Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு பல்கலைக்கு சிங்கள உபவேந்தர் நியமனம்: கூட்டமைப்பு எதிர்ப்பு

Featured Replies

கிழக்கு பல்கலைகழகத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு தீவீரமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தமிழர் ஒருவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உயர் கல்வி அமைச்ர் எஸ்.பி.திசநாயக்காவிற்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயர் கல்வி அமைச்சருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்

கிழக்கு பல்கலைக்கழகமானது பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிராந்தியத்தை கொண்ட பல்கலைக்கழகமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்க வேண்டிய ஒரு பல்கலைக்கழகமாகவும் திகழ்கின்ற நிலையில் தற்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை உப வேந்தராக நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது. திட்டமிட்டு கிழக்கு பல்கலைககழகத்தை பாதிப்படையச் செய்யும் முயற்சியாகவும் தமிழர்களின் பாராம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்காது நசுக்குவதற்கான முயற்சியாகவும் அமைகின்றது.

கிழக்கு பல்கலைக்கழத்திற்கு எதிர்காலத்தில் கல்வி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள் ள வேண்டியுள்ளது. குறிப்பாக கலை காலச்சாரம்இ பண்பாட்டு விழுமியங்களையும் பல நூல்களையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது.

இதனை நிறைவேற்றுவதற்கு மேலும் கல்விமான்களையும் கல்வி சமூகத்தை உருவாக்கவதற்கு கிழக்கு பல்கலைககழகத்திற்கு தமிழ் உபவேந்தரின் பணி அத்தியவசியமானது என தெரிவதித்துள்ள அவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவரை நியமிப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கையினை கைவிடடு பொருத்தமான ஒரு தமிழரை உபவேந்தராக நியமிக்க வேண்டுமெனவும் உயர்கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளர்.

EElanatham.Net

அடுத்ததாக தமிழ் படிப்பிக்க சிங்களவர்களை நியமித்தாலும் நியமிப்பார்கள்.

இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சிங்களவர்களில் பெரும்பான்மையனவர்களில் தமிழன் என்று வரும் பொழுது அநியாயத்தில்,

- படித்தவர்கள் பாமரர்கள்

- கருத்தாளர்கள் மாற்றுகருத்தாளர்கள்

- ஆஸ்திகர்கள் நாஸ்திகர்கள்

- ஆண்கள் பெண்கள்

எல்லோரும் ஒரு குடையில் ஊறியவர்களே !

ஆனால் தமிழர்களோ அப்படி இல்லை, வந்தாரை வாழ வைத்தே அழிந்து போவோம் :D

இப்படியான சூழ்நிலை உருவாகியதாக கடும் வதந்தி அடிபடுகிறது.

ஆனால் விடயமறிந்த பொறுப்பானவர்கள், ஒரு துணைவேந்தர் நியமனம் பற்றி பின்வருமாறு கூறினர்.

(1) பல்கலைக் கழகத்த்தால் விண்ணப்பம் கோரப்படும்.

(2) விண்ணப்பங்கள் பல்கலைக்கழக கவுன்சிலால் பரிசீலிக்கப்பட்டு, நேர்முக தேர்வு நடைபெறும். அத்துடன் கவுன்சில் உறுப்பினர் வாக்களிப்பும் நடைபெறும்.

(3) இவற்றின் அடிப்படையில், பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் மூவர் பல்கலைக் கழகத்தால் சிபாரிசு செய்யப்படுவர்.

(4) சிபாரிசு UGC என்ற அமைப்பினூடாக, உயர் கல்வி அமைச்சினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். ஜனாதிபதி மூவரில் விரும்பும் ஒருவரை நியமனம் செய்வர்.

(5) மூவரிலும் ஜனாதிபதிக்கு உடன்பாடில்லை என்றால் மீண்டும் பெயர்களை தெரிவுசெய்து அனுப்பும் படி பல்கலைக் கழகத்தை ஜனாதிபதி கோரலாம்.

(6) மீண்டும் (1) லிருந்து நடைமுறைகள் பின்பற்றப்படும். பல்கலை விரும்பினால் அதே மூவரை திரும்பவும் அனுப்பலாம்.

எனவே சிங்கள பயங்கரவாதிகளில் ஒருவனை துணை வேந்தராக அரசு நியமிப்பது சிங்கள பயங்கரவாத அரசின் சட்டத்துக்கே முரணானது.

கிழக்கு பல்கலையில் கருணா, பிள்ளையானின் அடாவடித்தனமும், பிரதேசவாதத்தை முன்வைத்து முன்னேறியவர்களின் கொட்டமும், சக கல்வியாளர்களிடம் பொங்கி வழியும் பொறாமைகளும், பொறுப்பற்ற கிழக்கு அரசியல்வாதிகளுமே இப்படியான ஒரு சூழ்நிலைக்கு காரணம் என - பல்கலைக்கழக வளர்ச்சியில் உண்மையான அக்கறை உள்ள விடயமறிந்த பொறுப்பானவர்கள் கவலைப்படுகின்றனர்.

கடந்த ஒன்பதாம் திகதியுடன் முடிவடைந்த யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கான காலக்கெடுவினுள், தற்போதைய உபவேந்தர் சண்முகலிங்கன் உட்பட, யாழ் தமிழ்க் கலாச்சாரத்தை தகர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அலையும் "கூலும்" விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன.

மனித உரிமை ஆரவலர்கள் என்ற போர்வையில் தமிழின விரோத பிரச்சாரம் செய்ததுடன், சுயநல குடும்ப ராஜ்ஜியம் அமைக்க முயலுவதுடன், பல வருடங்களின் முன்னர் "சரிநிகர் / எரிமலை" சஞ்சிகையில் தமிழ் கலாசாரத்தையும், சைவ சமயத்தையும் தொடர்ச்சியாக மிகக் கேவலமாக இழிவுபடுத்தி எழுதியும் வந்த "கூல் கூட்டத்தினர்" பலவிதமாக "கூலுக்கு" ஆதரவு தேடும் பணியில் இறங்கியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக வட்டாரம் தெரிவிக்கிறது. மன்னாரிலுள்ள சில பாதிரியார்களும் ஆதரவு தேடும் பணியில் இறங்கியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக வட்டாரம் தெரிவிக்கிறது.

அண்மையில் பகிஸ்கரிப்பு நடாத்தி வவுனியா வளாகத்தை குழப்பும் பணியிலும் இவர்களின் சில ஆதரவு சக்த்திகள் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் சந்தேகிக்கின்றனர். .

கடந்த ஒன்பதாம் திகதியுடன் முடிவடைந்த யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கான காலக்கெடுவினுள், தற்போதைய உபவேந்தர் சண்முகலிங்கன் உட்பட, யாழ் தமிழ்க் கலாச்சாரத்தை தகர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அலையும் "கூலும்" விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன.

மனித உரிமை ஆரவலர்கள் என்ற போர்வையில் தமிழின விரோத பிரச்சாரம் செய்ததுடன், சுயநல குடும்ப ராஜ்ஜியம் அமைக்க முயலுவதுடன், பல வருடங்களின் முன்னர் "சரிநிகர் / எரிமலை" சஞ்சிகையில் தமிழ் கலாசாரத்தையும், சைவ சமயத்தையும் தொடர்ச்சியாக மிகக் கேவலமாக இழிவுபடுத்தி எழுதியும் வந்த "கூல் கூட்டத்தினர்" பலவிதமாக "கூலுக்கு" ஆதரவு தேடும் பணியில் இறங்கியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக வட்டாரம் தெரிவிக்கிறது. மன்னாரிலுள்ள சில பாதிரியார்களும் ஆதரவு தேடும் பணியில் இறங்கியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக வட்டாரம் தெரிவிக்கிறது.

அண்மையில் பகிஸ்கரிப்பு நடாத்தி வவுனியா வளாகத்தை குழப்பும் பணியிலும் இவர்களின் சில ஆதரவு சக்த்திகள் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் சந்தேகிக்கின்றனர். .

பெருமளவு காசும் வரியிறைக்கப்படுவதாக கதைகள் உலாவுகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.