Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவுக்கு கருணாநிதி மறைமுக அழைப்ப

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விரட்டப்பட்டோரே, துரத்தப்பட்டோரே வருக, வருக-வைகோவுக்கு கருணாநிதி மறைமுக அழைப்ப

செவ்வாய்க்கிழமை, மார்ச் 22, 2011, 8:41[iST] A A A

Free Newsletter Sign up

Ads by Google

Call Sri Lanka 1p/min VectoneMobile.co.uk/FreeSim

Call for only 1p/min and get Free texts to Sri Lanka every day!

சென்னை: விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்-

என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக என்று முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் விடுத்துள்ள இந்த அழைப்பு மதிமுகவினருக்கும், வைகோவுக்கும்தான் என்று அரசியல் அரங்கில் வர்ணிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திரஜித்தனைக் காணவில்லை!

தேர்தல் களம் புகுந்திட பல்வேறு கட்சிகளின் பாசறைகள் ஏறத்தாழ தயார் நிலையில் அமைக்கப்பட்டுவிட்டன. எதிர்வரிசையில் நிற்கக்கூடிய அணி தேர்ப்புரவி ஆட்பெரும் படையை உற்றுப் பார்க்கிறேன்.

எதிர்வரிசையில் இந்திரஜித்தனைக்காண முடியாத காரணத்தை உணர்ந்து கொண்டவுடன்- களத்தில் அந்த யோசனைக்கு இடமளிப்பது நமது குறியை குலைத்துவிடும் என்பதால் அதைப்பற்றி அதிகமாக கவலைப்படாமல், ஒருசில நிமிடங்கள் அதுபற்றிய சிந்தனையிலே ஈடுபட்டேன்.

5000 ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்ட திராவிட உணர்வு பட்டுப்போகாமல் காப்பாற்றி வந்த பெரியாரெனும் பேருருவில்- பிரிவுக்கணைகள் புகுந்து- இரு இயக்கமானோம். அவற்றில் ஓர் இயக்கம் அண்ணா தலைமையில் இன உணர்வு பகுத்தறிவு இயக்கமாகவும்-பிறிதொரு இயக்கம் பகுத்தறிவு கவலையின்றி; ஆனால் பண்பாடு காத்திடும் இயக்கமாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையிலும் இயங்கிய ஏற்றமிகு நிலைகண்டு- அதன் எழிலை குறைத்திட எத்தனையோ சதிகள், சாகசங்கள்! அத்தனைக்கும் ஈடுகொடுத்து ஒன்றை ஒன்றுவென்றும்-ஒன்றால் ஒன்று வீழ்ந்தும்- அவ்விரு திராவிட இயக்கங்களும் தேசத்தை ஆளும் சக்தியாக செழித்து வளர்ந்தது கண்டு- அவ்விரண்டையும் அழித்தொழிக்க ஐதீகப்படை திரண்டது.

வலை பின்னத் தொடங்கிய சிலந்திகள்

இரு படைகளும் ஒரு படையாய் இருந்து- செறு பகை வீழ்த்திட அணி வகுப்போம் வாரீர் என்று வடக்கிருந்து பறந்து வந்த சமரச புறாவையும்-அதன் சிறகொடித்து விரட்டிவிட்டனர் சதிகாரர்கள். அதன்பிறகும் அமைதியில்லை-சகோதர யுத்தம் தொடரட்டுமென்றும்-அப்போதுதான் சர்க்கரை தம் வாய்க்கு நிறைய கிடைக்குமென்றும் எண்ணியோர் கண்ணியம் துறந்த காரியத்தில் ஈடுபட்டதால்-திண்ணியராம் திராவிட தலைவர்கள் உருவாக்கிய இயக்கம், சிதைந்து சிதறுண்டு போக சிலந்திகள் வலைபின்னத்தொடங்கின.

அந்த வலையில் சிக்காத இயக்கம்தான் அண்ணா உருவாக்கிய தி.மு.க. எனும் இந்த தீரர்கள் மிகு இயக்கம். அதனால்தான் வலை அறுந்திடவும் இல்லை-விலை போகவும் இல்லை-நிலை குலையாத நேர்மை, நியாயம், நீதி, உண்மை, உறுதி, வாய்மை அனைத்தும் கொண்டு வலிமை சேர் இயக்கமாக அறப்போர் வாள் தூக்கி அணி வகுப்பில் முந்தி நிற்கிறது.

நம் வரிசையினர் என்று போற்றுவோம்

எந்தவொரு இயக்கமும் ஜனநாயக வழித்தடத்தில் தேர்தலை சந்திக்க களம் இறங்கிவிட்டால்- ஜனநாயகத்தை கட்டிக்காக்க வேண்டிய பொதுமக்கள் மாத்திரமல்லாமல், அந்த பொதுமக்களிடத்திலே- தமது கட்சிக்காக ஆதரவு திரட்டக்கூடிய தொண்டர்கள், தோழர்கள் அணி வகுத்துக் குவிந்திடுவது இயல்பேயாகும். அவர்கள் எந்த வரிசையினராயினும் நம் வரிசையினர் என்றே போற்றிப்புகழ்வோம்.

எதிரெதிர் அணியிலே அவர்கள் நிற்க நேரிட்டாலும் அவர்களும், நாமும் சேர்ந்து ஜனநாயக கோவில் திருப்பணியை நடத்தவே- நடத்தி முடிக்கவே- அதில் எழிலும் ஏற்றமும் கண்டு களிக்கவே- நாம் சேர்ந்துள்ளோம் இந்த இயக்கத்தில் என்ற நினைப்போடு பணியாற்றினால் மாண்பு காத்திட- மனித நேயம் போற்றிட-நாம் பிறந்த மண்ணின் புகழ் பெருக்கிட-நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டவர்களாவோம்.

நம் வியர்வையால் கிடைக்கும் வெற்றியைப்போற்றிடவும்- நமது அயர்வினால் அதனை விடுத்து அதற்காக ஜனநாயக மாண்பினையே தாக்கிடவுமான நிலைக்கு நம்மை நாமே தள்ளிக் கொள்ளாமல் இருக்கத்தான்- காற்றடிக்கும் நேரத்திலேயே பதர் போக்கி-பயன் விளைக்கும் தானிய மணிகளை குவித்து வைத்ததுபோல் நமது படையின் வீரர்களை அணிவகுத்து வைத்திருக்கிறோம்.

சோடை போகாத படை:

சோர்வறியாத படை - சோடை போகாத படை - சொர்க்கம் அழைக்கிறது வா என்றாலும், அதில் சொக்கிப்போய் சொன்னது ஒன்று செய்வது ஒன்றாக - போரிடுவது போன் போலிப்படையல்ல இப்படை; "இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?'' என நம் அண்ணா அடிக்கடி சொல்வாரே பெரியாரை விட்டுப்பிரியாமல் இருந்திருந்தால்-இடையில் இப்படை பெறும் வெற்றிதான் இமாலய வெற்றியாகும்- இமாலயத்தை வளைக்கும் வெற்றியாகும்.

சிதறிப் போன தம்பிமார்:

எனினும் "என் தலைவர் இருந்த நாற்காலி காலியாகவே இருக்கிறது'' என மொழிந்து- பெரியாரின் தொண்டனாக- அவரின் சீடனாக-அவரின் கொள்கை நாதமாக விளங்கிய அண்ணா-நமையெல்லாம் ஒருங்கிணைத்து-பொருதடக்கை வாள் கொடுத்து-"ஜனநாயக அறப்போரில் வென்றிடுக தம்பிகாள்!'' என்று அனுப்பி வைத்தார். அவர்களில் ஓரிரு தம்பிமார்கள் எங்கெங்கோ சிதறிப்போயினர் என்றாலும்- அங்கெல்லாம் அலைந்து திரிந்து அவர்களையும் ஒன்றிணைக்க- அரும்பாடுபட்டவனின் கரம்தான் இந்தக் கரம்.

சேர்ந்து சுவைப்போம் வா:

இந்தக்கரம் தழுவும் உணர்விலே கட்டுண்டு-வாரீர் அனைவரும் ஒருங்கிணைந்து களம் காண்போம் என்றழைக்கும் வேளை இது! திராவிடர்கள் நெல்லிக்காய் மூட்டை என எதிரிகள் துள்ளிக்குதிக்கும் நிலைதனை மாய்ப்போம். விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- படை பலம் போதாது என்பதால் அல்ல! இருக்கின்ற படை இன்னும் வலிமையாய்-உறுதியாய்- நிச்சயம் வாகை சூடுவதாய் அமைய வேண்டும் என்பதற்காக! என்னரும் உடன்பிறப்புக்காள்! என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக என்று முதல்வர் எழுதியுள்ளார்.

அதிமுக அணியிலிருந்து துரத்தப்பட்டு பெரும் அவமானத்திற்குள்ளாகியுள்ள மதிமுகவினரையும், வைகோவையும் திமுக அணிக்கு ஆதரவாக திரும்புமாறு மறைமுகமாக குறிப்பிட்டுத்தான் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எங்கள் கூட்டணியில் வைகோ இணைய வேண்டும்-பாஜக

பாஜக கூட்டணிக்கு வைகோ வந்தால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

யானை இளைத்தால் பக்கத்தில் பூனை வந்து 'ஹவ் ஆர் யூ' என்று கேட்குமாம். அந்த வகையில் வைகோவை தங்கள் கூட்டணிக்கு அழைத்துள்ளது பாஜக.

தேர்தலில் மதிமுக பங்கேற்க வேண்டும்-திருமாவளவன்:

இந் நிலையில் சட்டமன்ற தேர்தலில் மதிமுக பங்கேற்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாகவும், தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அளவுக்கு மதிமுகவை நெட்டித்தள்ளியது அதிமுகவின் நம்பிக்கைத்துரோகமும் நன்றி உணர்வில்லா பண்புமே ஆகும்.

அதிமுகவுடன் கூட்டணிவைத்துக்கொண்ட ஒவ்வொரு கட்சியுமே இத்தகைய அவமதிப்புக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது என்பது உலகறிந்த உண்மை. கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கும் இத்தகைய நம்பிக்கைத்துரோகத்தை அதிமுக செய்தது. அதிமுகவுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி உறவானது முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்த ஒரு கூடா நட்பு என்பதை மதிமுக உணரவேண்டும்.

ஈழம் கூடாது என்பதுடன் புலிகளுக்கு தடை விதிக்கக்காரணம் நான்தான் என்று வெளிப்படையாக அறிவிக்கும் ஜெயலலிதா, பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்கவேண்டும் என்று சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றியவர்.

தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் இந்த முடிவு வைகோவின் தன்மானத்தைப்பாதுகாக்கும் என்றாலும் கட்சியையும் தொண்டர்களையும் பாதுகாக்குமா? என்பது கேள்விக்குறியே. அதிமுக தலைமை இப்படி பழிவாங்கியிருப்பது கடைசி மனிதனாலும் சகித்துக்கொள்ளஇயலாததாக உள்ளது. இந்தநிலையில் மதிமுக தொண்டர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

எனவே தொண்டர்களின் உணர்வுகளை மதித்து நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாடம் புகட்டும் வகையில் தேர்தலை மதிமுக சந்திக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகளின் விருப்பமாகும் என்று கூறியுள்ளார் திருமா.

http://thatstamil.oneindia.in/news/2011/03/22/now-bjp-wants-vaiko-allign-with-them-aid0090.html

முடிவில் உறுதியாக உள்ளோம் - வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ நேற்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த வைகோ, தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவில் மாற்றமில்லை என்றார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கள் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது பற்றி கேட்டபோது, தான் எந்த அறிக்கையையும் படிக்கவில்லை என்றும் சொந்த கிராமத்துக்கு போய்விட்டு இப்போதுதான் திரும்புவதால் அதனை நான் படிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அறிக்கையைப் படித்து விட்டு முதல்வரைச் சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு "கடந்த சனிக்கிழமை ம.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.

அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதைத்தவிர, வேறு எதுவும் நான் பேச விரும்பவில்லை" என்றார்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1103/22/1110322007_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்-

:D :D :D

அவ்வளவும் கிழட்டின் நக்கல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளவும் கிழட்டின் நக்கல்.

கிழட்டுக்கு சாகிற வயதில் என்ன நக்கல் வேண்டி கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.