Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக் குற்றங்களும் ஈழத் தமிழர்களின் கடமையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தக் குற்றங்களும் ஈழத் தமிழர்களின் கடமையும்

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்த போர்க்குற்றங்களுக்காக இந்திய அரசாங்கத்திற்கெதிராக எந்தவித நீதி விசாரணையையும் சர்வதேசத்திடம் கோராததன் மூலம் மிகப்பெறும் வரலாற்றுத் தவறொன்றை ஈழத்தமிழர்கள் இழைத்திருக்கிறார்கள். அவர்கள் ராஜீவ் காந்தியின் கொலை என்கிற இரைச்சலுக்குள் இந்தப் போர்குற்ற விசாரணைகளை அடக்கி விட, அவர்களுள் இன்னுமொரு சாரார் பிற்கால நலன்களுக்காக இந்திய அரசாங்கத்தின்மேல் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று முடிவெடுத்தனர். அதேவேளை இன்னுமொரு பிரிவினர், தமிழர் ஆயுத ரீதியில் பலம்பெற்று வருவதால் அவ்வாறான விசாரணைகள் தேவையற்றவை அல்லது முக்கியத்துவம் அற்றவை என்ற முடிவிற்கு வந்திருந்தனர். வீணடிக்கப்பட்ட இந்த 20 வருடகாலத்தில் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் தவறின் மூலம் அன்று நேரடியாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இந்திய தலமைப்பீடம் இன்று அதை விடப் பன்மடங்கு அளவில் மனித குலத்திற்கெதிரான போர்க்குற்றங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈழத்தில் அரங்கேற்றி முடித்திருக்கிறது. தமிழர் இன்னுமொரு முறை இதே வரலாற்றுத் தவறை இழைக்கக் கூடாது. ஈழத்தமிழரின் இந்தப் போர்க்குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் என்பது ஒரு முற்றான அளவில் நடைபெற வேண்டுமானால் அது அவர்களின் சொந்த முயற்சியினாலும், ஒழுங்கமைப்பினாலும் தான் முடுக்கி விடப்பட வேண்டும்.

முதலாவதாக ஈழத்தமிழர்கள் நடைபெற்ற போர்க்குற்றங்களின் முழுப் பரிமாணத்தையும் சரிவரப் புரிந்துகொள்ளுதல் அவசியம். அதன் பிறகு அந்தப் போர்க்குற்றங்களை அதேயளவு பரிமாணத்துடன் வெளியுலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய பாரிய கடமையொன்று அவர்களுக்கு இருக்கிறது.

நடந்தது ஒரு சர்வதேச போர்க்குற்றம். அது சிறிலங்கா எனும் நாட்டிற்குள் மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. நடத்தப்பட்ட போர்க்குற்றம் "ஒரு நாட்டிற்குள் "சிறுபான்மை" த் தமிழர்க்கெதிராக நடத்தப்பட்டதல்ல, மாறாக இலங்கை எனும் நாட்டிற்குள் ஈழத்தமிழரின் தேசத்திற்கெதிராக நடத்தப்பட்ட போர்குற்றம். இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர்க்குற்றமே முதலாவது சர்வதேச போர்க்குற்றமாக ஆகிறது.

"போர் முடிந்து விட்டதாக" வென்றவர்கள் இன்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்துவரும் அட்டூழியங்கள் நடைபெற்ற போரென்பது வெறுமனே புலிகள் எனப்படும் இயக்கத்திற்கெதிரானது அல்ல மாறாக மொத்த ஈழத்தமிழரின் தேசத்திற்கும் அவர்களது தாயக அபிலாஷைக்கும் எதிரானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. இதன் அடிப்படையிலேயே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் கட்டப்பட வேண்டும். இக்குற்றங்களின் பரிமாணத்தையும் , இதில் ஈடுபட்ட சர்வதேசக் குற்றவாளிகளையும் சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துவதற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் ஈழத்தமிழர் செய்வது அவசியம்.

இனவழிப்பில் ஈடுபட்ட சிறிலங்காப் பயங்கரவாத அரசிற்கு அப்பால், அப்போதிருந்த அமெரிக்க நிர்வாகம் தமிழரின் தேசியப் பிரச்சனையை "சர்வதேசப் பயங்கரவாதமாகப்" பார்த்தது. இன்னுமொரு அமெரிக்க வெளியுறவு நிர்வாகம் தாம் பதவிக்கு வருமுன்னர் தமிழரின் தேசியப் பிரச்சனையைச் சரிவரப் புரிந்துகொண்டிருந்தாலும், பின்னர் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. ஐநாவில் இருந்துகொண்டு இங்கிலாந்தும் தமிழரின் தேசியப்பிரச்சனையை "சிறிலங்காவில் புரையோடிப்போன வன்முறையாகத்தான்" பார்த்துக்கொண்டிருந்தது. இவர்களுக்கு அடுத்தபடியாக "தேசியப் பிரச்சனைகள்" மேல் எந்தவித விருப்புமற்றுக் காரியமாற்றக் கிளம்பிய சர்வதேச சமாதான ஒப்பந்தக்காரர்கள். பொதுமக்கள் பற்றிய எந்தவித கரிசனையுமற்ற இணைத்தலமை நாடுகள். இவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவும் சீனாவும்.

ஒரு சமாதானத் தீர்வையோ அல்லது அவ்வாறானதொரு தீர்விற்கான சமிக்ஞையையோ வழங்குவதற்காகவாவது இனவழிப்பில் நேரடியாகப் பங்கேற்றவர்களும், இனவழிப்பிற்கு முற்றான ஆதரவை அளித்தவர்களும் இந்தப் பதினெட்டு மாத காலப்பகுதியில் இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழரின் தேசியப் பிரச்சனைக்கு பின்னாலிருக்கும் நீதியைப் புரிந்துகொள்ளத் தவறியதன் மூலமும், பன்முகப்படுத்தப்பட்ட இனவழிப்பைக் குடியேற்றங்களின்மூலம் தொடர்வதனூடாகவும் இனவழிப்புப் போரை நடத்தியவர்கள் தமது நிர்வாணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அநேகமான சந்தர்ப்பங்களில் யுத்தக் குற்றவாளிகளும் அவர்களது ஏவலாளர்களும் தொடர்ந்தும் பதவிகளில் நீடித்தே வருகின்றனர். மனித குலத்திற்கெதிராக தாம் புரிந்த குற்றங்களுக்காக தமது பதவிகளைத் துறந்தோ அல்லது அழிக்கப்பட்ட மக்கள் கூட்டங்களுக்கு நீதியான தீர்வை வழங்குவதையோ விடுத்து தாம் புரிந்த இனவழிப்பிற்கான சாட்சியங்களை மறைத்தோ அல்லது அழித்தோ அல்லது இன்னுமொரு படி மேலே போய் சர்வதேசத்தில் இக்குற்றங்களுக்கெதிராக தொடரப்படும் விசாரணைகளை மழுங்கடிப்பதன் மூலமோ தமது இனவழிப்பைத் தொடர்கின்றனர். இனவழிப்பில் முக்கிய பங்காளிகளான இந்தியாவும் சீனாவும் ஐ.நா பாதுகாப்புச்சபை கூட்டிய விசாரணைகளில் நடந்துகொண்ட விதம் அவர்களது நோக்கத்தைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. இது போர்க்குற்றங்களுக்கு ஒருபடி மேலே போய் அதை மறைப்பதற்காக சர்வதேச அளவில் இந்த இரு நாடுகளும் புரியும் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேசப் பார்வையாளர்களும் மனிதவுரிமைக் குழுக்களும் இனவழிப்பிற்கான விசாரணைகள் எந்தவித நீதிவழங்கல்களும் இன்றி வருடக்கணக்கில் இழுபடப்போகின்றன என்று எண்ணுவதற்கு ஏதுவாகிவிடுகின்றது.

பல இந்திய ஆய்வாளர்கள் ஈழத்தமிழர்மேல் நடந்த இந்த இனவழிப்புப் போருக்கான அடிப்படைக் காரணம் முன்னால்ப் பிரதமர் ரஜீவ் காந்தி கொல்லப்பட்டதுதான் என்று திருப்பத் திருப்பக் கூற முற்படுகின்றனர். சுமார் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்தெடுத்து, இன்னும் 300,000 பேரை கைதிகளாக்கி, தமிழர் தாயகத்தை முற்றான இனவழிப்பு ஒன்றிற்குள் தள்ளிவிட்டுள்ள இந்த அரக்கத்தனத்தை வெறும் பழிவாங்கல் நடவடிக்கையாகக் காட்டுவதன் மூலம் பாரிய தவறொன்றை இந்த ஆய்வாளர்கள் செய்துவருகின்றனர். இவர்கள் சொல்வதில் ஏதாவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களது கருத்துக்களும் யுத்தக்குற்ற விசாரணைகளில் சாட்சியங்களாக சேர்க்கப்படல் அவசியமாகும்.

"தவறானவர்களின் கைகளில் ஆயுதங்கள் இருக்கின்றன" என்று புலிகளை மேற்கோள் காட்டி வந்த இனவழிப்பின் பங்காளிகள் இன்று ஒரு தேசிய இனத்தை அழித்து அவர்களை முற்றாகக் கபளீகரம் செய்துவரும் ஒரு இனவழிப்பு அரசிடமே அம்மக்களை முற்றாக கைய்யளித்து விட்டுள்ளதை எப்படி நியாயப்படுத்தப்போகின்றனர்?

கொழும்பு அதிகார மட்டத்தை மேற்கோள் காட்டி கடந்த வியாழனன்று "தி ஐலண்ட்" பத்திரிக்கை புலிகளின் சூட்டு வலு பற்றி செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் கொழும்பின் இனவழிப்பை ஆதரித்தும் நியாயப்படுத்தியும் வரும் இந்த இனவழிப்பின் பங்காளிகள் புலிகளின் சூட்டு வலுவென்பது ஒருபோதுமே தமது எதிரி இனத்தின் மேல் பாவிக்கப்படவில்லை என்பதை மறந்துவிடுகின்றனர் அல்லது திட்டமிட்டு மறைத்து விடுகின்றனர்.

"தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்". தோற்கடிக்கப்பட்ட தமிழர்கள் புனர்வாழ்வு பற்றி மட்டுமே இப்போது பேச வேண்டும். "வெற்றி பெற்றவர்கள் " தரப்போகும் ஆறுதல் தீர்வுகளுக்காகப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அதேவேளை "வெற்றி பெற்றவர்களுக்கு" தாராள மனப்பாங்குடன் உதவுவதன் மூலம் அவர்கள் தமிழர் தாயகத்தில் நடத்திவரும் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும், பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் உதவ வேண்டும். தமிழரின் விடுதலைப் போராட்டத்தை சகித்துகொள்ள முடியாத இந்திய அதிகாரிகளும், இன்னும் இந்த இனவழிப்புப் போரில் பங்காளிகாளாக நின்ற ஏனையவர்களும் தமிழர்களிடம் திருப்பத் திருப்பக் கூறி வருவது இதைத்தான்.

" ஆம், நாங்கள் அடிபணிகிறோம், வெற்றிபெற்றவர்களிடமிருந்து தயவை இறைஞ்சி நிற்கிறோம்" என்று இனவாதத்துடன் சமரசம் செய்ய நினைப்பவர்கள் சிங்களம் தமிழர்களுக்கான அதிகாரத்தைத் தங்கத் தட்டில் தரும் என்று காத்திருக்கிறார்கள்.

இவ்வாறான சரணாகதி பனப்பாங்குகள் முற்றாகக் களைந்து எறியப்பட வேண்டியவை. இந்த மனப்பாங்கு யுத்தக்குற்ற விசாரணைகளை முற்றாக மழுங்கடிக்கக் கூடியவை என்பது மட்டுமல்லாமல் யுத்தக் குற்றவாளிகள் தமது இனவழிப்பைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தவும் வழிவகுத்து விடக்கூடியவை.

இராணுவப் பலமொன்று அற்ற இன்றைய நிலையில் யுத்தக்குற்ற விசாரணைகள் என்பது ஈழத்தமிழரின் அடுத்த கட்ட போராட்டத்திற்கு மிக மிக இன்றியமையாதது. ஒரு முற்றான , விளக்கமான யுத்தக்குற்ற சாட்சியங்களும், தொகுப்புக்களும் சர்வதேசத்துடனான ஈழத்தமிழரின் இனிவரும்காலத் தொடர்பாடல்களுக்கு மிகவும் அவசியமானது.

பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின்படி பிரியங்கா காந்தி ஒருதடவை, "மனிதப் பிறவிகள் ஒருபோது மன்னிப்பதோ மறப்பதோ இல்லை" என்று கூறியிருந்தாராம்.யுத்தக்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கும்போது எந்தவொரு புத்தி சுயாதீனமுள்ள நபரும் பிரியங்கா காந்தியின் இரக்கமற்ற வழிமுறையைப் பின்பற்றிச் செயற்படுங்கள் என்று ஈழத்தமிழருக்கு அறிவுரை கூறத்தேவையில்லை.

ஈழத்தமிழரைப் பொறுத்தவரையிலும் யுத்தக்குற்ற விசாரணைகளென்பது அவர்களது தேசத்திற்கு அரசியல் நீதியைப் பெற்றுத்தரக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அது அவர்களது தேசத்தின் எதிர்கால அரசியலை ஒழுங்கமைக்க உதவ வேண்டும் என்பதுடன் சர்வதேச சமூகத்தின்முன்னால் ஈழத்தமிழரின் தார்மீகக் குரலாகவும் ஒலிக்க வேண்டும். அரசியல் ரீதியான வெற்றி கிட்டும்வரையிலும் இந்தக் யுத்தக் குற்ற விசாரனைகளுக்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்க வேண்டும்.

ஆனால், ஐ. நா வால் அமைக்கப்பட்டுள்ள யுத்தக்குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு எந்தளவு தூரத்திற்கு தனது நோக்கத்தை அடையுமென்பதோ அல்லது பாதிக்கப்பட்ட தமிழருக்கு அவர்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் ஒரு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என்பதோ கேள்விக்குறியானது.

உண்மைகளை சமாதி கட்டி ஒளித்து வைத்திருக்கும் வரையிலும் இந்த விசாரணை மன்றங்கள் ஒருபோதுமே தமது நோக்கத்தை அடையப்போவதில்லை. சிலவேளை ஒரு பலமிக்க அரசு தனது சொந்தத் தேவைகளுக்காக இந்த உண்மைகளைத் தோண்டி எடுக்கும்வரை அது அப்படியேதான் இருக்கப்போகின்றது.

ஆகவே, ஈழத்தமிழர் தமக்கென்று காத்திரமான விசாரணை அமைப்புகளை நிறுவுவது மிகவும் அவசியமாகின்றது. அப்படி நிறுவும் பட்சத்தில், போராட்டத்தின் ஆரம்பக் காலங்களில் நடந்தேறிய இனவழிப்பின் சாட்சியங்கள் இந்திய அதிகாரப் பீடத்தால் அந்நாட்களில் "பாதுகாப்பு" கருதி இந்தியாவில் பதுக்கப்பட்டதையும் அவை ஒருபோதுமே திருப்பித் தரப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்வதும் அவசியம்.

ஒரு முற்றான இனவழிப்பை எதிர்நோக்கியிருக்கும் தமிழர் தேசமும், குடியேற்றங்களை தொடரும் கொழும்பும் இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒன்றுதான் என்றால், ஈழத்தமிழர்களின் தாயகமான வடக்கையும் கிழக்கையும் மீள இணைப்பது முக்கியத்துவம் அற்றது என்றால், அல்லது தமிழ்நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சனைக்கும் தொடர்பில்லை என்றால் அவ்வாறான எண்ணக்கரு இந்திய அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரையிலும் வரவேற்கத்தக்க விடயமே. புதுதில்லியின் சில ஆய்வாளர்கள் சொல்லுவதுபோல, ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவும், சீனாவும் ஏன் ஒன்றாக நோக்கப்படக் கூடாது? சீனா நீண்ட காலமாகவே ஈழத்தமிழருடன் வாணிபத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது. வரலாற்றின் அடிப்படையில் தில்லியின் ஆட்சிப்பீடத்திலிருக்கும் சுல்த்தான்களையும், முகாலயர்களையும் விடவும் சீனா ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையிலும் அண்மையானது.

உலகளாவிய ரீதியில் யுத்தக்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கும் போது ஈழத்தமிழர்கள் சீனா உற்பட பலரையும் உதவும்படிக் கேட்டுக்கொள்வதில் தயங்கக் கூடாது. நடந்தேறிய யுத்தக்குற்றங்களின் ஒருபகுதியையாவது வெளிச்சத்திற்கு கொண்டுவரக்கூடிய வல்லமை சீனாவிடம் நிச்சயம் இருக்கிறது.

யுத்தக்குற்ற விசாரணைகளை எந்தவொரு அதிகார வர்க்க நிழலின் கீழும் விட்டு விடுவது எந்தவித பயனையும் தரப்போவதில்லை. ஈழத்தமிழரின் முயற்சியானது சுதந்திரமானதாகவும், உலகளாவிய ரீதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். சில அரசியல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில் அதிகார வர்க்கங்கள் இன்று சமரச போக்கிலேயே செயற்படுகின்றன. ஆனால் இந்தச் சமரசங்கள் நிரந்தரமற்றவை என்பதுடன் முரண்பாடுகளின் இன்னொரு பக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எமது இறுதி இலக்கை அடையவேண்டுமானல் ஈழத்தமிழர்களாகிய ஒரு காத்திரமான நீண்டகால வெளியுறவுக்கொள்கையை வகுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

நன்றி தமிழ்நெட்

Edited by ragunathan

மொழிபெயர்ப்புக்கும் தகவல்களுக்கும் நன்றி.

வரலாற்று தவறாகாமல் இருக்க, காலம் தாழ்த்தாது நாம் எல்லோரும் எமக்கு தெரிந்த யுத்த குற்றங்களை, கொல்லப்பட்டவர்கள் விபரத்தை, காணாமல் போனவர்கள் தகவல்களை இன்றே அனுப்புவோம்.

இதில் நம்பிக்கை அற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்போம். தேவையானவர்களுக்கு உதவுவோம்.

புகைப்படங்களை அனுப்புவோம்.

மேலதிக விபரங்களுக்கு :

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77243

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய் நம்பியார், மற்றும் இந்திய ஐ நா அதிகாரிகள் , வெள்ளை கோடி விவகாரத்தில் தொடர்பு பட்ட தமிழ் நாடு இந்திய அரசியல்வாதிகள் பலரை குற்றம் சாட்டி அறிக்கைகள் ஐநா குழுவுக்கு சமர்பிக்கப்பட வேண்டும்.

சீன அதிகாரிகளை அணுகினால் நிச்சயமாக உதவுவார்கள், (இந்தியாவுக்கு எதிராக). தங்களுக்கு தெரிந்ததை சொல்ல தயங்க மாட்டார்கள் என்று நம்பலாம்.

"சீன அதிகாரிகளை அணுகினால் நிச்சயமாக உதவுவார்கள், (இந்தியாவுக்கு எதிராக). தங்களுக்கு தெரிந்ததை சொல்ல தயங்க மாட்டார்கள் என்று நம்பலாம்"

இதுவும் ஒரு புதிய சிந்தனை போல தெரிகின்றது.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின்படி பிரியங்கா காந்தி ஒருதடவை, "மனிதப் பிறவிகள் ஒருபோது மன்னிப்பதோ மறப்பதோ இல்லை" என்று கூறியிருந்தாராம்.

ஒரு பெரிய ஆழ மரம் விழுந்தால் அதன் அதிர்ச்சி இருக்கத்தான் செய்யும் என்று சொன்ன கொடூரகாரன் இந்த பிரியங்காவின் தந்தை ராஜீவ், தனது தாயாரின் படுகொலைக்கு பழியாக கொல்லப்பட்ட 3000 சீக்கிய இன மக்களின் படு கொலைக்கு தனது ஆதரவை இப்படி சொன்னான் அதுவும் நாட்டின் பிரதமரான பின்.

இப்பிடி ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்த ஒருவனை தண்டிக்க முடிந்ததா?

பாவம் அந்த மக்களுக்கும் நியாயம் வேண்டும், இனத்தை காட்டி கொடுத்ததிற்கு பிரதமர் பதவி பிச்சை போடுகிறார்கள்.

ஐ நா வில் இருந்தது கொண்டு அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் இவர்களை தண்டிக்க முடியுமா?

போர் குற்ற விசாரணையில் பங்காளியாக உள்ள இந்தியா இலங்கை பக்கம் நின்றாக வேண்டும் இந்தியாவிற்கு வேறு தெரிவில்லை ஆனால் சீனாவுடன் இலங்கை உண்மையான நண்பன் ஆகவே அதுவும் இலங்கைக்கு எதிராக திரும்புமா என்பது (? தான்)

யானையை முழுதாக சாப்பிட முடியுமா? முடியும்

முதலில் சின்ன துண்டு துண்டாக்க வேண்டும்.

இந்தியா செய்த, செய்து(எம்மினம் அல்லாதொரினதும் கூட) வரும் மனித உரிமை மீறல்களை மீதான கடும் எதிர்ப்புகளின் மூலம்

இந்தியாவினை சர்வதேச ரீதியில் நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் அதன் பகை நாடுகளின் பார்வையை நம்மீது திருப்பலாம்

அது சில வேளைகளில் இந்தியா தமிழருக்கு சில சலுகைகளை கொடுத்து சமாதான படுத்த முற்படலாம்.

எது எவ்வாறிருப்பினும் இந்த்தியாவிர்கேதிரான நிலைப்பாடை தமிழர் விரும்பியோ விரும்பாமலோ எடுத்தே ஆக வேண்டும்.

இலங்கை தமிழர் இல்லா விடத்து இலங்கையில் இந்தியா நடத்திய போர் குற்றத்திற்கு சிங்களமே சர்வதேச நீதிமன்று சென்றிருக்கும்

70 களில் கிழக்கு பாகிஸ்தான் போரில் இலங்கையின் நிலைப்பாடு 80 களில் அமெரிக்கா இந்தியாவை உளவு பார்க்க புத்தளத்தை தளமாக பயன்படுத்த அனுமதி என்று எவனொருவன் இந்தியாவுக்கு எதிராக வருகிறானோ அவனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இலங்கையின் முதல் வேலை.

தமிழரை இந்தியா இப்பவும் பகடை காயாக பயன்படுத்துகிறது.

தமிழருக்கு சாணக்கிய தந்திரம் வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.