Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களைப் பயமுறுத்தி சிங்கள குடியேற்றங்களை அரசு முன்னெடுக்குமாயின் கோபமும் விரக்தியும் தான் உருவாகுமே தவிர இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படாது ‐ TNA ‐ சிங்களக் குடியேற்றவாசிகள் குடியேற்றப்பட்டமை தொடர்பில் ஈபிடிபி முரண்பாடான நிலை – ‐ ஜீரிஎன் செய்

Featured Replies

இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்க அதிபருக்கோ, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் இரவோடிரவாக இராணுவம் இக்குடியேற்றங்களை தொடங்கியுள்ளது என்றும் யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பயமுறுத்தி சிங்கள குடியேற்றங்களை அரசு முன்னெடுக்குமாயின் கோபமும் விரக்தியும் தான் உருவாகுமே தவிர இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படாது என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபருக்கோ, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் இரவோடிரவாக இராணுவம் இக்குடியேற்றங்களை தொடங்கியுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தை காட்டி ஏறத்தாழ 150க்கு மேற்பட்ட சிங்கள மக்கள் திட்டமிட்ட வகையில் 06.10.2010 அன்று யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் போகும் முன்பே அவர்களுக்கான மலசல கூட வசதி எல்லாம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் செய்யப்படிருந்தது. அவர்களும் நேரடியாக புகையிரத நிலையத்திற்கு சென்று அங்கே தங்கினார்கள். அவர்களை உடனடியாக அமைச்சர்கள் சந்தித்தனர். பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கொழும்பில் இருந்து சமுர்த்தி அதிகாரிகள் சென்று அவர்களுக்கான நிவாரண வசதிகள் செய்து கொடுத்தார்கள். மொத்தத்தில் அரசாங்கம் அவர்களை மிகக் கவனமாக பாராமரித்து வருகின்றது.

ஆனால் இவர்கள் யாருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒரு துண்டு நிலம் சொந்தமாக கிடையாது. இவர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்களுமல்ல. ஆனால் இவர்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற வேண்டுமென்பதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது.

இதன் முதற்படியாக புகையிரத நிலையத்தில் இருந்த ஒரு பகுதியினர் 10 ஆம் திகதி இரவு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு நாவற்குழி அப்பன் குடியிருப்பு என்ற பகுதியில் தற்காலிக வீடுகள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஏற்கனவே குடியிருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீளக்குடியேற வந்த பொழுது இந்நிலம் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமானதென கூறி அவர்கள் அங்கு மீளக்குடியமர்வது அரசாங்கத்தால் மறுதலிக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தில் இன்று சிங்கள் மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 90இ000 மக்கள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வலிகாமம் வடக்கில் இருந்த விரட்டப்பட்டு இன்னும் அகதி முகாம்களிலும், வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இவர்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு போக முடியவில்லை. உயர் நீதிமன்றம் மீள் குடியேற அனுமதி அளித்தும் இராணுவம் அதனை இன்னும் அனுமதிக்கவில்லை. இவர்களில் ஒரு பகுதியினரை குடியேற அனுமதித்தாலும், இராணுவ முகாம் விஸ்தரிப்பு, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அதற்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு தொகுதி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையே இன்றுள்ளது.

இந்நிலையில் 20 வருடம் அப்படி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசாங்கம் என்ன கொழும்பிலா காணியும் வீடும் கட்டிக் கொடுக்கப் போகின்றது?

1977இ81இ83 ஆம் ஆண்டுகளில் அடித்து விரட்டப்பட்ட எத்தனை தமிழ் மக்களின் சொத்துக்கள் தென் பகுதியில் மீளக்கொடுக்கப்பட்டன. உயிர்த்தப்பினால் போதுமென, எல்லாவற்றையும் விட்டு விட்டு தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வில்லையா? தென் பகுதியில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி அவர்களை அரசாங்கம் கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பவில்லையா? இன்று யாழ்ப்பாணத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவா இந்த சிங்கள குடியேற்றம்?

இவ்வாறான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் குடிசன பரம்பல் விகிதாசாரத்தில் அரசு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதுடன், கிழக்கு மகாணத்தைப் போன்று தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களிலே சிறுபான்மையாக்கப்பட்டு, அவர்களின் தனித்துவமும் பறிபோகும் சூழலும் ஏற்படுத்ப்படுகின்றது.

இராணுவத்தின் துணையுடன் அரசாங்கம் செய்யும் இவ்வின ஒழித்தல் நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன், இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தை கோருகின்றது.

யாழ்ப்பணத்தில் இன்னும் இடம்பெயர்ந்திருக்கும் 90,000 தமிழ் மக்களும் மீளக்குடியெற அனுமதிப்பட்ட வேண்டும். அப்படி மீளக்குடியேற முடியாத மக்கள் இருப்பின் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் குடியிருக்க நிலம் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதனை விடுத்து அந்த மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழும் மக்களை அகதிமுகாம்களில் வைத்துக் கொண்டு, வெளியில் இருந்து வரும் சிங்கள மக்களை குடியேற்றுவது நீதியானதல்ல, எந்த வகையிலும் ஏற்றக் கொள்ளக்கூயதுமல்ல.

இராணுவத்தின் துணையுடன் தமிழ் மக்களை பயமுறுத்தி இப்படியான சிங்கள குடியேற்றங்களை அரசு முன்னெடுக்குமாயின் கோபமும் விரக்தியும் தான் உருவாகுமே தவிர இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படாது.

சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் இதனை இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். யுத்திற்கு பின் இலங்கை அரசாங்கம் எடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை உலக நாடுகள் நிறுத்த முன் வரவேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது.

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் சிங்களக் குடியேற்றவாசிகள் குடியேற்றப்பட்டமை தொடர்பில் ஈபிடிபி முரண்பாடான நிலை – ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ‐ ஜீரிஎன் செய்தியாளர் :

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் சிங்களக் குடியேற்றவாசிகள் குடியேற்றப்பட்டமை தொடர்பில் அரசில் அங்கத்துவம் வகிக்கும் முக்கியமான தமிழ் அரசியற் கட்சியான ஈபிடிபி முரண்பாடான நிலையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரையாடுவதற்காக இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாக ஈபிடிபி வட்டாரங்கள் தெரிவிகின்றன. இன்று மதியம் இச்சந்திப்பு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச காணிகள் என்பது மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி இவ்வாறான குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கக் கூடாதென்பதே ஈபிடிபியின் நிலைப்பாடாக இருப்பதாக ஈபிடிபியினர் கூறுகின்றனர். குறிப்பாக யாழ் குடாநாட்டிலுள்ள பல்வேறு அரச கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தனியாரிடம் இருந்து வாடகைக்கு காணிகள் பெறப்பட்டு நிர்மாண வேலைகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் எஞ்சியுள்ள அரச காணிகளை சிங்களக் குடியேற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றமைக்கு ஈபிடிபி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளதாக ஈபிடிபியினது உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இன்று மதியம் ஒரு மணிக்கு ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது தனிப்பட்ட கருத்தின்படி....... அங்கே எல்லாமே முடிந்து விட்டது.மீதமிருப்பவர்களை நிம்மதியாக வாழவிடுவோம்.சாகவிடுவோம்.

ஈழத்தமிழன் தலையில்லா பிண்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.