Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சினிமா தயாரிப்பதில் ராஜபட்ச ஆர்வம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா தயாரிப்பதில் ராஜபட்ச ஆர்வம்?

First Published : 17 Feb 2011 05:58:10 PM IST

கொழும்பு, பிப்.17: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தமிழ் சினிமா தயாரிக்க முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், அதற்காக இந்திய இசை அமைப்பாளர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதிக் கட்டப் போருக்குப் பின் இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டுவதே படத்தின் குறிக்கோளாக இருக்கும் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

படத்தை தயாரிக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்க ராஜபட்ச தயாராக இருப்பதாகவும், இதற்காக இந்திய இசையமைப்பாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

dinamani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில் படம்! ராஜபக்‌ஷேவுடன் இசையமைப்பாளர் கூட்டு சதி!

இலங்கையில் போர் நடக்கும் போது திரையுலகம் திரண்டு பல போராட்டங்களை நடத்தினார்கள். அதில் சொல்லப்பட்டதும் நாம் புரிந்து கொண்டதும் ஒரே விஷயம் தான். இந்த அழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணமானவர்கள் ஒரு புறம் இருக்க, இந்த கொடுமையான பதிவுகளை காலத்துக்கு எடுத்து சொல்லவும் அதற்கு காரணமானவர்களை அடையாளம் காட்டும் பொறுப்பும் திரைத் துறையினருக்கும் கலைத் துறையினருக்கும் அதிகம் உண்டு என்பதே.

இலங்கைப் பிரச்சனை அரசியலாக்கப்படுவது ஒருபுறம் இருக்க இந்தக் கொடுமைகளை எல்லாம் மறைக்க ராஜபக்‌ஷே ஒரு பெரிய சதி திட்டம் தீட்டி வருக்கிறார். அதாவது தமிழில் படம் தயாரிக்க இருக்கிறார் ராஜபக்‌ஷே. இதனால் அவருக்கு என்ன லாபம்... அதில் தானே விஷயமே இருக்கிறது. தமிழில் படம் எடுத்து அதில் வரும் காட்சிகளில் இலங்கையில் உள்ளத் தமிழர்கள் நன்றாக இருப்பது போலவும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது போலவும் கொடுமைக்கு காரணமான வர்கள் நல்ல மனிதர்களைப் போலவும் காண்பிக்க வேண்டும் என்பது ராஜபக்‌ஷேவின் கனவு.

இதில் கொடுமை என்னவென்றால், இதற்கு ஒத்துழைப்பதாக ராஜபக்‌ஷேவிடம் வாக்கு கொடுத்திருகிறாராம் ஒரு பிரபல தமிழ் இசையமைப்பாளர். அவர் வேறு யாரும் இல்லை, கங்கை அமரன் தான். இதற்காக எவ்வளவு கோடிகளை வேண்டுமானாலும் கொட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாராம் ராஜபக்‌ஷே. சமீபமாக ரகசியமாக இலங்கை சென்று ராஜபக்‌ஷேவிடம் பேசிவிட்டு வந்திருக்கிறாராம் இந்த இசையமைப்பாளர். கொழும்பில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இந்த இசையமைப்பாளரை ராஜ மரியாதையுடன் தூதர்கள் அரச மாளிகைக்கு அழைத்து சென்றார்களாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இளையமைப்பாளரின் மகன் தற்போது பிசியான பிரபல டைரக்டர் என்பதால் அவரை வைத்தே அந்தப் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம் சதிகாரர்கள். (அப்போ... வெங்கட் பிரபுவிற்கு இனிமேல் தான் மங்காத்தா ஆரம்பம்ன்னு சொல்லுங்க!)

இது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் கங்கை அமரன், எனக்கு அப்படி ஒரு அவசியம் இல்லை என்றும் அது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், ராஜபக்‌ஷேவை கங்கை அமரன் சந்தித்தது உண்மை தான் என்றும், இன்னும் கொஞ்ச நாட்களில் உண்மை வெளியே வரும் என்றும் செய்திகள் வருகிறது.

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=857

Edited by Muhil

சிங்களம் ஒரு கல்லில் குறைந்தது இரண்டு மாங்காய் விழுத்தலாம் என பார்க்கின்றது.

தமிழனை வைத்தே தமிழனக்கு எதிராக பரப்புரை சார்ந்த சினிமா, அதன்மூலம்,

தமிழருக்கு இடையே பிரிவுகளையும் முடிந்தால் பணமும் சம்பாதிக்கலாம் :rolleyes:

திரையில் பிரபாகரன்

வியாழன், 17 பிப்ரவரி 2011( 20:31 IST )

கங்கை அமரன் பாசிஸ ராஜபக்சேவை சந்தித்தார் என்ற கறுப்பு செய்தியின் தாக்கம் விலகும் முன் ஓர் இனிப்பு செய்தி. திரையில் பிரபாகரன் வரவிருக்கிறார்.

காமராஜர் படத்தை எடுத்த அ.பாலகிருஷ்ணன் மீண்டும் மகாத்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். காந்தி மீண்டும் பிறந்து வந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். நடப்பு அரசியலையும், சீர்கேடுகளையும் புட்டு வைத்திருக்கும் இந்தப் படத்தில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் ஈழப் பிரச்சனை குறித்து விவாதிப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார்.

பிரபாகரனின் போஸ்டர்களையே தடை செய்கிறவர்கள் இந்தக் காட்சியை அனுமதிப்பார்களா என்பதுதான் கேள்வி.

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1102/17/1110217063_1.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷவை சந்தித்தேனா? - அலறும் இசையமைப்பாளர்

வெள்ளி, 18 பெப்ரவரி 2011 08:17

போர்க்குற்றவாளி என சர்வதேசத்தால் சித்தரிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை ஒரு பிரபல தமிழ் இசையமைபபாளர் சந்தித்தார் என்றும் தன் மகனை வைத்து, `இலங்கை தமிழர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்` என்று உணர்த்தக் கூடிய படம் ஒன்றை எடுக்கவிருப்பதாகவும் கடந்த இரு தினங்களாக செய்தி வெளியாகி வந்தது.

ஆனால் அதில் யார் அந்த இசையமைப்பாளர் என்ற குறிப்பு ஏதுமில்லை. எனவே யார் அந்த நபர் என்று தமிழ் உணர்வாளர்கள் கேட்டு வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து தாமாகவே முன்வந்து கருத்து தெரிவித்துள்ளார் கங்கை அமரன். "நான் ராஜபக்சேவைச் சந்தித்ததாக வரும் செய்திகளில் உண்மையில்லை.

அதற்கான அவசியம் எனக்கில்லை.. இந்த செய்திகளைப் படித்துவிட்டு கடந்த இரு தினங்களாக நான் சிரித்துக் கொண்டுதான் உள்ளேன். கோபப்படவில்லை.." என்று கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து நாம் விசாரித்ததில், `கங்கை அமரனும் இன்னொரு திரையுலக பிரபலமும் இலங்கை சென்றதும், ராஜபக்சேவைச் சந்தித்ததும் 100 சதவீதம் உண்மையே. இன்னும் சில தினங்களில் பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும்,` என்றார் உறுதியாக!

tamilcnn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 21, பிப்ரவரி 2011 (19:50 IST)

ராஜபக்சேவை சந்திக்கவில்லை: கங்கை அமரன்

இசையமைப்பாளரும் டைரக்டருமான கங்கை அமரன் சமீபத்தில் இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது.

கங்கை அமரன் மகன் வெங்கட்பிரபு மூலம் இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாய் வாழ்வது போன்று தமிழ் படம் ஒன்றை எடுக்கும் படி ராஜபக்சே கேட்டுக்கொண்டதாகவும் அதற்கான செலவை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி கங்கை அமரன் கூறியதாவது: நான் இலங்கை சென்றது உண்மை. ஆனால் ராஜபக்சேவை சந்திக்கவில்லை. அங்கு நடந்த சித்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக போனேன் உலகம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட சித்தர்கள் அங்கு வந்து இருந்தனர்.

சொந்த பயணமாகவே அங்கு சென்றேன். ராஜபக்சேவை நான் ரகசியமாக எப்படி சந்தித்து இருக்க முடியும். அப்படி சந்தித்து இருந்தால் உள்ளூர் பத்திரிகைகளில் போட்டோ வந்து இருக்காதா? இது அடிப்படையே இல்லாத வதந்தி ராஜபக்சேவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

nakkheeran

என்னைத்தான் கதாநாயகனாக நடிப்பதற்குக் கேட்டவர் நடிக்கலாமா? வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைத்தான் கதாநாயகனாக நடிப்பதற்குக் கேட்டவர் நடிக்கலாமா? வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :lol::lol:

ஆஆஆஆஆ....... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தான் இந்தப் படத்தில் கதாநாயகியாய் நடிக்க கூப்பிட்டார்கள்...கதாநாயகனாய் இறைவனைப் போடப் போகிறோம் என சொன்ன படியால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டேன் :lol:

கருணாநிதி குடும்பத்துக்கு கொண்டு போய் சுருட்டியதுகளில் ஒரு பங்கை வலிய கொடுக்க நிற்குது ராஜபக்ச!! ... உதுக்கு தெரியாது போல, நாமும் படம் படோம் என்று எந்திரனாக கருணாநிதி குடும்பத்துக்கு கோடிக்களை அள்ளிக் கொடுத்ததை!!! <_<

  • கருத்துக்கள உறவுகள்

கங்கை அமரன், அவரது மகன் வெங்கட் பிரபு மீது வீண் அவதூறு பரப்பும் செய்தி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.