Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடப்பகுதிகளில் பாதைகளை அமைக்க இந்தியா 416 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடப்பகுதிகளில் பாதைகளை அமைக்க இந்தியா 416 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

வீரகேசரி இணையம் 11/26/2010 5:08:15 PM

வடபகுதியில் போக்குவரத்து பாதைகளை அமைப்பதற்கு இந்தியா 416 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா ஆகியோருக்கு இடையிலான இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இவ் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது, உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும் இந்திய அரசின் சார்பில் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் நதீம் பென்ஜெடன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

மேலும் வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணித்து கொடுக்கவுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பான ஆவணங்களை நிதியமைச்சின் செயலாளரும், இந்திய தூதுவர் அசோக் கே காந்ததும் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில், இந்திய வெளிவிவகா செயலாளர் நிருபமா ராவ் உள்ளிட்ட தரப்பினரும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

அதேவேளை இலங்கைக்கு 4 நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இன்று முற்பகல் பிரதமரை சந்தித்த, இந்திய வெளிவிவகார அமைச்சர், அதன் பின்னர், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்தார். இதனை தவிர இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் கூட்டு ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் இடமபெறவுள்ளது.

2000 ஆம் ஆண்டு இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்தியிருந்தன. அக்காலம் தொடக்கம் இருதரப்பு வர்த்தகம் 3 பில்லியன் டொலர் வரை வளர்ச்சி கண்டுள்ளது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைப்போன்று அல்லாமல் பரந்துபட்ட பொருளாதார பங்குடைமை உடன்படிக்கையானது (சீபா) வர்த்தக சேவைத்துறையையும் உள்ளடக்கியதாகும். இத்துறையில் இந்தியா வலுவானதாக உள்ளது. வெளிமட்டப் பணியாளர்களை ஈடுபடுத்துதல்,மக்களின் போக்குவரத்து உட்பட பல விடயங்களை உள்ளடக்கியதாக சீபா உள்ளது.

இதேவேளை, அம்பாந்தோட்டையிலும் யாழ்ப்பாணத்திலும் இரு இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகத்தை இந்தியா திறக்கவுள்ள நிலையில் அம்பாந்தோட்டையில் திறக்கப்படவுள்ள அலுவலகத்துக்கு கொன்சூலாக கே.எம்.மோகனகுமாரனும் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு கொன்சூலாக வி.மகாலிங்கமும் நியமிக்கப்படவுள்ளதாக அறியவருகிறது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2062:2010-11-26-08-54-59&catid=51:local&Itemid=85

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதியை, சீரமைக்க இந்தியா கடனா........

யார், யாருக்கு.... கொடுப்பது என்று விவஸ்தையே...... இல்லையா ?

இந்தியா, தமிழருடன் ஒத்துப் போயிர்ந்தால்... இந்த நிலைமை வந்திருக்காதே.........

எதுக்கும், சிங்களவனுக்கு கொடுத்த கடன் தான் அது.

திரும்பி, வந்தால் கண்டு கொள்ளுங்கள், வராவிட்டால்.... காந்தியின்ரை கணக்கிலை எழுதி வைச்சுக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலை கண்டகண்ட நாடெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு உதவிசெய்யிற நாடெண்டால் சிறீலங்காதான்

கவனம் சாம்பலாய்போகப்போது அதுவும் இந்திய அரசு உதவி செய்த நாடுகள் ஒழுங்காய் இருந்துதுக்கு சரித்திரமே இல்லை எல்லாம் தரித்திரம்

சொந்த மக்களுக்கு ஒழுங்கா ஒரு மலசல கூடம் கட்டிக்குடுக்க வக்கில்லை இலங்கயிலை ரோட்டு போட்டு குடுக்கினம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-829-0-61878100-1290816537_thumb.jpe

இந்தியாவின் மறுபக்கம்...

நான் இந்திய மக்களை கேலி செய்யவில்லை இந்திய அரசுகளை மட்டுமே

எலும்புத்துண்டின் பின்னால் அலையும் நாயின் குணம் கொண்ட ஹிந்திய ராஜதந்திரிகள் தெற்கிலும் வடக்கிலும் நிலைகொண்டு நக்கப் போகிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.