Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்

Featured Replies

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார். Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன. ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். மூச்சை நன்றாக இழுத்தபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக வெளியே விட்டபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும். செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

http://panipulam.net/?p=11084#more-11084

இந்த இணைப்பில் இருந்த பின்னூட்டங்கள் :

கொல்லங்கலட்டியான்:

தோப்புக்கரணம் போடுவதால் அறிவு பெருகாது . இதுதான் உண்மை . அப்படியென்றால் நான் பல தடவை படிக்கும்போது தோப்புக்கரணம் போட்டுள்ளேன்.தற்பொழுதும் என்மனைவி என்னை அறிவுகெட்ட பெருச்சாளி என்று தான் அழேக்கிறாளே இதில் இருந்து புரிகிறதா தோப்புக்கரணம் போடுவதால் அறிவு வளராது ஆத்திரம்தான் வளரும்.ஆனால் தற்போது வயிறு மட்டும் நன்றாக வளர்ந்துள்ளது.

கலட்டிப்புயல் வடிவேல்:

ஓம் உண்மதான்.அந்தக்காலத்தில. எங்கடசனங்கள் தோப்புக்கரணம் போட்டதாலதான் இண்டைக்கு அறிவுகள் வழந்து.எங்கடநாடுபெரிய வல்லரசா இருக்குது வெழ்ழாக்காறான் தோப்புக்கரணம் போடாததாலதான் ஒண்டுமில்லாம் இருக்கிறான்.

elvarajah:

அம்பாள் துணை நிற்க.

ஐயா, பணிப்புலத்தாரே நன்றிகள்.

இதுபோன்று எம்மவரின் நம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் பலன்கள் உண்டு.நம்பிக்கையும் உண்டு. புரயாத மூடர் மூட நம்பிக்கை என்கின்றனர். புரியாத அறிவு சாரர் விளக்கம் தேடுகின்றனர்.(உம்மைப்போல், அந்த வைத்தியர்கள் போல்)

நன்றி உமது தேடலுக்கும், அதனை எம்முடன் பகிர்ந்தமைக்கும்.

நன்றியுடன் பணிப்புலத்து இராசன்.

  • தொடங்கியவர்

முன்னும் பின்னும் தலையை நகர்த்தி வழிபடுபவர்கள் யூதர்கள், இஸ்லாமியர்கள் .

அப்படி செய்யும் பொழுது, இல்லை செய்து ஒரு விடயத்தை படிக்கும் பொழுது அது கூடிய நினைவில் இருக்கும் என கூறப்படுகின்றது.

ம் :lol: :lol:

இது மட்டுமா? இன்னும் என்ன எல்லாமோ இருக்கு.

நான் ஒரு முறை கூட்டு பிரார்த்தனை ஒன்றிற்கு அழைக்க பட்டிருந்தேன். சரி என்ன நடக்குது என்று பார்க்க ஆவலாக அங்கு சென்றபோது அங்கு பேச வந்திருந்த இந்திய நாட்டவர் விஞ்ஞானத்தில் அவர் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் எடுத்து விளாசிக்கொண்டு இருந்தார். தீட்சை அளிக்கும் போது நியூரோன் ஷிப்ட் ஆகுமாம். உடனே புது அனுபவங்கள் எல்லாம் தெரியுமாம். இங்கு பிரார்த்தனைக்கு வந்திருந்த அப்பாவிகள் "நியூரோன்" என்று கேள்விப்படும் முதல் அனுபவம் அன்றாக தான் இருக்கும்.

அது மட்டும் அல்ல. என் போன்றவர்களின் செல்போனை கூட உபயோகிக்க விடவில்லை. :lol: :lol:

கூட்டம் முடிந்ததும் நான் உங்களுடன் பேசலாமா என கேட்டு விடயங்களை துலாவ தொடங்கியவுடன் அந்த "ஜி" க்கு நேரம் முடிந்தது. வணக்கம் என்று விடைபெற்றார்.

மக்கள் முக்கியமக விழிப்புடன் இருப்பது நல்லது. தாமஸ் எடிசனோ, நியூட்டனோ தோப்புக்கரணத்தில் நேரத்தை வீண்டிக்கவில்லை. அவர்களுக்கு வெற்றியை தந்தது ஒன்றே ஒன்று தான். விடாமுயற்சி.

இந்தியர்கள் கட்டுரை புனைவதில் வல்லவர்கள். நாம் தான் வடிகட்டி எமக்கானதை தெரிந்தெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்குத் தான் ஏனென்று விளங்கியது. ஏன் இப்படி 'இந்திய மூளை' பரிணாம வளர்ச்சியோடு அமைந்து போகாமல் வித்தியாசமாய் வளருது என்று, இவ்வளவு நாளும் ஒரே குழப்பமாக இருந்தது. அவர்கள் போடும் தோப்புக்கரணங்கள் தான் காரணம் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.