Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

Featured Replies

கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மற்றும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் கனாடாவின் மனிதநேய கொள்கைகளை துஸ்பிரயோகம் செய்வதாகவும், இதனால் கடுமையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

குடிவரவு தொடர்பாக கனடா பின்பற்றி வரும் நெகிழ்வுத் தன்மையை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் தெரிவித்துள்ளார்.

குடிவரவுச் சட்டங்களை மீறுவதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது எனவும், சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் குடியேறும் நபர்களை தடுத்து வைப்பது கட்டாயமாக்கப்படும் எனவும், ஒரு வருட காலம் வரையில் தடுத்து வைத்து விசாரணை நடத்தக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத குடியேற்றக்காராகள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிரந்தர குடியுரிமையைக் கோரி விண்ணப்பிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பாதுகாப்பு தேவையில்லை என தென்பட்டாலோ அல்லது விடுமுறைக்காக சொந்த நாட்டுக்கு சென்றும் திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிட அந்தஸ்து ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்படும் கப்பல் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத ஆட்கடத்தல்காரர்கள் கனடாவை இலக்கு வைத்து பயணங்களை மேற்கொள்வதாக கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உச்சளவு சலுகைகளையும் பாதுகாப்பையும் வழங்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கனடா முன்னணி வகித்து வருவதாகவும், சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களினால் இந்த நிலைமைக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

34 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட கனடா சுமார் 250,000 பேருக்கு வருடாந்தம் புகலிடம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

இது நம்ம ஆட்களுக்கென்றே கொண்டுவரப்பட்டுள்ளது போலுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் என்று சண் கப்பலில் வந்த இருவர் குடும்பத்தினரோடு கைது செய்து விசாரணைக்கு உற்படுத்தப்படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் பாதுகாப்பு தேவையில்லை என தென்பட்டாலோ அல்லது விடுமுறைக்காக சொந்த நாட்டுக்கு சென்றும் திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிட அந்தஸ்து ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை பெற்றுவிட்ட அகதிகளுக்கும் இது பொருந்துமா? :(

  • கருத்துக்கள உறவுகள்

குடியுரிமை பெற்றுவிட்ட அகதிகளுக்கும் இது பொருந்துமா? :(

குடியுரிமை இல்லாது

ஊருக்கு போய்வர முடியுமா....?

குடியுரிமை பெற்றுவிட்ட அகதிகளுக்கும் இது பொருந்துமா? :(

இல்லை பொருந்தாது.

கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

34 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட கனடா சுமார் 250,000 பேருக்கு வருடாந்தம் புகலிடம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொகையில் கடந்த வருடம் 33,000 பேரே அகதிகளாக வந்தனர். அதில் முதல் இடத்தில மெக்சிகோ நாட்டவர்.

அதிகளவில் "திறமை" (skill) பிரிவில் மற்றும் பொருளாதார முதலீடுகளில் வருபவர்கள் அதிகமான குடிவரவாளர்கள்.

Edited by akootha

கனடாவில் பல முக்கிய வேலைகள் பல தகுதியான ஆட்கள் இல்லாமல் உள்ளன. இவற்றை நாம் செய்யக்கூடியவர்கள் என நிரூபித்தால் இலகுவாக கனடாவுக்கு புலம்பெயரலாம்.

பல பல்கலைக்கழகங்களில் உயர் படிப்பு படிக்க மானியங்கள் உள்ளன. அவற்றை படிக்க என வரலாம். இன்னும் பாடசாலைகளுக்கு படிக்க (High school) என கூட கூப்பிடலாம்.

ஐந்து குடும்பங்கள் சேர்ந்து ( சில வருமான விதி முறைகள் உள்ளன) ஒரு குடும்பத்தை கனடாவுக்கு கூப்பிடலாம்.

மேலும் இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டுமா என தெரியவில்லை. தற்போதைய பாராளுமன்றம் கனடாவில் ஒரு சிறுபான்மை அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடியுரிமை பெற்றுவிட்ட அகதிகளுக்கும் இது பொருந்துமா? :(

உங்கட கண்ணில தெரியுற கலவரம் எனக்கு நல்லா புரியுது இசை :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கண்ணில தெரியுற கலவரம் எனக்கு நல்லா புரியுது இசை :(

நான் சுற்றுலா போகிற மற்றவங்களுக்காக சிந்திக்கிறன் காட்டாறு..! :D :D :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.