Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா, தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடிக்குமா?

Featured Replies

இந்தியா, தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடிக்குமா?

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம்

மௌனித்திருந்தாலும், பெரும்பாலான தமிழீழ மக்கள் தாயகத்திலும், புலத்திலும்

தமிழீழம் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற இலட்சியத்துடனேயே வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள்.

இம் மக்களது திடமான சிந்தனை கனவாகுமா? நனவாகுமா? என்பதைத் எதிர்காலத்தில் தீர்மானிக்கப் போவது இவர்;களாகவோ, அல்லது சிறீலங்கா அரசாகவோ ஒரு போதும் இருக்கப் போவதில்லை.

உலகின் பல நாடுகளுக்கு இடையில் யுத்தம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுடன் நீண்டகாலமாக முரண்பட்டு கொண்டிருக்கின்றன. எந்த வேளையிலும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அல்லது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்குமானால், சிறீலங்காவின் நிலைப்பாட்டைப் பொறுத்தே இந்தியா தனது சுயதேவைக்காக தமிழீழத்தைப் பிரித்தெடுக்க முன்வரலாம். ஆனால் அது சுதந்திர தமிழீழமாக திகழுமா அல்லது இந்தியாவின் இருபத்தொன்பதாவது மாநிலமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இச் சந்தர்ப்பங்கள் தவறும் பட்சத்தில் மிகக் குறைவான சாத்தியக்கூறு காணப்படும் மூன்றாவது மகாயுத்தம் ஆரம்பிக்குமானால், வல்லரசுகளினால் தமது தேவையைப் பொறுத்து, உலகில் நடைபெறும் வேறுபட்ட விடுதலைப் போராட்டங்களில் சிலவற்றை தமது தேவையின் அடிப்படையில் சில புதிய தேசங்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

இலங்கையில் தமிழீழத் தனியரசு 1833 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்திருந்த பொழுதிலும், மீண்டும் தமிழருக்கான தனி அரசை நிறுவுவதற்கு பல சாத்வீகப் போராட்டங்கள் நடைபெற்றன. உண்மையான ஆயுதப் போராட்டம் இந்தியாவின் துணையுடன் 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால் தமிழீழ மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு இந்தியாவே ஊக்கமளித்தது. ஆனால் 1987 ஆண்டு இந்திய - சிறீலங்கா உடன்படிக்கையின் போது தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை மனதில் கொள்ளாது இந்தியா செயற்பட்டதன் காரணத்தினால் தாயகத்தில் பெரும்பாலான மக்கள் இந்தியாவை ஓர் எதிர் சக்தியாக கொண்டிருக்க வழி வகுத்தது.

வரதாஜபெருமாளின் தோற்றம்

அடுத்து இந்தியா தனக்கு நம்பிக்கைக்குரியவரெனக் கூறி தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெறாத வரதராஜப்பெருமாளை களமிறக்கியது. வரதராஜப்பெருமாளும் அவரது சகாக்களும் - தமிழீழ விடுதலைப் புலிகள் காடுகளுக்குள் பின்வாங்கிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, போலி வாக்குகளினால் வெற்றிவாகை சூடி, வடக்கு - கிழக்கு மாகாணசபையை அமைத்தனர்.

வடக்கு - கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரான வரதராஜப்பெருமாளும், அவரது சகாக்களும் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித மனித உரிமை மீறல்கள் பட்டியலிட முடியாதவை. கிராமங்கள், பட்டினங்களில் பண மோசடிகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்பன, வடக்கு கிழக்கு மக்களால்; ஆக்கிரமிப்புப் படையென வர்ணிக்கப்பட்ட இந்திய அமைதிப்படையின் துணையுடன் சர்வசாதாரணமாக அரங்கேறின.

அரசியல் அணுகுமுறைகள், இராஜதந்திர நகர்வுகளின் பலனாக வடக்கு - கிழக்கு மாகாண சபையை பிரேமதாசா அரசு கலைப்பதற்கு ஆயத்தமான வேளையில், வடக்கு, கிழக்கில் வரதராஜப்பெருமாளினால் முதலாவது சிறுபிள்ளை இராணுவம் (தமிழ் தேசிய இராணுவம்) என்ற பெயரில், வடக்கு கிழக்கில் வாழ்ந்த பத்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் யாவரும், கட்டாயமாக பெற்றோரின் அவலக் குரலின் மத்தியில் இப் படையில் சேர்க்கப்பட்டார்கள். அதேவேளையில் இந்திய சமாதானப்படை வடக்கு - கிழக்கிலிருந்து வெளியேறத் தயாரானது.

அச் சந்தர்ப்பத்தில் இந்திய அரசின் ஆலோசனைக்கு இணங்க, சிறீலங்கா அரசை மிரட்டவும், தமிழீழ மக்களை ஏமாற்றுவதற்குமாக, வரதராஜப்பெருமாள் ஓர் போலீயான தமிழீழப் பிரகடனத்தை மேற்கொண்டார். அத்துடன் வரதராஜப்பெருமாளும் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஓடி மறைந்து கொண்டார். இவையாவும் சரித்திரம்.

பிரகடனம் செய்யாத தமிழீழம்

1990 ஆம் ஆண்டு பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து, மக்கள் ஆதரவுடன், உலகம் வியக்கக் கூடிய அர்ப்பணிப்புக்கள் நிறைந்த போராட்டத்தின் பலனாக, தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏறக்குறைய இரண்டு தசாப்பதங்களாக பிரகடனப்படுத்தப்படாத சகல கட்டமைப்புக்களையும் உள்ளடக்கிய ஓர் தமிழீழ அரசை, வடக்கு - கிழக்கில் மூன்றில் இரண்டு பகுதியை, தமிழீழ விடுதலைப் புலிகள,; பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன் நிர்வகித்தனர்.

இவ் உலகம் வியக்கும் நடவடிக்கைகள் யாவும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் தனித்து நின்று, தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவினால்

மேற்கொள்ளப்பட்டவையே! காலங்கள் புரண்டோடி இறுதியில் பன்னாட்டு உதவியுடன் சிறீலங்கா கடந்த வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கையுடன் தமிழ் மக்களினால் தனித்து நிர்வகிக்கப்பட்ட தமிழீழமும் பறிபோனது.

புதிய சிந்தனையும் திருப்பமும்

முள்ளிவாய்க்கால் நடவடிக்கையைத் தொடர்ந்து தாயகத்திலும், புலத்திலும் வாழும் பெரும்பான்மையான தமிழீழ மக்கள,; இந்தியா ஒரு பொழுதும் தமிழீழ மக்களின் எந்த அரசியல் அபிலாசைகளையும் நிவர்த்தி செய்யப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆனால் என்னைப் போன்ற பலர் இந்தியாவின் உதவியுடன் நாம் மீண்டும் 1987ஆம் ஆண்டு இந்திய - சிறீலங்கா உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளோம்.

உண்மையை கூறுவதானால,; 1987ம் ஆண்டு இந்திய - சிறீலங்கா உடன் படிக்கை, தமிழீழ மக்களுக்கு அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் ஓர் தீர்வு அல்ல! ஆனால் தற்போதைய உலக ஒழுங்கு முறைக்கு அமைய, இந்திய - சிறீலங்க உடன் படிக்கையை ஏற்பதன் மூலம், எமது எதிர்காலச் சந்ததியினர் தமிழீழ அரசை சட்ட ரீதியாக நிறுவதற்கான அத்திவாரத்தை எம்மால் நாட்ட முடியும். இதை நாம் ஒரு பொழுதும் இந்தியாவினுடைய உறவு, ஆதரவு நட்பின்றி எம்மால ; தனித்து நின்று செய்யவோ அடையவோ ஒருபொழுதும் முடியாது !

இந்தியாவின் போக்கு மிக அண்மைக் காலங்களில் வெளியான உண்மைகளில் ஒன்று, வடக்கு, கிழக்கில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களை, இந்திய அரசு மறைமுகமாக அரசியல் காரணிகளுக்காக ஆதரிக்கிறதாம். மிகச் சுருக்கமாக கூறுவதானால், தமிழ் நாட்டுக்கு அருகாமையில,; சிறீலங்காவில் தமிழ் மக்கள் தனியினமாக வாழ்வது, இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்குமாம்.

இரண்டாவதாக, இன்று முள்ளி வாய்க்கால் நடவடிக்கை நடைபெற்று முடிந்து பதினெட்டு மாதங்களாகியும,; இந்தியாவும் சிறீலங்கா அரசு போல், தமிழீழ மக்களை நேசக்கரம் நீட்டும் எந்த நடவடிக்கைகளையும் இன்றுவரை மேற்கொள்ளவில்லை. அன்றுபோல் இன்றும், சிறீலங்கா அரசினது தமிழீழ மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ‘ஆமா’ போடும் சேவகனாக இந்தியா திகழ்கிறது.

மூன்றாவதாக, மீண்டும் வரதராஜப்பெருமாளின் அரசியல் உட்பிரவேசம், தமிழீழ மக்களுக்கு இந்தியாவினால் எந்த நல்ல சமிஞ்சைகளையும் காட்டவில்லை என்பது புலனாகிறது. இந் நடவடிக்கை ‘பழையகுறுடி கதவைத் திறடி’ என்ற கதையாக உள்ளது.

நான்காவதாக, இவ் வரதராஜப்பெருமாள் தாயகத்திலும், புலத்திலும் யாருடைய உதவியுடன் வலம் வருகிறார், எதைக் கூறுகிறர்? இவரது எதிர்காலச் சிந்தனைகள் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தாயகத்திலும், புலத்திலும் மிகவும் அபாயகரமான எதிர்காலம் ஒன்றேயே தெளிவாக பிரதிபலிக்கிறது.

ஐந்தாவதாக, இன்று வரதராஜப்பெருமாள் எங்கு உள்ளார் யார் யாரை சந்திக்கிறார் என்பதை ஆராயுமிடத்து, இந்தியா உண்மையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை மனதில் கொள்கிறார்களா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

எதிரிக்கு எதிரி நண்பன்

நாம் சரித்திரங்களை ஆராயுமிடத்து, தமிழீழ மக்களுக்கு சிறீலங்கா அரசு தவிர்ந்த வேறு எந்த அரசும் பகைமை அரசாக இருக்க முடியாது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் பல நாடுகளுடன் நேரடியான, மறைமுகமான பகைமைகள் உண்டு. இவ் இந்தியாவுடன் நட்பற்ற நாடுகள் யாவும் சிறீலங்காவின் நிலைமையை மிகவும் அவதானமாக கண்காணிக்கிறார்கள்.

இன்று இந்தியா ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஓர் நிரந்தர அங்கத்துவத்துக்கான முயற்சியில,; ஆசிய நாடுகளின் ஒன்றான சிறீலங்காவின் உதவியும் தேவைப் படுகிறது. ஆனால் அவ் உதவிக்காக, நீண்ட சரித்திரம் கலை கலாசாரத்தைக் கொண்ட தமிழீழ மக்களை வரதராஜப்பெருமாளுக்கும், சிறீலங்கா அரசிற்கும் தாரைவார்த்துக் கொடுப்பது இந்தியாவின் கடமைப்படா?

இந்திய தொடர்ந்து தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை அலட்சியம்

செய்யும் கட்டத்தில், ‘எதிரிக்கு எதிரி நண்பன’; என்ற ரீதியில,; தமிழீழ மக்கள் எதிர்காலத்தில் தமது அரசியலை நடத்துவது மிகவும் சாலச்சிறந்த ராஜதந்திரமாக அமையும். இதையே இந்தியாவும் தமிழீழ மக்களிடம் எதிர்பார்க்கிறதா?

ஆகையால் தமிழீழ மக்களின் விடயத்தில் இந்தியா விளிப்படைந்து, சிறீலங்காவில் அவர்களது அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்ப காய்களை நகர்த்துவதையே தமிழீழ மக்கள் விரும்புவார்கள். இதை தவிர்ந்து வரதராஜப்பெருமாளை தொடர்ந்தும் மேடை ஏற்ற நினைப்பது நல்ல ராஜதந்திரம் அல்லா.

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

12 நவம்பர் 2010

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர் நியுஸ்பாட்டு ஏனோ நீங்க முன்னா மாதிரி ஏ.டி.பி..சி ஒலி சேவைகளை இணைப்பதிலை... தயவு செய்து இணையுங்க நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளுவம் :lol:

  • தொடங்கியவர்

வணக்கம் தோழர் நியுஸ்பாட்டு ஏனோ நீங்க முன்னா மாதிரி ஏ.டி.பி..சி ஒலி சேவைகளை இணைப்பதிலை... தயவு செய்து இணையுங்க நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளுவம் :lol:

தொடர்ச்சியாக வாராந்தம் இணைக்கப்பட்டே வருகின்றது இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இணைபுகளை காட்டியமைக்கு மிக்க நன்றி தொழர் :lol:

அன்று பங்களாதேஷ் நாட்டை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா பிரித்து அந்த மக்களை நிம்மதியாக (இந்திரா) வாழ விட்டார்கள்.

இன்று இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களிடம் இருந்து அதே தேவை உள்ளது. இந்தியாவின் இருப்பே நாளுக்கு நாள் கேள்விக்குறியாகின்றது.

இந்திரா போல இல்லது இன்றைய இந்திய தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட சிறு வட்டத்துக்குள், தனிப்பட்ட கோபங்களுக்கு விலைபோய், தமிழர் வெறுப்பு என்ற பழிவாங்கு அரசியலுக்குள் மூழ்கியுள்ளனர்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

deleted

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்



அன்று பங்களாதேஷ் நாட்டை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா பிரித்து அந்த மக்களை நிம்மதியாக (இந்திரா) வாழ விட்டார்கள்.

இன்று இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களிடம் இருந்து அதே தேவை உள்ளது. இந்தியாவின் இருப்பே நாளுக்கு நாள் கேள்விக்குறியாகின்றது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இருப்பையும் அச்சுறுத்தும் கருத்துக்களையும், எச்சரிக்கைகளையும் தனிப்பட்ட முறையிலேனும் இலங்கை தமிழர்கள் தெரிவிப்பது, அங்குள்ள மக்களுக்கு எவ்வகையிலும் உதவ போவதில்லை.


இந்திரா போல இல்லது இன்றைய இந்திய தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட சிறு வட்டத்துக்குள், தனிப்பட்ட கோபங்களுக்கு விலைபோய், தமிழர் வெறுப்பு என்ற பழிவாங்கு அரசியலுக்குள் மூழ்கியுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் இந்தியாவின் தலைவர்களுக்கு ஆலோசனை சொல்வதையும், அறிவு புகட்டுவதையும் விட்டுவிட்டு, தமது மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை பெற்றுத்தர நடைமுறையில் சாத்தியமான அணுகுமுறைகளை பற்றி சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியா தமிழீழத்துக்கு ஆதரவளிக்காததற்கு காரணம் தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்புகள் என்று கருதுவது நம்மை நாமே ஏமாற்றி கொள்ளுவதாகும். இந்திய வெளிநாட்டு கொள்கை, அன்று முதல் இன்று வரை தமிழீழத்துக்கு எதிராகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு தமிழீழம் பாதகமாக அமையும் என்று இந்திய அரசு கருதுவதாகும். நேற்று வெளியான விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை உறுதிப்படுத்தும் நீதிமன்ற தீர்ப்பும் அதனை ஆமோதித்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள தமிழ்த்தேசியவாதிகள் தமிழ்நாட்டு பிரிவினைவாதிகள், பொதுவுடமை கிளர்ச்சியாளர்களின் உறவை இலங்கை தமிழர்கள் தவிர்த்து, இந்திய தேசியவாதிகளுடன் உறவை பலப்படுத்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு உதவுவதன் மூலமே இந்திய ஆதரவை இலங்கை தமிழர்கள் பெற்று கொள்ள முடியும்.

Edited by Jude

" இதற்கு காரணம் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு தமிழீழம் பாதகமாக அமையும் என்று இந்திய அரசு கருதுவதாகும். நேற்று வெளியான விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை உறுதிப்படுத்தும் நீதிமன்ற தீர்ப்பும் அதனை ஆமோதித்திருக்கிறது."

இது ஒரு புரட்டப்பட்ட புரளி ( political myth - 9/11 அமெரிக்காவின் உள்வேலையே என்று நம்புவர்கள் போல). அழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உடந்தையாய் இருந்த குற்ற உணர்வே இதற்கு காரணம்.

மே 2009 இல் இருந்து இந்தியாவுக்கு எதிராக இல்லை அதற்கு முன்னதாக நீண்ட நாட்களாகவே தமிழர் இந்தியாவுக்கு ஒன்றும் செய்யவில்லை. மாறாக சிங்களம் தமிழரையும் இந்தியாவையும் ( 13ஆம் திருத்த சட்டம், சீனாவின் ஆதிக்கம் ) என ஏமாற்றி விட்டது.

இந்த தீர்ப்பு என்பது ஒரு கண்கட்டு வித்தை -

நீதிபதி முதலில் ஏன் இந்த அரச அறிக்கை மொட்டையாக இருக்கின்றது என்றார்.

பின்னர் விடுதலைப்புலிகள் தான் ஆஜராக முடிடும் என்றரர். ஒருவர் முயன்றார்.

பின்னர் வழக்கை ஒத்திவைத்தார். பின்னர் பலரும் இந்த வழக்கு இழுபடும் என நினைக்கையில் திடீரென்று "தீர்ப்பாயம்".

"இந்திய தேசியவாதிகளுடன் உறவை பலப்படுத்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு உதவுவதன் மூலமே இந்திய ஆதரவை இலங்கை தமிழர்கள் பெற்று கொள்ள முடியும்."

இதைதான் கூட்டமைப்பினர் மே 2009க்கு முன்னரும் பின்னரும் செய்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கண்ட பயன் எல்லாருக்கும் தெரியும்!

"இந்தியாவில் உள்ள தமிழ்த்தேசியவாதிகள் தமிழ்நாட்டு பிரிவினைவாதிகள், பொதுவுடமை கிளர்ச்சியாளர்களின் உறவை இலங்கை தமிழர்கள் தவிர்த்து, இந்திய தேசியவாதிகளுடன் உறவை பலப்படுத்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு உதவுவதன் மூலமே இந்திய ஆதரவை இலங்கை தமிழர்கள் பெற்று கொள்ள முடியும்."

அரசியல் ரீதியாக சரியான கருத்து. ஆனால் 1948 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அமைதிப்படை வரை தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை உயிரை, கணவனை, மனைவியை, பிள்ளையை இழந்தவர்களுக்கும் வாழும் உரிமையை இழந்தவர்களுக்கு இந்தியா என்ன செய்தது என திருப்பிக்கேட்டால்????

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.