Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

.சர்வதேச விசாரணைஅவசியம் - அமெரிக்க செனற் சபையும் கோரிக்கை

Featured Replies

வியாழக்கிழமை, மார்ச் 3, 2011

இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் ஆகியன சுதந்திரமானதும் சுயாதீனமானதும் ஆக செயன்முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க செனற் சபை கோரி உள்ளது.

அமெரிக்க செனற்றர்களில் ஒருவரான ரொபேட் ஹசி செனற் சபையில் பிரேரணை ஒன்றை நேற்று சமர்ப்பித்தார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

நிபுணர்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த இந்தியா உதவ வேண்டும்! மனித உரிமைகள் கண்காணிப்பகம்

வன்னி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர்குழுவானது இம்மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அந்த அறிக்கை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா தலைமைதாங்க வேண்டுமெனவும் நிபுணர் குழுவின் அறிக்கையை அமுல்படுத்துமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி 'த ஏசியன் ஏஜ்' பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.

'மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல்கள் இந்தியா கண்திறப்பதற்கான ஓர் அழைப்பு' என்ற தலைப்பில் மீனாக்ஷி கங்குலி எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை தெரிவிக்க கடந்த வருடம் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தார். இதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் நிபுணர் குழுவுடன் ஒத்துழைக்கவும் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்தமாதம் நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், இச்சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறும் தன்மை இலங்கை தரப்பில் குறைவாக இருக்கின்றதென்ற எண்ணப்பாட்டை சாதாரண இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தனது பிரசைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக கண்டனம் தெரிவிப்பதற்கும் விசாரணைக்கு வலியுறுத்துவதற்குமான உரிமை இந்திய அரசுக்கு உள்ளது. அதே சமயம் இந்தியாவில் பாதிக்கப்பட்டோருக்கான நீதியையும் இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கை யுத்தமீறல்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அதற்கு ஆதரவாக இந்தியா செயற்படுவதும் அவசியமானது எனவும் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

ஜனவரி 22 ம் திகதி இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்தில் தமிழக மீனவர் ஜெயக்குமார் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னரும் இதே போன்று இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒரு மீனவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.

இச்சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலைகளை எழுப்பியிருந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா இதுபோன்ற தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையான தொனியில் கூறியிருந்தார். ஆனாலும் வழமைபோல் இச்சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை இலங்கைக் கடற்படை மறுப்பு தெரிவித்திருந்தது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதுவொன்றும் ஆச்சரியமான ஒன்றல்ல. தமது படைகளின் யுத்த மீறல்களையும் மனித உரிமை மீறல்களையும், அவை எவ்வித ஆதாரங்களைக் கொண்டிருந்தாலும் இலங்கை அரசு மறுத்தே வந்திருக்கிறது. 2009 ம் ஆண்டு யுத்தத்தின்போதும் இதுபோன்ற மறுப்புகளை அடிக்கடி வெளியிட்டு வந்தது.

போரின்போது யத்த பிரதேசத்திலிருந்த மக்கள் தொகை தொடர்பாகவும் கனரக ஆட்டிலறி குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட மக்கள் நிலை தொடர்பாகவும் தொடர்ந்தும் மறுப்பு அறிக்கைகளையே அது வழங்கி வந்தது.

2009 யுத்தம் தொடர்பாக ஒரு முறையான விசாணையை நடத்த சிறிலங்கா அரசு தவறிவிட்டதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் அமெரிக்க இராஜாங்க அமைச்சு குற்றம் சாட்டியிருந்தது.

இங்கிலாந்தின் சனல் 4 சிறிலங்கா படையினரின் யுத்த மீறல்கள் தொடர்பான காணொளிகளை வெளியிட்டபோதும் அவற்றையெல்லாம் போலியான காணொளிகள் என அரசு மறுத்திருந்தது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ் யுத்த மீறல்கள் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களைப் பெற்றிருந்தது. சரணடைந்த விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்த முக்கிய ஆதாரங்களாக இவை உள்ளன. 27வயது நிரம்பிய இசைப்பிரியாவின் படுகொலையும் இவற்றுள் ஒன்றாகும்.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2009 ஆண்டு யுத்தத்தின்போது யுத்த முன்னரங்கத்தில் எடுக்கப்பட்ட 200 வரையான புகைப்படங்களை ஆராய்ந்து வருகிறது. இப்புகைப்படங்களில் ஓர் அரசியற் துறை உறுப்பினர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதும் பின்னர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

யுத்தத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண் போராளிகளின் உடைகள் களையப்பட்டு உள்ளன. இது அவர்கள் மீது பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளாலும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனாலும் ஓரு சுயாதீனமான விசாரணையை சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் என நம்ப முடியாது. வழமைபோல் விசாரணைகள் நடைபெற்றுள்ளது எனக் காட்டுவதற்கான ஆணைக்குழுக்களை மட்டுமே அது நியமித்துள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னர் இதுபோன்று நியமிக்கப்பட்ட 9 ஆணைக்குழுக்களும் விசாரணைகளும் எவ்வித பயனையும் தரவில்லை. தற்போதைய ஜனாதிபதி ஆணைக்குழுவும் இதிலிருந்து மாறுபடும் என நம்ப முடியாது எனவும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={E4444E78-C064-492E-A904-AD540884A389}

இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் ஆகியன சுதந்திரமானதும் சுயாதீனமானதும் ஆக செயன்முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க செனற் சபை கோரி உள்ளது.

அமெரிக்க செனற்றர்களில் ஒருவரான ரொபேட் ஹசி செனற் சபையில் பிரேரணை ஒன்றை நேற்று சமர்ப்பித்தார்.

US Senate Resolution calls for accountability for Sri Lanka war crimes

[TamilNet, Thursday, 03 March 2011, 03:37 GMT]

United States Senate unanimously passed resolution S. Res. 84 introduced by Senator Casey which commended UN Secretary General for appointing a panel to advise UNSG on Sri Lanka's human rights accountability and called "on the Government of Sri Lanka, the international community, and the United Nations to establish an independent international accountability mechanism to look into reports of war crimes, crimes against humanity, and other human rights violations committed by both sides during and after the war in Sri Lanka and to make recommendations regarding accountability," as one of the four elements of the resolution.

http://tamilnet.com/art.html?catid=13&artid=33620

அமெரிக்கா... ஏதோ செய்யப் போகிறது

http://www.valampurii.com/online/viewnews.php?ID=16840

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த இந்தியா உதவ வேண்டும்! மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கெஞ்சுவது ...கூத்தாடுவது.... இவர்களால் தான் ஆகும்... போகும்.... என நினைப்பது மிக மிக கேவலமான செயல் ... எவனும் கை வைக்கும் முன்பு ரூம் போட்டு யோசிக்கவேணும்... கை வைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை உண்டாக வேண்டும் ....ஆள் பலத்தால் அல்ல! அறிவியல் பலத்தால்! அப்பத்தான் கொஞ்சமாவது மதிப்பார்கள்..

டிஸ்கி:

HiroshimaAtomicBomb_02.gif

அருவா(வாள்) நீ வீசினாலும் வெட்டும் நான் வீசினாலும் வெட்டும் ... இதுதான் இன்றைய தேவை...

மற்றபடி ஜனநாயகம் .. குனநாயகம் எல்லாம் டிஸ்யு பேப்பர்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.