Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராளிகளுடனான இறுதிக் கட்டப் போரில் இலங்கைக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கக் காரணமாகவிருந்த சூத்திரதாரியை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாராயணன் ஒரு தீவிர விடுதலைப் புலிகள் இயக்க எதிர்ப்பாளர்!

புதன், 16 மார்ச் 2011 16:05

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஒரு தீவிர தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி நாராயணன் மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் சென்னையில் இருந்த அமெரிக்கத் தூதரக கொன்ஸுலேட் ஜெனரலும், அதிகாரிகளும் இந்த முடிவுக்கு வந்திருந்தனர் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்திய சமாதானப் படை இருந்த காலத்திலும், வன்னி யுத்தத்தின் போதும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரே நாராயணன் ஆவார்.

இலங்கை யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பைக் கையாண்டவர்கள் இவரும், தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்தக் காலப்பகுதியில் இருவருக்கும் மேலதிக அதிகாரங்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாராயணன் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியின் ஒரு பாரம்பரிய புள்ளி என்றும், பிரதமர் அலுவலகத்தில் உள்ள கேரளா மாபியா என்றும் அமெரிக்க ராஜதந்திர கேபிளில் அவர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி ராஜதந்திர கேபிளில் ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வுச் சமூகத்தில் 40 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவரே நாராயணன்.

அதுமட்டுமன்றி அவர் காந்தி குடும்பத்தின் நீண்டகால விசுவாசி என்றும் அவர் பற்றி இந்த கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக முள்ளிவாய்காலில் இரத்த ஆறு ஓடுவதற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு தனித்துவமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share 0

tamilcnn

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68050

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70166

ஈழ தோழ்ர்களும் தாங்கள் வாழும் நாடுகளில் இந்த மலையாள பேக்கரிகளை புறக்கணிக்குக.. ^_^

முட்டைபபஸ்க்கான எளிய ..அதை விட எளிமையான செய்முறை இங்கிட்டு உள்ளது.. :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=82891

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுடனான இறுதிக் கட்டப் போரில் இலங்கைக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கக் காரணமாகவிருந்த சூத்திரதாரியை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ்

[Wednesday, 2011-03-16 14:37:09]

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட வன்னிப் போரில் யுத்தத்துக்கு இந்தியா ஆதரவளிக்க அன்றைய இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய நாராயணனே பிரதான காரணம் என்விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் நாராயணனை பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு கேரள மாபியா என்று வர்ணித்திருப்பதுடன், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய புள்ளியாகவும் சித்தரித்துள்ளது.ஷ

சோனியா காந்தி குடும்பத்தின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய விசுவாசியான அவர்தான் இலங்கையில் நடந்த இரத்தக்களறியைத் தடுப்பதில் இந்தியாவைத் தலையிட விடாமல் தடுத்ததாக இந்தியாவிலுள்ள அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீதான அவரது தீவிர எதிர்ப்புணர்வே அதற்கான பிரதான காரணம் என்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

seithy.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WikiLeaks: Narayanan in PMO's 'Keralite mafia'

New Delhi: The latest set of India-related cables released by whistle-blowing website WikiLeaks include some that have a potential to embarrass India's power elite.

A leaked cable released on March 15 discusses MK Narayanan's possibility of becoming the National Security Advisor (NSA) following JN Dixit's death. Narayanan, now Governor of West Bengal, was then the Acting NSA. The cable labelled "confidential", was cleared by the then US Ambassador to India David C Mulford.

http://ibnlive.in.com/news/wikileaks-narayanan-in-pmos-keralite-mafia/146013-3.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினவிரோத இந்தியாவின் குத்தகைக்காரர்களான நேருகுடும்ப எச்சசொச்சமான சோணியா காந்தியின் நேரடி வழிநடாத்தலிலேயே முள்ளிவாய்கால் அவலமும் அதற்குமுந்திய அவலங்களும் நடந்தேறியது எனும் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இதன் பங்குதாரர்களாக சிங்கள இனவாதமும், கருனாநிதி குடும்பமும் இருந்துள்ளது. திருக்குவளைக் கருனாநிதி, சோணியாகாந்தி, நாராயணன், சிவசங்கரமேனன் ஆகியோரையும் தமிழர்மீதான இனவழிப்பு நடவடிக்கைக்கான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தல்வேண்டுமெனும் கோரிக்கையுடன் புலம்பெயர் தமிழ்சமூகம் போராட்டத்தை விரிவுபடுத்தவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இந்தியா தமிழர்விரோததேசம் உன் பேரனுக்கும், பேரனின்பேரனுக்கும் இதையே சொல்.

இந்தியா தமிழர்விரோததேசம் உன் பேரனுக்கும், பேரனின்பேரனுக்கும் இதையே சொல்.

  • கருத்துக்கள உறவுகள்

நாராயணன் செய்த சூழ்ச்சியே புலிகள் தோற்கக் காரணம் – விக்கிலீக்ஸ் பரபரப்புத் தகவல்

விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு இந்தியா ஆதரவளிக்க இந்தியாவின் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனே பிரதான காரணம் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் நாராயணனை பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு கேரள மாபியா என்று வர்ணித்திருப்பதுடன் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய புள்ளியாகவும் சித்திரித்துள்ளது.

சோனியா காந்தி குடும்பத்தின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய விசுவாசியான அவர் தான் இலங்கையில் நடந்த இரத்தக் களரி யைத் தடுப்பதில் இந்தியாவைத் தலையிட விடாமல் செய்ததாக இந்தியாவிலுள்ள அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் மீதான அவரது தீவிர எதிர்ப்புணர்வே அதற்கு பிரதான காரணம் என்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை விடுதலைப்புலிகளுடன் அரசு யுத்தம் நடத்திக்கொண்டிருந்த வேளை, இலங்கைக்கு வந்திருந்த நாராயணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம் மானையாவது இந்தியாவிடம் ஒப்படைத்தால் வன்னியுத்தத்தில் இந்தியா தலையிடும் என கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.ndpfront.com/?p=17024

எமக்கு சோனியா குடும்பமும், நாராயணன் கோஷ்டியும் எதிரிகள் தாம். ஆனால் அதையே நாம் இந்தியா எமது எதிரியாகவோ இல்லை எமது வெறுப்பை அரசியல் ரீதியாகவோ காட்டுதல் தந்திரமாகாது.

இன்று இந்தியா மூலம் எமக்கு காரியம் ஆகவேண்டிய தேவைகள் உள்ளன. எமக்கு உரிமைகள் கிடைத்தால் மட்டுமே எமது இருப்பு தாயகத்தில் உறுதிசெய்யப்படும். அவை கிட்டும் வரை எமக்கு இந்தியா செய்த வரலாற்று துரோகங்களை அமத்தி "வாசிக்கவேண்டும்", அதற்குரிய காலம் கனிந்து வரும்வரை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடனான போரை நிறுத்த விரும்பாத இந்தியா – விக்கிலீஸ்!

Posted by admin On March 18th, 2011 at 1:45 pm / No Comments

2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் அரச படைக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின் போது போர்நிறுத்தம் செய்யுமாறும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத் தத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முக்கிய பங்காற்றியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் மூலம் வெளியான அமெரிக்க ராஜாங்க தகவல் பரிமாற்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

விக்கிலீக்ஸ் தகவல்களை இந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது. இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொதுமக்கள் பலி யாவது குறித்துக் கவலை தெரிவித்த இந்திய அரசு, அதே நேரத்தில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்வதை எதிர்க்கவில்லை என்று அமெரிக்கத் தகவல் பரிமாற்றத்தில் கூறப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை ஜனாதிபதியை அவரது மாளிகை யில் சந்தித்த அப்போதைய இந்திய வெளி யுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி, மனித உரிமைகள் மற்றும் சிவிலியன்கள் பாதுகாப் பை உறுதி செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்துடனும் தான் வரவில்லை என்று கூறியதாக அமெரிக்கத் தூதரிடம் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்பட்டிருக் கிறது.அதாவது, போர் தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கை மூலமே தெளிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. முகர்ஜி வெளியிட்ட அறிக் கையில், 23 ஆண்டு மோதலுக்குப் பிறகு இராணுவம் பெறுகின்ற வெற்றி இலங்கையின் வடக்கிலும் மற்றைய பகுதிகளிலும் சகஜ நிலை யை நிலைநாட்டுவதற்கு அரசியல் ரீதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று கூறியிருந்தார்.

மத்தியில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.கவின் நெருக்குதலால் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் போரைத் தற் காலிகமாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. அதன் பின் மற்றைய எல்லா நேரங்களி லுமே போர் தொடர்வதை இந்தியா தடுக்க வில்லை என்று கூறப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவருடன் அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலரும் தற்போ தைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவ்சங்கர் மேனன் சந்தித்தபோது, மோத லுக்கு தீர்வு காண்பதற்கான ஐ.நா. மன்றம் தனது பிரதிநிதியை அனுப்புவதை இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் போர் நிறுத்தத்திற்கும் இலங்கை அரசு தயாராக இல்லை என்றும் மேனன் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்காமல், குறைந்த பட்சம் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு இலங் கை அரசுக்கு இந்தியா யோசனை கூறியதாக சிவ்சங்கர் மேனன் அமெரிக்க அதிகாரியிடம் கூறியிருக்கிறார். அதேநேரத்தில் புலி களின் முக்கிய தலைவர்கள் யார், மற்றைய தலைவர்கள் யார் என் பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியும் எழுந்த தாக மேனன் கூறியிருக்கிறார்.

பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள அதேநேரத்தில், விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்தும் முரண் பட்ட தகவல்கள் வருவதாகவும் பிரபாகரனுக்காகப் பேசவல்லவர் யார் என்பது தெரியவில்லை என்றும், நிலைமையை பிரபாகரன் உணர்ந்திருக்கிறாரா? என்பது தெரியவில்லை. இந்தியாவில் தேர்தல் நடைபெறும் நிலையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடை பெற இந்தியா முன்முயற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் சாத்திய மில்லை என்றும் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு மே 6,7ஆம் திகதிகளில் இலங்கைக் கான பிரிட்டனின் சிறப்புத் தூதுவர் டேஸ் பிரவ்ன் இந்திய வெளி யுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோ சகர் எம்.கே.நாராயணனை சந்தித்தபோது, இலங்கை இராணு வம் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் நிலையில் உள்ளதால், இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்தாலும் போருக்குப்பிறகு தமிழ்மக்களுக்கு அர சியல் தீர்வுகிடைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை சம்மதிக்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் இருந்ததாக பிரிட்டிஷ் தூதரக அதிகாரி அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா பாதுகாப்பு மன்ற கவுன்சில் கூட்ட நிகழ்ச்சிநிரலில் இலங்கைப்பிரச்சினையைச் சேர்த்து அறிக்கை வெளியிட்டால்- இலங்கைக்கு எதிராக ஐ.நா. குரல் கொடுத்தால், அது எதிர்விளைவு களைத்தான் ஏற்படுத்தும் என பிரிட்டன் சிறப்புத்தூதுவரிடம் சிவ் சங்கர் மேனனும் நாராயணனும் கூறினர்.ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அல்லது மனித உரிமை கவுன் சில் மூலம் அழுத்தம் கொடுப்பதைவிட ராஜாங்க ரீதியான நட வடிக்கைகளே பயனுள்ளதாக இருக்கும் என்று சிவ்சங்கர் மே னன் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் கூறியதாகவும் விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

saritham

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, மலையாள பயங்கரவாதிகளின் வம்சமே இல்லாது போவதுதான் மனித குலம் இந்த நூற்றாண்டில் பெறக்கூடிய அதியுயர் மனிதாபிமான நன்மையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் இருப்பிடத்தையே.... கேள்விக் குறியாக்கிய யப்பானின், யசூசி அகசாக்கியின் நாட்டுக்கு நடந்த கேவலத்தை விட....

நாராயணனின் நாட்டுக்கு, இதை விட கேவலம் கெட்டு அழிந்து போகவேண்டும்.

அணு மின் நிலையம் கல்பாக்கம் என்னும் தமிழர் பகுதியிலும் இருக்கு.

அந்த, அணுமின் நிலையத்தை மற்ற மாநிலங்களில் அமைக்காமல்....

இளிச்ச வாயன் தமிழன் நிலத்தில் அமைத்த போதே..... இந்தியாவின் கரிசனை தமிழன் மேல் எப்படி உள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஈழத்தமிழரின் இருப்பிடத்தையே.... கேள்விக் குறியாக்கிய யப்பானின், யசூசி அகசாக்கியின் நாட்டுக்கு நடந்த கேவலத்தை விட....

நாராயணனின் நாட்டுக்கு, இதை விட கேவலம் கெட்டு அழிந்து போகவேண்டும்.

இதுவே உணர்வுள்ள அனைத்து தமிழரின் பிரார்த்தையாகவும் உள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் இதில் அடங்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.