Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜின் இலட்சியங்களை முன்னெடுப்போம்

Featured Replies

மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தனது நண்பருமான நடராஜா ரவிராஜ் படுகொலைச் செய்யப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெறுகின்றது. இந்த நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் எத்துனை பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை அனைத்தையும் வெற்றிகொண்டு ரவிராஜின் இலட்சியங்களை முன்னெடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகருமான நடராஜா ரவிராஜின் நினைவு தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தலைநகரிலும், ஏனைய அரசக்கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் தினசரி 10 பேர் வரை தமிழர்கள வெள்ளை வான் நபர்களினால் கடத்தப்பட்டு, காணாமல் போய்கொண்டிருந்த கால கட்டத்தில் மக்கள் கண்காணிப்புக் குழுவை நானும், ரவிராஜூம், சிறிதுங்க ஜயசூரியவும் இணைந்து 2006 செப்டெம்பர் மாதம் 19ம் திகதி உருவாக்கியிருந்தோம்.

எமது குழு உருவாக்கப்பட்டு 50 நாட்களில் எனது நண்பர் ரவிராஜ் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட பின்பு மக்கள் கண்காணிப்புக் குழுவை கலைத்துவிடும்படி எனக்கும், சிறிதுங்கவிற்கும் பாரிய பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

மூன்று முறை படுகொலை முயற்சிகளிலிருந்து நான் தப்பியிருந்தேன். ஆனால் நாங்கள் கொலை அச்சுறுத்தல்களுக்கு பணிந்து மக்கள் கண்காணிப்புக்குழுவை கலைத்துவிட்டு, அதன் மூலம் தனது உயிரை அர்ப்பணித்த நடராஜா ரவிராஜிற்கு நாம் துரோகம் இழைக்கவில்லை மாறாக தொடர்ந்த எமது செயற்பாட்டின் மூலமாக தலைநகரிலும், நாடு முழுக்கவும் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கடத்தல், படுகொலை, கப்பம், வகைதொகையற்ற கைது ஆகிய பாரிய மனித உரிமை மீறல்களை உலகறிய செய்தோம்.

அதனால் இத்தகைய துன்பகரமான நிகழ்வுகள் மூலமாக தங்களது இன்னுயிரை இழக்கும் நிலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களை எங்களால் காப்பாற்ற முடிந்தது.

இத்தகைய ஒரு நேர்மையுடன் கூடிய உறுதியும், துணிச்சலும் மிக்கவொரு தலைமையை தந்தவர் நண்பர் நடராஜா ரவிராஜ்.

அவரது பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மக்கள் கண்காணிப்புக்குழு இன்று தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது. இது மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஸ்தாபகர் என்ற முறையிலும், எனது நண்பர் என்ற முறையிலும், நடராஜா ரவிராஜிற்கு நான் செலுத்தும் அஞ்சலியாகும்.

அவரது தியாகம் வீண்போகவில்லை என்பதை நாங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களிலும் நண்பர் ரவிராஜின் இலட்சியங்களை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

மூலம்: தமிழ் மிரர்

வரலாற்றில் நிலைத்து விட்ட ரவிராஜ்

[09 நவம்பர் 2010, செவ்வாய்க்கிழமை 9:35 பி.ப இலங்கை]

எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்று டன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறு கின்றன. இந்த 4 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து, தற்போது இந்நாட்டில் தமிழினத்தின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறியி ருக்கிறது. இப்போது ரவிராஜ் உயிரோடிருந்திருந் தால் எமக்கு நல்லதொரு அரசியல் தலை மையை வழங்கியிருப்பார் என்றே எண் ணத் தோன்றுகிறது. ஏனெனில் இறுக்க மான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக் கும் பாதையில் தனக்கேயுரித்தான ஆளு மையுடன் ஒரு ஜனநாயகப் போராளியா கத் தடம் பதித்து, போராடும் வல்ல மையை அவர் கொண்டிருந்தார்.

1962ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி ஆசிரியர்களான நடராஜா மங்க ளேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச் சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங் கினார். அக்காலத்தில் பாதுகாப்புத் தரப் பினரால் கைது செய்யப்பட்டு, சிறையி லடைக்கப்பட்டு சித்திரவதைக்குள் ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தினார். இதனை விட அவர் களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதி லும் கொழும்பில் முன்னின்று பாடு பட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப் பான அனுபவங்கள் யாவும் இயல் பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவ ரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. தமிழரின் உரிமைகளை வென்றெடுக் கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித்தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன. 2001ஆம் ஆண்டு யாழ்ப் பாண மாநகர முதல்வராகப் பதவியேற் றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிர காசிக்கத் தொடங்கினார். போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணி களை மீளக் கட்டியெழுப்புவதில் மும் முரமாக ஈடுபட்டார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பின் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டி யிட்டு வெற்றிபெற்றார்.

அமரர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப் பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான். எனினும், அக்குறு கிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளு மன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப் பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச் சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்ப தற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்தி லுள்ள கல்விமான்களதும், முதியோர் களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக் கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண் பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோ ராலும் விரும்பப்படும் ஒரு தலைவரா னார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத் தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொ ணாத் துன்பங்களையும் சிங்கள மக்க ளுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறை யில் கொண்டு சென்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட் போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மை யான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களை யும், தமி ழர் தாயகத்தின் உண்மை நிலைமை களையும் உடனுக்குடன் சிங்கள மக்க ளிடம் எடுத்துக் கூறினார். இவரது இந் தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்ப தற்குரிய முதன்மைக் காரணியாக இருந் தது எனப்பரவலாகக் கருதப்பட்டது.

தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட் பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலி யாகவே கருதினர். தமிழர் உரிமைக்கா கப் போராடுப வர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டா ளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங் களுக்கிடையிலான நல்லுறவை ரவி ராஜ் வளர்த்து வந்தார்.

மனித உரிமைகள் மீது அதீ த நம் பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங் கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக் காகக் குரல் கொடுத்து வந்தார். இலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வ தன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென நம்பினார்.

தமிழர் பிரச்சினைக்கு யுத் தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழு டலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப் பினர். கொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக் கான சிங்கள மக்களும் தலைவர் களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட் டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.

என் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப் போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல் லோரும் மறந்து விடுவார்கள். இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை. அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்காக தமது உயிர் களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட் டோம். இவ்வாறே இன் றைய நிலை மைகள் தமிழர்களின் விடியலை நேசிக் கும் ஒவ்வொருவரையும் எண்ண வும், ஏங்கவும் வைக்கின்றன.

சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர் களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப் பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ் விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன.

நன்றி: உதயன், யாழ்ப்பாணம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.