Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர் குழு அறிக்கையை இலங்கை, இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது

Featured Replies

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம், இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் இந்தியாவிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது.

இதேவேளை, நிபுணர் ஆறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்புச் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளதாக ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இந்த அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் தொலைபேசி மூலம் இரு நாட்டுத் தலைவர்களும் பேசியதாகவும், அதன் பின்னர் இந்தியா, ஷிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினை நியமித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

அறிக்கையை உன்னிப்பதாக ஆராயப்பட்டதன் பின்னர் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இந்த நிபுணர் குழு அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட போதிலும், இதுவரையில் பகிரங்கப்படுத்தவில்லை.

எனினும், அறிக்கையின் தகவல்கள் ஊடகங்களுக்கு கசியப்பட்டமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை எதிர்வரும் வாரத்தில் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாகவும், இதனை வெளியிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம் கோரி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

www.globaltamilnews.net/

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவே என்னும் இந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில்,

இவர்களின் செய்கை நியாயமாக தெரியவில்லை.

அப்படியே WikiLeaks க்கும் ஒரு பிரதி அனுப்பிவீடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சில தினங்களுக்கு முன்னர் இந்த அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் தொலைபேசி மூலம் இரு நாட்டுத் தலைவர்களும் பேசியதாகவும், அதன் பின்னர் இந்தியா, ஷிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினை நியமித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஆனானப் பட்ட இந்தியா இலங்கையிடம் பிரதி வாங்கிப் படிக்கின்றது.சிவசங்கர் என்ற மலையாளி நம்பியார் என்ற மலையாளியிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றிருப்பார்.

இது செத்த வீட்டில ஆறுதல் சொல்கின்ற மாதிரி போல கிடக்கு! பாதுகாப்புச் சபை உறுப்பினரான இந்தியா இந்தப் போர்க்குற்றவாளிக்கு ஆறுதல் சொல்வது, உலக அரங்கில் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதைத் தவிர வேறல்ல!!!

நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆலோசனை வழங்க சிவ்சங்கர் மேனன் தலைமையில் குழு!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து அவ்வறிக்கை தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து உரிய ஆலோசனை வழங்குமாறு கோரியே இவ்வறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தால் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக LAKBIMA எனும் கொழும்பு ஊடகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இவ்வறிக்கையை ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழு ஒன்றை இந்தியா நியமித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இவ்வறிக்கை குறித்து சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கலந்துரையாடடியதாகவும், இதனை அடுத்தே நிபுணர்கள் குழுவின் அறிக்கை இந்தியாவிடம் கையளிக்கப்பட்டதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஆராயும் இந்திய அதிகாரிகள் குழு தேவைப்படும் தருணத்தில் இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்குத் தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் கொழும்புக்கு வழங்கும் எனவும் இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக LAKBIMA தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா இதுவரை வெளிப்படையாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால், வன்னிப் போருக்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ்நாட்டில் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சுயாதீனமான சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.

மறுபுறத்தில், இவ்வறிக்கை ஐக்கிய நாடுகள் சபையால் முழுமையாக வெளியிடப்பட்ட பின்னர் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தான் நம்புவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் தன் பங்குக்கு கூறியிருந்தார். இந் நிலையில், ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாம் என செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, கொழும்புக்கு எதிராக தீர்மானம் எதுவும் கொண்டு வரப்பட்டால் வீட்டோ அதிகாரம் மூலம் அதைத் தோற்கடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கமும் எச்சரித்துள்ளது.

இந் நிலையில், கொழும்பு சீனாவுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை அறவே விரும்பாத இந்தியா இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் எத்தகைய ஆலோசனைகளை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கும் என்பது அதன் வெளிவிவகாரக் கொள்ளையிலேயே தங்கியிருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={54CC838B-1392-4C56-BE0D-F4DD1C3A12B4}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.