Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர்களையும், ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும்: பழ.நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 2, பிப்ரவரி 2011 (10:10 IST)

மீனவர்களையும், ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழக மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும் என, பழ.நெடுமாறன் கூறினார்.

இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார் நினைவு வீரவணக்க நாள் கூட்டம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயலர் பாவேந்தன் தலைமையில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்,

இலங்கைத் தமிழர்களுக்காகவும், தமிழ் தேசிய இன உணர்வாலும்தான் முத்துக்குமார் உயிர்த் தியாகம் செய்தார். அவரது தியாகம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து 15 பேர் ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்தனர்.

இறந்தவர்கள் எல்லோருமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த ஏழைகள். எனினும், தங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் உயிர்தான் எனக் கருதி, ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த தியாகிகளின் குடும்பத்தார், அரசு அளித்த பணத்தை வாங்க மறுத்தனர். இந்த இன உணர்வு தமிழக இளைஞர்களுக்கு வர வேண்டும்.

கடந்த 27 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களகடற்படை கொன்று குவித்துள்ளது. இதைக் கேட்க நாதியில்லை. உலகின் 5 வது பெரிய கடற்படையை வைத்துள்ள இந்தியாவால், எல்லை தாண்டும் ஒரு சிறிய நாட்டின் கடற்படையைத் தடுக்க முடியவில்லை என்பதை யாராவது நம்புவார்களா? ஆனால், தமிழர்கள் என்பதால் இவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நமது மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும்.

தமிழ் இனத்தைக் காக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை நாளை உலகத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் வரும்.

தமிழ் தேசிய இனம் ஒன்றுபட்டால், அதை வெல்லும் சக்தி யாருக்கும் கிடையாது. இன்று, உலகத் தமிழினம் அழிவின் விளிம்பில் உள்ளது. இப்போதாவது இந்த அபாயத்தை நாம் உணராவிட்டால், நமக்கு விடிவு வராது. எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை காக்கும் கடமை நமக்குள்ளது என்றார்.

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்படும் : பழ. நெடுமாறன்

இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமார் நினைவு வீரவணக்க நாள் கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது.

தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயலர் பாவேந்தன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘’முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழ் தேசிய இன உணர்வாலும்தான் தனது உயிரை தியாகம் செய்தார். அவரது தியாகம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் மேலும் 15 பேர் தங்கள் உயிரை ஈழத் தமிழர்களுக்காக தியாகம் செய்தனர்.

அவ்வாறு உயிர் நீத்தவர்கள் அனைவருமே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்த ஏழை மக்கள். தங்களிடம் உயிரைத் தவிர வேறு ஆயுதம் இல்லை என்று நினைத்து அதை தியாகம் செய்துவிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோ அரசு அளித்த நிவாரண நிதியை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த இன உணர்வு தமிழக இளைஞர்களுக்கு வர வேண்டும்.

கடந்த 27 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ஈவு இறக்கமின்றி கொன்று குவித்துள்ளது.

இந்தக் கொடுமையை ஏன் என்று கோட்பாரில்லை. இந்தியா உலகின் 5-வது மிகப் பெரிய கடற்படை கொண்ட நாடு. ஆனால் அதனால் ஒரு சின்ன நாட்டின் கடற்படையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் யாராவது நம்புவார்களா? தமிழர்கள் என்பதால் தான் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

எனவே தமிழக மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில் தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழ வேண்டும்.

தமிழர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. இன்று ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் நாளை உலகத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்படும்.

தமிழ் இனம் ஒன்று சேர்ந்தால் அதை யாராலும் வெல்ல முடியாது. இன்று, உலகத் தமிழினம் அழிவின் விளிம்பில் உள்ளது என்பதை இப்போதாவது உணர்ந்து செயல்படாவிட்டால் நமக்கு விடிவே கிடையாது. எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை காக்கும் கடமை நம்முடையது’’ என்று தெரிவித்தார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47864

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘Tamils in Lanka will be wiped out in 2 years’

TIRUCHY: Despite the claim of the Sri Lankan government that rehabilitation work is in full swing in the regions where Tamils live, the real condition is worse. To say the least, it is non-livable and within two years, all the Tamils and everything about them will be destroyed and obliterated from memory if the present squalid condition persists, I Kayal alias Angayarkanni, who was detained in Sri Lanka recently for visiting the northern part of the island nation, said here on Tuesday.

Angayarkanni, an advocate by profession, along with her associate M Thirumalai, had visited the Tamil regions in Sri Lanka, including Vavunia, Mattakalappu, Omandai, Kilinochi, Jafna and Valvettithurai and got to know firsthand the condition of the Tamils in various camps.

‘In a camp at Kattariankulam in Vavunia there live about 1600 persons making up from 746 families and most of them are women and children. Men who are fewer live without either leg or hand and we even hear that the women are subjected to sexual harassment’, she said.

Though the government claims that rehabilitation work is in progress, only 30 per cent of relief materials reach the people at the camps. Still the people lead a life with their hands tied up and undergo torture at the ‘concentration camps’ and ‘torture centres’, she said. About 16,000 young men and 9,000 women in the 18-35 age group who were once LTTE sympathisers are lodged in separate camps and their condition is worse, Thirumalai said.

‘When the UN officials visited the camps, the women inmates petitioned to them to know about these displaced young people and most of the parents were not in a position to know whether their sons were alive’, she said. Those who are healthy are kept in torture centres and those who are not are kept in camps for internally displaced persons.

If this condition persists the whole of Tamil race would be rooted out of the island nation, Angayarkanni said. She also pointed out that the agricultural tools distributed to the Tamils were used by the Sinhalese. That shows the failure of the authorities to reach the welfare measures to the affected Tamils, she added.

http://expressbuzz.com/states/tamilnadu/%E2%80%98tamils-in-lanka-will-be-wiped-out-in-2-years%E2%80%99/244350.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொடுமையை ஏன் என்று கோட்பாரில்லை. இந்தியா உலகின் 5-வது மிகப் பெரிய கடற்படை கொண்ட நாடு. ஆனால் அதனால் ஒரு சின்ன நாட்டின் கடற்படையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் யாராவது நம்புவார்களா? தமிழர்கள் என்பதால் தான் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. மென்டிக்கிறேன் ... பன்றி குட்டி போட்டால் கூடத்தான் கிரவுடு சேரும்...சுடத்தெரியாது...... மிண்டும் பயிற்சியளிக்கவேண்டும் என்பதே உண்மை..இவர்களுக்கு கொடுக்கபடும் பயிற்சிகள் பாலியல் வல்லுனர்வு மட்டுமே :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஈழத்தமிழர்கள் ஒரு ஒற்றையாட்சி சிங்கள இனவாத அரசால் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழக தமிழர்கள் மாநில அரசாட்சி இருந்தும் சரியான தலைமைகள் இல்லாமல் டெல்லியாலும், வேற்று மாநிலத்தாலும் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.