Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் செய்த தவறைப் போன்று லிபியாவிலும் ஐ.நா தவறுவிடக் கூடாது!

Featured Replies

வன்னியில் செய்த தவறைப் போன்று லிபியாவிலும் ஐ.நா தவறுவிடக் கூடாது!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் மேற்கொண்ட இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறியதைப் போன்று, லிபியாவில் அப்பாவி பொது மக்களைக் காப்பாற்றுவதற்கு தவறக்கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு அரச தலைவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை உடனடியாக ஒரு எச்சரிக்கைச் செய்தியை அனுப்பி வைக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தணிகாசலம் தயாபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'கடந்த 2009ஆம் ஆண்டு சிறிலங்காவில் ஈழத்தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையானது தவறியதைப் போன்று, மீண்டும் அது ஒருதடவை அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு லிபியாவிலும் தவறக்கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஐ.நா சபையிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதப்படுகொலைகளின் போது 60,000 வரையிலான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சமயம், ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையின் 'மூடிய கதவுகளின்' உள்ளே நடைபெற்றிருந்த கூட்டங்கள் அனைத்தினாலும், சிறிலங்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகம் கூட ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், அந்த மனிதப் படுகொலைகளை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் பேரினவாத அரசாங்கத்திற்கு தன்னுடைய ஆசீர்வாதங்களையும் வழங்கியிருந்தது.

ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தை அனுமதித்திருந்தது போன்று, ஐ.நா சபையானது லிபியாவிலும் பொதுமக்களைக் கொல்வதற்கு லிபிய அரசாங்கத்தை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது.

சிறிலங்காவில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை நீதியின் முன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு அரச தலைவர்களுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையானது உடனடியாக ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கும், இப் பாரிய மனிதத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ள சிறிலங்காவின் அரச தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகத்தினர் இன்றுவரை தவறியிருப்பதும், இந்த விடயங்களில் சர்வதேச சமூகத்தினரின் இயலாமையைக் காட்டுவது மட்டுமல்லாமல்;, இன்று சர்வதேசம் எங்;கினும் லிபியாவின் அரச தலைவர்களைப் போன்று, இறைமையின் பெயரால் மனிதத்திற்கு எதிராகப் பாரிய குற்றங்களை இழைப்பவர்களுக்கு மிகப்பெரிய துணிச்சலையும், அளவற்ற உற்சாகத்தினையும் கொடுத்திருக்கின்றது.

எனவே சிறிலங்காவில் போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களை தாமதமின்றி, உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து அநீதிகள் இழைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம், ஐ.நா சபையானது லிபிய அரச தலைவர்களைப் போன்று மனிதத்திற்கு எதிராகப் பாரிய குற்றங்கள் இழைப்பவர்கள் எவராயினும் அவர்கள் இனிமேலும் நீதியின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதனை இத்தகைய கொடுங்கோலர்களுக்கு தெட்டத் தெளிவாக நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் ஒன்றினையும் விடுக்கின்றது.

சிறிலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது, 60,000 வரையிலான ஈழத்தமிழ்ப் பொதுமக்கள் அரச பயங்கரவாதப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர். சர்வதேச போர் விதிகளை மீறும் வகையில் மருத்துவமனைகளும், பாடசாலைகளும் அரச படைகளின் விமான மற்றும் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின.

போரின் மத்தியில் அகப்பட்டுக் கொண்ட பொது மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகங்களில் பல்வேறு தடைகளை அரச படையினர் ஏற்படுத்தியிருந்தனர். மருந்தின்மையாலும், பட்டினியாலும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை அறிவித்திருந்தது.

போரில் காயப்பட்டிருந்த பொது மக்களுக்கு அவசியமான மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்திருந்த காரணத்தினாலும், பொதுமக்களில் பலர் இறக்க வேண்டி நேரிட்டது.

போரிலிருந்து தப்பியோடிய பொது மக்களில் பலர் சிறிலங்காவின் அரச படைகளினால் உருவாக்கப்பட்டிருந்த இரகசிய மற்றும் திறந்தவெளி முகாம்களில் சிறை வைக்கப்பட்டு, இவர்களில் பலர் அரச பயங்கரவாதப் படைகளினால் பின்னர் சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர், பெண்களில் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

மே 26ஆம் நாள் 2009ஆண்டு அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான திருமதி. மக்டலீனா செபுல்வேதா அவர்கள், 'சிறிலங்காவின் அரசாங்கமானது பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, போரிலிருந்து தப்பியோடிய ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உட்பட 300,000 இற்கு மேற்பட்ட பொதுமக்களை தனது முகாம்களில் தொடர்ந்தும் அடைத்து வைத்திருக்கின்றது. போதிய உணவின்மையாலும், பட்டினியாலும் பொதுமக்களில் பலர் இந்த முகாம்களில் இறந்து கொண்டிருக்கின்றனர். இவற்றை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.' என அறிவித்திருந்தார்;;சிறிலங்கா அரசாங்கமானது இதனை தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், அரச பயங்கரவாதப் படைகளானது பொது மக்கள் செறிந்து இருந்த இடங்களிலும், பொது மக்களின் பாதுக்காப்பிற்கென அரசாங்கத்தினாலேயே அறிவிக்கப்பட்டிருந்த 'பாதுகாப்பு வலயங்களினுள்ளும்' தொடர்ந்தும் மோட்டார் குண்டுத் தாக்குதல்களை அவ்விடங்களின் மீது மேற்கொண்டிருந்தார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது, சிறிலங்காவில் உரிமைகள் மறுக்கப்பட்டு அரச பயங்கரவாத அடக்குமுறைகளுக்கு தினசரி முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஈழத்தமிழினத்தின் அடிப்படை மனித உரிமைகளுக்காக உலக அரங்கினில் குரல் எழுப்புவதற்காகப், போரினால் புலம் பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழர்களினால் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள ஓர் சர்வதேச அமைப்பு ஆகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், 12 புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் மக்களால் ஜனநாயக வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆவர். இந்த மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு அரசியல் சாசனத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது பிரதமரையும், அரசவைத் தலைவரையும், பத்துப் பேர் அடங்கிய அமைச்சரவையையும் கொண்டுள்ளது.

அன்று சிறிலங்காவில் நடந்தது, இன்று லிபியாவில் நடந்து கொண்டிருப்பதைப் போன்று, இறைமையின் பெயரால் உலகம் எங்கினும் மனிதப் படுகொலைகளையும், அரச பயங்கரவாதங்களையும் நடாத்திக் கொண்டிருக்கும் கொடுங்கோலர்களிடம் மேலும் பொறுமை காட்டாது, இனிமேலாகினும் சர்வதேச சமூகமானதுமனிதத்திற்கு எதிராகப் பாரிய குற்றங்களைப் புரிந்து கொண்டிருக்கின்ற இந்தக் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்தி தண்டிப்பதன் மூலம் மனித சமூகத்தை போர்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும், பேரழிவிலிருந்தும் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஜனநாயகத்தை நேசித்து மதித்துப் போற்றுகின்ற அனைத்து உலகத் தலைவர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும், உலக மாந்தரையும் வேண்டிக் கொள்கின்றது' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தணிகாசலம் தயாபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={E122ECE3-EBD9-47B0-8BE3-6AFD7E161630}

  • தொடங்கியவர்

Bringing Gadhafi to justice

Moammar Gadhafi has vowed his country will burn if his opponents continue to defy him and sent jets to bomb his own people — the very people he calls rats and mice. His justice minister and diplomats around the world have quit in disgust, protesting the murder of hundreds, possibly thousands of innocent civilians.

Is it time at last, for the International Criminal Court to take steps to prosecute Libya’s demented dictator for alleged crimes against humanity?

“How can the international community stop this slaughter?” asks Errol Mendes, University of Ottawa professor and expert on the International Criminal Court where he served as a visiting lawyer.

One way is to make it clear that inevitably, Gadhafi — once named the “mad dog of the Middle East” — will face justice before the international court, he says.

“We have to be focused on how to save as many lives as possible and deal with the mental stability of this man and his sons and give them sufficient hard evidence that they cannot hold on,” says Mendes, author of a just published book, Peace and Justice at the International Criminal Court: A Court of Last Resort. “It is over.”

The international court doesn’t have authority to investigate Gadhafi’s alleged crimes because, not surprisingly, Libya did not sign the treaty called the Rome Statute that created the tribunal. (Burma, Iran, Sri Lanka as well as the United States and China have also not signed.)

But the United Nations Security Council could ask the international court’s prosecutor to investigate Gadhafi, says Richard Dicker, director of Human Rights Watch international justice program.

A second route to the international court allows an official of the Libyan government to ask the court to exercise its jurisdiction over Libya. It’s a bit tricky now that several dissenting Libyan ministers have already resigned. And going this way raises questions of who, now, represents the Libyan state.

The advantage of a Security Council request, says Dicker, who led Human Rights Watch campaign to establish the International Criminal Court, is that there is no legal question about its authority. “It’s incontrovertible,” he says

However, none of the five permanent members of the Security Council can use their vetoes to kill the resolution referring Libya to the court.

“The decision to do justice in Libya should be taken by the Libyan people,” the court’s chief prosecutor Luis Moreno-Ocampo said in a statement Wednesday.

Around the world human rights officials have condemned Gadhafi.

The UN High Commissioner for Human Rights, Navi Pillay raised the question of Gadhafi’s crimes against humanity, as did France’s top human rights official, François Zimeray. “The question is not if Gadhafi will fall, but when and at what human cost,” he told Reuters. He said the International Criminal Court was the only way to achieve justice.

Meanwhile, the International Crisis Group, headed by Louise Arbour, a former justice of the Supreme Court of Canada, has called on governments to immediately impose sanctions and freeze assets belonging to Gadhafi and his family, provide a safe haven to Libyan pilots who refuse to carry out orders to attack civilians, and cancel military contract to Libyan security forces.

‘We’ve got send a signal to Gadhafi and his sons that they are never going to come out of this okay,” says Mendes.

http://www.thestar.com/news/world/article/944591--bringing-gadhafi-to-justice

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சரி.. தொடர்ந்து சர்வதேச விவகாரங்களில் தலையீடு செய்யவேணும். சிங்களத்தை தவிர யாருக்கும் நாம் எதிரி இல்லை இல்லை .. என்ற தேய்ஞ்சு போண பழைய ரிக்கார்டை தூக்கி கடாசிவிட்டு.. உலகநாடுகளில் எதிர்பவர்/போராடுபவர்களின் திறம்/அறம் அறிந்து.. முன்னேறவேணும்

டிஸ்கி

இந்த ஒப்பீடு டெக்னாலாஜி(லிபியா- சிங்களம்) எந்த அளவுக்கு பயன் தரும் என்பது தெரியவில்லை..ஆனால் தொடர்ந்து முயற்சித்தால் பலன் உண்டு.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.