Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற இந்தியா முன்வரவேண்டும் - கிருபகரன்

Featured Replies

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை உடனடியாகக் காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என்று பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அமைப்பின் பொதுச் செயலாளர் விசுவலிங்கம் கிருபாகரன் அனுப்பியுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 62 ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் உங்களை வாழ்த்துவதில் மிகப் பெருமை அடையும் அதேவேளை இலங்கைத் தீவில் குறிப்பாக, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் படும் அவலங்களை உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் விஷயத்தில் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசினால் பாதிக்கப்படுகின்றனர்.

அரசியல், பொருளாதார, கலை, கலாசார இன்னல்கள் கஷ்டங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமையாகும். இக்கடமையிலிருந்து இந்தியா தவறுவது இம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தொடர்ந்து கொடுத்து வருகிறது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சரித்திரத்தையோ அல்லது அவர்களுக்கு நேர்ந்துள்ள அவல நிலையையோ நாம் உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இலங்கை அரசினதும் அவர்களது ஊது குழல்களான கட்சிகளினதும் தமிழ் மக்கள் மீதான தவறான மோசமான பிரசாரங்களை இந்தியா நம்பி, இவர்களது சூழ்ச்சிக்கு துணை போகாது, தமிழ் மக்களை உடனடியாக காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும்.

இன்று இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் - புத்த விகாரைகள் - சிங்கள மயப்படுத்தல் போன்றவை மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. வடக்கு - கிழக்கிலுள்ள மக்களில் கூடுதலானோர் அகதிகளாக முகாம்களிலும் கைதிகளாக தடுப்புக் காவலிலும் உள்ளனர்.

இவர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கு பூகோள அமைப்பை இரவோடு இரவாக இலங்கை அரசும் அதன் இராணுவமும் மாற்றி வருகின்றன.

இம் மக்களையும் இவர்களது நிலங்களையும் உடனடியாக காப்பாற்றுவதற்கு இந்திய மக்களும் இந்திய அரசும் உடனடியாக 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஓர் தற்காலிக தீர்வை உங்களால் காண முடியும்.

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கை உண்மையில் ஓர் நிரந்தர தீர்வாக இருக்காவிடினும் இந்த உடன்படிக்கையை நீங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியாவினால் தமிழ் மக்கள் படும் இன்னல்களுக்கு உடன் பரிகாரம் நிச்சயம் காண முடியுமென கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

ஈழநாதம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரைக் காக்க இந்தியா முன்வருவது இருக்கட்டும். இதுவரை இந்தியா கொன்றொழித்த தமிழரின் கணக்கு என்னாவது?? முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சமும், 1987 இல் 10,000 மும் இந்திய அன்னையால் அழிக்கப்பட்டர்களே?? anthak kaNakkellaam என்னாவது??

கிருபாகரன், நீங்கள் யார்?? இவ்வளவு காலமும் எங்கிருந்தீர்கள்??

Edited by ragunathan

  • தொடங்கியவர்

தமிழரைக் காக்க இந்தியா முன்வருவது இருக்கட்டும். இதுவரை இந்தியா கொன்றொழித்த தமிழரின் கணக்கு என்னாவது?? முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சமும், 1987 இல் 10,000 மும் இந்திய அன்னையால் அழிக்கப்பட்டர்களே?? anthak kaNakkellaam என்னாவது??

கிருபாகரன், நீங்கள் யார்?? இவ்வளவு காலமும் எங்கிருந்தீர்கள்??

இவர் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை அமைப்பின் இணைப்பாலர் என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற இந்தியா முன்வரவேண்டும் - கிருபகரன்

http://www.raaga.com/player4/?id=238209&mode=100&rand=0.00841755352266027

டிஸ்கி :

ஆனா இந்த இறைவன் கலர் பொட்டியும் ... பிரியாணியும் தான் கொடுப்பார்... அவரின்ட அதான் இருக்கு ரைட்டு :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற இந்தியா முன்வரவேண்டும்

(கிருபாகரன்)

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை உடனடியாகக் காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என்று பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அமைப்பின் பொதுச் செயலாளர் விசுவலிங்கம் கிருபாகரன் அனுப்பியுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 62 ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் உங்களை வாழ்த்துவதில் மிகப் பெருமை அடையும் அதேவேளை இலங்கைத் தீவில் குறிப்பாக, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் படும் அவலங்களை உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் விஷயத்தில் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசினால் பாதிக்கப்படுகின்றனர்.

அரசியல், பொருளாதார, கலை, கலாசார இன்னல்கள் கஷ்டங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமையாகும். இக்கடமையிலிருந்து இந்தியா தவறுவது இம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தொடர்ந்து கொடுத்து வருகிறது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சரித்திரத்தையோ அல்லது அவர்களுக்கு நேர்ந்துள்ள அவல நிலையையோ நாம் உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இலங்கை அரசினதும் அவர்களது ஊது குழல்களான கட்சிகளினதும் தமிழ் மக்கள் மீதான தவறான மோசமான பிரசாரங்களை இந்தியா நம்பி, இவர்களது சூழ்ச்சிக்கு துணை போகாது, தமிழ் மக்களை உடனடியாக காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும்.

இன்று இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் - புத்த விகாரைகள் - சிங்கள மயப்படுத்தல் போன்றவை மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. வடக்கு - கிழக்கிலுள்ள மக்களில் கூடுதலானோர் அகதிகளாக முகாம்களிலும் கைதிகளாக தடுப்புக் காவலிலும் உள்ளனர்.

இவர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கு பூகோள அமைப்பை இரவோடு இரவாக இலங்கை அரசும் அதன் இராணுவமும் மாற்றி வருகின்றன.

இம் மக்களையும் இவர்களது நிலங்களையும் உடனடியாக காப்பாற்றுவதற்கு இந்திய மக்களும் இந்திய அரசும் உடனடியாக 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஓர் தற்காலிக தீர்வை உங்களால் காண முடியும்.

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கை உண்மையில் ஓர் நிரந்தர தீர்வாக இருக்காவிடினும் இந்த உடன்படிக்கையை நீங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியாவினால் தமிழ் மக்கள் படும் இன்னல்களுக்கு உடன் பரிகாரம் நிச்சயம் காண முடியுமென கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.