Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரேமானந்தா காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

PREMANanda.jpg

Tu_29851.jpg

சென்னை, பிப்.21,2011

இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் பிரேமானந்தா சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

பாலியல் வல்லுறவு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார் புதுக்​கோட்டை சாமியார் பிரேமானந்தா.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயி​ருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் தவித்தார்.

தனது சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும்படி சிறைத் துறை அதிகாரிகளுக்கும், உள்துறை செய​லாளருக்கும் மனு கொடுத்தும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான உத்தரவு பெற்றார்.

சிகிச்சை முடிந்து சிறை திரும்பிய பிரேமானந்தாவுக்கு தொடர்ந்து பராமரிப்புக்கு வழியின்றிப் போகவே, மீண்டும் உடல்நிலை மோசமானது.

கடந்த நவம்பர் மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நவம்பர் 8-ம் தேதி இருந்து மீண்டும் சிறையில் அடைக்​கப்​பட்டார்.

இந்நிலையில், உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேமானந்தா, சிகிச்சைப் பலனின்றி இன்று மதியம் மரணமடைந்தார்.

vikatan.com

ஒரு கள்ளச் சாமி இறந்துவிட்டார்: அவரை விட பல மடங்கு குற்றம் செய்தவர்கள் இன்று விடுதலை பெற்றுவிட்டனர். நீதி என்பதும் தர்மம் என்பது எளியவன் வாழ்க்கையில் மட்டுமே "அறம் பிழைத்தால் கூற்றமே அறம் ஆகும்" என்பதற்கிணங்க தொழிற்படும் !!!

பிரெமானந்தாவின் ஆத்மாவின் இறுதி இடத்தில் பாவிகளின் குற்றம் தண்டனைக்குரியதாக

  • கருத்துக்கள உறவுகள்

அந்த படுக்கையறைக் காட்சியில் உள்ள ஆண், மற்றும் பெண்ணின் முகங்களை ‘மார்ஃபிங்’ முறையில் மாற்றியுள்ளனர்-- பிரேமானந்தா

resize_20100910122717.jpg

எத்தனையோ ‘கள்ளச் சாமியார்கள்’ புதிது புதிதாக வந்துவிட்டார்கள். ஆனாலும், ‘போலிச்சாமியார்’ என்றாலே அகராதியின் பக்கங்களில் இன்றளவும் பிரேமானந்தாவின் பெயர்தான் எல்லோரையும் முந்திக்கொண்டு பளிச்சிடுகிறது. மனிதர் சுப்ரீம் கோர்ட் வரை முட்டி மோதிய பிறகும், அவருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து தப்ப முடியவில்லை.

பதினாறு ஆண்டுகால சிறை வாழ்க்கை அவரை மாற்றியிருக்கிறதா? அதை அறிந்துகொள்ளும் பொருட்டு அவரை சந்திக்க முற்பட்டோம். ஏகப்பட்ட உடல் உபாதைகள் காரணமாக கோர்ட் அனுமதியுடன் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர். கடுமையான போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவரது பக்தர்போல் வேடம் தரித்துதான் அவரைச் சந்திக்க முடிந்தது. நம்மை அறிமுகப்படுத்தியதுமே சுற்றியிருந்த அவரது அடிப்பொடிகள், ‘எல்லாப் பிரச்னைகளுக்கும் இந்த பிரஸ்காரங்கதான் காரணம்’ என ஆவேசப்பட்டனர். அவர்களை கையசைத்து வெளியே அனுப்பிவிட்டு, “எனக்கும் ஆரம்பத்துல அப்படித்தான் பத்திரிகைக்காரங்க மேல கோபம் இருந்துது ராசா! கடந்த 16 வருடத்தில் எந்த பத்திரிகையாளரையும் நேருக்கு நேர் சந்தித்து பேட்டியளித்தது இல்லை. இப்போ நான் பக்குவப்பட்டுட்டேன். எதுவானாலும் கேளுங்க. ஏன்னா சிகிச்சை முடிந்து மீண்டும் நான் ஜெயிலுக்குள் போயிட்டா அப்புறம் என் வாழ்நாளில் பத்திரிகைக்காரங்களைச் சந்திக்க முடிகிறதோ, இல்லையோ?’’ என ஏதோ நம்மை எதிர்பார்த்திருந்தவர் போலவே பேட்டிக்குத் தயாரானார்.

உங்களது ஆசிரமத்தில் பணிபுரிந்த ஓர் இளம் பெண்ணையே கற்பழித்தீர்கள். அதனை நேரடியாகப் பார்த்துவிட்ட ஒரு இன்ஜினீயரை கொலை செய்தீர்கள்... என்கிற புகார்களுக்காகத்தானே உங்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை?.

“அந்தப் பெண் கைக்குழந்தையா இருக்கும்போதே அவளை குளிப்பாட்டி, ஜட்டி போட்டுவிட்டு பெற்ற மகளைப் போல வளர்த்தேன். அந்தப் பெண்ணை எப்படி நான் கற்பழிக்க முடியும்? நான் என்ன மிருகமா? எனக்கு அப்படியொரு ஆசையிருந்தா, என்னிடம் இருந்த பணத்திற்கு அழகான பெண்களோடு இருந்திருப்பேன். காதல் வயப்பட முதலில் அந்தப் பெண் ஓரளவு அழகாக இருக்கவேண்டும். நான் கற்பழித்ததாகக் கூறப்பட்ட பெண் அப்படி இல்லை. தவிர, இன்றும் அந்தப் பெண் எனது ஆசிரமத்தில்தான் தங்கியிருக்கிறார். நான் கற்பழித்ததை நேரில் பார்த்த சாட்சியான நந்தகுமார் என்ற இன்ஜினீயரை கொலை செய்ததாக ஒரு வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் பதிவு செய்தனர். ஆனால் உண்மையில் நந்தகுமார் இன்ஜினீயரே அல்ல. ப்ளஸ் டூ வரை படித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அவர். தன்னைத்தானே எதையாவது எடுத்து தாக்கிக் கொள்வது அவரது வழக்கம். அப்படிப்பட்டவரை நான் முழங்காலுக்குக் கீழே பிரம்பால் அடித்ததாகவும், அதனால் அவர் இறந்ததாகவும் சார்ஜ் ஷீட் போட்டுள்ளனர். எனவே, இதெல்லாம் எனக்கு எதிரான சதி.’’

உங்களுக்கு எதிராக அப்படி சதி செய்தவர்கள் யார்?

“அப்படிக் கேளுங்க! திருச்சி ஆசிரமத்திற்கு அருகில் இருந்த நிலத்தை எல்லாம் வாங்கிப்போட்டு ஆசிரமத்தை விரிவுபடுத்தினேன். அந்த இடத்தை சசிகலா கேட்டதாகவும், நான் தர மறுத்ததால்தான் இப்படி பழிவாங்கப்பட்டதாகவும் ஊரே பேசிக்கொண்டது. பத்திரிகைகளில் என்னைப் பற்றி வந்த செய்தியின் அடிப்படையில் மாதர் சங்கத்தினர் எனக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள என்னைக் கைது செய்து உள்ளே போட்டுவிட்டார். கலைஞரும் ஆட்சியை காப்பாத்திக்கிறதுக்காக என்னை வெளியே விட மறுத்துவிட்டார்.

தவிர, ஆன்மிகரீதியான சதிகளும் இருக்கு. எனது ஆன்மிகப் பயணத்தினால் உலக நாடுகளில் இந்து மதத்தைத் தழுவியவர்கள் பலர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்ப்ளண்ட் கிறிஸ்ட் என்பவர் எனது ஆசிரமத்தில் இருந்த அம்பிகானந்தா என்பவரை எப்படியோ வளைத்துப்போட்டு, என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டார். இது எனக்கு எதிரான சதி மட்டுமல்ல, இந்து ஆன்மிகவாதிகளுக்கு எதிரான சதியாகும்.’’

மதத்தையும் இதில் நுழைக்கிறீர்களே?

“ஆமாம். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ஜோசப் என்கிற பாதிரியார் எனக்குப் பிறகு செக்ஸ் மற்றும் கொலை வழக்கில் கைதானவர்தான். எப்பவோ அவர் ஜாமீனில் விடுதலையாகிவிட்டார். ஆனால் சங்கராச்சாரியாரை என்ன பாடு படுத்திவிட்டார்கள். நித்யானந்தாவை சி.டி. போட்டுக் காட்டுகிறார்கள். எனக்கென்னவோ, நித்யானந்தா முகத்தையும், ரஞ்சிதா முகத்தையும் ‘மார்ஃபிங்’ முறையில் அந்த படக் காட்சியில் சேர்த்திருப்பார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. இப்படி நான் சொல்வதால், நித்யானந்தா உத்தமர் என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். சென்னை ஜெயிலில் இருந்தபோது சதுர்வேதி சாமியாரை சந்தித்தேன். அவரும், ‘ஜோடிக்கப்பட்ட வழக்கு’ என்றே புலம்பினார்.’’

உங்களுடன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திவ்யா என்ன ஆனார்?

“திவ்யாவை எனது மனைவி என்று பத்திரிகைகளில் எழுதிவிட்டார்கள். உண்மையில் அவர் என் உடன்பிறந்த சகோதரி. இப்படி உறவுகளையே கொச்சைப்படுத்தி எழுதியதால், அவர் அமெரிக்காவுக்குச் சென்று விட்டார். இனி இந்த மண்ணில் கால் பதிப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.’’

சரி... எப்படித்தான் இப்படி காவி உடைக்கு மாறினீர்கள் என்கிற கதையையும் சொல்லிவிடுங்களேன்?

“என் தந்தை பிறந்து வளர்ந்தது இந்தியாதான். பிழைப்புக்காக அவர் இலங்கை சென்றார். நான் இலங்கையில்தான் பிறந்தேன். கள்ளர் இனத்தைச் சேர்ந்தவன். பதினேழு வயது வரை மாமிசம் சாப்பிட்டு வளர்ந்தவன்தான் நான். சிறுவயதில் இருந்தே ஒருவரின் முகத்தைக் கண்டு, ‘உனக்கு இன்ன பிரச்னை, அடுத்து இப்படி நடக்கப் போகிறது’ என்று சொல்வேன். அது அப்படியே நடக்கும். சிறு வயதிலேயே விபூதி, பூமாலை போன்றவற்றை வரவழைத்து சித்துவேலை காட்டுவேன். இந்த விஷயம் பரவியதால் என்னிடம் பலரும் அருள்வாக்கு கேட்கத் தொடங்கினர். இப்படித்தான் வெறும் பிரேம்குமாராக இருந்த நான் பிரேமானந்தாவாக காவி உடைக்குள் வந்தேன்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, துறவு வாழ்க்கைக்கு மாறி இலங்கையின் பல பகுதிகளிலும் 29 ஆசிரமங்களை நிறுவினேன். அங்கு பவுத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் கூட எனது அருள் வாக்கு கேட்டு இந்து சிங்களவர்களாக மாறினர். இதனால் 1983ல் தமிழர் சிங்களர் போரின்போது சிங்கள ராணுவம் எனது ஆசிரமங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியது. ஒரு முறை ராணுவ குண்டுவீச்சில் எனது ஒரு ஆசிரமம் தீப்பிடித்ததால், அங்கிருந்த குழந்தைகளை காப்பாற்றிக் கொண்டு எனது பக்தரான கலெக்டர் ஒருவர் உதவியுடன் இந்தியா வந்தேன்.

பிறகு ஆறு மாத காலம் சென்னையில் இருந்தேன். அப்போது இலங்கைத் தமிழர் ஒருவர் மூலம் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்தேன். அவர்தான் எனக்கு திருச்சியில் இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து ஆசிரமம் அமைக்க உதவினார். அதில் ஆசிரமம் அமைத்து இலங்கைப் போரில் பெற்றோரை இழந்து தவித்த ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து வந்தேன். பத்து ஆண்டு காலம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்திற்குக்கூட நான் சென்று இருந்தேன். என்னிடம் அருள்வாக்கு கேட்காத முக்கியப் பிரமுகர்களே இங்கு கிடையாது.’’

தமிழக அரசியலில் விஜயகாந்த் புதிய சக்தியாக சொல்லப்படுகிறாரே?

“அவர் அரசியலுக்கு கத்துக்குட்டி. அவர் ஆட்சிக்கு வந்து எல்லாவற்றையும் படிப்பதற்குள் ஆட்சிக்காலம் முடிந்துவிடும். அப்புறம் மக்களுக்கு என்ன செய்வார்? மு.க. ஸ்டாலினை முதல்வராக்கலாம். ‘யங் மேன்’. சின்ன வயதில் இருந்தே அவரது அப்பா கைபிடித்து அரசியல் கற்றவர். மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று பல திட்டங்களை அவர் வைத்திருப்பார். ஆனால், ‘வாரிசு அரசியல்’ என்று காங்கிரஸ்காரர்கள் சொல்வாங்க. அப்புறம் டெல்லியில் மட்டும் என்ன அரசியல் நடக்குதாம்’’ என தனக்குத் தெரிந்த மட்டும் அரசியலை அலசினார் பிரேமானந்தா.

இறுதியாக, “எனக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஆயுளுக்கு ஏழு வருடம் என்றால்கூட இரட்டை ஆயுளுக்கு பதினான்கு வருடம்தான் ஜெயில். நான் கூடுதலாக இரண்டு வருடம் சிறையில் இருந்துள்ளேன். அண்ணா பிறந்தநாளையொட்டி நன்னடத்தை அடிப்படையில் அரசு என்னையும் விடுவிக்கவேண்டும். அப்படிச் செய்தால் தமிழகத்தில் இன்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆரம்பித்து ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிப்பேன்’’ என ஒரு வேட்பாளர் ரேஞ்சுக்கு வாக்குறுதிகளையும் அள்ளிவிட்டார். ஒருவேளை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் நிற்பாரோ?!

நன்றி குமுதம் நிருபர்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சாமியார் என்பதால்.... சிறையிலிருந்தே.... இறக்க வேண்டியதாய்ப் போச்சு.

இவரை விட, அதிகம் குற்றம் புரிந்தவர்கள், அரசியல் செல்வாக்கு, பணச்செல்வாக்கால்..... வெளியே வந்து, தமது வழமையான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுளார்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

சாமியார் என்றால் என்ன ? சோம்பேறி சுணைகெட்டவன் மற்றவர் உழைப்பில் வாழ்பவன் , ஊரையும் மக்களையும் ஏமாற்றிப் பிழைப்பவன் இவர்களெல்லாம் சாமியாரா.?

  • கருத்துக்கள உறவுகள்
:o:lol:<_< சின்னக் கள்ளர் எல்லாம் போய்ச் சேருறாங்கள். ஆனல் பெரிய கள்ளன் மட்டும் இன்னும் முழிச்சுக்கொண்டு திரியிறான், அவன எப்ப சாவது ?? கெதியா நடந்தால் நல்லம். இல்லவிட்டால் அவனைச் சுத்திக்கொண்டிருக்கிற செம்மறிக் கூட்டத்தின்ர அட்டகாசம் தாங்க ஏலாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.