Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவுக்கு ஆதரவாக ஏன் தமிழினம் ஓரணியில் திரளக் கூடாது?

Featured Replies

ஐ.நாவுக்கு ஆதரவாக ஏன் தமிழினம் ஓரணியில் திரளக் கூடாது?

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் அநியாயமாகப் பலியாகிய பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற உண்மையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

உண்மையில் வன்னி இறுதிக் கட்டப் போரில் ஒலித்த அவலக் குரல்கள் அந்த மக்களுடன் மரணித்து விடவில்லை; சர்வதேசத்தின் மனச்சாட்சியை உசுப்பிக் கொண்டிருப்பதின் சாட்சியாகவே நிபுணர் குழு வடிவமெடுத்துள்ளது.

இறுதிக் கட்டப் போரின்போது கனத்த மனதுடன் மனதுக்குள் அழுது புலம்பும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தனர். அந்தளவுக்கு வெற்றிக் கோஷங்கள் தமிழ் மக்களை வாய் மூடி மௌனிகளாக்கியது. இன்றும்கூட அதே நிலைதான்.

ஆனால் புலம்பெயர் வாழ் தமிழரின் நிலை மாறுபாடானது. தமது உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் நிலையில் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

வன்னி மக்களைக் காப்பாற்றி விட உறைய வைக்கும் பனிப் பொழிவுக்குள்ளும் இலட்சக்கணக்கில் வீதிகளில் இறங்கி குரல் எழுப்பினர். ஆட்சி பீடத்தில் இருந்த பல சர்வதேச நாடுகளின் அதிகாரத் தலைமைகளின் மனக் கதவுகளை வன்னியின் மரண ஓலங்களாலும் அவர்களுடைய கோரிக்கை குரல்களாலும் தட்டித் திறக்க முடியாது போயிற்று என்பது ஜீரணிக்க முடியாததுதான்.

காப்பாற்றுவதற்கான அனைத்து சாதகமான நிலைமைகளும் இருந்தும் காப்பாற்ற முன்வராது ஒதுங்கி ஓரமாக நின்ற ஐ.நா. செயலாளர் நாயகம், அதன் அமைப்புகள், சர்வதேச அரசியல் தலைமைகள் என்பன தற்போது சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எத்தகைய பதிலைக் கூறப் போகின்றன?

ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையால் இந்த மூன்று பகுதியினருமே அதாவது ஐ.நா. செயலாளர் நாயகம் அதன் அமைப்புகள், சர்வதேச அரசியல் தலைமைகள் என்பன நிர்வாணமாக நிற்கின்றனர்.

இந்த ஒரு பின்னணியில் புலம்பெயர் வாழ் தமிழர்களால் வன்னியின் இறுதிக் கட்டப் போரில் பலியாகிய பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியாது போய்விட்டது என்பது உண்மைதான்.

ஆனால் தற்போது மரணித்துப் போன அந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழினத்துக்காகவும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நிபுணர் குழுவின் அறிக்கையை கைகளில் ஏந்தி சர்வதேச அரசியல் தலைமைகளிடம் நீதி வழங்குமாறு கோரிக்கை விடுக்க காலம் பிறந்துள்ளது.

புலம்பெயர் வாழ் தமிழர்கள் ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று நீதி கோரினால் நிச்சயம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் விடிவும் விமோசனமும் ஏற்பட வழி பிறக்கும்.

இன்றைய இந்தச் சந்தர்ப்பத்தை புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தவற விடுவார்களேயாயின் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம் அல்லது அந்தச் சந்தர்ப்பத்திற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியும் வரலாம்.

அதேபோல் இலங்கையில் உள்ள தமிழ்த் தலைமைகளுக்கும் இதுவே சரியானதும் இறுதியானதுமான சந்தர்ப்பமாகவும் அமையலாம்.

அரசியல் தீர்வை நோக்கிய காய்களை மிக வேகமாக நகர்த்துவதற்கு தமிழ்த் தலைமைகளுக்கு இதுவே சந்தர்ப்பமாகும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தமிழ்த் தலைமைத்துவங்கள் தமது ஒற்றுமையின்மையினாலும் விவேகத்துடன் செயற்படாமையினாலும் இழந்து நின்றமை வரலாறாகும்.

தற்போது கூட குடுமி எனது கைகளில் என்று ஒருவர் கூறினாராம்.

கடந்த காலங்களில் இவ்வாறான போக்கில் மிதந்த பலர் கோட்டை விட்டதை நாம் மறப்பதற்கில்லை.

டி.எஸ். சேனாநாயக்க முதல் சிங்களத் தலைமைகள் மிக லாவகமாக தமிழர் விவகாரத்தில் காய்களை நகர்த்தி தமிழ் மேதைகளை வெற்றி கொண்டதை மனதில் இருத்தி தமிழ்த் தலைமைகள் செயற்பட வேண்டும்.

சம்பந்தன் ஐயா தலைமையிலான குழுவினர் கடந்த கால வரலாற்றுப் படிப்பினைகளைக் கருத்தில் எடுத்து செயற்படுவர் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு உண்டு.

சம்பந்தன் ஐயா தனது இந்தப் பயணத்தில் அனைத்து தமிழ்த் தலைமைகளையும் இணைத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைமைகளும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் சரிவர ஓரணியில் நின்று வெற்றி கொள்ள வேண்டுமென்று தமிழ் மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் விவகாரத்தில் சிங்களத் தலைமைகள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளன.

போரின்போது சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு வெற்றி நடை போட்டதைத் தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தற்போதும் ஐ.நாவுக்கு எதிராக அணிதிரள்கின்றனர். அது அவர்களுக்குரிய உரிமை.

அதுபோல் ஏன் தமிழினம் இனத்துக்காக ஓரணியில் திரளக் கூடாது?

வி. தேவராஜ்

-நெருடல்

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை.

அன்று சிங்களத்தை ஆதரித்து நின்றது ஐ.நா. இன்று சிங்களம் அதே ஐ.நா.வுடன் முறுகிய நிலையில் உள்ளது.

அன்று சிங்களத்தை ஆதரித்த பல சர்வதேச நாடுகள் இன்று அவர்களை கைவிடும் நிலையில் உள்ளது.

புலம்பெயர் மக்களின் கைகளில் தரப்பட்ட போராட்டம் 2009 மே இலிருந்து பல மாதங்கள் தொடர்ச்சியாக சிறப்பாக இளையோரால், பலராலும் முன்னெடுக்கப்பட்டது. போர்குற்ற விசாரணைகளில் பலரும் நம்பிக்கையுடன் பங்கு பற்றினர். பல எதிர்ப்புக்களையும் மீறி ஐ.நா. விசாரணைக்குழுவை/பரிந்துரைகுழுவை அமைத்து இன்று அது எமக்கு ஒரு நம்பிக்கையை தந்து நிற்கிறது.

எமது கடந்தகால வெறுப்புக்களுக்கு அப்பால், நாம் ஐ.நா.வுக்கு ஆதரவாக குரல் தெரிவிப்பதில் ஒரு அரசியல் சாணக்கியம் உள்ளதாகவே படுகின்றது.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் விவகாரத்தில் சிங்களத் தலைமைகள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளன.

போரின்போது சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு வெற்றி நடை போட்டதைத் தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தற்போதும் ஐ.நாவுக்கு எதிராக அணிதிரள்கின்றனர். அது அவர்களுக்குரிய உரிமை.

அதுபோல் ஏன் தமிழினம் இனத்துக்காக ஓரணியில் திரளக் கூடாது?

இணைப்புக்கு நன்றிகள் குட்டி!

சிங்களவனுக்கு மடியில் கனம் அதிகமில்லை!

எங்களவனுக்குப் பிரச்சனையே இது தானே!

யாரோ, யாருக்காகவோ சேர்த்த பணத்துக்காகத்தானே இவ்வளவு பிரிவினையும் நியாயங்களும்?

நாங்களே எங்களை அறியாமல், சில மந்தைகளை வளர்த்துவிட்டிருக்கின்றோம் என்பதே உண்மை!

நித்திரை கொள்பவனை எழுப்பலாம் குட்டி, ஆனால் நித்திரை போல கிடப்பவனை என்ன செய்வது?

கேனைத்தமிழர்கள் ஆரமித்து விட்டார்களா?

ஆதரவாக இல்லை மாறாக இலங்கை அரசின் மீது சாட்டப்பட்ட குற்றம் போதியளவில் இல்லை என்று போராடவேண்டும் அப்ப்போது தான் இப்போது குற்றம் சாட்டப்பட்ட சிலதாவது நிறைவேற சந்தர்ப்பம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எமது கடந்தகால வெறுப்புக்களுக்கு அப்பால், நாம் ஐ.நா.வுக்கு ஆதரவாக குரல் தெரிவிப்பதில் ஒரு அரசியல் சாணக்கியம் உள்ளதாகவே படுகின்றது.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை.

அக்கட தோழர் அகூதா கான்செப்புட்டு யார்க்கு அரத்த ஆவட்லேது வாடு ஏனு செப்பேச அண்டா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.