Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனி செய்திகள்

Featured Replies

ஜெர்மனியில் பொதுத்தேர்தல்; ஷ்ரோடர் மெர்கெல் இடையே கடும் போட்டி

_40813616_composite203i.jpg

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத்தேர்தலில் நாட்டின் 6 கோடி 20 லட்சம் வாக்காளர்கள் ஒரு புதிய அரசைத் தேர்தெடுப்பதற்காக வாக்களித்தனர்.

தற்போது வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஆளும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சி கூட்டணி பிராந்திய மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் வரிசையாக தோல்வி அடையவே சால்சல்லர் கெர்ஹார்ட் ஷ்ரோடர் இயல்பாக தேர்தல் வருவதற்கு ஓராண்டு முன்பாகவே இந்த பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஷ்ரோடருக்கு போட்டியாளராக இருப்பது ஜெர்மனியின் முதல் பெண் சான்சலராகப்போகிறவர் என்று பத்திரிகைகள் எழுதிவரும் - கிருத்துவ ஜனநாயகக் கட்சியின் தலைவி அங்கெலா மெர்கெல்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஷ்ரோடரின் சோஷலிஸ ஜனநாயகக்கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் பசுமைக் கட்சியுடன் ஜெர்மனியில் கூட்டாட்சி நடத்திவருகிறது. இந்த கூட்டணி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டால்தான் தாங்கள் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின் பலன்களை நாடு அனுபவிக்க முடியும் என்று ஷ்ரோடர் பிரச்சாரத்தின்போது வாதிட்டிருந்தார்.

ஆனால் ஜெர்மனியில் தற்போது 50 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளித்து கட்டுப்படுத்த தங்களால்தான் முடியும், ஜெர்மனியில் கட்டாயம் ஆட்சி மாற்றம் வருவதற்கான தருணம் இது என்று அங்கெலா மெர்கெல் கூறியிருந்தார்.

மெர்கெல் தலைமையிலான கிருத்துவ ஜனநாயகக் கட்சி தாராளவாத ஜனநாயகக் கட்சியுடன் அமைத்துள்ள கூட்டணிதான் அதிக இடங்களைப் பெறும் என்று எல்லா கருத்துக் கணிப்புகளும் காட்டியிருந்தாலும், தனியாக ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெற இக்கூட்டணி திணறும் என்றே தெரிகிறது.

-BBC tamil

  • Replies 172
  • Views 24.8k
  • Created
  • Last Reply

_40783472_smilingap203b.jpg

அங்கெலா மெர்கெல் (Angela Merkel)

ஜேர்மானிய தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கெலா மெர்கெல் ஐ தலைவியாக கொண்ட ஜேர்மனியின் பழமைவாத கிருத்துவ ஜனநாயகக் கட்சி - Christian Democratic Union (CDU) மூன்று ஆசனங்களால் முதலிடத்தில் வந்துள்ளார், இந்த ஆசனங்களுக்கும் ஆட்சியமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டி எண்ணிக்கைக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளமையால், ஜேர்மனியில் ஒரு அரசியல் ஸ்திரமற்ற நிலைமை தோன்றியுள்ளது.

அங்கெலா மெர்கெல் மற்றும் கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder) வெளியிட்டுள்ள கருத்துக்களின் படி இருவரும் ஆட்சியமைக்க முயற்சிப்பது தெளிவாகியுள்ளது. இந்த போட்டியில் அங்கெலா வென்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் அவர் ஜேர்மனியின் முதல் பெண் சான்சிலராக (chancellor) வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

_40815528_schroeder_apportbody.jpg

கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder)

தேர்தல் வெற்றியை அங்கெலா உரிமை கோரிவரும் நிலையில், எதிர்தரப்பு ஷ்ரோடர் அவர்களோ வாக்காளர்கள் நாட்டை வழிநடத்துவதற்கான ஆணையை அங்கெலாவுக்கு வழங்க மறுத்துவிட்டார்கள் என வாதிட்டு வருகின்றார். இந்த குழப்பமான அரசியல் நிலைமையில் சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ நீடிக்கலாம். இந்நிலையில் ஜேர்மானிய பாராளுமன்றத்தினால் முன்று தடவைக்குள் சான்சிலரை தேர்ந்தெடுக்க முடியாமல் போனால், ஜனாதிபதி Horst Koehler அவர்களால் சிறிய பெரும்பான்மையுடன் உள்ள கட்சியை மைனாரிட்டி அரசமைக்க அழைக்கலாம் என்று AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதுதான் தற்போதைய ஜேர்மானிய நிலவரம், இனி யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த செய்திகள் BBC, CNN மற்றும் AP நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டவை.

ஜேர்மனியில் வசிக்கும் கள உறவுகள் இந்த தேர்தல் குறித்து தமக்கு தெரிந்த தகவல்களை அறிய தாருங்களேன். அங்கு எதிர்பார்க்கப்படுவது போல அரசியல் தலைமை மாற்றம் ற்பட்டால் அது அங்குள்ள தமிழர்களின் வாழ்வியல் மற்றும் அரசியில் தஞ்சம் குறித்த நிலைமைகளில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்.

ஜெர்மனி பொதுத்தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை இல்லை

20050919141111050919_schroeder203credito.jpg

ஜெர்மனியில் நடந்த பொதுத்தேர்தலில் உறுதியான முடிவுகள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் உரிமை தமக்கே உண்டு என இரு முக்கிய கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

செயல்படக்கூடிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுவருவதாக அவை கூறியிருக்கின்றன.

இந்த தேர்தல்கள் கடந்த ஆண்டு நடந்திருந்தால், சமூக ஜனநாயகக் கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கும். வேலையின்மையை ஐம்பது லட்சம் என்ற அளவிலிருந்து குறைக்க அவர்கள் செய்த ஒப்பீட்டளவில், மெலிதான தொழிலாளர் சீர்திருத்தங்கள் வாரந்தோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதுடன், பிராந்தியத் தேர்தல்களில் தொடர்ச்சியான பல தோல்விகளுக்கு வழிவகுத்தன.

ஆனால், ஏன்ஜெலா மெர்க்கல் முன்வைத்த , வேட் எனப்படும் பெறுமதி கூட்டப்பட்ட வரியின் மீது, அளவு குறிப்பிடப்படாத வரி உயர்வு உள்பட பல கூடுதல் தீவிரமான திட்டங்கள் , வாக்காளர்களை மேலும் கலவரமடைய செய்துவிட்டது போல் தோன்றுகிறது.

தற்போதுள்ள யாரலும் புரிந்துகொள்ள முடியாத வரி அமைப்புக்கு பதிலாக, ஒரே நிலையிலான வரி அமைப்பு தேவை என்று அவரது ஆலோசகர், பௌல் கிர்ஷோட் முன்வைத்த யோசனையை சமூக ஜனநாயகவாதிகள் பிடித்துக்கொண்டு இது பணக்காரர்களுக்கு லாபமளிக்கும், ஏழைகளைப் பாதிக்கும் என்று கூறினர்.

ஒரு பெண் நாட்டிற்கு தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பற்றி சில பழமைவாதிகளின் மத்தியில் வெளிப்படையான வெறுப்பு காணப்பட்டது.

கிழக்கு ஜெர்மனியிலிருந்து வரும், ஒரு குழந்தை பெறாத, பௌதிகப் பேராசிரியர் ஒரு உணர்ச்சிகளற்ற எதைப்பற்றியும் கவலைப்படாத சான்சலராகத்தான் இருக்க முடியும் என்று, ஷ்ரோடர் சூசகமாகக் கூறிக்கொண்டிருந்ததைப் பற்றி கட்சியின் விசுவாசிகளால் மறுத்து எதிர்ப்பிரச்சாரம் செய்ய முடியவில்லை.

தற்போதைய நிலையில் யார் ஆட்சியமைக்கப் போகிறார் என்பதை அடுத்த சில வாரங்களில் நடக்கும் அரசியல் பேரங்கள்தான் முடிவுசெய்யும்.

-BBC tamil

ஜெர்மனியர்களுக்கெ ஒரு குளப்பமான தேர்தல் முடிவாக உள்ளது.(இதை பல ஜெர்மனியரிடம் இன்று கேட்டேன்)

இங்கு வாழ் எம்மவர் பலர் தமக்கு தற்போது அரசில் உள்ளவர்களால் தான் ஜெர்மன் பிராஜாவுரிமை கிடைத்ததாகவும் அதனால் அவர்களுக்கு வாக்களித்ததாக கூறினார்கள்.

  • 3 weeks later...

ஜெர்மனியில் அங்கெலா மெர்க்கல் சான்சல்லர் ஆவதற்கான அரசியல் இணக்கம் தோன்றியுள்ளது

_40891180_merkelafp203i.jpg

அங்கெலா மெர்க்கெல்

ஜெர்மனியின் முதலாவது பெண் சான்சல்லராக (ஜனாதிபதியாக) பழமைவாத தலைவி தலைவி அங்கெலா மெர்கெல் பதவியேற்கக்கூடிய வகையில் கூட்டணி ஒன்றை உருவாக்க ஜெர்மனியின் இரு பெரிய கட்சிகளும் இணக்கம் கண்டுள்ளன.

அங்கெலா அம்மையாரின் கிருத்துவ ஜனநாயகக் கட்சிக்கும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை பற்றிய செய்தியை அங்கெலா மெர்க்கெல் அவர்களே அளித்தார்.

மூன்று வாரங்களுக்கு முன் பொதுத் தேர்தலில் உறுதியான பெரும்பான்மை எவருக்கும் கிடைக்காமல் போனது தொடக்கம் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது

BBC tamil

ஜெர்மனியில் எம் நாட்டை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளதாக அறிந்தேன்.உண்மையா ? யாரவது விபரமாக சொல்லுங்களேன்

ஜேர்மனியில் அல்ல இத்தாலியில் அச்சம்பவம் நடைபெற்றது

21 வயது பல்கலைக்கழக தமிழ் மாணவர் கடந்த 7 ம் திகதி koln ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அடபாவமே சாகமுதல் என்ன வேதனையை யார் கொடுத்தார்களோ?அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்

கழுத்தை நெரித்து மனைவியை கொன்றுவிட்டு மகனையும் கொல்ல முயன்ற இலங்கை தமிழர்

ஜேர்மனியில் தனது மனைவியை கொன்றுவிட்டு மகனையும் கொலை செய்ய முயன்ற இலங்கையர் ஒருவரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சில்லாலை மேற்கைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவரைக் கொலை செய்ததுடன் மகனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வறுத்தலைவிளானைச் சேர்ந்த இ.செல்வகுமார் என்பவரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது;

1992 இல் ஜேர்மன் சென்ற செல்வகுமாருக்கு அங்கு வதிவிட உரிமை கிடைத்த போதும் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அங்கு அழைக்க விரும்பவில்லை. இதனால் விசனமடைந்த மனைவி கடந்த வருடம் சுற்றுலா விசாவில் ஜேர்மன் சென்று கணவனின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன் இது குறித்து ஜேர்மன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் மிரட்டியதையடுத்து இவ்வருடம் மார்ச் மாதம் தனது மனைவியையும் 3 பிள்ளைகளையும் ஜேர்மனுக்கு அழைத்திருந்தார்.

எனினும் அங்கு மனைவியை அடிக்கடி தாக்கவே தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. தாங்கள் கல்விகற்கச் சென்ற இடங்களில் இது பற்றி பிள்ளைகள் கூறவே அவர்கள் இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதையடுத்து செல்வகுமாரைக் கைது செய்த பொலிஸார் அவரை சிறையிலடைக்கவேஇ மனைவி பொலிஸாரிடம் பேசி 15 நாட்களின் பின்னர் அவரை விடுதலை செய்தார்.

சிறையிலிருந்து வந்த நான்காம் நாள் (கடந்த செவ்வாய்க்கிழமை) செல்வகுமார் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டு ஹோலிலுள்ள செற்ரியில் கிடத்திவிட்டார். இவ்வேளையில்இ பாடசாலையிலிருந்து வந்த கடைசி மகன் (15 வயது) தாய் உயிரிழந்துவிட்டதை அறிந்த போது அங்கு வந்த தந்தை அந்தச் சிறுவனையும் மடக்கிப் பிடித்துஇ கொலை செய்யும் நோக்கில் கழுத்தை நெரித்துள்ளார்.

சிறுவன் மயக்கமடையவேஇ அவன் இறந்துவிட்டதாக நினைத்து ஏனைய இரு பிள்ளைகளின் வருகைக்காக காத்திருந்துள்ளார். இங்கு நடந்தவற்றை அவதானித்த அயல் வீட்டுக்காரர்இ இதுபற்றி அறிவிக்கவே அங்கு வந்த பொலிஸார் செல்வகுமாரை கைது செய்ததுடன் ஆபத்தான நிலையிலிருந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் கொன்றுவிட்டு ஜேர்மனைவிட்டுத் தப்பிச் செல்வதே இவரது நோக்கமாயிருந்தது என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவருக்கு உடந்தையாயிருந்த யாழ்ப்பாணத்தவரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தினக்குரல்

கொடுமைடா சாமி.

ஹூம் வேதனையான செய்தி. மனைவி குழந்தைகளையும் கொல்ல துணிந்திருக்கிறாரே. இனி அந்த குழந்தைகளில் எதிர்காலம் எப்படி இருக்க போகின்றதோ தெரியவில்லை :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: :cry: என்ன அப்பா இவர் :evil:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச் சமுதாயம் ஒன்றும் குறைந்ததில்லை என்பதை நிரூபித்துவிட்டார் :oops: :oops: :oops: :oops:

1992 இல் ஜேர்மன் சென்ற செல்வகுமாருக்கு அங்கு வதிவிட உரிமை கிடைத்த போதும் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அங்கு அழைக்க விரும்பவில்லை. இதனால் விசனமடைந்த மனைவி கடந்த வருடம் சுற்றுலா விசாவில் ஜேர்மன் சென்று கணவனின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன் இது குறித்து ஜேர்மன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் மிரட்டியதையடுத்து இவ்வருடம் மார்ச் மாதம் தனது மனைவியையும் 3 பிள்ளைகளையும் ஜேர்மனுக்கு அழைத்திருந்தார்.

முகத்தார் நீங்கள் தந்த செய்தியில் மேலே சுடடிக் காட்டப்பட்ட பகுதியை ஒரு முறை படித்துப் பாருங்கள். கொஞ்சம் இடிக்கிறது. எதற்கும் சரியான தகவல் அறிந்தவர்கள் இதுபற்றித் தெரிந்திருந்தால் விபரம் தரவும்

:cry: :cry: :cry: :cry: :?

தமிழன் காட்டுமிராண்டி என்ற பெரியாரின் கூற்றை நிருபித்துவிட்டார். :lol:

அவருக்கு எனது வாழ்த்துக்கள் :evil: :evil:

மேலே குறிப்பிடப்பட்ட செய்தி எந்தளவு உண்மையென்று உறுதிப்படுத்தாமலேயே எல்லோரும் மனம் போனபடி கருத்தெழுதுகின்றீர்கள். இப்படியொரு சம்பவம் உண்மையில் ஜேர்மனியில் நடந்திருந்தால் இங்குள்ள ஊடகங்களுக்கு தெரியாமல் போயிருக்குமா?? இது என்ன சாதாரண விடயமா?? :roll: :?: :roll: :?:

முதலில் நாம் எப்போது திருந்தப் போகின்றோம்.

தம்பி வசம்பு தினக்குரலிலை வாசிச்ச செய்தியை ஏன் இணைத்தனான் எண்டால் களத்தில் இருக்கும் ஜேர்மனி உறவுகள் சரியான தகவல்களைத் தருவார்கள் எண்டுதான் ஏற்கனவே தினக்குரல் செய்திகளில் நம்பிக்கையில்லாமல் போய் கொண்டிருக்கிறது இதுவும் அதுமாதிரி எதாவதெண்றா?????;

:lol: :lol: :lol::lol::lol:
:lol: :lol: :lol::lol::lol:

1992 இல் ஜேர்மன் சென்ற செல்வகுமாருக்கு அங்கு வதிவிட உரிமை கிடைத்த போதும் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அங்கு அழைக்க விரும்பவில்லை. இதனால் விசனமடைந்த மனைவி கடந்த வருடம் சுற்றுலா விசாவில் ஜேர்மன் சென்று கணவனின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன் இது குறித்து ஜேர்மன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் மிரட்டியதையடுத்து இவ்வருடம் மார்ச் மாதம் தனது மனைவியையும் 3 பிள்ளைகளையும் ஜேர்மனுக்கு அழைத்திருந்தார்.

முகத்தார் நீங்கள் தந்த செய்தியில் மேலே சுடடிக் காட்டப்பட்ட பகுதியை ஒரு முறை படித்துப் பாருங்கள். கொஞ்சம் இடிக்கிறது. எதற்கும் சரியான தகவல் அறிந்தவர்கள் இதுபற்றித் தெரிந்திருந்தால் விபரம் தரவும்

இந்த சம்பவம் உண்மைதான். இறந்த பெண்ணின் சகோதரி ஒருவர் இங்கு ஜேர்மனியில் வசிக்கின்றார் அவர்கள்தான் முதலில் சுற்றுலா வீசாவில் இங்கு அழைத்திருந்தார்கள். பின் கணவருடன் ஒன்று சேர்த்துவிட்டார்கள்.

தகவலுக்கு நன்றி சிறி !

இச்சம்பவம் பற்றிய மேலதிக விபரங்களையும் தரலாமே. ஒரு தந்தை தனது மனைவி பிள்ளைகளை கொலை செய்யுமளவிற்கு வந்தாரென்ரால் ஒன்று அவருக்கு வேறு தொடர்பு இருக்க வேண்டும் அல்லது மனைவியில் சந்தேகமிருக்க வேண்டும். அல்லது அவருக்கு மனநோய் முற்றியிருக்க வேண்டும். அத்துடன் இச்செய்தி எப்படி இங்குள்ள ஊடகங்களுக்குத் தெரியாமல் போனது. எனவே உங்கள் விபரமான பதிலை எதிர்பார்க்கின்றேன்.

வசம்பு இச்சம்பவம் பற்றிய மேலதிக விபரங்களை தற்போது கூறமுடியாதுள்ளது மன்னிக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.