களின் உதவி கேரிய குரல்கள் எங்களை படிப்பித்து விடுவீங்களா?? என்கிற அப்பாவித்தனமான அந்த முகமறியாத எங்கள் குழந்தைகளின் வேண்டுதல்கள் மட்டுமே நேசக்கரம் பல நெருக்கடிகளை சந்தித்தபோதும் தொடர்ந்தும் நடத்துவதற்கான மன உறுதியை தந்தது.மேலே வாத்தியார் சொன்னது போல நாடு கடந்த அரசு மக்கள் அவைகள் ஏன் அந்த மக்களிடம் அக்றை இல்லாமல் இருக்கிறார்கள் என்கிற ஆதங்கம் தாயகத்து மக்களிடம் நிறையவே இருக்கிறது. அந்த அமைப்புகள் பற்றி எம்மிடம் விபரங்கள் கேட்டு எழுதிய கடிதங்கள் ஒலிப்பதிவுகள் நிறையவே உள்ளது ஆனால் அந்த அமைப்புக்கள் தங்கள் அரசியலை செய்யட்டும் நாங்கள் எந்த அரசியலும் சாராமல் எங்கள் உதவிகளை மட்டுமே தொடர்ந்து செய்வோம்.என்கிற முடிவில் நாங்கள் செயற்படுகின்றோம். அது மட்டுமல்லாது கிடைக்கும் உதவிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதோடு மூன்று மாதங்களிற்கொரு தடைவை தெளிவான கணக்கறிக்கையையும் வெளியிட்டு வருகின்றோம்.எனவே அனைத்து யாழ்கள உறவுகளும் இணைந்து கொண்டால் நேசக்கரம் இன்னும் சிறப்பாக செயற்படும் நன்றி வணக்கம்.

காரணிகன்

Posted 16 October 2010 - 05:28 PM

சாந்தி சிறு தொகை பணம் அனுப்பியுள்ளேன் கிடைத்ததும் விபரம் தெரிவிக்கவும்

உங்கள் சேவைக்கு நன்றி

குமாரசாமி

Posted 16 October 2010 - 07:15 PM

நான் மீண்டும் ஒரு சிறிய தொகை மூலம் நேசக்கரத்துடன் இணைந்துகொள்கின்றேன்.

yarlkavi

Posted 16 October 2010 - 08:05 PM

நானும் என்னாலான தொகையை கொடுக்கலாம் என விரும்புகிறேன். யாராவது அவுஸ்ரேலியாவில் (சிட்னியில்) இருந்து உதவினால்/ உதவ விரும்பினால் அவர்களுக்கூடாக மாதம் மாதம் அனுப்புகிறேன்.

சாந்தி அக்கா இன்னும் பாக்கேல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள உறவிற்கு உதவியவர்களின் விபரங்கள் விரைவில் இங்கு இணைக்கப்படும் நன்றி வணக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா இன்னும் பாக்கேல்லையோ?

உங்கள் உதவி உரிவருக்கு அனுப்பியாச்சு நேற்று. தனிமடல் இட்டிருந்தேன் உங்களுக்கு. கிடைக்கவில்லையா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுக்கு உதவியோர் :-

காரணிகன் - 47,70€

மின்னல் - 23,67€

சிவம் ராஜாராம் - 95,75€

மொத்தம் 167,12€ கிடைத்துள்ளது. 200,00€ அந்த உறவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.