Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுவன் கனகண்ணை யாழ்ப்பாணத்திலிருந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்குது உலகத்திலே...GTN ற்காக கடுவன் கனகண்ணை யாழ்ப்பாணத்திலிருந்து:-

05 ஜனவரி 2011

என்னதான் நடந்தாலும், ஊர் உலகத்தில நடக்கிறது பற்றி உங்கள் நாலு பேரோட கதைச்சாத்தான் மனசுக்குள்ள திருப்தி. பழையபடி யாழ்ப்பாணத்தில நாலா பக்கமும் வெடிச்சத்தம் கேட்குது. நீங்கள் நினைக்கிற மாதிரி இதுவொண்டும் நத்தார், வருடப்பிறப்பு சீன வெடியில்ல. நிஜ துவக்கு வெடி. இப்ப பழையபடி மனிசி மாலை 5 மணியோட வீட்டுக்குள்ள இருந்துடோணும் என்றாள். அது சரி வீட்டுக்குள்ள இருந்தால் வாற யம தர்மராசா விலாசம் தெரியாமல் மாறிப்போயிடுவரோ எண்டு நீங்கள் சொல்லுறது கேக்குது.

கடந்த வருடத்தில, கடைசியா பலியெடுத்த அந்த குடத்தனை கிழக்குப் பெடியன் என்ன பாவம் செய்தானோ. அவன்ற்ற மனுசி என்ர மனுசனைக் கொல்லாதையுங்கோ எண்டு கட்டிப்பிடிச்சு கெஞ்சினதாம். அந்த ஊடுவெளியிக்க ஒருத்தன் வெடி வைச்சானாம். அந்த பிள்ளை என்னெண்டு வாழ்நாள் முழுக்க அந்த நினைவோட உயிரோட வாழும்.

முதலில ஒருத்தன் வீட்டுக்குள் வந்து கொப்பியூட்டர் எங்கையெண்டானாம். பொடியன் கூட்டிக்கொண்டு போய் காட்ட போட்டுக்காட்டென்று சொல்லிப்போட்டு சுட்டானாம். அவங்கட ஊரில, நடக்கிற மண் சுரண்டலால, கிராமமே கடலால மூழ்கிப்போறதை அவன் எதிர்த்து குரல் கொடுத்து வந்தவன். கோடிக்கணக்கில சுரண்டி மண் ஏத்துற முதலாளியின்ர லொறியை மறிச்சு அந்த பகுதி சனம் நடத்தின போராட்டங்களில் எல்லாம் பொடியன் முன்னுக்கு நிண்டவனாம். ஐயாமார் வைக்கிற கூட்டத்திலெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்கிறவனாம். செத்த பெடியன் கடல் கொண்டு போன தங்கட கிராமங்கள் பற்றி எடுத்த படங்களெல்லாம் ஏதோ பேஸ்புக்காம் அதில கிடந்தது. உவள் பேத்திதான் போட்டுக் காட்டினாள். மண் தின்னுற பேய்கள் தான் அவனை கொண்டு போட்டுதுகள்எண்டு ஊர் சனம் கதைக்குது. ஆகக்குறைந்தது மாதம் ஒரு எட்டு மட்டில சுழலுமாம். எட்டு இலட்சமில்லை அது கோடி பாவம் கிழக்குச் சனங்கள். ஆற்றை நாதியுமில்லாததுகள். அதுகளுக்குள்ளையும் நாலெழுத்து படிச்சா, அவங்கள் ரவுண் பக்கம் வந்திடுறாங்கள்.

உண்மையில யாழ்ப்பாணத்தில என்னதான் நடக்குதெண்டு புரிய இல்லை. பழையபடி எல்லாரும் காணாமல் போயினம். பெண்டுகளை கூட கோதாரிவிழுவார் விடயில்லை. ஓட்டோகாரர், கல்விப்பணிப்பாளர், புறோக்கர் என பட்டியல் தொடருது. அம்மாவை விடுங்கோவென்று கெஞ்வி பிள்ளையள் பேப்பரில் விளம்பரம் போடுதுகள். செத்தோ,காணாமலோ எல்லோரும் போய்க்கொண்டுதான் இருக்கினம். 2006 – 2008 போல மீண்டும் இருண்டகாலம் ஆயிரத்துக்கும் மேல குஞ்சு, குருமன்கள் காணாமல் போச்சு. வீட்டில, றோட்டிலயென, ஆள்பிடி பேய்கள் பிடித்துக் கொண்டு போச்சு. அதுகள் குடும்பங்கள் இண்டைக்கும் அழுதுகொண்டிருக்கு. என்ன எங்கட சனம்தான் அதுகளை மறந்து போச்சு.

இவ்வளவும் நடந்து கொண்டிருக்கு எதுவுமே நடக்காத மாதிரி அமைச்சரும், பரிவாரங்களும் ஏதோ சொல்லிக்கொணடு திரியினம். போதாக்குறைக்கு உள்ளுர் பேப்பர்காரர் யாவரத்துக்கு எல்லாத்தையும் ஊதிப்பெரிப்பிக்கினமெண்டும் மேல சொல்லினம். தெரிஞ்ச பேப்பர்காரப் பொடியன் ஒருவனிட்ட இதைக் கேட்டன். 'ஓமோம் அண்ணை அவை பாலியல் வல்லுறவை, பாலியல் மெல்லுறவு எண்டு செய்தி போடச்சொல்லிக் கேக்கிறவை எண்டு பொரிஞ்சு போட்டுப் போறான். அவன் நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டான். நான் வாயை மூடிப்போட்டன். நடக்கிறதொண்டும் அவைக்கும் தெரியாதாமோ என்றான். என்க்கேன் பொல்லாப்பு. ஒரு முழு வெத்திலையை மடக்கிப் போட்டு வாயை மூடிப்போட்டன். சும்மா இருக்கேலாமல் அவன் சொன்னதை நான் உளற ஏன் பொல்லாப்பு.

இது பறவாயில்லை. எங்கட இராணுவ தளபதி ஹத்துறுசிங்க, இது கூலிப்படைகளின்ரை அநியாயமென்றார். எனக்கு ஒன்றுமே புரியல. கூலிப்படையென்ன கொம்பியூட்டரைப் போட்டுப்பார்த்தோ ஆளைக் கொல்லும்?. அதுவும் மண் அள்ள விடாமல் தடுத்தால் ஆளைப் போடவும் கூலிப்படையோ தேவை. ஏதோ அவர் எங்கட ஆட்கள் முந்தி செய்ததுகளை குறைச்சு மதிப்பிடுற மாதிரித்தான் எனக்கு படுது. நீங்கள் என்ன சொல்றியள்.

சனமெல்லாம் துண்டைக்காணோம், துணியை காணோமெண்டு; பறக்குது எங்களின்ற தமிழ் எம்பிமார் எங்கையெண்டால், சொல்லிக்கொள்ளுமாறு ஒருத்தரையும் ஊரில காணம். அங்கின இங்கினயெண்டு சிறி வாத்தி எம்பி மட்டும் திரியுது. ஏனையவை மூச். ஒருக்கா கண்டிக்கிறம் எண்டேனும்... ஊகூம். எல்லாரும் முடிஞ்சாப்பிறகு எங்கட கலைஞர் ஸ்டைலில கடிதம் எழுதுவினமோ? என்னமோ? இப்ப பார்லிமென்டி எதோ வெட்டி விழுத்தப்போறன் என்டினம். அதையும் ஒருக்கா பார்ப்பம்.

சத்தியமா பிறந்த வருசம் ஒன்றும் பெரிசா சொல்லிக்கொள்ளுற மாதிரி எங்கட சனத்துக்கு மகிழ்ச்சியா இருக்கையில்லை. பழைய படி வீட்டுக்க முடங்கி கிடக்கத்தொடங்கி விட்டுதுகள். கொண்டுவந்து குவிச்ச வெடிகூட விக்கையில்லை என்கிறான் கடைக்கார ராசன். என்னவோ மனசில பட்டத சொல்லிப்போட்டன். காணாமல் அல்லது மேல போகாமல் இருந்தால் பிறகு சந்திப்பம்

என்ன?

கனகண்ணை யாழ்ப்பாணத்திலிருந்து

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/56125/language/ta-IN/article.aspx

வினை விதைத்தவன் வினை அறுப்பான்........தினை விதைத்தவன் தினை அறுப்பான்.....இதுக்குள் ஆயிரம் அர்த்தம் இருக்கின்றது........ஆனால் கவலையா இருக்கு.......ஆனால் யாழ்பாணத்தில் கமரா பூட்டணும் யாரும் அதை கேள்வி கேட்கக் கூடாது + இந்த நேரத்தில் போடவேண்டிய ஆக்கள எல்லாம் போடுங்கோ.....== டக்லஸ்+ கோதா கூட்டு வேலை......

Edited by சிறிலிங்கம்

நீங்கள் தான் உந்த எம்பி மாருக்கு வாக்களிச்சனியள்.வன்னியில சனம் சாகேக்க நீங்க ரோட்டுக்கு வரேவ்ல.இப்ப உங்கட வாசலில கொலை கொள்ளை நடக்குது.இதற்க்கு எதிராக நீங்கள் போராடாமல் வேறு எவரும் போராட மாட்டார்கள்.டக்கிளசுக்கு சலுகைகளுக்காக வாக்குப் போட்டார்களும் நீங்கள் தான்.உங்களுக்காக உயிரைக் கொடுக்க வேறு ஒருத்தனும் வரமாட்டான்.புலம் பெயர் தமிழர் பேசாம இருக்க வேணும் எண்டு சொன்ன சம்பந்தர் ,வித்தியாதரன் என்போர் என்ன செய்கிறார்கள்? தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழமண்ணுக்காய் நீங்கள் போராட

ஈழமண்ணைவிட்டு நாங்கள் ஓடினோம்

மண்ணுக்காய் நீங்கள் மண்ணுக்குள் விதைக்கப்பட்டீர்கள்

மண்ணின் நினைவை மண்ணுக்குள் நாங்கள் புதைத்தோம்

காட்டிலும் மேட்டிலும் ஈழக்கனவோடு நீங்கள் படுத்துறங்க

கட்டிலில் படுத்திருந்து காசுக்கனவுகண்டோம் நாங்கள்

தியாகங்கள் பல படைத்தீர் நீங்கள் ஈழம் கிடைப்பதற்கு அதை

நியாயமாய் காட்டினோம் நாங்கள் புகலிடம் கிடைப்பதற்கு

சாதிகள் பேதங்கள் வேண்டாமென்று நீங்கள் போராட

சந்தி சந்தியாய் நின்று நாங்கள் சாதிச்சண்டை பிடித்தோம்

கலை கலாச்சாரத்தை பேணிட நீங்கள் பாடுபட்டீர்கள்

கலை விழாக்கள் என்று சொல்லி நாங்கள் கலையை கொலை செய்தோம்

பூவையரை புதுமைப்பெண்ணாக்கி நீங்கள் உயர்ந்த இடத்தில் வைத்தீர்

பூப்புனிதநீராட்டு என்று உலக அழகிகள் போல படம் எடுத்தோம் நாங்கள்

சீதனங்கள் கொடுக்க வேண்டாம் என நீங்கள் சொன்னீர்

சீட்டுக்கள் பல எடுத்து நாங்கள் போட்டிக்கு சீதனம் கொடுத்தோம்

கல்லறைக்குள் நீங்கள் தூங்குகிறீர்கள் தமிழ்மானம் காக்க

சில்லறைக்காய் தமிழ்மானம் விற்கிறோம் நாங்கள்

அன்னை மொழிக்காய் நீங்கள் உம்முடலை கருக்கினீர்கள்

அன்னிய மொழி மட்டும் பேசி நாங்கள் பெருமைப்பட்டோம்

கண்ணீரில் வாழும் எம்மினத்திற்காக நீங்கள் கையில் துவக்கு எடுத்தீர்கள்

தண்ணீரில் மூழ்குவதற்கு நாங்கள் கையிலே போத்தல் எடுத்தோம்

போராட்டம் நீங்கள் ஆமியுடன் நடாத்த

தேரோட்டம் நாங்கள் சாமிக்கு நடத்தினோம்

கோவில்கள் விகாரைகளாகாமல் அங்கே நீங்கள் தடுக்க

கோவில்கள் பலகட்டி இங்கே மார்தட்டிகொள்கிறோம் நாங்கள்

ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் தமிழுக்காய் உச்சரிக்க

ஒரு வார்த்தையில் கூட நாங்கள் உங்களை வாழ்த்த மறந்தோம்

நீங்கள் எங்களுக்காய் விதைக்கப்பட்ட புனிதர்கள்

நாங்கள் எங்களால் சிதைக்கபட்ட பிணங்கள்

எங்களில் சிலர் பிணங்களாய் இருப்பதால்தான்

எங்களுக்கென்று ஒர் நாடும் இல்லை கேட்க நாதியுமில்லை

உங்கள் தியாகங்களை ஒரு கணம் நினைத்தால்

நாங்கள் மனிதர்களாகலாம் நினைப்போமா …….?கனகன்னைக்கு ஏதோ கனடாவில் இருந்து என்னால் இயன்றது,

கனடாவில் இருந்து பிரணவன்

  • கருத்துக்கள உறவுகள்

:D வன்னியில் கொலைக்கலங்களில் எமதுறவுகள் பலியிடப்பட்ட போது யாழ்ப்பாணம் அமைதியாகத்தானிருந்தது. பேக்கரி உரிமையாளர்களும், முச்சக்கரவண்டி ஓட்டுனர்களும் ராணுவ வெற்றிகளுக்கு வெற்றி விழா எடுத்தார்கள். பூநகரியும், பரந்தனும் விழும்போது பிரபாகரனின் உருவப்பொம்மை எரித்தார்களாம் யாழ்ப்பாணத்து அமைதியை விரும்பும் மக்கள்.

மகிந்தவை லண்டன் சனம் திருப்பியனுப்பியபோது யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மகிந்தவுக்கு தமது விசுவாசத்தைக் காட்டினார்கள் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள்.

அகவே இப்போது நடப்பதாகக் கூறப்படும் கொலைகளும், கடத்தல்களும், பாலியல் மெல்லுறவுகளும் புலம்பெயர் தமிழ்த் துரோகிகளின் திட்டமிட்ட சதியென்றுதான் யாழ்ச்சனம் சொல்லுது. யாழில தேனும் பாலும் ஓடிக்கொண்டிருக்க கொலையும், கடத்தலும் நடக்குதென்று சொல்லி மகிந்த ஐய்யாவுக்கும் எங்களுக்குமிருக்கிற நெருக்கத்தை உடைக்கத்தான் புலம்பெயர் சனம் முயற்சிக்குது. இது பிழையெண்டு சொல்லி நாளைக்கே யாழ் பஸ் ஸ்டாண்டில ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தவேணும்.

மகிந்த ஐய்யா எவ்வளவு நல்லவரெண்டால், எங்கட சனம் சிங்களம், தமிழ் எண்டு கஷ்ட்டப்படக்கூடாதெண்டு சிங்களத்தில மட்டும் தேசிய கீதமும், தேவாரம், செபம் என்டு அலைக்கழியாம பிரித் மட்டும் ஓதினால் போதுமெண்டு வசதி செய்து தந்திருப்பார்?? உதெல்லாம் விளங்காம உந்தப் புலம்பெயர் சனம் எங்களுக்கும் மகிந்த ஐய்யாவுக்குமிருக்கிற அந்நியோன்னிய உறவை உடைக்கப் பாக்குது.இமெல்டா அக்காவைக் கேட்டுப் பாக்கட்டும் ஒருக்கா, மகிந்த ஐய்யாவின்ர நல்ல குணத்தை பந்தி பந்தியாச் சொல்லுவா. அவ கூட அண்மையில் பொலீஸ்காரனை விட எங்கட ஆமி யாலுவாக்கள் எவ்வளவோ திறம் எண்டு சொன்னதைக் கேட்டனியள் தானே?

அதுமட்டுமல்லாமல், குடத்தனையில் சும்மா கிடக்கிற மணலை அள்ளி தண்ணியை கொஞ்சம் கூட்டுவம் எண்டு நல்லெண்ணத்தோட டக்கிளஸ் அண்ணை செய்துவாற சமூக நலத்திட்டங்களைக் கூடச் சனம் பிழயெண்டு சொல்லுதெண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன்! உது காணாதென்டு இனையத்தில வேற படம் போட்டுக்காட்டீனம். பாவம், டக்கிளஸ் அண்ணை, எத்தினை பேரையெண்டுதான் "கவனிக்கிறது"?

76 பேரோட பாலியல் தொடர்பாம், இதென்ன உலகத்தில நடக்காத விஷயமே?? வருஷக்கணக்கா பெண்டாட்டி மாரை விட்டுப்போட்டு எங்களைக் காவல் காக்கிற ஆமி யாலுவாக்கள் அவயின்ர கஷ்ட்டத்தை எங்க போக்கிறது?? அதுக்குத்தான் அந்தப் பிள்ளை ஒரு சமூக சேவை மாதிரி அதைச் செய்தது கண்டியளோ?? அதுவிலங்காம ஏதோ விபச்சாரம், பாலியல் எண்டு உந்த ஒண்டுக்கும் உதவாத புலம்பெயர்ச் சனம் கொக்கரிக்குது.

எதுக்கெடுத்தாலும் ஏதோ வன்னிச்சனம் வன்னிச்சனம் எண்டு கதைக்கிறதே உந்த புலம்பெயர் சனத்தோட வேலையாப் போச்சு. ஆருந்த வன்னிச்சனம் எண்டும் சொல்லாமல், அடிக்கொருதரம் வன்னிச்சனமாம். மகிந்த ஐய்ய புலிகள் என்கிற ஒரு இயக்கத்திட்ட இருந்து மீட்டு வந்தாரே, அந்தச் சனத்தைத்தான் சொல்லுதுகள் எண்டு நினைக்கிறன். அவை ஆரெண்டு கூடத் தெரியாது. அவை செத்தால் நாங்கள் ஏன் அழவேண்டுமெண்டுகூடத் தெரியேல்ல. உலகத்தில ஒவ்வொருநாளும் எத்தினை சனம் சாகுது, அதுக்கெல்லாம் நாங்கள் அழுதுகொண்டிருக்கேலுமே??

கடைசியா மகிந்த ஐய்யவிட்ட ஒரு சின்ன உதவியும் கேக்க வேணும். அதுதான் , உந்த வெஸ்டேன் மணி ட்ரான்ஸ்பரை யாழ்ப்பாணத்தில ஒண்டுக்கு பத்தா திறந்து வைச்சால் எங்களுக்கும் உதயியா இருக்கும்.

அப்ப நான் வாரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.