Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த துயரமான நேரத்தில் தமிழீழ மக்களாகிய நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த துயரமான நேரத்தில் தமிழீழ மக்களாகிய நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்!!!

[sunday, 2011-03-13 04:50:25]

rudrakumarseithyg.jpg

ஹொன்சு10வையும் அதனை அடுத்துள்ள நகரங்களையும் 8.9 அளவிலான பூமிநடுக்கமும் கடல்கோளும் 2011 மார்ச் மாதம் 11ம் நாள் காலை கடுமையாக பாதித்துள்ளதை கண்டு தமிழீழ மக்களாகிய நாம் கவலையடைந்துள்ளோம். இந்த துயரமான நேரத்தில் நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்பதுடன் எம்மால் முடிந்த அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். உயிர்களையும் சொத்துகளையும் இழப்பதனால் ஏற்படும் துயரத்தை 2004ல் ஏற்பட்ட கடல்கோளையும் ஆண்டுக்கணக்கில் ஆயுதப்போரட்டத்தையும் அனுபவித்ததன் காரணமாக நாம் விளங்கிக்கொண்டுள்ளோம்.

யப்பானிய அரசாங்கமும் யப்பானிய மக்களும் எமக்கு தாராள மனத்துடன் செய்த உதவிகளை நாம் நன்றியுடன் நினைவு கூருகிறோம். யப்பானிய தொண்டு நிறுவனங்களுக்கு தம்மால் முடிந்த அளவு தாராளமாக உதவுமாறு நாம் தமிழீழ மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

Peace Winds Japan, Association for Aid and Relief Japan, JEN (Japanese Emergency NGO) ஆகிய நிறுவனங்கள் தமிழீழ மக்களுக்கு உதவி வருகின்றன. யப்பானிய அரசால் ஆரம்பிக்கப்பட்ட Japan Platform (JPF) ல் இந்த நிறுவனங்கள் அங்கத்தவர்களாக இருக்கின்றன. இவை இன்று பூமிநடுக்கத்தினாலும் கடல்கோளாலும் பாதிக்கப்பட்ட யப்பானிய மக்களுக்கு உதவுவதில் முன்னிற்கின்றன.

இந்த நிறுவனங்களை தொடர்பு கொள்வதற்கான தகவல்கள்:

Peace Winds Japan

Daini-Miyachu Bldg. 7F

3-8-37, Minamiaoyama,

Minato-ku, Tokyo, Japan

107-0062

Telephone: +81-3-6438-9401

Facsimile: +81-3-5786-7781

Email: meet@peace-winds.org

Website: http://www.peace-winds.org/

Donations: http://peacewindsamerica.org/

Association for Aid and Relief Japan

Address:5F, Mizuho Building,

2-12-2 Kamiosaki,

Shinagawa-ku, Tokyo, Japan 141-0021

Telephone: +81-3-5423-4511

Facsimile : +81-3-5423-4450

Email: aar@aarjapan.gr.jp

Website: http://www.aarjapan.gr.jp/english/index.html

Japan Emergency NGO (JEN)

Daini Tobundo Bldg. 7F, 2-16

Agebacho,Shinjuku-ku, Tokyo, Japan 162-0824

Telephone: +81-3-5225-9352

Facsimile: +81-3-5225-9357

Email: info@jen-npo.org

Website: http://www.jen-npo.org/en/index.html

Donations: http://www.jen-npo.org/en/involved/donate1.php

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

நன்றி - செய்தியிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லதொரு நடவடிக்கை..! :rolleyes:

சிறுதொகையேனும் உதவ விரும்புபவர்கள் உதவியுடன் ஈழமக்கள் சார்பிலான உதவி என்று குறிப்பிடுவது நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் இராஜ தந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

யப்பானுக்கு இரங்கலை தெரிவிப்பது, இராஜதந்திரம்.

மகிழ்ச்சியை இரகசியமாக கொண்டாட வேண்டும்.

விவேகமான செயல். கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டுவது தீமையாய் முடியும்.

ஜப்பான் ஒடி ஒடி சிறிலங்காவிற்கு உதவி செய்ய முக்கிய காரணம் ஜே ஆர் ஜெயவர்த்தனா. பவுத்த சமயமல்ல. 50 களில் உலக நாடுகளிலிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஜப்பானை மீண்டும் எங்களுடன் (உலகத்துடன்) இணைக்க வேண்டுமென இவர் ஆற்றிய உரை ஜப்பான் மக்கள் மக்கள் மத்தியில் மிக பிரபலமாம். 77 இல் ஜே ஆர் பதவிற்கு வந்ததும் ஜப்பான் அரசு இலவசமாக தொலைத் தொடர்பு வசதிகளை செய்து கொடுத்தது.

ஜேஆர் போட்ட சிறு விதை பெரும் விருட்சமாகி சிங்கள் மக்களுக்கு நன்மைகளை கொடுத்தது.

After joining the United National Party on its formation in 1946, he became Finance Minister in the island’s first Cabinet in 1947. He played a major role in re-admitting Japan to the world community at the San Francisco Conference.

நன்றி விக்கிபீடியா

Edited by thappili

நாடு கடந்த அரசுக்கு பாராட்டுக்கள்.

முடிந்தளவு தனிப்பட்ட ரீதியிலும், தமிழர் அமைப்புக்களும் எமக்கும் ஜப்பானுக்கும் இடையில் உறவை வளர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னா செய்தாரை உறுத்த அவர் நாண

நன்னயம் செய்துவிடல்

தமிழ் மக்களிற்கு செய்த கொடுமைக்ககாக யப்பான் வருத்தப்படுமளவிற்கு நன்மை செய்யுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.