Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாராயண் காரத்திகேயன் - முதல் இந்திய சாரதி

Featured Replies

ஸ்பெய்னின் ஹிஸ்பானியா ஃபோர்மூலா வன் மோட்டார் கார் அணியில் இணைந்த நாராயண் காரத்திகேயன்

ஸ்பெய்னின் ஹிஸ்பானியா ஃபோர்மூலா வன் மோட்டார் கார் அணியில் இணைந்துள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த நாராயண் காரத்திகேயன் அறிவித்தார்.

போர்மூலா வன் போட்டிகளில் பங்கெடுத்த முதல் இந்திய சாரதி என்ற பெருமையைக் கொண்டுள்ள அவர், 2005 ஆம் ஆண்டு, ஜோர்தான் போர்மூலா வன் அணியில் இணைந்து போட்டிகளில் பங்குபற்றினார்.

பின்னர், அவர் வேறு போட்டிகளில் பங்குபற்றினார். இந்த நிலையில், தற்போது போர்மூலா வன் அணியொன்றில் மீண்டும் இணைந்துள்ளார்.

போர்மூலா வன் போட்டிகளில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வேகத்தையும், உடல் உறுதியையும் தான் கொண்டுள்ளதாக கார்த்திகேயன் நம்பி;க்கை வெளியிட்டார்.

அடுத்த மாதம் வெலன்சியாவில் இடம்பெறவுள்ள போட்டியில் அவர் பங்குபற்றுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5882

  • தொடங்கியவர்

- நாராயண் காரத்திகேயன் (பிறப்பு: ஜனவரி 14, 1977)

- சில சமயங்களில் தவறாக நரேன் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார்) ஒரு கார் பந்தய வீரராவார்.

- சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார்.

- இவர் தற்போதைய வருடத்திய எஃப் 1 போட்டிகளில் ஜோர்டான் அணியின் சார்பாக பங்கு கொண்டு வருகிறார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.

ஆரம்ப நாட்கள்

நாராயண் கார்த்திகேயனின் தந்தை ஜி. கார்த்திகேயனும் ஒரு கார் பந்தய வீரராவார். தன் தந்தையின் பாதிப்பில் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆவல் இளமையிலேயே பெறப்பட்ட நாராயண், இந்திய ராலி பந்தயங்களில் பங்கு கொள்ளத் தொடங்கினார்.

ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தன் முதல் போட்டியிலேயே முதல் மூன்று வீரர்களுள் ஒருவராக வெற்றி பெற்றார். அதன் பிறகு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கிருந்த எல்ஃப் வின்பீல்ட் பந்தயப் பள்ளியில் சேரந்து பயின்றார். 1992இல் அங்கு நடந்த பார்முலா ரெனால்ட் கார்களுக்கான பைலட் எல்ப் போட்டிகளில் அரை இறுதிச் சுற்று வரை வந்தார். பின்னர் 1993ல் இந்தியாவில் பார்முலா மாருதி பந்தயங்களிலும், பிரிட்டனில் பார்முலா வாக்ஸ்ஹால் இளைஞர் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். 1994ல் பார்முலா ஜீடெக் பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார். அதன் பிறகு பிரிட்டிஷ் பார்முலா போர்டு குளிர்கால பந்தயங்களில் கலந்து கொண்டு ஐரோப்பாவில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 1995ல் பார்முலா ஆசியா பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், மலேசியாவில் நடந்த போட்டியில் இரண்டாமிடத்தில் முடித்தார். 1996ல் பார்முலா ஆசியா பந்தயங்களிலேயே முதல் வீரராக வந்து இப் பந்தயங்களிலேயே முதலில் வந்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார். 1997இல் பிரிட்டிஷ் பார்முலா ஓபல் பந்தயங்களில் கலந்து கொண்டு ஆறாம் இடத்தில் முடித்தார்.

பார்முலா 3 பந்தயங்களில்

1998ல் பிரிட்டிஷ் பார்முலா 3 பந்தயங்களில் கார்லின் அணியின் சார்பாக கலந்து கொண்டார். இப்பந்தயங்களில் இரண்டு முறை மூன்றாம் இடத்தில் முடித்தார். 1999லும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு, இரண்டு போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தார். 2000 வருடத்திலும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார்.

[தொகு] எஃப் 1 பரிசோதனை ஒட்டம்

2001ல் பார்முலா நிப்பான் F3000 பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், முதல் பத்து வீரர்களுள் ஒருவராக முடித்தார். அதே வருடத்தில் ஜாகுவார் ரேஸிங் காரை பரிசோதனை ஒட்டம் செய்த அவர் எஃப் 1 கார் ஓட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதன் பிறகு ஜோர்டான் ஹோண்டா எஃப் 1 காரையும் பரிசோதித்தார்.

2002ல் டாடா RC அணியின் சார்பாக டெலிஃபோனிகா பந்தயங்களிலும், 2003ல் நிஸ்ஸான் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். அவ்வருடம் இரண்டு போட்டிகளில் முதலிடம் வகித்து பந்தயங்களில் நான்காம் இடத்தைப் பிடித்தார். அவ்வருடம் மினார்டி எஃப் 1 அணிக்கு பரிசோதனை ஓட்டமும் நடத்தினார். 2004ல் எஃப் 1 பந்தயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் போதுமான விளம்பரதாரர்கள் இல்லாத காரணத்தால் அவரால் அவ்வருடம் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவ்வருடம் நிஸ்ஸான் பந்தயங்களில் கலந்து கொண்டு ஸ்பெயினிலும் பிரான்சிலும் வெற்றி பெற்றார்.

2005 எஃப் 1 பந்தயங்களில்

19 ஜூன் 2005 அன்று நடந்த போட்டியில் ஜோர்டான் காரில் நாராயண் கார்த்திகேயன்

1 பிப்ரவரி 2005 அன்று ஜோர்டான் அணியின் சார்பாக அவ்வருட பார்முலா 1 பந்தயங்களில் கலந்து கொள்ளப் போவதாக நாராயண் கார்த்திகேயன் அறிவித்தார். இவ்வருட போட்டிகளில் கலந்து கொண்டு வரும் அவர், இதுவரை ஐந்து புள்ளிகள் பெற்றுள்ளார். இவ்வருட போட்டிகளில் அவர் பெற்ற இடங்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

* மார்ச் 6 2005 - ஆஸ்திரேலியா - 15வது

* மார்ச் 20 2005 - மலேசியா - 11வது

* ஏப்ரல் 3 2005 - பஹ்ரைன் - முடிக்கவில்லை

* ஏப்ரல் 24 2005 - சான் மரினோ(இத்தாலி) - 12வது

* மே 8 2005 - ஸ்பெயின் - 13வது

* மே 22 2005 - மொனாகோ (பிரான்ஸ்)- முடிக்கவில்லை

* மே 29 2005 - ஐரோப்பா (ஜெர்மனி) - 16வது

* ஜூன் 12 2005 - கனடா - முடிக்கவில்லை

* ஜூன் 19 2005 - அமெரிக்கா - 4வது+

* ஜூலை 3 2005 - பிரான்ஸ் - 15வது

* ஜூலை 10 2005 - பிரிட்டன் - முடிக்கவில்லை

* ஜூலை 24 2005 - ஜெர்மனி - 16வது

* ஜூலை 31 2005 - ஹங்கேரி - 12வது

* ஆகஸ்ட் 21 2005 - துருக்கி - 14வது

இன்னும் ஆறு போட்டிகள் மீதம் உள்ளன.

டயர் சர்ச்சை காரணமாக அமெரிக்கப் போட்டியில் ஜோர்டான் உட்பட மூன்று அணிகள் (அதாவது ஆறு வீரர்கள்) மட்டுமே கலந்து கொண்டனர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D

Edited by akootha

Formula 1 போட்டிகளில் பங்கேற்ற முதலாவது இந்தியர் - தமிழர் காரத்திகேயன் ஆவார். உலக மோட்டர் பந்தயங்களிலேயே Formula 1 தான் மிகவும் உயர்வாகக் கணிக்கப்படுகிறது. இதில் ஓட்டுனராகக் கலந்து கொள்வது சாதாரணமானதல்ல.

ஒரு வருடத்தில் சுமார் 20 போட்டிகள் உலகில் பல நாடுகளில் நடத்தப்படும். போட்டியை நடத்தும் அந்தந்த நாடுகள் போட்டிக்கான செலவுகள் கட்டுமானச் செலவுகள் போன்றவற்றை ஏற்பதோடு பெருந்தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்களுக்கு வழங்க வேண்டும். அண்மைக காலமாக பல நாடுகள் குறிப்பாக ஆசிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தமது நாட்டிலும் இப் போட்டி நடத்தப்பட வேண்டுமென விரும்புகின்றன. இந்த வருடம் முதன் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது. வழக்கம்போல் மைதானம் இன்னும் கட்டி முடியவில்லை :D .

காரத்திகேயன் 2005 இல் Jordan-Toyota நிறுவனத்தின் சார்பாக போட்டியிட்டார். பின்னர் Williams நிறுவனத்தில் பரீட்சாத சாரதியாகப் பணியாற்றினார். 2008 இல் Mercedes நிறுவனத்திலும் இவ்வாறு பணியாற்றியதாக ஞாபகம்.

சென்ற வருடம் காருண் சந்தோக் என்ற இரண்டாவது இந்தியர் HRT நிறுவனம் சார்பாக போட்டியிட்டார். ஆனால் புள்ளிகள் எதனையும் பெறவில்லை. அதற்கான காரணம் அவர் ஓட்டிய காரின் வலு போதாது என்று சொல்லப்படுகிறது. இவரும் தமிழ்நாட்டில்தான் பிரந்தவர் ஆனால் தமிழரோ தெரியவில்லை. காருண்தான் இவ்வருடம் HRT சார்பாகக் கலந்து கொள்வதாக இருந்தது. அவர் வேறு நிறுவனங்களில் பணியாற்ற விரும்பியதால் மறுத்து விட்டார். திடீரென எதிர்பாராத விதமாக காரத்திகேயன் அறிவிக்கப் பட்டுள்ளார்.

2008 இல் முதல் தடவையாக இந்திய நிறுவனம் இப் போட்டியில் கலந்து கொண்டது. விஜய் மல்யா என்ற இந்திய கோடீள்வரர் 88 மில்லியன் டொலர்களுக்கு Spyker என்ற நிறுவனத்தை வாங்கி Force India Formula One Team என்ற நிறுவனத்தை உருவாக்கினார். முதல் வருடத்தில் எந்தவொரு புள்ளியையும் இது பெறவில்லை. 2009 இல் 9 ஆவது இடத்தைப் பிடித்து சென்ற வருடம் 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ் வருடத்திற்கான தனது ஓட்டுனர்களை இவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. சில வேளை காருண் பங்குபற்றலாம்.

காருண்

IN24_KARUN_1522f.jpg

படம் : R.Ravindran

காருண் போட்டி ஒன்றில் HRT காரில்

84496084.jpg

www.three2tango.com/

காருண் Redbull - Renault காரில்

32620342.jpg

படம் : GEPA / Franz Pammer

காரத்திகேயன்

Narain-Karthikeyan.jpg

படம் : AFP

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் அஜீத் பங்குபற்றவில்லையா? :D

  • தொடங்கியவர்

இவரும் ஒரு சூமாக்கர் ( ஜெர்மனி) போல புகழ் பெற வேண்டும்.

இந்த உலகத்தரமான போட்டிகளில் தமிழர் ஒருவர் பங்குபற்றுவது தமிழினத்திற்கு, முக்கியமாக இளையோருக்கு ஒரு புத்துணர்ச்சி தரும் விடயம்.

நடிகர் அஜீத் பங்குபற்றவில்லையா? :D

அஜீத் இங்கிலாந்தில் கார் ஓட்டப் பந்தயத்தில் வென்றதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அஜீத்திற்கும் Formula 1 ற்கும் சம்பந்தமில்லை.

இவரும் ஒரு சூமாக்கர் ( ஜெர்மனி) போல புகழ் பெற வேண்டும்.

இந்த உலகத்தரமான போட்டிகளில் தமிழர் ஒருவர் பங்குபற்றுவது தமிழினத்திற்கு, முக்கியமாக இளையோருக்கு ஒரு புத்துணர்ச்சி தரும் விடயம்.

எனக்கும் ஆசைதான். ஆனால் அது கடினம். முதல் நிலையில் Redbull-Renault, McLaren-Mercedes, Ferrari, Mercedes, Renault ஆகிய அணிகள் உள்ளன. இவற்றுக்கிடையில் கடுமையான போட்டி இருக்கும். ஏனைய அணிகள் தமக்கிடையில் சில புள்ளிகளையாவது பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கில் போட்டியிடும். கார்த்திகேயனின் HRT அணியும் இதனுள் அடங்கும்.

அடுத்தது கார்த்திகேயனின் வயது. 33 வயதில் 24 வயது துடிப்பான இளைஞர்களுடன் எவ்வாறு மோதுவார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். சூமாக்கர் 7 தடவை உலகக் கோப்பையை வென்றவர். சில வருட ஓய்வின் பின்னர் 40 வயதில் மீண்டும் போட்டிகளில் இணைந்துகொண்டு மிகவும் மோசமான முறையில் தோல்விகளைத் தழுவினார்.

இன்று காருண் தான் Lotus நிறுவனத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். ஒப்பந்தம் சரியாக வந்தால் கார்த்திகேயனுக்கும் காருணுக்கும் சரியான போட்டியாக இருக்கும். ஏனென்றால் இருவரும் கடைசி நிலை ஓட்டக் காரர்களாக இருப்பார்கள் :( . இவர்களின் கார்கள் அப்படி.

இவ்வருடம் நடந்த போட்டியொன்றில் காருணின் காரும் Lotus காரும் மோதிக் கொண்டன :D .

3855.jpg

படம் : © Sutton Images

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.