Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கிலீக்ஸில் இலங்கை தொடர்பான 3166 இரகசிய ஆவணங்கள்

Featured Replies

வன்னிப்போர் மர்மங்கள் வெளிவரும் நாள் தொலைவில் இல்லை..

இன்று உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஊடகங்களில் முன்னணி இடம் பிடித்துள்ளது விக்கிலாக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள். உலகத்தில் உள்ள 38 நாடுகளின் சுதந்திரமான ஊடகவியலாளர்கள் சேகரித்த இரகசிய தகவல்கள் விக்கிலாக்ஸ் இணையம் மூலம் அமெரிக்காவிலிருந்து கசியவிடப்பட்டுள்ளன. கடந்த 2006ம் ஆண்டிலிருந்து இலாபநோக்கற்ற முறையில் இயங்கிவரும் விக்கிலாக்ஸ் தனது பணியை மேலும் தொடர்ந்தால் சிறீலங்கா – இந்தியா போன்ற நாடுகள் வன்னிப்போரில் வகித்த உண்மைப் பாத்திரங்களையும் உலகால் அறிய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை தனக்குள் ஒரு நிஜமான கொள்கையை வகுத்துக் கொண்டு வெளிநாடுகளை எவ்வாறு கையாண்டது என்ற விபரங்கள் அடங்கிய 391.832 ஆவணங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இதில் 90.000 ஆவணங்கள் ஆப்கான் போர் தொடர்பான இரகசியங்களைத் தருகிறது. 250.000 தகவல்கள் ஈரான், ஈராக், வடகொரியா போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்கள், சதிகள் குறித்த தகவல்களை தருகிறது.

1. அமெரிக்கா நடாத்திய போர்கள் 2. உலகத் தலைவர்கள் பற்றிய அதனுடைய மதிப்பீடுகள் 3. நல்வர்போல நடித்து நஞ்சு வேலை செய்த நாடுகளின் உண்மை முகங்கள் 4. இதர கொசுறுத் தகவல்கள் என்று நான்கு தலைப்புக்களில் இதைப் பிரித்து நோக்கலாம். நான்கு இலட்சம் பக்கங்களையும் ஒரேயடியாக படித்து கருத்துரைக்க முன் உலக மக்கள் களைத்துப்போய் வேறு வேலைக்கு போய்விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பெருந்தொகையான பக்கங்கள் வெளியாகியுள்ளன. எனினும் அவற்றின் நான்கு முக்கிய கூறுகள் இவையாகும்.

இதில் சில பக்கங்கள் முன் அனுமதி இல்லாமல் எல்லோரும் பார்க்க முடியாததாக இருக்கிறது. பத்து முக்கிய ஆவணங்கள் ஐரோப்பாவில் புலம் பெயர்ந்துள்ள வெளிநாட்டவர் தொடர்பாக அமெரிக்கா வகுத்திருந்த மோசமான கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது என்று ஜேர்மனிய சஞ்சிகையான ஸீகல் தெரிவிக்கிறது. இவற்றை வெளிநாட்டவர் பார்க்கவே கூடாது என்றும் அது கூறுகிறது. இதில் 297 படிவங்கள் டென்மார்க் அமெரிக்க தூதரகம் சம்மந்தப்பட்ட விவகாரத்தைத் தருகிறது. உலக அறிஞர்கள் துருவித் துருவி படித்துக் கொண்டிருக்கும் இந்த அறிக்கைகளில் பல முக்கிய அதிர்ச்சி தரும் தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதவரை நமது காதுகளுக்கு எட்டிய முக்கிய தகவல்கள்.

01. ஈரான் மீது போரை ஆரம்பிக்கும்படி அமெரிக்கா மீது சவுதி அரேபியா மன்னர் அழுத்தம் கொடுத்திருக்கிறார். தமக்கு அருகில் ஓர் அணுசக்தி வல்லரசு வருவதை சவுதி விரும்பவில்லை. இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையீனத்திற்கும் மத்திய கிழக்கில் ஓர் அமைதி வரமுடியாமைக்குமான ஈகோ பிரச்சனைக்கு இது ஓர் உதாரணமாகத் தெரிகிறது.

02. ஈரானுக்கு மேல் போர் தொடுக்கும்படி கேட்ட சவுதி அரேபியா மறுபுறத்தால் அல் குவைடா பயங்கரவாத அமைப்பிற்கும் ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா கருதியது. மறுபுறம் சி.ஐ.ஏ உளவாளிகள் மீது ஜேர்மனி கண்காணிப்பு செலுத்தி கைது செய்தல் கூடாது என்றும் கூறியது அமெரிக்கா. அதேவேளை ஹிஸ்புல்லாவிற்கு சிரியாவே ஆயுதம் கொடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

03. பாகிஸ்தானின் அணு குண்டு தயாரிப்பிற்கான யுரேனியத்தை அப்புறப்படுத்த அமெரிக்கா விரும்பி அதற்கான முயற்சிகளில் கடந்த மூன்று வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.. பாகிஸ்தான் வழியாக வடகொரியாவிற்கு இது போவதை அமெரிக்கா தடுக்க ஏற்பாடுகளை முடுக்கிவிட்டது.

04. உலகளாவிய கணினி வலையாக்கத்தை உடைப்பதற்கான இரகசிய முயற்சிகளில் சீனா ஈடுபட்டிருந்தது. 2002ம் ஆண்டு கூகுளை உடைக்க சீனா உத்தரவிட்டது. தலாய்லாமா பற்றிய தகவல்கள் சீனாவிற்குள் வராது தடுக்கவும் ஏற்பாடு செய்தது.

05. மறுபுறம் வட – தென் கொரிய பிரச்சனையை தீர்க்க சீனா இடம் விட வேண்டுமானால் அதற்கு ஒரு தொகைப் பணத்தை கள்ளமாகக் கொடுக்க வேண்டும் என்று தென்கொரியா அமெரிக்காவை கேட்டது. வடகொரியாவை தகர்க்க வேண்டுமானால் அதற்கு சீனாவுக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டிய அவலம் உள்ளது..மேலும் சீனா ஈரானுடன் உறவு கொள்ளாமல் இருப்பதற்கு பரிசாக சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெயை சீனாவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா சவுதிக்கு விதந்துரைத்தது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக சீனா ஆபிரிக்கக் கண்டத்தில் அதிகளவு கால் பதித்துள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால் ஆபிரிக்க தலைவர்களுடன் மென் போக்கை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும்.

06. நேட்டோ செயலர் பதவிக்கு முன்னாள் டேனிஸ் பிரதமர் ஆனஸ்போ ராஸ்முசன் தேர்வானபோது துருக்கியுடன் ஒரு இரகசிய உடன்பாடு காணப்பட்டதாக கருதப்படுகிறது. குர்டிஸ்தானிய றோய் டி.வியை பணயம் வைத்து துருக்கியை சம்மதிக்க வைத்தார். அதேவேளை நேட்டோவின் உதவி செயலர் பதவிக்கு ஒரு துருக்கியரை நியமிக்கவும் உடன்பட்டதாகக் கூறப்படுகிறது.

07. உலகத்தலைவர்கள் பற்றிய அமெரிக்காவின் உண்மையான மன வெளிப்பாடுகள் வெளியாகியுள்ளள. ரஸ்ய பிரதமர் புற்றினை அடங்காத நாய் என்று அமெரிக்க உள்ளம் கருதியுள்ளது. அதேபோல ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மார்க்கல் ஆபத்தான பாதையில் ஓடப்பயந்தவர் என்றும், பிரான்சிய ஸார்கோசியை ஆடையில்லாத சக்கரவர்த்தி என்றும் உக்ரேனிய மருத்துவத் தாதிகள் இல்லாது வெளியே போகப் பயப்படும் லிபிய கடாபி என்றும், பக்கவாதம் பிடித்த கர்மீட் கர்சாய் என்றும் தெரிவிக்கிறது. இதுபோல பட்டங்கள் பல உலகத் தலைவர்களுக்கு அமெரிக்காவால் சூட்டப்பட்டிருந்தது. ஒரு சிலருடையது தவிர மற்றவர்களுடைய பட்டங்கள் அதிகம் வெளிவரவில்லை. சில நாடுகளில் உள்ள உணர்ச்சி அரசியல் காரணமாக அவற்றை உடன் அறிய வசதிகள் இல்லாதிருக்கிறது.

08. ஈராக் போருக்கு ஐ.நா அனுமதி வழங்காத போது அமெரிக்காவுடன் இணைந்து டென்மார்க்கும் ஏன் போனது. அதற்குள் இருக்கும் மர்மங்கள் என்ன ? இது குறித்த தகவல்களையும் விக்கிலீக்ஸ் தரும் என்றும், கிடைக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் முழுமையான விசாரணைகள் நடக்கும் என்றும் முன்னாள் டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் மோண்ஸ் லுக்க ரொப்ற் தெரிவித்தார். குவான்ரநோமோ கைதிகளை விடுவிக்க அமெரிக்கா முயன்ற செய்தியும் உள்ளது.

09. ஆப்கான் போர் பற்றி 90.000 தகவல்கள் உள்ளன. இதில் வலுது குறைந்த ஆப்கான் அதிபர் கர்மீட் கர்ஸாய் பற்றிய இரகசியங்களும் உள்ளன. ஆப்கான் உதவி அதிபர் 52 மில்லியன் டாலர்களை அரபு எமிரேட்சிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுள்ளார்.

10. இந்தியா – பாகிஸ்தான் பற்றிய செய்திகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை தணிக்க அமெரிக்கா முயன்றதாகக் கூறப்பட்டாலும் இது குறித்த அடிப்படை மர்மங்களும் வெளிவர மேலும் வாய்ப்புண்டு.

11. ஐ.நா செயலர் உட்பட முக்கிய தலைவர்களின் வங்கிக் கணக்குகள், தொலைபேசி இலக்கங்கள், கைத்தொலைபேசிகள், அவற்றின் செயற்பாடுகள் யாவும் அமெரிக்காவின் முழுமையான கண்காணிப்பிற்குள் வரவேண்டுமென கொண்டலிசா றைஸ் உத்தரவிட்டார். ஐ.நா செயலர் வன்னியில் நடந்த போரில் ஏன் பக்கச்சார்பாக நடந்தார் என்ற கவலைக்கான பதிலும் இதில் ஒழிந்துள்ளது. புவி வெப்பமடைதல் காலநிலை மாநாட்டை நடாத்துவதற்கான தகுதி டேனிஸ் அரசியல் தலைமைக்கு இருக்கிறதா என்ற விவகாரத்தில் கிளரி கிளின்டன் கவலை கொண்டிருந்தார்.

12. பாகிஸ்தான் அதிபர் ஸர்தாரி ஒரு மூளை குழம்பிய நபர் என்றும் மிஸ்டர் பத்து வீதம் என்ற பட்டப் பெயர் கொண்டவரென்றும் சவுதி மன்னர் அப்துல்லா கூறியுள்ளார். தலை குழம்பிய ஒருவர் ஊழல் பேர்வழி வேறு, 11 வருடங்கள் சிறையில் இருந்தவர், இலஞ்சம், படுகொலை போன்ற குற்றங்களுக்கு இதுவரை தண்டனை பெறாத ஒருவர் ஆட்சியில் இருந்தால் நாடு உருப்படுமா என்று சவுதி மன்னர் கேட்டுள்ளார். அதேவேளை வெளிப்படையாக பேசும்போது இஸ்லாமிய சகோதரர் என்று புகழ்வதும் மன்னரின் வழமையாக இருந்துள்ளது.

இப்படியான அறிக்கைகள் அமெரிக்காவில் இருந்து எதற்காக வெளியீடு செய்யப்பட்டன என்ற கேள்வி இங்கு முக்கியம். தற்போதய ஒபாமா ஆட்சி உலகம் முழுவதும் நிலவும் பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமையை இழந்துள்ள நிலையில் நடந்துவிட்ட மடைத்தனமான விடயங்களுக்கு தாம் காரணமல்ல என்று கூறாமல் தப்பித்துக்கொள்ள இந்த அறிக்கைகள் உதவியாக அமைய இடமிருக்கிறது. அமெரிக்க சரித்திரத்திலேயே இப்படியாக இரகசியங்கள் இலட்சக்கணக்கில் கசிந்ததாகக் கூற முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் வெளியான மேற்கண்ட உண்மைகள் அதற்கும் உலகின் மற்றய நாடுகளுக்குமான நல்லுறவைப் பாதிக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

இது மட்டுமல்ல விக்கிலீக்ஸ் என்பது மேலும் பல உண்மைகளை வெளியிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தவகையில் வன்னியில் நடைபெற்ற போர், அதன் பின்னால் தொழிற்பட்ட கரங்கள், அதன் நிதர்சனங்களையும் அது முன் வைக்கலாம். அனைத்து தடயங்களையும் அழித்தாலும் முள்ளிவாய்க்காலில் 2009 மே 16, 17, 18 ஆகிய மூன்று தின இருள் நிகழ்வுகளும் அம்பலமாகாது என்று கருத முடியாது. விக்கிலீக்ஸ் குறித்த செய்திகளை வெளியிட்ட கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளின் இன்றைய எழுத்தோட்டத்தில் மெல்லிய நடுக்கம் தெரிகிறது. ஆதிக்க சக்திகளுக்கு மட்டுமே புவியல் இடம் என்ற கடந்த நூறு வருட கருதுகோளில் ஒளிபோல ஒரு மாற்றத்தை நவீன தொழில் நுட்பம் ஏற்படுத்தி வருகிறது. அதற்கு ஓர் அரிய உதாரணம் விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ள இரகசியங்களாகும்.

அலைகள் உலக அரசியல் விவகாரப் பிரிவு. 29.11.2010

http://www.alaikal.com/news/?p=51290

-------------------

விக்கிலீக்ஸ் தர இருக்கும் அதீத தொல்லைகள்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78059

விக்கிலீக்ஸ் (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து)

விக்கிலீக்ஸ் (Wikileaks) அல்லது விக்கிகசிவுகள் எனப் பொருள்படும் இணையதளம் பெயர் அறிவிக்காதவர்கள் பங்களிப்புகளையும் பாதுகாக்கப்பட்ட இரகசிய அரசு,நிறுவனங்கள் அல்லது சமய ஆவணங்களின் கசிவுகளையும் வெளியிடுகிறது. சுவீடனிலிருந்து இயங்கும் இந்த இணையதளத்தில் பங்களிப்பாளர்களின் விவரங்கள் அறிய இயலாதவாறும் தேடவியலாதவாறும் தனி செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவிய ஓராண்டுகளுக்குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் தரவேற்றப்பட்டுள்ளது. ஆப்கனில் அமெரிக்க படையினரின் ஆவணங்களை வெளியிட்டு பரவலாக அறியப்பட்டது. தனது அறிக்கைகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளது.

Edited by akootha

அமெரிக்கா ஐ.நா. வை இலங்கை பற்றி விசாரித்ததாக இங்கே சொல்லபடுகிறது!

http://www.hindustantimes.com/US-wanted-to-know-UN-position-on-Sri-Lanka-Wikileaks/Article1-632341.aspx

Edited by nadodi

  • தொடங்கியவர்

விக்கிலீக்ஸில் இலங்கை தொடர்பான 3166 இரகசிய ஆவணங்கள்

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வசமுள்ள 251,287 அமெரிக்க இராஜதந்திர இரகசிய ஆவணங்களில் 3000 இற்கும் அதிகமானவை இலங்கை தொடர்பானவையாகும்.

இவற்றில் சீனா தொடர்பான 8320 ஆவணங்களும்

ஆப்கானிஸ்தான் தொடர்பாக 7095 ஆவணங்களும்

இந்தியா தொடர்பாக 5087 ஆவணங்களும்,

பாகிஸ்தான் தொடர்பாக 4775 ஆவணங்களும்

இலங்கை தொடர்பாக 3166 ஆவணங்களும்

பங்களாதேஷ் தொடர்பாக 2182 ஆவணங்களும் அடங்கியுள்ளன.

இவற்றில் 220 ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் முன்னொப்போதுமில்லாத வகையில் அமெரிக்க அரசாங்கத்தின் வெளிவிவகார செயற்பாடுகள் தொடர்பான உள்தகவல்களை உலக மக்களுக்கு வழங்குகின்றன என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த ஆவணங்கள் 1996 முதல் 2010 ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்;களத்திற்கும் 274 தூதரகங்களுக்கும் இடையிலான இரகசிய தகவல்தொடர்புகள் சம்பந்தப்பட்டவை எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மேற்படி 251287 ஆவணங்களில் 3325 ஆவணங்கள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்தும் காத்மண்டிலிருந்து 2278 ஆவணங்களும் இஸ்லாமாபாத்திலிருந்து 2220 ஆவணங்களும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12101--3166-.html

இலங்கை சம்பந்தமான விகிலீக்ஸ் ஐ.நா. வை சிக்கலில் மாட்ட சான்ஸ் இருக்குது. அமெரிக்கா கேட்கும் மட்டும் ஐ.நா. வேணுமென்றே சும்மா இருந்திருகிறார்கள் போலே இருக்குது.

  • தொடங்கியவர்

இலங்கை சம்பந்தமான விகிலீக்ஸ் ஐ.நா. வை சிக்கலில் மாட்ட சான்ஸ் இருக்குது. அமெரிக்கா கேட்கும் மட்டும் ஐ.நா. வேணுமென்றே சும்மா இருந்திருகிறார்கள் போலே இருக்குது.

The UN's rather pathetic reaction to evidence that the US State Department under Secretary of State Hillary Clinton has tried to spy on it, from UN officials' computer passwords and frequently flier codes to the intentions of the Department of Peacekeeping Operations is indicative of the complex relationship between the UN and its host country.

http://www.innercitypress.com/usun1spy112910.html

UN angrily hits back at US "interference"

The United Nations reacted sharply to the revelation that Hillary Clinton ordered staff to glean highly personal information on its senior officials, reminding Washington that the global organisation was supposed to be inviolable.

Amid accusations that the order amounted to an extended espionage mission, a spokesman said that the UN would take up the issue with "our US counterparts on various levels".

"The UN by its very nature is a transparent organisation that makes a great deal of information about its activities available to the public and member states," said Farhan Haq, acting deputy spokesman for Ban Ki-Moon, the UN Secretary General. He added: "We don't have any judgment on the authenticity of the document, but I do want to read a little passage from 1946 convention on the privileges and immunities of the United Nations."

The passage says any UN properties or assets "shall be immune from search, requisition, confiscation, expropriation or any other form of interference" by member governments.

http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/8168966/Wikileaks-UN-angrily-hits-back-at-US-interference.html

Edited by akootha

தகவலுக்கு நன்றி. பான்-கி-மூனுக்கு மிக விரைவில் ஆப்பு அடிக்கப்படும் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஒற்றுமையாக இருந்த அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளுக்கிடையில் இலேசான இராஜதந்திர முறுகல்கள் ஏற்பட வாய்புண்டு.மேற்குலகிற்குள் ஏற்படும் பிணக்குகளுக்கு இடையில் சீனா வல்லரசுப் போட்டியில் முன்னேற முயற்சிக்கும். இந்த இழுபறியில் இந்தியா ஆப்பிழுத்த குரங்காக நசிபடும்.இந்தியாவை நோக்கிய நகர்வுக்கு சீனா சிறிலங்காவையே முதலில் பயன்படுத்த முயற்சிக்கும்.இதைத் தடுக்க இந்தியாவும் முயற்சி எடுக்கும். இதற்கு; இந்தியா விரும்பா விட்டாலும் சிறிலங்காவை முழுமையாகக் கட்டுப் பாட்டுக்கள் கொண்ட வர முடியாவிட்டால் சிறிலங்காவை வேறு வழியின்றி பிரிக்க முயற்சிக்கும். எப்படி என் கற்பனை????????????????

  • தொடங்கியவர்

Sri Lanka

---------

4. © Banerji said that the human rights situation in Sri Lanka during and after the recent military offensive had been raised “informally and off the record” by the UK during the last CMAG meeting, forcing a difficult conversation with the Sri Lankan Foreign Minister, as Sri Lanka is currently a member of CMAG. Banerji said the Commonwealth continues to watch the situation in Sri Lanka and noted that Sri Lanka’s offer to host the next Commonwealth Heads of Government Meeting (CHOGM) had been turned down over concerns about lending international credibility to the Government’s actions.

http://cablegate.wikileaks.org/cable/2009/06/09LONDON1385.html

  • கருத்துக்கள உறவுகள்

BanKiMoon.jpg

பான் கி மூனின் பதவிக்காலம் முடிய முதல் அவசரமாக ஐ. நா. வின் குழறுபடிகளை வெளியே கொண்டுவர வேண்டும்.

ஏற்கெனவே..... போர்க்குற்ற விசாரணை, காலக்கெடு என்று... ஒரு கை தேர்ந்த ஆசிய அரசியல்வாதி போல் நடந்து கொள்ளும் பான் கி மூனின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 30, நவம்பர் 2010 (10:2 IST)

விக்கிலீக் வெளியிடும் ரகசியங்கள்:

இந்தியா பற்றியும் பரபரப்பான தகவல்கள்

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை தொடர்ந்து, அந்த நாட்டின் தூதரக ரகசியங்களையும் விக்கிலீக் நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க தூதர்கள் மேற்கொண்ட உளவு வேலைகளை அது அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவத்தினர் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் குறித்து 4 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் என்ற புலனாய்வு இணையதள நிறுவனம் வெளியிட்டது.

அதனால், அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அதிர்ச்சி அடைந்தது. அதன் தொடர்ச்சியாக, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் அமெரிக்காவின் தூதரக ரகசியங்களை வெளியிட அந்த நிறுவனம் முடிவு செய்தது.

முந்தையவற்றை விட 7 மடங்கு அதிகமாக இந்த புதிய ஆவணங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டது. எனவே, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, அரேபியா, ரஷியா உட்பட பல்வேறு நாடுகளையும் அமெரிக்கா முன்கூட்டியே உஷார் படுத்தியது. அதே நேரத்தில், `தங்களுடைய இணையதளத்தை செயல்பட விடாமல் தடுக்கும் `சைபர்` குற்றங்கள் நடைபெறுவதாக` விக்கிலீக் நிறுவனமும் குற்றஞ்சாட்டியது.

எனினும், தங்களுடைய ஆவணங்களை எல்பைஸ், லீ மோண்டே, ஸ்பெய்கல், கார்டியன், நியுயார்க் டைம்ஸ் போன்ற பல்வேறு நாடுகளின் பத்திரிகைகள் மூலமாக வெளியிடப் போவதாக நேற்று முன்தினம் விக்கிலீக் அறிவித்தது.

அதன்படி, அமெரிக்காவில் உள்ள நியுயார்க் டைம்ஸ் மூலமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரகசிய ஆவணங்களை நேற்று வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, லண்டனில் உள்ள கார்டியன் உள்ளிட்ட மற்ற பத்திரிகைகளும் இந்த ஆவணங்களை வெளியிட உள்ளன.

உலகம் முழுவதும் 170 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களை நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை மூலமாக விக்கி லீக் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த பிரபலமான ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் கண்டு பிடித்து வாஷிங்டனுக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளது. அதுபோல, ரஷிய பிரதமர் புதினுக்கு வைக்கப்பட்ட `பட்டப் பெயர்' குறித்தும் வாஷிங்டனுக்கு மாஸ்கோவில் உள்ள தூதரகம் தகவல் அனுப்பியது.

புதினுக்கும், இத்தாலிய பிரதமர் சில்வினுக்கும் உள்ள உறவு குறித்தும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அமெரிக்க தூதரகமும் உளவு வேலை பார்த்து வருவதாக அந்த ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்களில் சீனாவில் குகூள் இணையதளத்தை சீன அரசு முடக்கிய விவகாரம், அணுசக்தி ஒப்பந்தத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா விலக்கி வைத்திருப்பது, அந்த நாட்டு அணுஉலைகளில் யுரேனியம் செறிவூட்டுவது குறித்தும் அவற்றை கைப்பற்ற அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் பின்னர் அந்த முயற்சி தோல்வியடைந்தது குறித்து பல்வேறு முக்கிய ரகசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ஈரான் நாட்டின் அணுகுண்டு தயாரிப்பதாகவும் அந்த நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவை அரேபிய மன்னர் அப்துல்லாவும் வேறு சில வளைகுடா நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்திய தகவல்கள் உள்ளன.

தனது நட்பு நாடுகளையே அமெரிக்கா உளவு பார்த்த அதிர்ச்சிகரமான விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர, ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. மூத்த அதிகாரிகளும் அமெரிக்க உளவு வளையத்துக்குள் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஊழலை வளர்த்தது, அல்கொய்தாவுக்கு கத்தார் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் இருந்து நிதி வருவது, ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்த விவாதத்தில் இந்தியாவை துருக்கி விலக்கி வைத்தது என பல தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன.

மொத்தம் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஆவணங்களில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு சென்ற தகவல்களாக 3 ஆயிரத்து 38 ஆவணங்கள் இருக்கின்றன.

ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் அவை பற்றிய முழு விபரங்களையும் அறிய முடியவில்லை. அந்த தகவல்கள் வெளிவந்தால், இந்தியாவில் அமெரிக்கா மேற்கொண்ட உளவு வேலைகள் பற்றி தெரியவரும்.

nakkheeran

விக்கி லீக்ஸ் இணையத்தளத்துக்கு அமெரிக்காவின் இராஜதந்திர இரகசியங்கள் அடங்கிய 251287 ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 274 இற்கும் அதிகமான உலக நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த இராஜதந்திர இரகசியங்கள் சம்பந்தப்பட்டவையாக இவை உள்ளன.

இவற்றுள் 220 ஆவணங்களை இவ்விணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர இரகசியங்கள் அடங்கிய 3325 ஆவணங்கள் கூட விக்கி லீக்ஸின் வசம் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொதுநலவாய அரசியல் பணிப்பாளரான அமிதாவ் பெனார்ஜி, இலங்கயின் நம்பமுடியாத அரசியல் நடவடிக்கைகளை கவனத்தில் கொள்வதற்காக அடுத்த பொதுநலவாய அரசியல் தலைவர்களின் சந்திப்பு இலங்கையில் நடத்த வாய்ப்பளிப்பதாக அன்று தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.