Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வில்லியம் - கேட் மில்ரன் திருமணம்: மக்கள் வரிப்பணம் வீண் விரயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு ஆடம்பர செலவு செய்து வீணப்படிதாக குற்றச்சாட்டு!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு ஆடம்பர செலவு செய்து வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் கதே மிடில்டன் ஆகியோரது திருமணம் ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி) லண்டனில் உள்ள பாரம்பரிய வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் தேவாலயத்தில் விமரிசையாக நடக்கிறது. திருமணத்தன்று லண்டனில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் "டிவி' மற்றும் இணையதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த திருமணத்தை படம் பிடிக்க சர்வதேச ஊடங்கள் அங்கு குவிந்துள்ளன.

திருமணத்தையொட்டி மாநகரமே விழா கோலமாக காணப்படுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வது கவுரவமாக கருதுவதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் குவிந்துள்ளனர். திருமணத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் நடந்த ராணுவ அணிவகுப்பை மணமக்கள் ரசித்து பார்த்தனர்.

இதனிடையே பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்து வரும் அரச குடும்பம் திருமணத்திற்காக ஏராளமான பணத்தை வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு பிரிட்டன் குடியரசு கட்சி மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மணமக்கள் அணியும் மோதிரத்தில் இருந்து உடைகள் வரை பொதுமக்களின் வரிப்பணம் இருக்கிறது என குடியரசுக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எமிலி ராபின்சன் என்பவர் கூறுகையில், இந்த ஆடம்பர திருமணம், வரி செலுத்துபவர்கள் மீது பெருஞ்சுமையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நாளைக்கு அறு பில்லியன் பவுண்டுகள் வரை செலவு செய்து பணத்தை வீணடிக்கிறார்கள். பாதுகாப்பு, மணமக்களின் மோதிரம், உடை இவற்றில் மக்களின் வரிப்பணம் அடங்கியுள்ளது என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52653

Edited by nedukkalapoovan

Royal ring sapphire 'came from Sri Lanka'

By Sivaramakrishnan Parameswaran

BBC Tamil

http://www.bbc.co.uk/news/world-south-asia-13214228

அரை உலகமே இன்று நாளை நடக்க உள்ள திருமணத்தை பார்க்க உள்ளது. இந்த வேளையில் வந்த அறிக்கையையும் பாவித்து நாம் எமது பிரச்சாரத்தை மேற்கொள்ளலாமா?

- Kate Middleton is about to wear ring from genocidal Sri Lanka

- The ring has blood of innocent lives of Sri Lanka

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச திருமணத்தில் எங்களுக்கு முழு ஈடுபாடு இல்லை: பிரிட்டன் மக்கள்

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் நடக்கவிருக்கும் இளவரசர் வில்லியம் திருமணத்தில் பிரிட்டன் மக்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டவில்லை. பிரிட்டனில் அரச குடும்ப திருமணங்களைப் பொறுத்தவரை உலகப் போர், பொருளாதார நெருக்கடி என்பன போன்ற ஒருவித நெருக்கடி காலகட்டங்களிலேயே நடந்திருக்கின்றன.இளவரசர் வில்லியமின் திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரிட்டன் தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வேலையை இழந்து விட்டனர். பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. பிரிட்டன் நாணயமான பவுண்ட்டின் நிலை பலவீனமாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டன் மக்களின் மனநிலையும் வேறு விதமாக உள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடியில் இப்படி ஆடம்பரமாக திருமணம் நடத்த வேண்டுமா என்று அவர்கள் கோபத்தில் உள்ளனர். அதனால் அவர்கள் திருமண விருந்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும், அரச பரம்பரை நீடிப்பதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் திருமணத்திற்கு ஆகும் செலவனைத்தையும், அரச குடும்பமும், மணமகள் கதே மிடில்டன் குடும்பமும் பகிர்ந்து கொள்ளும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது. திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் அரசு செலவழிக்கும் என்று தெளிவாக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 35 சதவீதம் பேர் அவரவர் வீடுகளில் தொலைக்காட்சி மூலம் திருமணத்தைப் பார்க்கப் போவதாகவும், 35 சதவீதம் பேர் திருமணத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.saareeram.com/?p=1183

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களும்....... இவங்கடை......... கலியாணமும்............

அதுசரி.......எங்கடை லண்டன் சனம்,கனடாச்சனம்,ஜேர்மன்சனமெண்டு இல்லாதபொல்லாத பந்தா காட்டி கலியாணவீடு செய்யேக்கை...... பரம்பரை பணக்காரர் இவங்களுக்கு என்ன குறைச்சல்?

அங்கை குடிலும் குடித்தனமாய் இருந்திட்டு இஞ்சைவந்து........ அவையின்ரை கலியாணத்தை ரோயல் பமிலி ரேஞ்சிலை.........நீட்டுவெள்ளை காரென்ன?..........மலைமேலை இருக்கிற பழையகோட்டையிலை நடத்துற தேனீர் விருந்தென்ன?......மூண்டாம் சடங்கு ஓடுறதண்ணிக்கப்பலிலை ......

போனவருசம் கனடாவிலை இருந்து எனக்கு ஒரு கலியாணவீட்டு புளூறே சீடி ஒண்டு வந்தது(சீடியை பாக்க புது பிளேயர் வாங்கினது வேறைவிசயம்)

அந்த கலியாணவீட்டு சீடியைப்பாத்திட்டு என்னக்கு ஐஞ்சும்கெட்டு அறிவும்கெட்டுப்போச்சுது........கலரென்ன கலக்கலென்ன(கடனென்ன கலக்கமென்ன) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் நாடுகளில் மன்னராட்சி முடிய வேண்டும் என்று அங்கு குண்டுகளை கொண்டு போய் கொட்டுகிறார்கள்.லண்டனில் இவ்வளவு பணத்தை கொட்டி அரச திருமணமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.