Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்மொழிச் சமூகமாக இலங்கையை உருவாக்க இந்தியா முயற்சி உயர்மட்டத் தூதுக் குழுவை அனுப்புகிறது

Featured Replies

புதுடில்லி: இலங்கையானது மும்மொழிச் சமூகமாக உருவாவதற்கு உதவியளிப்பதற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக உயர்மட்டக்குழுவொன்றை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் இந்திய மனிதவலு வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபாலுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் இடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்டதாக உத்தியோகபூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.

அறிவு முன்முயற்சியின் ஓரங்கமான இந்தியாவின் உதவி அமையும்.இலங்கையை மும்மொழி சமூகமாக உருவாக்குவதற்கான உதவியாக இது விளங்கும். அத்துடன் இருநாட்டு பல்கலைக்கழகங்களுக்கிடையிலும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் இந்த முன்முயற்சி உதவியாக அமையும்.

இந்த முன்முயற்சியை ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த ஜூலையில் இங்கே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்த கூட்டுப் பிரகடனத்தில் இருநாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டிருந்தனர்.

அத்துடன், இந்திய,இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் பிணைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளன.

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=5355&catid=1

இந்தியாவின் அமைதி படையில் இருந்து பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் வரை இலிருந்து சிங்களத்தின் நரித்தனமான இராசதந்திரத்துக்கும் தமிழின எதிர்ப்புக் கொள்கைக்கும் இந்தியா ஏமாந்து வருவது கண்கூடு.

இந்த புது புது கருத்துக்கள் முன்னெடுப்புக்கள் இந்தியாவின் கையாலாகாத வெளிவிவகார கொள்கையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

இப்போது கூட அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் வெறுமையானவையாக அரசியலின் வியூகம் அமைக்காமல் வெற்று வார்த்தைகளை உச்சாடனம் செய்பவர்களாக மட்டுமே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எப்போதாவது உருவாக்கிய சரித்திரம் உண்டா? அழித்த சரித்திரங்கள் தான் உண்டு.அது தனது நாடாகட்டும் அல்லது அயல் நாடாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்த கூட்டுப் பிரகடனத்தில் இருநாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டிருந்தனர்.

2557145739_e113a7a20d.jpg

அந்த காலத்தில் இருந்து தமிழினத்தினை ஓல் சேலில் வாங்கிவிட்டதாக நினைப்பு... தமிழர் தரப்பின் சார்பாக மீண்டும் கிந்தியா கையெழுத்து இட போகிறதா? அல்லது கூட்டமைப்பு கையெழுத்து இட போகிறதா? கூட்டி கழித்து பார்த்தால் ஒன்று ஈழத்தமிழர்கள் தனி இனம் என அறிவித்து விடுதல் வேண்டும்... அந்தா ராஜராஜ சோழன் ராஜந்திர சோழன் என பல்லவி எடுத்து விடுவதையும் நிறுத்திவிட்டு எல்லாளன்... பண்டாரவன்னியன் அத்தோடு நிறுத்தி கொள்ளவேண்டும்... இங்கு கிந்தியா ஊடுறுவலுக்கான முதல் புள்ளி இங்குதான் தொடங்குது... இந்த புலாசுளக்கிகளுக்கு ஏதோ கடமை உணர்வு உள்ளது போல சர்வதேசத்தின் கவர்ச்சி காட்டி கொண்டு சோ காட்டுகிறார்கள்... மேற்படி செய்தால் எந்த தொடர்பும் இல்லாது அவன் அவன் வேலையை பார்ப்பான்... :lol:சர்வதேச மட்டத்திலும் சுதந்திரமாக செயல் பட இயலும் :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

மும்மொழி

1. சிங்களம்

2. ஆங்கிலம்

3.ஹிந்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.