Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த ரங்கா?அதிர்ச்சி தகவல்-1

Featured Replies

கருணா, கேபி. ரங்கா ஆகியோருடன் இணைந்து செயற்படுபவர்கள் யார்? - தமிழ்மக்களே உசார் - ( அதிர்ச்சி தகவல்-1)

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டதோடு தமிழர்களின் உரிமைக்குரலை முழுமையாக நசுக்கிவிடலாம் என சிங்களதேசம் கனவுகண்டிருந்தது. அவர்களின் கனவுகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் அமைந்துவிட்டது. இதனால் சீற்றமடைந்த இலங்கை அரசு அவர்களை இலக்குவைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான போரைத் தான் முன்னெடுக்கப் போவதாக அண்மையில் இலங்கை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

இலங்கை அரசு இலண்டனுக்கு வந்து அவமானப்பட்டுத் திரும்பிய கையோடு “றொகான் குனரத்தின” வழங்கிய ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு புலம் பெயர் தமிழர்களோடு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

ஏற்கெனவே புலம்பெயர் தமிழர்களை ஊடுருவி செயலிழக்க வைக்க கருணாவை பயன்படுத்தியது வெளிப்படையானது. அதன் பின்னர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பயன்படுத்தியது தொடர்பாக தமிழர்களிடத்தில் அச்செய்தியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சிறு குழப்பம் இருந்தது. ஆனால் அண்மையில் எதற்காக கே.பி யை பயன்படுத்துகின்றோம் என விமல் வீரவன்ச வெளிப்படையாக கூறியதும் அதற்காக கோத்தபாயவிடம் வேண்டிக்கட்டிக்கொண்தையும் அறிந்த தமிழ் மக்கள் இவ்விடயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே மூன்றாவது நபர் புலம் பெயர் மக்களை நோக்கி களமிறக்கப்பட்டிருக்கிறார்.

சர்வதேச ரிதியாக போர்க்குற்ற விசாரனைகள் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவந்துகொண்டிருக்கும் இந்நிலையிலும் இலங்கை அரசின் இனப்படுகொலை அம்பலப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும் தமிழர் தங்கள் இலட்சியக்கனவை விரைவில் அடைந்துவிடுவார்கள் அதற்காக ஒன்று பட்டு உறுதியுடன் உழைக்க உறுதி பூண்டுள்ளார்கள் என்ற நிலையில் மூன்றாம் நபர் ரங்காவையும் அவருடன் சேர்ந்து இயங்க புறப்பட்டிருக்கும் விசக்கிருமிகளையும் கருணா கேபி போல் காலம் தாழ்த்தி முறியடிக்காமல் உடனடியாக முறியடிக்கவேண்டிய தேவையும் கடமையும் மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு;.

அந்த வகையில் ரங்கா பற்றியும் அவருடன் சேர்ந்து இயங்குபவர்கள் பற்றியும் சேகரிக்கப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல்களில் சில பகுதிகளையும் தருகின்றோம். தேவையேற்படின் பறிமாறப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் புகைப்படங்கள் வெளிவிடப்படும்.

யார் இந்த ரங்கா?

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்டவர். இலங்கையின் சக்தி தொலைக்காட்சியில் “மின்னல்” நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். மின்னல் நிகழ்ச்சியில் எதிர் எதிர் அரசியல் வாதிகளை அழைத்து மோதவிடுவதே இவரின் தொழில் (அத்தகைய தொழிலையே ராஐபக்ச இப்போதும் கொடுத்திருக்கிறார் இதுபற்றி பின்னர் பார்ப்போம்) ஒரு சமயத்தில் மான்புமிகு முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஸ்வரனையும் டக்ளஸ் தேவானந்தாவையும் நேருக்கு நேர் அமர்த்தி மோத விட்டதன் விளைவாக மகேஸ்வரனின் படுகொலைக்கு மறைமுக காரணமானவர்.

கொழும்பில் மகேஸ்வரனுக்கு தமிழ் மக்கள் மீதிருந்த நம்பிக்கையையும் மரியாதையையும் அவரின் ஐ.தேசியக் கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவதுதே இவரின் இலக்காக இருந்தது. அவர் நினைத்தது போலவே மகேஸ்வரன் கொலைசெய்யப்பட்டார். ரங்கா ஐ.தேசியக்கட்சி அமைச்சரானார். குறிப்பாக சொல்லப்போனால் யாழ்ப்பாணத்தமிழன் ஒருவன் தென்னிலங்கையில் கொண்டிருந்த ஆசனமான மகேஸ்வரனின் ஆசனத்திற்கு நிகரான இடத்தை ரங்கா பிடித்தார்.

ஏற்கெனவே ராஐபக்ச குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக இருந்த ரங்கா தங்களது திட்டத்தின்படி ராஐபக்சவுடன் வெளிப்படையாக இணைந்தார். சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி அவர்கள் தொடர்பான பல அரிய தகவல்களை இலங்கை அரசிற்கு கொடுத்தார் அண்மையில் ஊடகங்கள் ஊடாக வெளிவந்திருந்தது குறிப்பிடத்தகக்கது.

ரங்காவுடன் இணைந்து செயற்படுபவர்கள் யார்?

மூன்று வாரங்களிற்கு முன்னர் கனடாவிற்கு சென்ற ரங்கா ரொரன்றோவிலும் மொன்றியலிலும் தனது பழைய முகவர்களையும் புதிய முகவர்களையும் சந்தித்ததுடன் ரொரன்ரோவில் இருந்து நாலு பேரையும் மொன்றியலில் இருந்து ஐந்து பேரையும் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக மகிந்த குழுவினருடனான சிறப்புச் சந்திப்பிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். இதில் சிலர் உடனடியாகவே திரும்பிவிட்டனர். சிலர் இன்னமும் அங்கேயே தங்கியிருக்கின்றனர். இந்த ஒன்பது பேரைத்தவிர இன்னும் சிலரும் இச்சதித்திட்டத்திற்கு உடந்தையாகவிருக்கின்றனர்.

இவர்கள் சிலரின் விபரத்தை அறியும் போது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவர்களில் இருவர் ரொரன்ரோ, மொன்றியலில் ஊடகங்களை நடாத்துபவர்கள் அல்லது செல்வாக்குச் செலுத்துபவர்கள். ஏனையவர்கள் “உலகத்தமிழர் இயக்கத்துக்குள்ளும், நாடுகடந்த அரசிற்குள்ளும் செல்வாக்குச்செலுத்தியவர்கள் அல்லது செலுத்தக்கூடியவர்கள். இலங்கை அரசின் கைக்கூலி ரங்காவின் தெரிவிற்குட்பட்டிருப்பவர்களை ஒவ்வொருவராக பார்ப்போம்.

முதலாமவர் மொன்றியலில் பிரபல பழக்கடையை வைத்திருப்பவர். கடந்த காலங்களில் ஒட்டாவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் காட்சிகொடுத்தவர். சர்வதேச ஊடகங்களில் கூட இவரின் முகம் வந்திருந்தது. ஏ.எம்.ஆர் என அழைக்கப்படும் இவர் ரங்காவின் சிறிய தகப்பன். மே 19 இற்குப்பின்னர் நான்கு தடவைகள் சிறிலாங்கா சென்று திரும்பியிருக்கிறார். தற்போது சிறிலங்காவிலேயே உள்ளார்.

இரண்டாமவர் ரொரன்ரோவில் “பினாமி” பெயரில் பல கடைகளை வைத்திருக்கிறார். இவருக்கு இலங்கையிலும் வர்த்தகம் உண்டு. “குள்ள நரி” என செல்லமாக அழைக்கப்படுபவர். முன்னாளில் உலகத்தமிழர் இயக்கத்தில் முக்கியமான இடத்தை வகித்தவர்.

மூன்றாமவர் மொன்றியலில் உள்ள திருமுருகன் கோவில் நிர்வாக அங்கத்தவர். கோயிலிலேயே இரவுபகலாக படுத்திருப்பவர். “ மொன்றியல் நித்தியானந்தா” என அழைக்கும் அளவிற்கு அவரின் இரகசிய சில்மிசங்கள் அமைந்திருக்கின்றன. கோவிலில் திருடிய பணத்தில் அடிக்கடி கியூபாவிற்கு சென்று வரும் இவர் இம்முறையும் கியூபாவிற்கு என்று சொல்லிவிட்டு சிறிலங்காவின் நுவரெலியா உல்லாச விடுதியில் தங்கி இருக்கின்றார். அவருடைய நெருங்கிய நண்பர்களுடன் இந்தியா தொலைபேசி இலக்கமூடாக இந்தியாவில் இருப்பதாக உரையாடியுள்ளார்.

நான்காமவர் ரொரன்ரோவில் “த” வரியில் அரம்பித்து நட்சத்திரத்தில் முடிவடையும் வானொலியின் முக்கியஸ்தர். இலண்டனில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்திருப்பவர். இவர் “இணையத் திருடன்” என அழைக்கப்படுபவர். கடந்த காலங்களில் பல செயல்ப்பாட்டாளர்களின் மின்னஞ்சல்களை திருடி பகிரங்கப்படுத்தி தேசியச் செயல்ப்பாடுகளை பலவீனப்படுத்தியவர். தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என தீவிர செயல்ப்பாட்டாளர்களை அழைத்து படத்துடன் கூடிய விளக்கம் கொடுத்து வருகின்றார். விடுதலைப்புலிகளின் மின்னஞ்சலை திருடி மாவீரர் விபரங்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் இவர் தனக்கு நாட்டிலிருந்து நேரடியாக அனுப்பப்பட்டதாக கூறி அதற்காக 1 இலட்சம் டொலரிற்கு மேற்பட்ட பணத்தை பல்வேறு தமிழ் வர்த்தகர்களிடத்திலும் அமைப்பின் செயல்ப்பாட்டாளர்களிடத்திலும் கறந்துள்ளார். மாவீரர்களை வைத்து ஈனப்பிழைப்பு நடத்தும் இவர் மே 19 இற்குப்பின்னர் இலங்கைக்கு ஐந்து தடவை சென்று வந்துள்ளார். இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு தமிழ்த்தேசிய ஊடகங்களை பலவீனப்படுத்தி அவர்களை மோதவைத்து சிதைப்பது. இப்போது ரொரன்ரோவில் நடந்துகொண்டிருக்கிறது.

ஐந்தாமவர் மொன்றியலில் “அ” வரிசையில் புதிதாக களியாட்ட வானொலியை ஆரம்பித்திருப்பவர். இவ் வானொலியை இதுவரையில் ஒலிபரப்புவதற்கு பண உதவிகளை செய்துவருபவர் இந்த ரங்கா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடசாலையை, நடனப்பள்ளி நடத்திவருபவர். “புரோக்கர்” என அழைக்கப்படுபவர். தமிழ் எனக் கூறிக்கொண்டு தன்னிடம் வரும் மாணவ மணவிகளை பல கலாச்சார சீரழிவிற்கு உட்படுத்துபவர். அண்மையில் மொன்றியல் சென்றிருந்த ரங்காவை அழைத்து சிறப்பு பேட்டியும் எடுத்துள்ளார். “புலம்பெயர் தமிழ் செயல்பாட்டாளர்கள் எல்லோரும் கள்வர்கள் நீங்கள் இலங்கை அரசு ஊடக எதையும் செய்யுங்கள் என மக்களுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்”

மேலதிக தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் அதிர்ச்சி தொடரும்… மக்களே எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்! கசப்பானவர்கள் இனிப்பாக பழகியே உங்களை நம்பவைப்பார்கள். உங்களை அறியாமலேயே உங்கள் கருவறுப்பார்கள். விழிப்பாய் இருங்கள். தமிழீழ விடுதலையே எமது இலக்கு....!

படங்களை பார்வையிட manithan.com

இதில் உள்ள ஒரு திருப்பம் தமிழ் ஸ்டார் வானொலி சில தினங்களுக்கு முன்பு தான் கலாதரனுக்கு விற்கப்பட்டு அனைத்துலக தமிழ் வானொலியாக தேசியத்துடன் வலம் வருகிறது

இப்படி அவர் இவர் எனக் குறிப்பிடாமல் பேர்வழிகளை அம்பலப்படுத்தலாமே. அந்தத் தகவல்கள் தமிழர்களுக்கு முக்கியமாகப் பயன் படும். கனடா தவிர்ந்த ஏனைய நாடுகளில் வசிக்கும் தழிழர்களுக்கு இவர்களின் முகங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஏனையவர்கள் “உலகத்தமிழர் இயக்கத்துக்குள்ளும், நாடுகடந்த அரசிற்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியவர்கள் அல்லது செலுத்தக்கூடியவர்கள். முதலாமவர் மொன்றியலில் பிரபல பழக்கடையை வைத்திருப்பவர். கடந்த காலங்களில் ஒட்டாவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் காட்சிகொடுத்தவர்.

அதாவது த.வி.புவிற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை மக்கள் நம்பமுடியாது? :lol:

தேவையேற்படின் பறிமாறப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் புகைப்படங்கள் வெளிவிடப்படும்.

தேவை ஏற்படின்..? :blink: புலனாய்வை அறியும்போது புல்லரிக்கின்றது. :wub:

எப்பவும் கூடுதல் சவுண்டு கொடுப்பவர்கள்தான் குத்துக்கரணமும் அடிக்கின்றார்கள்.

இங்கும் ஏதோ பதிவில் நல்லா அகப்பையில் அள்ளுகின்றார்கள் என்று வாசித்த ஞாபகம்.அகப்பையால் முடிந்தளவிற்கு அள்ளிவிட்டு ஒரு பானை முடிந்தவுடன் அடுத்தத்தற்கு நீட்டவேண்டியதுதானே.

இது விளாங்காமல் நாட்டில் உயிரை வேறுகொடுத்தார்கள்.பாவங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.