Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012இல் உலகம் அழியப்போகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2012இல் உலகம் அழியப்போகிறதா?

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011 15:43 இளைய அப்துல்லாஹ்

world-2012"என்ன 2012 இல் உலகம் அழியப்போகுதாம்" என்று சுவிற்சர்லாந்தில் இருந்து ஒரு நேயர் எனது ரீ.வி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின்போது கேட்டார்.

இது பெரும் சிக்கலான பிரச்சனை. இப்பொழுது தமிழ் ஆட்கள் மத்தியில் சுற்றி வருகின்ற ஆயிரம் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. 2012 இல் உலகம் அழியுமா?

திருகோணமலையிலும் இதுதான் கதை. பேர்லின் என்று எல்லா இடமும் இதுதான் கதை.

ஏன் இந்தக்கதை வந்தது என்று யோசிக்கின்றேன். தேடியபொழுது கிடைத்தது. மாயா என்கின்ற இனக்குழுவினரின் கலண்டர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு பிறகு எந்தவிதமான உலகத்தகவல்களும் இல்லை என்ற செய்தி.

இந்த கலண்டருக்கு TUN என்று பெயரிட்டிருக்கிறார்கள். மாயா கலண்டர் சூரிய, சந்திர கிரகணம் முதல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்கூட்டிய விபரங்களை பதிந்து வைத்திருக்கிறதாம்.

2011.12.21 இல் உலகில் பெரிய மாற்றங்கள் வரும் என்று சீனர்களும் நம்புவதாக சொல்கின்றார்கள். அன்று கிரகங்கள் அனைத்தும் ஒரே கோட்டில் வருகின்றது என்றும் வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் 200 மில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்டு 796 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை கொட்டிய “2012” திரைப்படம்தான்.

ஹொலிவுட் திரைப்படங்கள் எப்பொழுதும் அதீத புனைவுக்கும் பிரமாண்டத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும்.

பிரமாண்டம் என்பதை “அவதாரில்” பார்த்தோம். அதற்கு பிறகு வருவது இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமே என்றுவிட்டு “2012” ஐ டைரக்ரர் றோலண்ட் எமிறிச் கொண்டு வந்தார்.

அது மனிதர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு விடயத்தை முன்வைத்து கடந்த டிசம்பரில் கொணடு வந்தார்.

உண்மையில் இந்தப்படம் 2013 ஜனவரியில் வந்திருந்தால் படுதோல்வி அடைந்திருக்கும். ஏனெனில் இல்லாத ஒன்றை கேட்பதற்கு மக்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்கும். அதனால் ஒரு வருடத்திற்கு முந்தி 2009 நவம்பரில் வெளியிட்டு விட்டனர் தயாரிப்பாளர்கள் கெட்டிக்காரர்கள்.

அமெரிக்காவின் பூர்வ குடிகளான மாயாக்களை, சிறப்பான கலாச்சாரத்தை பேணிவாழ்ந்த மக்களை ஸ்பெயினின் காலணி ஆதிக்ககாரர்கள் கொன்றார்கள். போரில் சிறந்த மாயாக்களை எதிர்கொள்ள முடியாத நாடுபிடிக்கின்ற கொள்ளைக்காரர்கள் ஸ்பெயினர்கள் அம்பை நோய்க்கிருமிகள் கொண்ட போர்வையை கொடுத்து - கொத்து கொத்தாக கொன்று தீர்த்தார்கள். அவர்களால் அழிந்தது ஒரு இனம்.

அவர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் எழுதிவைத்த, அவர்கள் பாவித்த கலண்டர்தான் மாயா கலண்டர். 2012 திரைப்படம் உலகம் முழுவதும் ஒரு கற்பனை பீதியை விசிறிவிட்டு போனதுக்கு மாயா இனத்தவரின் கலண்டர் தான் மூலம்.

ஆனால் 2012 இற்கு பிறகு அவர்கள் ஏன் வேறு தகவல்களை செய்தியை எழுதவில்லை என்று கேட்பவர்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

சரி இந்தக்கட்டுரையை எழுதி அரைவாசியை வைத்துவிட்டு வெள்ளிக்கிழமை பள்ளி வாசலுக்கு ஜூம்மா தொழுகைக்கு போனேன். அங்கு பள்ளியில் மௌலவி குர்ஆனில் உலக முடிவுநாளின் அடையாளங்கள் பற்றித்தான் பேசினார்.

என்னடா இது போகும் இடமெல்லாம் உலகம் அழியப்போகின்றது உலகம் அழியப்போகின்றது என்கிறார்களே.

மறுநாளின் நம்பிக்கை என்பது குர்ஆனில் முக்கியமான விடயங்களில் ஒன்றாகும் முஹம்மது நபிகளார் சொல்கின்ற உலக முடிவு நாள் பற்றிய குறிப்புகளில்

 பெற்ற தாயை கவனிக்க கடமைப்பட்ட ஆண் பிள்ளைகள் தாயை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். அதனால் தாய் தனது மகளை சார்ந்து மகளின் தயவில் வாழும் நிலை ஏற்பட்டால்…(ஏற்பட்டிருக்கின்றது.)

 வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது…(ஆகியிருக்கின்றார்கள்).

 குடிசைகள் திடீர் திடீரென்று கோபுரமாக மாறினால்…(மாறியிருக்கின்றது)

 உலகில் விபச்சாரமும் மதுவும் பெருகினால்…

 தகுதியற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதும் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் …(நடக்கின்றது)

 பாலைவனங்கள் சோலையானால்…(ஆம்)

 காலம் சுருங்கிவிடும் (முஹமது நபிகளார் தான் வாழ்ந்த காலத்தை உதாரணமாக சொல்லும் போது அதாவது இன்றைக்கு 1432 வருடத்திற்கு முன்பு “(இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். இன்றைய ஒருநாள் அன்று ஒருமணிநேரம் போல ஆகிவிடும். ஒரு மணி என்பது ஒரு வினாடி போன்று ஆகும்..(நடக்கிறது)

 கொலைகள் அதிகரிப்பதுவும்…(ஆம்)

 நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தால்…

 மனிதர்கள் பள்ளிவாசல்களை காட்டி என்னுடையது பெரிதா உன்னுடையது பெரிதா என்று சொல்லி பெருமையடிப்பது….(உண்மைதான்)

 கடைகள் பெருகுவது….(பெருகி விட்டது)

 பெண்களின் எண்ணிக்கை உலகத்தில் அதிகரித்தல்..

 ஆடை அணிந்தும் நிர்வாணமாக தோற்றமளிக்கும் பெண்கள் உலகத்தில் தோன்றுவது…(உண்மைதானே)

 பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டுவது(அரசியல்வாதிகள் போன்றோர்) (திரட்டுகின்றார்கள்)

 தற்கொலை அதிகரித்தல்..(அதிகரித்திருக்கின்றது)

 தான் தான் இறைதூதர் என்றும் நபி என்றும் பொய் சொல்பவர்கள் அதிகரித்தல்….(மிக அதிகரித்து விட்டார்கள்)

முஹம்மது நபியவர்கள் உலகத்தின் முக்கியமான தீர்க்கதரசி. அவர் இந்த உலகத்தில் வாழ்ந்தவர். அவர் மரணித்து 1400 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அவரது தீர்க்க தரிசனங்கள் சத்தியமானவையாக இருக்கின்றன.

மேற்சொன்னவைகள் நடந்தால் உலக முடிவுநாள் வரும் என்று நபிகளார் சொன்னார்கள். ஆனால் உலக முடிவுநாள் என்பது திடீரென்று வந்துவிழும் ஒன்றல்ல. யாராலும் அறியமுடியாதவாறு அது மறைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உலகத்தில் மரணமும் அழிவும் ஏதோ ஒருவகையில் எம்மை துரத்திக்கொண்டிருக்கின்றன.

அவுஸ்ரேலியா என்ற எழில்மிகுந்த நாடு இன்று சந்தித்திருக்கும் அழிவு மனதை பதட்டமடைய செய்திருக்கின்றது. எனது நண்பன் அவுஸ்ரேலியாவிலிருந்து துடித்துக்கொண்டிருக்கின்றார். தனது வாழ்நாளில் இப்படியொரு பென்னம்பெரிய வெள்ளத்தை சந்தித்திருக்கவில்லை என்கிறான். வீடுகள் அரைவாசிக்குமேல் வெள்ளம் மூடிய அவலம்.

இருந்ததை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆடுகள்,மாடுகள், குதிரைகள் என்று எல்லாமே பிரிஸ்பேனில் கண்ணுக்கு முன்னால் வெள்ளம் கொண்டுபோனதை கண்டார்கள்.

அவர்களின் வாழ்வாதாரங்கள் எல்லாமே தண்ணீரில் அள்ளுண்டு போய்விட்டன. பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த மக்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள்.

BMW கார்கள் பென்ஸ் கார்கள் எல்லாமே நடு வெள்ளத்தில் கண்ணுக்கு முன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன. மக்கள் கார்களுக்கு உள்ளேயிருந்து வெள்ளத்தினால் மரணமானார்கள். வசதி படைத்த நாட்டில் கூட மனிதரை காப்பாற்ற முடியாமல் இயற்கை துவசம் செய்து போட்டிருக்கின்றது.

குயின்ஸ்லாந்து தண்ணீரில் அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றது. சுனாமிதான் மனிதர்களை கொன்று குவிக்கும் என்றில்லை. அல்ஜசீரா தொலைக்காட்சி இந்த பெருவெள்ளத்திற்கு Inland Tsunami என்றுதான் பெயர் வைத்திருக்கின்றது.

வீடுகளுக்கு கூரையளவிற்கு வெள்ளம். ஹெலிகொப்ரர்களுக்கு தங்களது சேட்டுக்களை கழட்டி உயிர்பிச்சை கேட்டுக்கொண்டிருந்தனர் வெள்ளைக்காரர்கள்.

றோட்டுகளில் எல்லா திசைகளிலும் வெள்ளம். மண்சரிவு பாதைகள் எல்லாமே மூடி ஒன்றுமே தெரியாத அளவுக்கு மறைந்திருந்தன எல்லாம். கார்கள் வழுக்கி ஓடும் பாதைகள் எல்லாம் உடைந்து நொருங்கி இருந்தன. பாலங்கள் எல்லாம் உடைந்துவிட்டன.

குயின்ஸ்லாந்து அவுஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய நகரம் வெள்ளக்காடாய் கிடக்கிறது. 6500 நகர வீடுகளை வெள்ளம் முழுமையாக மூடியது.150,000.00 மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள். இந்த பெரு வெள்ளத்தில் இருந்து மீள இன்னும் எத்தனை நாட்கள் எடுக்குமென்று ஏங்கிக்கொண்டிருக்கின்றனர் மக்கள். இது பேரழிவுதானே. போதாதற்கு இப்பொழுது புயல்காற்று வேறு அடித்து நொருக்குகின்றது. Emarald, Rockhampton, Bundaberg, Theodore,St.George போன்ற இடங்கள் நாசமாகி விட்டன வெள்ளத்தால். ஓன்றும் செய்ய முடியாது மக்கள் தவிக்கின்றனர். இது உலகத்தில் அழிவுதானே.

மட்டக்களப்பு, அம்பாறை மக்களுக்கு வந்த வெள்ளம், அழிவு தாங்க முடியாதது. இனி எப்படி அவர்கள் மீண்டு வருவார்கள். சுனாமிக்கு, யுத்தத்திற்கு முகம் கொடுத்த அந்த மக்கள் மீண்டு வருவதற்கு முன்பு இன்த பேரழிவை எப்படி தாங்குவார்கள். காலம் காலமாக வடக்கு கிழக்கு மக்கள் என்ன பாவம் செய்தார்கள் அழிவும் அவர்களோடு தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றதே. முப்பது வருடம் அகதி வாழ்க்கை , பெரும் யுத்தம் எல்லாவற்றையும் இழந்த வாழ்வு, பெரும் சுனாமி, இப்பொழுது மீண்டும் வெள்ள அழிவு.

மக்களை நினைத்து மனம் கலங்குகின்றது. பேரழிவிலிருந்து எமது மக்களுக்கு விடிவே இல்லையா? அதில் “பிச்சை எடுக்குதாம் பெருமாள் அதை புடுங்கிச்சாம் அனுமார்” என்று பாவப்பட்ட மக்களுக்கு வருகின்ற உணவுப்பொருட்களிலிருந்து எல்லா நிவாரணப்பொருட்களையும் மக்களுக்கு போகவிடாமல் அதிகாரிகள் தங்கள் வாயில் போட்டுக்கொள்கிறார்களே. இது எவ்வளவு பெரிய அனியாயம்.

ஏழை மக்களின், வெள்ளத்தில் அழுந்தும் வறிய மக்களின் பொருட்களை அபகரிக்க அந்த கல் நெஞ்சக்காரர்களுக்கு எப்படி மனது வருகின்றது. அந்தப்பொருட்களை விற்று எடுக்கும் பணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தருமா?

அவர்களது பிள்ளை குட்டிகள் சந்தோசமாக வாழுமா? ஊழல் பொருள் பணமல்லவா அது? அது மக்களின் பணமல்லவா இது தெரியாதா அந்த ஊழல் அதிகாரிகளுக்கு இந்த அழிவிலிருந்து மக்கள் மீண்டு வரப்போகின்றார்கள். இங்கு ருனீசியாவில் இருந்து எகிப்து வரை பெரும் போராட்டம். மக்கள் வீதியில் இறங்கி நிற்கின்றார்கள் உணவு, தண்ணியில்லாமல் போராடுகின்றார்கள் இதுவரை எகிப்த்தில் 800பேர்வரை இந்த போராட்டத்தில் செத்துப்போனார்கள்.

உரிமை வேண்டிய போராட்டம் ஊழல்வாதிகளை அகற்ற போராட்டம். இப்படி உலகம் முழுவதும் போராட்டமும் மரணமும் அழிவும் கலந்துகொண்டே இருக்கும் சூழ்நிலையில் உலகம் அழியப்போகின்றது ஒரு கூட்டம் கொடிபிடிக்கின்றது.

இன்னுமொருகூட்டம் தங்கள் மத்தியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்கின்றது.

மனிதன் மனிதனாக வாழமுடியாமல் உலகம் முழுவதும் நாயோட்டமும் அந்தர பாச்சலுமாக ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் வாழ்வு என்பது இப்பொழுது பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

உலகத்திற்கு ஏன் தனது ஆத்மாவுக்கு நேர்மையாளனாக இருப்பதே ஒவ்வொரு மனிதனுக்கும் முன் உள்ள பெரும் சவால்.

அதனை செய்தாலே உலகம் தப்பித்துவிடும். பேராசை மனிதனை துரத்திக்கொண்டிருக்கின்றது. மற்றவனை கொன்று தன்வாயில் போட அரசன்முதல் ஆண்டிவரை யோசித்துக்கொண்டிருக்கின்றான் மனிதனின் பேராசையே அவனது அழிவிற்கு காரணம்.

உலகம்2012 ல் அழியப்போகின்றது என்பதெல்லாம் கட்டுக்கதை. அப்படி ஒன்றும் நடக்காது 2013 இல் நாமெல்லாம் இருப்போம் பயப்படாதீர்கள்.

- இளைய அப்துல்லாஹ்

நன்றி - ஈழ நேசன்

http://www.youtube.com/watch?v=-KGg0BWFb-4

http://www.youtube.com/watch?v=w_TYkN29OZ4&feature=related

http://www.youtube.com/watch?v=H7wc77WX1h8&feature=related

http://www.youtube.com/watch?v=hD5_1xA6c8o&feature=related

http://www.youtube.com/watch?v=T05V6sLxlEk&feature=related

Sorry - The sixth part is not available yet... Unfortunately, the sixth part is going to be the actual thing either taking place in the future and will/shall be documented as the 6th part, if in case the story does become true indeed.

I am sure that you understood my point. In other words, you have to wait till the 2012 time to come.

  • கருத்துக்கள உறவுகள்

2012-ல் உலகம் அழியுமா? – இந்திய விஞ்ஞானி விளக்கம்

அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள்.

2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும்.

இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

1. மாயன் காலண்டர்:

மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் காலண்டரில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.

2. சூரியப் புயல்கள்

சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.

3. அணு சிதைவு

ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் உலகின் பெரிய மூலக்கூறு உந்து எந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். 27 கிலோ மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் வைத்து அணுக்களை ஒன்றிணைத்து வெடிக்க வைப்பது திட்டம். எதற்காக இது? உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள இந்த சோதனையாம். 2012-ல் இந்த சோதனை நடக்கிறதாம். அப்படி நடந்தால் இந்த பூமியே நொறுங்கிவிடுமாம்.

4. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது…

விஞ்ஞானிகள் கூற்று ஒரு பக்கமிருந்தாலும், திரு விவிலிய நூலில் உலகம் (2012-ல் என்று குறிப்பிடப்படவில்லை) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும் சாத்தானுக்கும் கடைசி யுத்தம் (Armageddon) நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள். யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதித் தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.

இதே கருத்தை சீனத்து நூல் ஒன்றும், சில இந்து புராண நூல்களும் கூட சொல்கின்றனவாம்.

5. சூப்பர் வல்கனோ

இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றில் வாயில் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 650000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப் பார்த்தால் இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்!

6. கணிதவியல் அடிப்படையில்…

அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.

7. புவியின் காந்தப் புலம்

வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப் புலம் இருப்பது தெரிந்திருக்கும். இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம்.

-இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.

ஆனால் நமது இந்திய விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

இதோ ஒரு பாஸிடிவ் பதில்:

சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள், மேலே கூறப்பட்ட 7 காரணங்களையுமே உடான்ஸ் என்கிறார்.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? அல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.

விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவதுபோல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது.

உலக மக்களின் தேவைக்காக சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்றும் முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே மின்சாரத்திற்காகவோ, குடிநீருக்காகவோ எதிர்காலத்தில் பயப்படவேண்டிய அவசியம் இருக்காது.

ஒரு மனித உடலின் செல்லில் இருந்து அல்லது மிருகத்தின் ஒரு செல் அணுவில் இருந்து குளோனிங் முறை செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகள் சோதனையாக மட்டுமே உள்ளது. இதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். ஆகவே இது ஆய்வுடன் நின்று விட்டது.

பூமி வெப்பமாவதை தடுக்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக மாசு கட்டுப்பாடு செய்து அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்…” என்றார்.

நாமும்.. சாதகமானதையே நம்புவோமே!

source:என்வழி

நல்லதொரு ஆய்வு நுணாவிலான். திரு.பி.எம். ஐயம்பெருமாளின் கருத்து ஒன்றும் புதிதானது அல்ல. அவர் தனது கருத்தை வேதங்களின் அடிப்படையில் இருந்து எடுத்திருக்கின்றார். வேதங்களில் பூமியின் காலத்தை நான்கு யுகங்களாகப் பிரித்து இருக்கின்றார்கள். அவை முறையே

சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் ஆகும். கலியுகம் 432 000 வருடங்கள் நீடிக்கும். கலியுகம் இப்போது தான் ஆரம்பித்து இருக்கின்றது. இது தான் அவரது 450 கோடி வருடக் கணக்கு.

மற்றும் படி உலகம் பல தடவை அழிந்திருக்கின்றது.ஆனால் அது மீண்டும், மீண்டும் புதுத் தென்புடன் எழுந்திருக்கின்றது. புதிதாகத் தோன்றும் உலகங்கள், என்றும் பழையதை விடச் சிறந்தவையாகவே அமைந்திருக்கின்றன. அது தான் இயற்கையின் நியதி.

நாங்கள் அதைத் தடுக்க எங்களால் ஆனவற்றைச் செய்யலாம். நீங்கள் கூறுவது போல மரங்களை நடுவோம். ஆனால் பூமியின் வயதுக்கணிப்பு வருடங்களில் இல்லை. வருடங்கள் நாமே உருவாக்கியவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.