Jump to content

பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

"வணக்கம் வணக்கம் என்று இருமுறை சொல்லி.. இளையோர்கள் நாம் தரும் பட்டிமன்றம்" என்று ஆரம்பித்ததும் (வயதானவர்களை மறந்துவிட்டார் போலும்), எதிரணித்தலைவர் திருப்பித்திருப்பி வருவதாகக் குறிப்பிட்டிருப்பதும் (ஒருமுறைதானே களத்தினில் வந்தார்) அவர் சிறிது குழப்பத்துடனே ஆரம்பிப்பதுபோல் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சிறிது உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம். ஆனால் போகப்போக மிகவும் திறமையாகத் தன் வாதத்தை முன்வைத்தார்.

தலையங்கத்தை எதிரணியினருக்கு தாம் எல்லோரும் ஞாபகப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம் என்றார். நன்மை அணியினர் தாம் தலையங்கத்தை விளங்கித்தான் தம் கருத்துக்களை முன் வைக்கிறோம் என்று திரும்பத்திரும்பக் கூறினாலும் தீமை அணியினர் இல்லை, இல்லை என்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதனை பட்டிமன்றத்தை ஆரம்பத்திலிருந்து ஒழுங்காகப் படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

இணையத்தில் பாடசாலைகளுக்கான தேடுதல் என்று சொல்லிவிட்டு படிப்பைத்தவிர வேறு எல்லாவற்றையும் தேடுகின்றார்கள். உங்கள் அப்புவும், ஆச்சியும் எந்த இணையத்தில் தேடினார்கள் என்று அந்த நகைச்சுவை மன்னர்களிடம் கேட்கிறேன் என்று நறுக்காக் கேட்கிறார் ரமா?

ஓரிருவர் இணையத்தால் முன்னேறிவிட்டார்கள் என்பதற்காக எல்லோரும் முன்னேறிவிட்டார்கள் என்று கூறமுடியுமா? என்றும் கேட்கிறார். அப்போ "ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமில்லை" என்கிறாரா?

பிள்ளைகள் எம் எஸ் என் இல் செய்யும் லொள்ளுகளுக்கு உதாரணம் காட்டினார். பெற்றோருக்குக் காதில் புூவை வைத்துவிட்டு தாமும் சிரழிந்து மற்றையவர்களையும் சீரழிக்கிறார்கள் என்றார். இவற்றை தன்னைப்போல் இளையோருக்குத்தான் தெரியும் என்றார். (பாம்பின் காலை பாம்புதானே அறியும்). இதனை அறியாத பெற்றோர்களை தனதணியில் முன்பு வந்தவர்கள்போல் தானும் சாடுகிறார். (பாவம் அந்தப் பெற்றோர்கள்).

இளையோரால் இணையத்தினால் நேரத்தைச் சேமிக்க முடிகிறது, ஊக்கமுள்ள இளைஞனுக்கு தகவல்களை வழங்குகிறது, அதை வைத்து திறமையானவன் உயர்கிறான் என்கின்ற நன்மை அணியினரின் வாதத்தை ஓரளவிற்கு ஒத்துக்கொண்டாலும் அதனால் அவர்கள் சீரழிகிறார்கள் என்றே திரும்பத்திரும்பக் கூறுகின்றார். ரமா கூறுவதுபோல் நன்மைகளைவிட தீமைகள் பன்மடங்காக இருக்கின்றனவா? நன்மை அணியினர்தான் இதற்குப் பதில் தரவேண்டும்.

இணையம் இளையோரை வாழவைக்கும் கண்ணுக்குத் தெரியாத தெய்வம் என்ற கூற்றிற்கு அப்படியானால் அதற்குப் புூமாலை சாத்தி, கற்புூரம் காட்டி, உண்டியல் வையுங்கள் என்று கொதிக்கிறார். "தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலைதான்" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. கல்லை, காசை, மனிதரைத் தெய்வமாக மதிப்பவர்கள் இணையத்தை தெய்வமாக மதிப்பது தவறா? சரியா? பதில் தாருங்கள் எதிரணிப் பக்தர்களே!

இணையத்தால் உலகை எம் கைக்குள் கொண்டுவந்தாலும் எமது பாரம்பரிய இசை பாதுகாக்கப்படவில்லை, களவாடப்பட்ட மெட்டுக்களும், மாற்றங்கள் செய்யப்பட்ட மெட்டுக்களும், மேலைத்தேய ஆக்கங்களின் செல்வாக்குகளும்தான் அதிகமாக இருக்கின்றன என்று குமுறுகிறார். அதேவேளை நடுத்தரவயதுடையோர்தான் தமிழை, தமிழ்ப் பாரம்பரியத்தை வளர்க்க அதிகம் பாடுபடுகின்றார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இணையம் இல்லாவிடில் தேடல் அதிகமாகும், புத்திக்கூர்மையும் அதிகமாகும் என்றும், இணையத்தால் இளையோர் சோம்பேறிகளாகின்றார்கள் என்றும் கூறுகின்றார். தெளிவில்லா இவர்களால் தமிழர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் இடம்பெறும் கலாச்சார சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.

தான் ஒரு பெண் என்பதாலோ என்னவோ தனது உதாரணங்களை சமையல் அறைவரை கொண்டு செல்கிறார். இணையத்தை ஆக்கமுள்ள ஒருசில அனுபவசாலிகளுக்கு சமையலுக்குப் பயன்படும் அளவான நெருப்புக்கும், அனுபவம் இல்லாத புலம்பெயர் நாட்டில் பொழுதுபோக்கை குறியாக்கி வைத்திருக்கும் புலம் பெயர் இளையோரை வீட்டையும், நகரத்தையும் எரிக்கும் பெரியதொரு நெருப்புக்கும் ஒப்பிட்டு சீரழிக்கிறது, சீரழிக்கிறது, சீரழிக்கிறது என்று மூன்று முறை சீறுகின்றார். "அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்" என்பதாலா? இந்த அம்மி நகருமா பொறுத்திருந்து பார்ப்போம்.

ரமா வயதால் இளையவர்தான் ஆனால் பட்டிமன்றத்தில் எப்படி வாதாடவேண்டும் என்கின்ற அனுபவத்தில் முதியவர்போல் தெரிகிறது. இறுதிவரை இடியுடன் கூடிய மழை பொழிந்ததுபோல் தன் வாதத்தினை முன்வைத்தார். எதிரணியினருக்கு தனது தமிழால் நல்ல சாட்டையடி கொடுத்த அதேவேளையில் நடுவர்களாகிய எமக்கும் ஓர் அடி பட்டதுபோல் உணர்ந்தேன். பி.கு வில் நன்மை அணிக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கினால் மட்டுறுத்தினர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் அது. நல்ல வாதம் செய்தவர் ஏன் ஒரு மிரட்டலையும் விட்டுச்சென்றார்? முகத்தாரும், தலவும் அவரை தட்டிக்கொடுப்பதுபோலவும் இருக்கிறது. ம்! நாம் நடுவர்கள்தான்!

அடுத்து நன்மை அணியிலிருந்து வருபவர் யார்? வருக, வந்து உங்கள் வாதத்தைத் தருக.

நன்றி.

  • Replies 89
  • Created
  • Last Reply
Posted

அன்பிற்கும், பண்பிற்கும் உறைவிடமாக என்றுமே நடு நிலை தவறாது செயற்படும் நடுவர் பெரு மக்களே, மிகுந்த சிரமத்தின் மத்தியில் பல்வேறு குழப்பங்களுக்குள்ளே இந்தக் களத்திலே இதனை கஸ்ட்டப் பட்டு நெறிப் படுத்திக் கொண்டிருக்கும் ரசிகை அவர்களே,இந்தப் பட்டி மன்றத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த மோகன் அவர்களே ,சீரிய சிந்தனையும் அறிவாற்றலும் உடய எமது அணித் தலைவர் கவிக் கூர் இழஞ்சன் அவர்களே,வெற்றி அணியின் நண்பர்களே, தோல்வியை எதிர் பார்த்து நடுவர்களின் நடு நிலமயைச் சந்தேகிக்கும் எதிரணி விதண்டாவாதிகளே அனைவருக்கும் எனது முதற் கண் வணக்கம்.

இங்கே இணயத்தின் நன்மைகளை மீண்டும் பட்டியல் இட்டு உங்கள் பொறுமையைச் சோதிக்க நான் விரும்பவில்லை. நடுவர் அவர்களே நீங்கள் தீர்ப்புச் சொல்லும் நேரம் நெருங்கி வருவதால் எதிரணி அன்பர்கள் தலைப்பைப் பற்றிச் சொன்ன சில விடயங்களை சற்று விரிவாக ஆராய்ந்து, அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.அவர்கள் மீண்டும் மீண்டும் தலைப்பைப் பாருங்கள் தலைப்பை பாருங்கள் என்று கூறுகிறார்களே ஒழிய அவர்கள் தலைப்பைச் சரியாகப் புரிந்து கொண்டனரா?

இங்கே விவாததிற்கான தலைப்புத் தான் என்ன?புலம் பெயர்ந்து வாழும் இளயோர் இணய ஊடகத்தால் சீரழிகின்றனரா? நன்மயடைகின்றனரா? என்பது தானே?

இங்கே இணயம் என்பது ஏன் ஒரு ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது ,இதில் தானே இந்தக் கேள்விக்கான விடையும் உள்ளதே?இதனை இவர்கள் கவனித்து தான் இந்தப் பட்டி மன்றத்தில் வாதாடுகின்றனரா?ஊடகம் என்றால் என்ன?இதனை இரண்டாகப் பிரித்தால் ஊடு அகம் என்று வரும்.அதாவது தனக்கு ஊடாக தனது அகத்திலே தகவல்களைக் காவிச் செல்வது தானே ஊடகம்.இங்கே ஒரு முனையில் இடப்படுவதே இன்னொரு முனயில் எடுக்கப் படுகிறது.ஆகவே இங்கே சீரழிப்பவை என்று சொல்லப் படுபவை ஒரு முனையிலே இடப்பட்டு மறுமுனயிலே எடுக்கப் படுகிறது. நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?

இங்கே மனிதர்களே சீரழிக்கின்றனர் இணயம் அல்ல.சரி அப்படியானால் அதெப்படி நன்மை பயக்கிறது என்று வாதிட முடியும், என்று எதிரணி நன்பர்கள் ஒரு குதர்க்கமான கேள்வியைக் கேட்க முடியும்.இதற்கான பதிலை இணயம் என்னும் தொழில் நுட்பத்தை மற்றய ஊடகங்களின் தொழிற்பாட்டு முறமையுடன் ஒப்பிடுவதன் மூலம் பெற முடியும்.இந்த ஊடகத் தொழில் நுட்பமானது மற்றய எந்த ஊடகத்தையும் விட பெறுனருக்கு அதனைக் கட்டுப் படுத்தும் வல்லமையை வழங்குகின்றது .ஆகவே இங்கே பெறுனர் ஆனவர் சக்தி மிக்கவராக ஆக்கப் படுகிறார்.இந்த தீர்மானிக்கும் சக்தியை அவர் நன்மைக்குப் பாவித்தால் நன்மை அடைவார்.சீரழிவுக்குப் பாவித்தால் சீரழிகிறார்.இந்த தொழில் நுட்ப வல்லமையே இணயத்தின் வெற்றிக்கு இதன் பாவனை அதிகரிப்புக்கு இதன் பயன் பாட்டுக்கு அடிப்படயாக அமைகிறது.ஒரு தொலைக்காட்சியையோ அல்லது ஒரு பத்திரிகையையோ எடுத்துக் கொண்டாலோ அதில் வரும் தகவல்களை நெறிப் படுத்துபவராக அதன் செய்தி ஆசிரியர்கள் , நிருபர்கள் இருக்கிறார்கள்.இன்று புலத்தில் உள்ள ஒரு பத்திரிகையை எடுத்துக் கொண்டால் அதில் முதலில் ஒரு செய்தியைத் தேடிப் பிடிப்பதே கஸ்டமாக இருக்கிறது அப்படித் தேடிப் பிடித்தாலும் அது அனேகமாக ஒரு சினிமாச் செய்தியாகத் தான் இருக்கும்.தொலைக் காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் காலயில் ஒரு படம் மாலையில் ஒரு படம் பிறகு அழுதுவடியும் சின்னத்திரை அறுவைத் தொடர்கள்.இங்கே அறிவியலுக்கு சிந்தனை வளர்ச்சிக்கு ,சமூக வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? ஆனால் இணயதில் நாம் விரும்புவதை ஒரு சில சொடுக்குகளுக்குள் எம்மால் பெற முடிகிறது.அத்தோடு பெறப்படும் விடயமானது அந்த நிமிடதிற்கு பொருத்தமான விடயமாக இருகிறது.அத்தோடல்லாமல் பெறப்படும் தகவலை நாம் எமக்கு ஏற்றவாறு மாறுபாடு அடயச் செய்யக் கூடியதாக இருகிறது.ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் தகவலை உருமாற்றி அதனை எமக்கு பயன் உள்ள வழியில் மாற்றமடயச் செய்யக் கூடியதாக உள்ளது.அது மட்டுமா ஒருவர் தானே செய்திகளை ,படைப்பிலக்கியங்களை ஆக்கக் கூடிய வல்லமயை அது வளங்கி உள்ளது.இங்கே எதிரணியில் வாதாடும் அன்பர்கள் கவிதை எழுதக் கூட அது களம் அமைத்துக் கொடுத்துள்ளது.இதனை மறுதலித்து அவர்கள் வாதிடுவர் எனின் அவர்களை என்ன வென்று சொல்லுவது.இந்த இணயம் இல்லாது விடின் இன்று தமிழ் மணத்தில் பூத்துக் குலுங்கும் இழஞர்களின் படைப்புக்கள் அவர்களுக்குள்ளே வாழ்ந்து அல்லது பள்ளி மட்டைக் கொப்பிகளுக்குள்ளே புதைந்து மண்ணோடு மண்ணாகி இருக்கும்.இங்கே பெட்டை என்னும் ஒரு வலைப்பதிவாளர் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது,எனக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களை எனது ஆளுமையை நான் வெளிப்படுத்தாமல் இது கால வரையும் புளுங்கிக் கொண்டு இருந்தேன்.இப்போது எனது எண்ணங்களை வெளிக் கொணர எனக்கென்று ஒரு ஊடகம்,எனக்கென்று ஒரு களம் எனக்குக் கிடைத்திருகிறது என்கிறார்.ஏனெனில் படைப்பிலக்கியம் எனப்படுவது அமைப்பு ரீதியாக அல்லது தனி மனித செல்வாக்கு,பண பலம் உடயவர்களின் ஆதிக்கதுக்குள் ஒரு வட்டத்திற்குள்ளேயே இருந்து வந்துள்ளது.இன்று இணயத்தின் வரவால் இந்த தடைகள் உடைக்கப்பட்டு ஒருவரின் ஆக்கத் திறமையே படைப்பதற்கான திறவுகோலாக உருமாறி உள்ளது.இன்று தமிழ் மணத்திலே உள்ள தொழில் நுட்பமானது வாசகரின் பரிந்துரைகளுக்கு ஏற்ப ஒரு ஆக்கத்தை மேலுளுப்ப வைக்கக் கூடியதாக உள்ளது.இதனைச் சாத்தியப் பட வைத்தது இணயத் தொழில் நுட்பமே அன்றி வேறொன்றும் அல்ல.இந்த இழஞ்சர்களின் முன்னேற்றத்தை வெளிக் கொணர்ந்தது இணயம் என்னும் தொழில் நுட்பமே அன்றி வேறொன்றும் அல்ல.

ஆகவே இங்கே இணயம் என்னும் தொழில் நுட்பமானது ஒருவருக்கு அதிகூடிய வினைத்திறனை வளங்கி அவரின் செய்யற்பாட்டு ஆளுமையை அதிகரிக்க வைக்கிறது.இவ்வளவு வல்லமை படைத்த இந்த ஊடகத்தயே இங்கே சீரழிக்கிறது என்று வாதிட வந்து ,விதண்டாவாதமாக பேசிக் கொன்டிருகின்றனர் எதிர் அணியினர்.

இங்கே இழஞ்சர் தம்மைத் தாமே சீரழிக்கிறனரே தவிர ,இணயம் அவர்களைச் சீரழிக்கவில்லை ,அதனால் சீரழிக்கவும் முடியாது என்று ஆணித்திரமாக திடமாகக் கூற முடியும் நடுவர் அவர்களே.அதன் தொழில் நுட்பத் திறன் ஆனது மற்றய ஊடகங்களை விட நன்மை பயற்க வல்ல இயல்புகளை தன்னகத்தே கொண்டது.அதன் நன்மைகளைப் பயன் படுத்துவது அதனைப் பாவிப்பவர் கைகளிலேயே தங்கி உள்ளது.ஆகவே இணயத்தை குறை கூறி, அம்பை நோகாமால் ,அதனை எய்த மனிதரை நோக்கி உங்கள் சுட்டு விரலைக் காட்டுங்கள்,என்று கூறி ,இந்த வாய்ப்பை அழித்த யாழ்க் களத்திற்கு நன்றி கூறி,பொறுமையாக இருந்து இந்தத் தலைப்பில் மட்டுறுதினர்களுக்கு வேலை எதுவும் இன்றி கருத்தாடிய அனைவருக்கும் நன்றி கூறுவதோடு ,ரமா அவர்கள் சுட்டிக் காட்டிய படி இந்தத் தலைப்பில் எவ்வாறு மட்டுறுதினருக்கு வேலை இல்லாமல் நாம் கருத்தாடினொமோ அவ்வாறே எல்லாத் தலைப்புக்குள்ளும் நாம் கருத்தாடினால் மட்டுறுதினர்கள் இங்கு தேவயே இல்லை என்று கூறி,இது ஒன்றே மிகத் தெழிவாக எமக்கு மனிதர்களே சீரழிவுக்குக் காரணம் ஆகுகின்றனர் ,இணயம் அல்ல என்பதை உணர்த்துகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .இதனை உங்கள் சிந்தையில் நிலை நிறுத்தி நடுவர் அவர்களே உங்கள் தீர்ப்பை வழங்குவீர்கள் என்கின்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்,

நன்றி,

வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

நாரதர் வந்து கலகத்தை உண்டாக்குவார் என்று எதிர்பார்த்தேன் வந்துவிட்டார். கூடவே கலகத்தையும் உருவாக்க ஏதாவது கொண்டுவந்தாரா என்று பார்ப்போம்.

"கவிக் கூர் இழஞ்சன்" யார் இவர்? ஓ! அணித் தலைவரையா இப்படி அழைக்கிறார். சரி, சரி.

இக்களத்திலே வந்து கருத்துக்கூறிய பலரைப்போலவே இவரும் தலைப்பைப்பற்றிய சந்தேகம் இன்னும் சிலருக்கு இருக்கின்றது என்று அதனை விளக்க முயன்றார். இணையம் என்பது ஏன் ஓர் ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது? என்ற கேள்வியிலேயே விடையும் உள்ளது என்றார். எதிரணியினருக்கு தலைப்பைத் தெளிவுபடுத்த "ஊடு, அகம்" என்றால் என்ன என்ற விளக்கத்துடன் ஆரம்பித்தார். இந்த ஊடகத்தை நன்மைக்குப் பாவித்துப் பயனடைவதும், தீமைக்குப் பாவித்துச் சீரழிவதும் இதனைப் பாவிப்பவரையே பொறுத்தது என்று கூறினார்.

புலத்திலே உள்ள பத்திரிகைகளில் ஒரு செய்தியைத் தேடிப்பிடிப்பதே கடினமாக இருக்கிறது என்றார். அப்படிப் பிடித்தாலும் அது ஒரு சினிமாச் செய்தியாகத்தான் இருக்கும் என்றார். இது உண்மையா? அல்லது தன் கலகத்தை ஆரம்பிக்க எடுத்த ஓர் கணையா?

தொலைக்காட்சியையும் திட்டுகிறார். சின்னத்திரை அறுவைத் தொடர்களும், தினம் இரண்டு சினிமாப் படங்களையும் தவிர அறிவியல் சிந்தனை வளர்ச்சிக்கு, சமூக வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார். (இவைகள் இல்லாவிட்டால் இங்கே பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்றும் கேள்விப்பட்டேன். இவைகள் இருப்பதாலும் பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்றும் கேள்விப்படுகிறேன்.) இவற்றோடு இணைய ஊடகத்தை ஒப்பிடுகிறார்.

இணைய ஊடகம் இலகுவாக தகவல்களைத் தருகின்றது. தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும், படைப்பிலக்கியங்களை ஆக்கவும், அவற்றை பலரும் படிக்கக்கூடியதாக பணச்செலவுகள் ஏதுமின்றி பார்வைக்கு வைக்கவும் களம் அமைத்துக் கொடுத்ததாகவும், இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு இணைய தொழில்நுட்பமே காரணம் என்று ஆனந்திக்கிறார்.

மீண்டும் இறுதியில் ஆவதும், அழிவதும் இதனைப் பாவிப்பவர் கைகளிலேதான் இருக்கின்றது என்றும், இணைய ஊடகத்தை ஆக்கியவர்களைக் குறைகூறுவதுபோல் நிறைவுசெய்திருக்கின்றார். எதிரணியினரே இதற்கு உங்கள் பதில் என்ன?

நாரதர் தனது வாதத்தை தனது பாணியிலே அழகாகச் செய்தார். நாரதரரும் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் விட்டிருந்தாலும் வாதத்தின் முடிவில் இந்த வாய்ப்பை "அழித்த" யாழ் களத்திற்கு நன்றி கூறி முடித்துள்ளார். "அளித்த", "அழித்த" இரண்டும் மாறுபட்ட கருத்துடைய சொற்கள். ழ, ள வை இடம்மாறி எழுதினால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்? பலருக்கு இந்த ழ, ள, ல என்பன பிரச்சினையாகத்தான் இருக்கிறது. சபையிலே கதைத்தால் உடனே திருத்திக்கொள்ளலாம். ஆனால் இங்கே எழுதிவிட்டால் ஒருபோதும் அழியாது அல்லவா? மன்னிக்கவும். இவைகளைக் குறைகூற விரும்பாவிட்டாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் முடியவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து.

அடுத்து தீமை அணியிலிருந்து வருபவர் யார்? இனி வரப்போகும் புூனைக்குட்டியும், மற்றவர்களும் சண்டை போடாமல் ஒழுங்கில் வந்து என்ன பதில் கூறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் பட்டிமன்றத்தை தலைமை தாங்கி நடத்தும் நடுவர்களே! இதை நடத்துவதற்கு ஆவன செய்த களப் பொறுப்பாளர்களே! மட்டுறுத்தினர்களே, எனது மற்றும் எதிரணி உறவுகளே, பார்வையாளர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கங்கள்!

ஒரு இளைஞனை தொலைக்காட்சிகளும், வானொலிகளும் சீரழித்து விட்டன. எனவே இணையம் சீரழிக்குமா என்று கவலைப்படத் தேவையில்லை என்று எதிரணியினர் விளம்புகின்றனர். ஆனால் அதிக விகிதமான இளைய சமுதாயத்தை சீரழிவின் பால் தள்ளியது இணையம் என்பதை இதனுள் மறைக்க முனைகின்றனர்.

எதிரணியினர் சீரழிவான விடயங்களை, சினிமா மீதோ, அல்லது தொலைக்காட்சி மீதோ, பத்திரிகை மீதோ போட்டு விட்டு, தப்பிக்கும் முறையைப் பார்க்கும் போது இணையத்திற்கும், இணையம் சாராத ஊடகங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ளும் அளவிற்கு........... முடியாமல் இருக்கின்றதோ என்ற வருத்தம் ஏற்படுகின்றது.

கட்டுப்பாடுகள் தான் ஒரு மனிதனை நல்வழிப்படுத்துகின்றன.அதனால

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

து}யவன்! பெயருக்கேற்றற்போல் து}ய பல கருத்துக்களை வைத்திருக்கிறார்.

இளைய சமுதாயத்தின் சீரழிவுகள் பலவிதமாக இருந்தாலும் கட்டாக்காலி போன்ற இணையத்தின் சீரழிவே பெரும்பான்மையானவை என்றும், ஆனால் எதிரணியினர் அவற்றை மூடிமறைக்க முயல்கின்றனர் என்றும், இணையத்திற்கும் இணையம் சாராத ஊடகங்களுக்கும் இடையிலான வேறுபாட்டையே இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஆரம்பத்தில் குமுறுகின்றார்;.

40 வயதுடைய ஒருவர் ஆபாசமாகப் பார்க்க ஆசைப்பட்ட விடயத்தை விளக்கி "தவளையும் தன் வாயால் கெடும்" என்று ஒரு பழமொழியையும் சேர்த்திருந்தார். பாதிப்பெல்லாம் 30, 40 வயதிற்கு பிறகுதான் என்று காதிலே புூச்சுத்துகிறார் என்றார். இது "நுணலும் தன் வாயால் கெடும்" என்றுதான் வரும் என்று எண்ணுகிறேன். ஆனால் கருத்து ஒன்றுதான்.

யாழ் களத்தை உதாரணம் காட்டி, இரண்டு இலட்சத்தை நெருங்கிவிட்ட கருத்துக்களை எழுதியவர்கள் எல்லோரும் பிரயோசனமாகப் பாவித்தார்களா? பாவிக்கவில்லை! தனிநபர் தாக்குதல்கள், முகக்குறிப்புகள், வீணான அரட்டைகள் போன்றவற்றையே அதிகமாகப் பாவித்திருக்கிறார்கள் என்று அதிகமானோரைச் சாடுகிறார். (இனிமேல் கருத்தெழுதுவோர் கட்டாயம் கவனிக்கவேண்டும்.)

முன்னர் மதில்மேலிருந்து செய்தவற்றைத்தானே இப்போது இணையத்தில் செய்ய இருக்கின்றனர் என்ற எதிரணியினரின் வாதத்தை மதில் மேலிருந்து செய்தவை எல்லாம் சரியானவையா? அதுகூட சமூக சீரழிவின் வெளிப்பாடுதானே என்கிறார். மதில் மேலிருந்து செய்ததெல்லாம் இணையத்தில் செய்யலாமா? ம்! யோசிக்கவேண்டி உள்ளது. முன்னர் மதில் மேலிருந்தவர்களில் சிலர் இப்போது புலத்தில் மிக உயர்ந்த நிலையில் (மீண்டும் மதிலில் அல்ல) இருக்கின்றார்களே! (இதனை எதிரணியினர் தமக்குச் சார்பாக எடுக்கவேண்டாம்).

எம்.எஸ்.என் தமது பகிரங்க அரட்டை அறையை மூடியதற்கான விளக்கத்தைக் கொடுத்திருந்தார். அதிலே உண்மை இருக்கத்தான் செய்கிறது. இது முன்னர் அறிந்த செய்திதான். தமிழ் பிரிவு பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

இவருடைய வாதம் அருமையாகத்தான் உள்ளது. அதைவிட அஜீவன் அண்ணாவின் வாதத்திறமையைப் பார்த்து வியந்த மதனுடைய மூடி மறைக்கும் விவாதத்திறமை இவரையே வியக்கவைத்துவிட்டது என்கிறார். எதிரணியினர் நன்மை பற்றிப்பேசினாலும் தீமை அணிக்கும் உரம் சேர்க்கும் வாதங்களையும் வழங்குகிறார்கள் என்று மகிழ்கிறார். அப்படித்தானா?

தமது ஆண் நண்பர்களையே வைத்திருக்கும் மகள், அவர்களுடன் பல்வேறு படங்களைப் பரிமாறினாள் என்று அறிந்ததும் அவளுடைய பெற்றோர்கள் இணைய இணைப்பில் தில்லுமுல்லுகள் செய்து துண்டித்தார்கள் என்றார். இவற்றை உணராமல் இருக்கின்ற பெற்றோர்களை கதிர்காமக் கந்தன்தான் காப்பாற்றவேண்டும் என்றும் கடவுளை வேண்டுகிறார். கந்தன் "தகப்பன் சுவாமி" என்று பெயர் பெற்றவன். தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்தவன். அதேபோன்று யாராவது அமைந்துவிட்டால்? எதிரணியினர் கூறுவதுதான் என்ன?

இணையத்தின் முன்னேற்றம் இன்னும் 5, 10 வருடங்களில் மேலும் அதிகமாகிவிடும் என்ற குறுக்காலைபோவானின் கருத்திற்கு அப்படியென்றால் இந்த சீரழிவு 5, 10 வருடங்களில் இன்னும் அதிகமாகும் என்று அந்த வாதத்தை தமதணிக்குச் சார்பாக எடுக்கின்றாரா? சும்மா லொள்ளு விடவேண்டாம், விதண்டாவாதம் செய்யவேண்டாம், தனிநபர் தாக்குதல் என்ற போர்வையில் தமது அணியினரையே தாக்கவேண்டாம் என்று தமது அணியின் சார்பாக எச்சரிக்கின்றாரா?

இணையம் இல்லாமலே தமிழ்த்தேசியம் வளர்ந்தது. தமிழ்த்தேசிய போராட்டகால வழிகாட்டலுக்கும், வியுூகங்களுக்கும் இணையம் அல்ல இயற்கைதான் வழிகாட்டியாக இருந்தது என்று சமாதான காலத்திற்கு முந்தியவற்றை நினைவுூட்டுகின்றார்.

இணையமான சடப்பொருளை யாழ்ப்பாணவீதியில் இருக்கும் கல் ஒன்றிற்கு ஒப்பிட்டு தனது கால் விரலுடன் சேர்த்து வாதிக்கின்றார். நாரதரும், குறுக்காலைபோவானும் முன்னர் தமிழ்ச்சமூகம் தமது பொன்னான நேரத்தை மண்ணாக்குகிறார்கள் என்று புடம்போட்டுக்காட்டியவர்கள் என்பதை நினைவுூட்டி, அனைத்தையும் அறிந்து வைத்திருந்தும் அதனை விடுத்து எதையெதையோ செய்கிறார்கள் என்று வேதனைப்படுகின்றார்.

இவருடைய எல்லா வாதங்களின் சிகரமாக, அண்மையில் கட்டுப்பாடுகளை செம்மையாகக் கடைப்பிடிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சிப்பரப்பிலே இணையத்தின் பாதிப்பை அறிந்ததால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்களுக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை என்ற செய்தியினை ஆதாரம் காட்டி தனது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.

து}யவன் தனது வாதத்தின்போது ஆங்காகங்கே சிலவற்றை அனைவருக்கும் நினைவுூட்டினார், சில வேளைகளில் எச்சரித்தார், சிலரை சாடினார், குமுறினார், மகிழ்ந்தார், வேதனைப்பட்டார். மிகவும் திறமையாக தன் வாதத்தினை முன்வைத்தார். எதிரணியினருக்கு உண்மைகளை மூடி மறைக்கவேண்டாம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் எடுத்துரைத்தார்.

"வாதம் செய்வது என் கடமை - அதில்

வழியை காண்பது உன் திறமை"

யாரோ, யாருக்கோ சொன்ன அழகான வரிகள்.

எங்கே எதிரணியினர் வந்து என்ன கூறப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.

நன்றி.

Posted

எல்லோருக்கும் வணக்கம்

பிருந்தன் பங்குபற்றாததால் நான் இதில் பங்க்கு பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டி விட்டது. சரி வாதத்துக்கு வருவோம்.

இணைய்த்தால் இளையோர் நன்மையடைக்கிறார்கள்... என்று சொல்ல முற்படும் அதே வேளை. இளையவர் தூயவன், தல அவர்கள் கூறிய சில பிழையான கருத்துக்களை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் எனக்கு ஏற்படுகின்றது.

தல கூறியது:-

எதிரணித் தலைவர் இளைஞன் உழைப்பாளியாய் ஒரு கவிஞனாய் உயர்ந்த இந்த சஞ்சீவ் என்கின்ற இளையோன்... இணையத்தால் உயரவில்லை சொந்த உழைப்பால் போற்றப்படுகிறார்... என்பதுதானே உண்மை...

இணையத்தால் மட்டுமே புலம்பெயர்ந்த இளைஞர்கள் உயர்கிறார்கள் என்றோ உயர்ந்தார்கள் என்றோ நாம் சொல்லவில்லை. இணையம் என்பது இளைஞர்களின் சிந்தனைக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்கிறோம். அவர்களின் உழைப்புக்கு பக்கதுணையாக இருக்கிறது (பக்கதுணையாக இருக்கிற ஏனைய காரணிகளோடு) என்றே சொல்கிறோம். தல அவர்கள் எழுதிய மேற்கண்ட கருத்தின் மூலம் ஒரு உண்மையை தெளிவாக ஒத்துக்கொள்கிறார். சொந்த உழைப்பால் அதாவது சொந்தச் செயற்பாட்டால் தான் ஒருவர் போற்றப்படுகிறார். அப்படியாயின் அதிலிருந்து இன்னொன்றையும் நாம் விடையாகப் பெறலாம். அது யாதெனின், ஒருவர் தனது சொந்த செயற்பாட்டால் தான் தீமையடைகிறார் அல்லது சீரழிந்து போகிறார் என்பதே அது ஆகும். இது இப்படியிருக்க இணையத்தின்மீது உங்கள் பாவங்களை சுமத்துவது எந்தவகை நியாயம் என்று சொல்லுங்கள்.

எதிரணியினரின் வாதங்கள் எப்படியிருக்கிறதென்றால் எல்லாக் குற்றங்களையும் தாம் செய்துவிட்டு கடவுளின் மேல் பழியைப் போடுவதைப் போல் உள்ளது. தமது பிழைகளால் தாம் அனுபவிக்கிற துன்பத்துக்கெல்லாம் "எல்லாம் அவன் செயல்" என்று அடி முட்டாள்தனமாக சொல்லிவிட்டு தம்மை பொம்மைகளாகக் காட்டிக்கொள்ளும் எதிரணியனரை என்னவென்பது?

தல கூறியது:-

தலைவர் அவர்களே...! இளையோருக்கு இந்த இணையங்கள் புதிதாக ஓண்றையும் செய்துவிடவில்லை... வானொலிகளும்,தொலைக்காட்ச்சிக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

து}யவனின் வாதங்களைப் படித்துமுடித்தபோது இடியோடு கூடிய மழை பெய்து ஓய்ந்ததுபோல் இருந்தது ஆனால் இரசிகையின் வாதங்களைப் படித்து முடித்தபோது இடியோடு கூடிய மழையுடன் புயலும் வீசி ஓய்ந்தது போலிருக்கின்றது. ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அல்ல. வாதத்திறமை அப்படியிருந்தது. து}யவன், தல இருவரின் தலைகளிலும் இடி விழப்போகின்றதோ என்றும் எண்ணத்தோன்றியது.

உலகத்திலுள்ள அனைத்து ஊடகங்களுமே ஒன்றாக உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? பொன்னான நேரமும், பெருந்தொகையான பணமும் இதனால் மிச்சமாகின்றதே. ஒருவரின் சொந்த செயற்பாடுதான் அவரின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் இதனை விடுத்து இணையத்தின்மீது பாவங்களைச் சுமத்துவது எந்தவிதத்திலும் நியாமில்லை என்று அவரது அணியினர் முன்னர் எடுத்து முன்வைத்த கருத்தை இன்னும் ஆணித்தரமாக வைத்தார்.

மற்றைய ஊடகங்களைப்போல் இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றது என்றும், இணையத்தின் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்று அதற்கு உதாரணங்களையும் தந்தார்.

எம்.எஸ்.என் பகிரங்க அரட்டை அறை வேறு, எம்.எஸ்.என் மெஸெஞ்சர் வேறு என்று து}யவன் எழுதிய கருத்திற்கு விளக்கம் கூறினார். முன்னர் இணையம் இல்லாமல் தேசியம் வளர்ந்தாலும் இணையம் இப்போது தேசிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கின்றது என்றார். இப்போது இணையத்தை வீடுகளில் தடைசெய்திருக்கும் விடுதலைப்புலிகள் எதிர்காலத்தில் தடைசெய்யமாட்டார்கள் என்றார்.

யாழ்ப்பாண வீதியில் காலில் தட்டிய கல்லிற்கும் நல்ல விளக்கம் கொடுத்தார். தாம் முன்னேறவேண்டும் என்று தமது அறிவுப்பசிக்குத் தீனியைத்தேடும் இளையோர் இணையத்தினால் பயனடைகிறார்கள், தமது எதிர்காலத்தை எள்ளளவும் எண்ணாது சீரழிக்கும் என்று தெரிந்தும் தாமாகவே இணையத்தில் அப்படியான தளங்களுக்குச் செல்வோர் சீரழிகிறார்கள் என்று உறுதியாகக் கூறுகிறார்.

புலத்தில் வாழும் சில பெற்றோர்கள் கணனி அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதிகமானோர் அதன் நன்மை தீமைகளை அறிந்தவர்களாக இருக்கின்றார்கள் என்றார். மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லையே தவிர தன்னம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று எதிரணியினர் கூறாத வகையில் அவர்கள் சீரழியவில்லை என்பது தெரிகிறது என்றார். வேகமாகத் தகவல்களைப் பெற்று தமது வேலைகளைச் செய்யும் மாணவர்கள் மிகுதி நேரத்தை வீணாக்குவது அவர்களின் இயல்பான குணமேயன்றி வேறொன்றுமில்லை என்கிறார்.

மதகுகளில், தோழியர் வீடுகளில் பெற்ற பயன்களை இணையம் தருவதில்லை, அவனைக் கண்ணியமானவனாக இருக்கவும் அது விடுவதில்லை என்ற எதிரணியினரை நோக்கி மீண்டும் அவையெல்லாம் உங்கள் மனங்களைப் பொறுத்தது என்றும், உலெகெங்கும் சிதறி வாழும் எம் உறவுகளுடன் புரிந்துணர்வுகளை வளர்த்துக்கொள்ளவும், கல்வி வளர்ச்சிக்கும், தொழில் விருத்திக்கும், பொழுபோக்குகள் போன்றவற்றிற்குமே இணையத்தைப் பயன்படுத்துகிறார்களேயன்றி அவர்கள் அங்கே குடும்பம் நடத்தவில்லை என்று ஒரு குத்தல் போடுகிறார்.

எதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். எனவே இணையப் பாவனைக்கும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து நன்மையடையுங்கள் என்று அனைவருக்கும் மிகவும் அழுத்தமாகக் கூறி தனது வாதத்தை நிறைவுசெய்தார்.

இரசிகை எதிரணியினரை சித்தர் என்றும், சமூக சிந்தனையாளர் என்றும், கண்ணியமானவரே என்றும் அவ்வப்போது அழைத்து இறுதியில் (வெறும்) தல அவர்களே! என்று விளிக்கிறார், தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கின்றார். இத்தனைபேரையும் அழைத்து ஓர் அறையுள் வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று நானும் சில வேளைகளில் எண்ணியதுண்டு. அதே கருத்தை இரசிகையும் குறிப்பிட்டிருந்தார். ஆட்களை நேரில் கண்டவுடன் பட்டிமன்றம் வேண்டாம் ஒரு "பார்ட்டி" (Party) வைப்போம் என்றுதான் இளையோர் கேட்பார்கள் என்று நான் எண்ணினேன். ஆனால் இரசிகையோ கத்தியின்றி, இரத்தமின்றி அது நடந்திருக்காது என்றும், அதனைத் தடுத்தது இதனை நடாத்த துணைபோனதும் இந்த இணையமே என்று இணையத்தின் மேலுள்ள தனது காதலை வெளிப்படுத்துகின்றார்.

பட்டிமன்ற வாதம் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டதுபோல ஓர் உணர்வு என்னுள் எழுகின்றது. கத்தி, கோடரி இன்றி சொல்லம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு செய்யும் யுத்தம்தானே இது.

"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு"

என்ற குறளும் நினைவிற்கு வருகின்றது. அப்படியொன்றும் யாரும் மனதில் வைத்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இவையெல்லாம் ஆரோக்கியமான போட்டிகள்தானே. நல்லதொரு இளம் சந்ததியினரை உருவாக்கவேண்டும் என்கின்ற ஆசையினால் நாம் செய்கின்ற அன்புச் சண்டைகள்தானே. இல்லையா?

சரி, எதிரணியிலிருந்து யார் வரப்போகிறார்? ஓ! புூனைக்குட்டியா? வாங்க. வந்து உங்கள் வாதத்தை முன் வையுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அ) தொடக்கம்

ஆ) சீரழிவுகள்

1. உடலியல் தாக்கங்கள்

2. உளவியல் தாக்கங்கள்

3. ஒழுக்கவியல் தாக்கங்கள்

4. சமூகவியல் தாக்கங்கள்

5. பிற தாக்கங்கள்

இ) உதாரணங்கள்

ஈ) எதிர்வாதங்கள்

உ) முடிவு

ஊ) நன்றி

(!) குறித்துக்கொள்க

(?) சரியானதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அ) தொடக்கம்

அனைவருக்கும் வணக்கம்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா (சீரழிந்துபோகிறார்களா) என்பதே இந்தப் பட்டிமன்ற விவாதத்துக்குரிய கேள்வி. இணைய ஊடகமானது பொதுவான பார்வையில் அல்லது வெளித்தோற்றப் பார்வையில் நன்மையளிக்கும் (!) ஊடகமாகத் திகழ்கின்ற போதிலும், அதன் பயன்பாட்டுத் (அல்லது பயனர்) தளத்தில் இளையோரை சீரழிந்துபோகச் செய்வதற்கு சாதகமான ஊடகமாகவே தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. "நெருப்பில்லாமல் புகையாது" என்பார்கள். காரணம் இல்லாமல் கேள்வி எழாது. இணைய ஊடகத்தால் இளையோர் சீரழிந்துபோகிறார்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால், அதன் பொருள் என்ன? இணைய ஊடகத்தாலான சீரழிவுகளின் தாக்கம் எம்மவர் மத்தியில் வலுப்பெற்று வருகிறது என்பதுவே அது.

"கடவுள் இருக்கிறாரா? இல்லையா?" என்ற கேள்வி(சந்தேகம்) இரண்டு வகைகளில் எழுந்தது.

ஒன்று: அறிவியல் தளத்தில் சிந்தனைகளின் மோதல்களில் வெளிப்பட்டது.

இரண்டு: சமூகவியல் தளத்தில் சீரழிவுகளின் எதிர்வினைகளில் வெளிப்பட்டது.

ஆக மொத்தத்தில், இணையம் நோக்கி எழுப்பப்பட்டிருக்கிற யாழ்கள பட்டிமன்றக் கேள்வியும் இவ்விரு தளங்களிலிருந்துமே எழுப்பப்பட்டிருக்கிறது. எனவே அதற்கான விடையையும் அந்த இரு தளங்களில் இருந்தும் அணுகவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆ) சீரழிவுகள்

சீரழிவு என்றால் என்ன என்பதை முதலில் நோக்குவோம். சீர்+அழிவு=சீரழிவு: சமூகத்தின் சீரான ஆக்கபூர்வ(!) செயற்பாட்டில் நிகழ்த்தப்படுகிற அழிவு நோக்கிய மாற்றம். மாற்றம் எப்படி நிகழ்த்தப்படுகிறது? தாக்கங்களால். தாக்கங்கள் என்றால் என்ன? பாதிப்புகள். பாதிப்புகள் எல்லாம் சீரழிவை உண்பண்ணுவனவா? இல்லை. அப்படியென்றால் சீரழிவை உருவாக்கக்கூடிய பாதிப்புகளை எவ்வாறு அடையாளப்படுத்துவது? ஆக்கபூர்வமான விளைவுகளை உண்டுபண்ணாத அழிவுப்பாதையைத் திறந்துவிடுகிற பாதிப்புக்கள் என்றும், சமூகத்தின் முன்னேற்றத்தைக் கணக்கிலெடுக்காததும், சமூகத்தின் சிந்தனை வளர்ச்சிப்போக்கை குன்றச்செய்வதுமான பாதிப்புக்கள் என்றும் அடையாளப்படுத்தலாம்.

அந்த வகையில் இந்தக் கட்டுரையின் மூலம் அலசப்படவிருக்கிற சீரழிவுகளை நான்கு கருப்பொருட்களுக்குள் உள்ளடக்கலாம்.

ஒன்று: உடலியல் சார்ந்து ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.

இரண்டு: உளவியல் சார்ந்து இளையோர் சமூகத்தில் ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.

மூன்று: ஒழுக்கவியல் தளத்தில் ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.

நான்கு: முன்னையவை மூன்றினாலும் சமூகவியல் தளத்தில் ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.

ஐந்து: பொருளாதார நிலையில் ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.

இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதிக விழுக்காடு இணையப் பாவனை கணனி(கணினி?) (மேசைக்கணனி, மடிக்கணனி) ஊடாகத்தான் நிகழ்த்தப்படுகிறது. அதற்கடுத்த இடத்தை கைத்தொலைபேசி வகிக்கிறது. அதற்கடுத்து பால்ம்(palm) போன்ற சாதனங்கள் வகிக்கின்றன. எனவே இவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் (அழிவு நோக்கிய) இணையத்தின் பாதிப்புகளாக கணக்கிலெடுக்கவேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

1. உடலியல் தாக்கங்கள்

உடலியல் தாக்கங்களாக ஐம்புலன்களிலும் நிகழ்த்தப்படக்கூடிய தாக்கங்களை முதன்மையாகக் கொள்ளலாம். இந்தத் தாக்கங்களில் இருந்து இணையப் பாவனையாளர்கள் (கணனி) பாதுகாப்பதற்கான வழிமுறைகள் ஆய்வாளர்களால் அடிக்கடி நினைவுபடுத்தப்படுகின்ற போதும் அதனை பின்பற்றுகிற பாவனையாளர்கள் எத்தனை பேர் என்பது இன்னொரு ஆய்வுக்குரிய கேள்வியாகும். கணனிப் பாவனையாளர்களில் பெரும்பாலானவர்கள் இன்று குழாய்த்திரையைத் (?) (tube monitor) தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். tube monitor இல் காண்பிக்கப்படுகிற காட்சி "வரி வரியாக"த்தான் (line to line) காட்சிப்படுத்தப்படுகிறது. அப்படிக் காட்சிப்படுத்தப்படுகிறபோத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

2. உளவியல் தாக்கங்கள்

உளவியல் தாக்கங்களை இணையம் எப்படி உருவாக்கிறது என்பது சுவாரசியமான அதேநேரம் கவலைக்குரிய உண்மையாகும். (ஒரு உளவியல் பற்றிப் பயிலும் மாணவியாக எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்). இணையம் எப்படி இயங்குகிறது அதன் சேவைகள் அதன் பல பரிமாணங்கள் என்பன பற்றி ஏற்கனவே பலரும் குறிப்பிட்டு விட்டார்கள். இந்த பல் பரிமாணத் தன்மையின் சிறப்பம்சம் எல்லாத்தரப்பினரையும் அவர்களின் ஆர்வத்துக்கேற்ப கவர்ந்திழுக்கக்கூடிய குணாம்சங்களைக் கொண்டிருப்பதுதான். இது வெளிப்பார்வையில் நன்மையாகத் தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தோமென்றால் இலகுவாக ஒருவரை அவரின் பலவீனத்தை வைத்தே அடிமையாக்கும் நிலை இங்கு காணப்படுவது புலப்படும். சாதாரணமாகவே போதைப்பொருள் பாவனையாளர்களை இரு வகையாக நாங்கள் பிரிக்கலாம். ஒன்று போதைப்பொருளை பயன்படுத்துவோர் மற்றையது போதைப்பொருளால் பயன்படுத்தப்படுவோர் (ஆக்கிரமிக்கப்பட்டோர்). முதல் வகையினர் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாவதில்லை (அல்லது குறைவு). இரண்டாவது வகையினர் பெரிதுமாக உளவியல் தாக்கத்துக்கு ஆட்பட்டவர்களாக ஒன்றில் மிக மென்மையானவர்களாக அல்லது மிக வக்கிரமானவர்களாக மாற்றம் பெறுவார்கள்.

நேரடியாக இணையத்தை போதைப்பொருளோடு உப்பிட முடியாத போதும் பாவனையாளர்களை அதே இருவகையினராக நாங்கள் பிரித்து அணுகமுடியும். அடிமைப்பட்டவர்களாகவும் தம்மைச் சுற்றி நடப்பதை மறந்தவர்களாகவும் தனிமையாக தனி ஒரு உலகத்தில் இருப்பவர்களாகவும் இவர்கள் உளநிலையில் மாற்றங்கள் ஏற்படும். சிலநேரங்களில் இணையத்தில் எதுவுமே செய்யாமல் அதை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். எதற்காக தாம் இணையத்தில் இருக்கிறோம் என்கிற நோக்கமே அவர்களிடம் இருக்காது. அப்படியான மனநிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருப்பார்கள். (இப்படியான சிலர் உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்). குறிப்பாக அரட்டை அறைகளில் பல இளையோர் அடிமையாகிப்போய் எதுவுமே செய்யாதவர்களாக மந்தநிலையில் இருப்பார்கள். தமிழர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

3. ஒழுக்கவியல் தாக்கங்கள்

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கும்

இழிந்த பிறப்பாய் விடும்

(பொருள்: நல் ஒழுக்கம் உடைமையே வாழ்க்கை இயல்பு ஆகும். தீய ஒழுக்கம் கொண்டிருந்தால் இழிந்த பிறப்பாகிவிடும்)

மேற்கூறிய உடலியல் உளவியல் தாக்கங்களின் விளைவுகளிலிருந்து ஒழுக்கவியல் தாக்கத்தை பதிலாகப் பெறலாம். முன்னைய தலைப்புகளில் குறிப்பிட்டது போல உணவுப் பழக்கம் தொட்டு பாலியல் ஒழுக்கம் வரையாக இந்த சீரழிவு தொடர்கிறது. உணவுப்பழக்கம் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆதலால் பாலியல் ஒழுக்கம் சார்ந்த சீரழிவுகளைக் கவனிக்கலாம். இணையத்தின் சீரழிவுகளில் மிகமுக்கியமான ஒன்றாக கருதப்படுகிற சீரழிவு இதுதான். பாலியல் தொழில் விரிவடைவதற்கும் பாலியல் வக்கிரங்கள் இளையோர் மனதில் விதைக்கப்படுவதற்கும் இணையம் காரணமாக உள்ளது என்றால் மிகையாகாது.

ஆபாசவார்த்தைகள்

அரட்டை அறைகளும் தமிழ்ச் சினிமாத் தளங்களும் கருத்துத் தளங்களும் இவற்றை வளர்த்துவிடுவதில் பங்காற்றுகின்றன. யாகூ எம்எஸ்என் போன்ற அரட்டைக் களங்களும் தமிழ் இளையோரால் இயக்கப்படுகிற அரட்டை அறைகளும் ஆபாச வார்த்தைகளை பரவலாக பேசிக்கொள்வதற்கான ஒரு இடமாகத்தான் இன்றுவரை இருக்கின்றன. இங்கே பயனுள்ள ஒரு விடயம் நடந்திருக்கிறதா என்றால் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்றையும் அறியமுடியவில்லை. பல வயதையுடையவர்களும் வந்து போகிற ஒரு அரட்டை அறைக்குள் ஆபாச வார்த்தைகள் எழுதப்படுகிறபோதோ பேசப்படுகிறபோதோ இதுவரை அவற்றை அறியாதவர்கள் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கப்படுகிறத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

4. சமூகவியல் தாக்கங்கள்

சமூகவியல் தாக்கங்கள் என்பதில் மனித உறவுகளை முன்னிலைப்படுத்தலாம். இணையப் பாவனையால் மனித உறவுகளில் நடக்கின்ற மாற்றங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இணையப் பாவனையாளர்கள் உறவுகளிடமிருந்து தனிமைப்படுகிறார்கள். நண்பர்களை சந்திப்பதைக் குறைத்துக்கொள்கிறார்கள். தனக்கு அருகிலிருப்பவர்களிடமிருந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

5. பிற தாக்கங்கள்

பொருளாதாரவியல்

இணையப்பாவனையால் ஏற்படுகிற பொருளாதார தாக்கம் பலவகையானது. முதலில் இணைய இணைப்புக்கான செலவு. வேகம் கூடக் கூட இணைப்பிற்கான கட்டணமும் அதிகரிக்கிறது. வேகமான இணைப்பை வைத்திருக்கவே பலர் விரும்புகிறார்கள். அதனால் அதற்கான பணச்செலவு அதிகரிக்கிறது.

இணைப்பு கிடைத்தபிறகு அதில் தோன்றுகிற விளம்பரங்களால் ஏற்படுகிற நட்டங்கள். சில ஆபாசத்தளங்களுக்குள் போவதுக்கான மென்பொருள் கணனியில் -தானாக- பதியப்படும். அதன்மூலம் உள்ளே போய் பார்க்க ஆசைவரும். போவார்கள். அதனால் பணச்செலவு ஏற்படும்.

இணையத்தில் வைரஸ்களின் தொல்லைகள் அதிகம். அதற்கான பாதுகாப்புகளை செய்யவேண்டியுள்ளது. அதற்கு பாதுகாப்பு மென்பொருட்கள் தேவைப்படுகிறது. பணம் செலவாகிறது. பாதுகாப்பில்லாமல் வைரஸ் தாக்கினால் கணனியைத் திருத்துவதற்கு மீண்டும் பணச்செலவு ஏற்படுகிறது. வைரஸ் தாக்குதல் மட்டுமில்லை crackers இன் தாக்குதல்களும் அதிகம் இணையத்தில் இருக்கின்றன. அவர்களிடம் மாட்டுப்பட்டால் கணனியை திருத்துவதற்கு பணச்செலவு.

spyware - adware - spams என்று பல தொந்தரவுகள். இவற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான செயலிகளின் தேவை. அவற்றுக்கான பணச்செலவு. பாதிக்கப்பட்டால் பிறகு ஏற்படுகிற பணச்செலவு.

மொழியியல்

மொழி பற்றி பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் போன்ற மொழிகள் இணையத்தால் எப்படி பாதிப்புக்குள்ளாகியிருக்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இ) உதாரணங்கள்

1. அவசரத்தில் வெளியிடும் செய்திகளில் ஏற்படும் தவறு

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9192

2. பொழுதுபோக்கு சினிமாக் கிசுகிசுக்களில் ஆர்வம் காட்டுபவர்களும் விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களும்

சினிமா: http://www.yarl.com/forum/viewforum.php?f=39

விஞ்ஞானம்: http://www.yarl.com/forum/viewforum.php?f=10

3. யாழ்களம் போன்று புலம்பெயர்ந்த இடத்திலிருந்து இயங்கும் ஒரு இணையத்தளம் சொல்லுங்கள்.

4. புலம்பெயர்மண்ணிலிருந்து -இளைஞர்கள் பயன்பெறக்கூடிய- இளைஞர்களால் செய்யப்படுகிற 10 இணையத்தளங்களைப் பட்டியலிடுங்கள்.

5. இணையம் மூலமான தொடர்பையடுத்து டென்மார்க்கில் சந்தித்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் இளம் பெண்.

6. ஒரு இளம் குடும்பத் தலைவர். மனைவியும் ஒரு குழந்தையும் இருந்தது. பிரான்சில் இருந்து லண்டனிலிருக்கிற ஒரு இளம்பெண்ணைக் காதலித்தார். இவரின் அன்பில் அந்தப் பெண்ணும் இவரைக் காதலித்தாள். இணையத்தில் தொடங்கிய காதல் தொலைபேசி வரை வந்தது. குடும்பத்தை விட்டுவிட்டு லண்டன் போகத் துணிந்தார் இவர். அவளுக்கு இவருக்கு குடும்பம் இருக்கிற விசயம் தெரிய வந்தது. மனம் நொந்தாள். இவருக்கும் வீட்டில் பிரச்சனை. நல்லகாலம் கடைசிவரை இருவரும் சந்திக்கவில்லை. சந்தித்திருந்தால் அவளின் வாழ்க்கை வேறாக மாறியிருக்கும். அவள் தன்னை தேற்றிக்கொண்டுவிட்டாள். இவருக்கு குடும்பத்தில் பிரச்சனையால் குடும்பத்தோடு இல்லை. மனைவியும் பிள்ளையும் பாவம்.

7. யேர்மனியில் வசித்த ஒரு பெண். இங்கு பிரான்சில் இருக்கிற ஒருவரை இணையத்தின் மூலம் காதலித்தார். அதுவும் சிலகாலம் தொடர்ந்தது. பிரான்சுக்கு வந்தநேரம் அவனை சந்தித்தாள். உடலுறவு கொண்டார்கள். வீட்டுக்கு தெரியவந்தது. அவனுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பேசுவதாக சொல்லி மறுத்துவிட்டார்கள். பெண்ணின் நிலை பரிதாபம். இப்பொழுது பெண் வேறு நாட்டில் இருக்கிறாள். படிக்கிறாள்.

8. பிரான்சில் இருக்கிற ஒருபெண்ணுக்கும் லண்டனில் இருந்த ஒரு இளைஞனுக்கும் இணையத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. அவர்களின் காதலும் சிலகாலம் தொடர்ந்தது. லண்டனில் உறவினர்களிடம் சென்றபோது அந்தப்பெண் அவனை சந்தித்தாள். சிலதடவைகள் லண்டன் சென்று வந்தாள். சென்றபோதெல்லாம் அவனை சந்தித்தாள். ஒருநாள் அதுவும் நடந்தது. பின்பு அவனுக்கும் வீட்டில் ஊரில் கல்யாணம் பேசியிருப்பதாக கூறி மறுத்துவிட்டார்கள். அவன் இப்போது திருமணம் முடித்து வாழ்கிறான். ஆனால் பெண்தான் பாவம்.

.......

இவை கற்பனைக்கதைகள் அல்ல. நடந்த கதைகள். ஆண்கள் ஆண்களால் ஏமாற்றப்பட்ட கதைகளும் இருக்கு. ஆண்கள் பெண்களால் ஏமாற்றப்பட்ட கதைகளும் இணையத்தில் நடந்து இருக்கு.

இன்னும் உதாரணங்கள் நிறைய உண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஈ) எதிர்வாதங்கள்

o இளைஞன் அண்ணா

வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா? கீழ்நோக்கி நகர்வதா? - மரம் மேல் நோக்கி வளர்கிறது. வேர் கீழ்நோக்கி வளர்கிறது.

எண்டு இளைஞன் அண்ணா சொன்னார். அண்ணா நாங்க மரமே வளரல மரம் பட்டுப் போகுது வேர் அழுகிப் போகுது எண்டு சொல்லுறம். வளருதா இல்லாட்டி சீரழியுதா எண்டுறது தானே அண்ணா தலைப்பே. நீங்க மேல நோக்கி வளருது கீழ நோக்கி வளருது எண்டு நகைச்சுவையள் சொல்லி சிரிக்க வைக்கிறியள்.

உலக மொழிகளில் இணையப்பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில்

இருப்பது தமிழ் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. புதிய புதிய இணையத்தளங்களின்

தோற்றங்களும், அவற்றின் பயன்பாடுகளும் எத்தகையன என்பது எதிரணியினர் அறியாததா?

புதுசு புதுசா இணையத்தளங்கள் வருகுது எண்டுறது ஒரு பக்கமா இருக்கட்டும். புதுசு புதுசா முளைச்சு வாறதுகள் எல்லாம் ஊனத்தோட (மன்னிக்க) வந்தாலும் பறவால்ல. வாறதுகள் எல்லாம் தொற்றுநோயள காவிக்கொண்டெல்லோ வருகுதுகள். அந்த தொற்றுநோயள் பரவி கடைசில சிகிச்சைக்கு என்ன செய்யிறதெண்டு முழிக்கிறதுக்கு முதலே தீர்வுகள காணுங்கோ.

இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,

கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,

அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே

அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி. அதனடிப்படையில், இணைய ஊடகத்தால் இளம்

சமூகம் சீரழிகிறது என்று வாதாட வந்திருக்கும் எதிரணி இளைஞர்களும்

நன்மைபெறுபவர்களாகவே உள்ளார்கள் என்பதனை அவர்களுக்கு சுட்டிக்காட்ட

விரும்புகிறோம்.

தங்கட முகத்தயும் அடையாளத்தையும் மறைச்சுக்கொண்டு கருத்துகள வைக்கத்தானே இந்த இணையத்தளங்களில நடக்கிற கருத்தாடலுகள் வழிசெய்யுதுகள். 80 விழுக்காடு ஆக்கள் இளமாக்கள் எண்டு எப்பிடி உறுதியா சொல்லுவீங்கண்ணா? முகமூடியளோட திரியிற இவையில யார் ஆம்பிள? யார் பொம்பிள? யார் இளமாள்? யார் கிழடு? எண்டு எப்பிடி தெரிஞ்சுகொள்ளுவீங்க? பெண்ணாக இருக்கிறவை தங்கள ஆணாயும் | ஆணாக இருக்கிறவை தங்கள பெண்ணாயும் | வயது கூடினவை தங்கள வயது குறைஞ்சவை எண்டும் | குண்டா இருக்கிறவை தங்கள மெலிஞ்ச கட்டான உடம்போட இருக்கிறமாதிரியும் இணையத்தில அடையாளப்படுத்தலாமே? இதுகள வச்சுக்கொண்டு சும்மா கற்பனைல கணிப்புகள செய்யிறது எதுக்குமே உதவாதண்ணா. மனுசர்கள் சிலதுகள் தங்கள பறவையள காட்டிக்கொள்ளுற உதாரணங்கள யாழ்களத்திலயும் உங்களுக்கு எடுத்துக் காட்டவா? சரி யாழ்களம் மாதிரி நன்மை தாற தமிழ் களங்கள் எத்தின இருக்கு? தமிழ் களங்களால மட்டும் தான் நன் பெறேலும் எண்டு சொல்லேலாது வேறு மொழி களங்களிலயும் நன்மை பெறலாம் எண்டு சொன்னியள். அப்பிடியான களங்களுக்கு எத்தின எங்கட இளமாக்கள் போறவை எண்டு சொல்லுங்கோவன். கண்கெடுப்பு ஒண்டு நடத்தினா உங்கட கற்பனையள் எல்லாம் கற்பனையாவே போயிடுமண்ணா.

அறிவுசீவிகளாக தங்களை தாங்களே வரித்துக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தை

உருவாக்கி, அந்த வட்டத்துக்குள் தாமே பெரியவர்கள் என்றும், இவர்கள் சிறுவர்கள் என்றும்

வளர்ந்துவரும் இளைஞர்களைப் புறம்தள்ளுவதுதான் வெளியுலகம். அவர்களைத் தாண்டி,

அவர்தம் அறிவிலித்தனத்தைத் தகர்த்தெறிந்து நம்மாலும் முடியும், நாமும் வளர்வோம்

என்கிற இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த

இணைய ஊடகம் என்றால் மிகையாகாது.

அண்ணா புறக்கணிப்பு எங்கதான் இல்ல? எல்லா இடத்திலயும் இருக்கு. இணையத்திலயும் அது இரக்கண்ணா. தங்கள அறிவாளியளா காட்டிக் கொள்ளுறதும் பிறகு மற்றாக்கள மட்டந்தட்டுறதுமு் இணையத்திலயும் இருக்கு. இதுக்கும் யாழ் களத்த உங்களுக்கு முன்னுக்கு உதாரணமா வைக்கலாம். நீங்க ஒரு கருத்த வச்சா உங்கள மட்டமா விமர்சிக்கிறதும் உங்கள மாற்றுக்கருத்தாளன் எண்டு நக்கலடிக்கிறதும் புரட்சி புதுமை எண்டு சொல்லி கிண்டலடிக்கிறதும் பெண்ணியவாதியள் எண்டு கேலி பண்ணுறதும் யாழ் களத்திலயே நடக்கலயா அண்ணா? நீங்க சொல்லுற அந்த வெளியுலகத்தில இருந்துதான் இந்த இணையமும் இயங்குது எண்டுற மறந்திட்டீங்க போல நீங்க.

வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் இளம் சமூகம் ஒருங்கிணையவும், தமக்குள் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், அதனூடாக பல செயற்திட்டங்களை வகுக்கவும், வகுத்த செயற்திட்டங்களை ஒன்றுகூடி செயற்படுத்தவும் பலமாக, பாலமாக இருப்பது இணையம் என்றால் மறுக்கமுடியுமா?

நட்புறவ வளத்தா பறவா இல்ல. நட்புறவ வளத்துக் கொள்ள இடமளிக்கிற அதே இணையத்தில தான் அதுக்கும் அதிகமான அளவு பகையுணர்வ வளர்த்துகொள்ளுறதுக்கும் இடமிருக்கு. செயற்திட்டங்கள வகுக்கிறதுக்கும் வகுத்த செயற்திட்டங்கள ஒன்றுசேர்ந்து செயற்படுத்துறதுக்கும் பலமா இருக்கெண்டு சொல்லுறீங்க. நான் அத மறுக்கல அண்ணா. ஆனா எப்பிடியான செயற்திட்டங்கள? குழுமோதல்களுக்கான செயற்திட்டங்கள. ஒரு பெண்ணை பத்துப்பேர் எப்பிடி காதலிக்கலாம் எண்டுறதுக்கான செயற்திட்டங்கள. அந்த இணையத்தளத்த எப்பிடி ஊடுருவலாம் எண்ட செயற்திட்டங்கள வகுக்கத்தானே?

சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தை

உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை

உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?

உங்கள நினைச்சா எனக்கு அடிக்கடி சிரிப்புத்தான் வருது. சாதி சமயம் ஊர்ப்பாகுபாடுகள் களைஞ்சு தமிழர் எண்டுற தேசியத்த உணரவைத்திருக்கிறதா? பாவம். பகல்கனவு. சாதிகளின்ர பெயர சொல்லி சண்டை பிடிக்கிற இளமாக்கள யாகூ போன்ற அரட்டை அறைகளில காட்டுறனஇ வாறீங்களா? சமயப் பாகுபாட்ட அப்பட்டமா வெளிக்காட்டுற வலைப்பதிவுகள காட்டுறன் பார்க்க நீங்க தயாரா? அதவிடுங்கோ. யாழ் களத்திலய இந்து சமயத்தின்ர குறைபாடுகள விமர்சிச்சு சிலபேர் கருத்து வச்சிருக்கினம். அதுக்கு சில மதம் பிடிச்சவை சில பேர் இந்து மதத்துக்கு எதிரா கருத்து வச்சா அத நிர்வாகம் விடுது ஆனா மற்ற மதத்துக்கு எதிரா வச்சா விடுவினமா எண்டு அப்பட்டமா மதவெறிய காட்டினதுகளும் யாழ்களத்தில இருக்கு. தேடிப்பிடிச்சு காட்ட நான் தயார். சன்மானம் தர நீங்கள் தயாரா? சகோதரத்துவமா (அய்யோ அய்யோ)? சண்டைக்காரர்களாத்தானே இணையம் புகலிட தமிழ் இளைஞர்கள வளத்து விட்டிருக்கு.

இளையோர் மீது (குறிப்பாக இளம் பெண்கள்) கருத்தியல் சுதந்திரத்தில் தலையிட்டு,

கருத்தியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வெளியுலகத்துக்கு மாற்றாக, சுதந்திரமாகவும்

சுயமாகவும் தனது கருத்தை, தனது எண்ணத்தை, தனது உணர்வுகளை வெளிப்படுத்த

வழிசமைத்துக்கொடுத்திருப்ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

o அனித்தா அக்கா

எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்...

அனித்தா அக்கா நீங்க சொல்ற மாதிரி அவையவை வாழுற நாட்டு மொழில இருக்கிற இணையத்தளங்களுக்கு போகினம் எண்டு வைச்சு கொள்ளுவம். ஆனா எந்த வகையான தளங்களுக்கு போகினம் எண்டு சொல்லுங்க பார்ப்பம்? அதுவும் சினிமாத்தளங்களாவும் இல்லாட்டை அரட்டையடிக்கிற தளங்களாவும் அதுவும் இல்லாட்டி பொப் ஸ்ரார்கள பற்றின தளங்களாவும் தான் பெரும்பான்மையாக இருக்கும். ஏற்கனவே சினிமா மோகத்தில இருக்கினமா இல்லையா எண்டுறது பிரச்சனையில்ல. இணையம் அதுக்கு துணை போகிறதா இல்லையா எண்டுறது தான் பிரச்சனை.

சினிமாவை, நடிகர் நடிகையரை, அவர்களின் நெளிக்கோலங்களை இணையத்தின் பரவலாக்கத்திற்கு முன்னரே சஞ்சிகைகளிலும் பக்கம் பக்கமாக அலசினார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்... சினிமா இணையப்பக்கங்களை புரட்டுவதால் தான் இளைஞர்கள் சீரழிந்துபோகிறார்கள் என்றால், அதற்கு காரணம் இணையம் அல்ல சினிமா என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ளவேண்டும்....!

இதப்பற்றி முதல்ல எங்கட அணி ஆக்கள் சொல்லிட்டினம் தான். திரும்ப நான் ஒண்ட சொல்ல விரும்புறன். முந்தியெண்டாலும் பறவால்ல சஞ்சிகையில பாத்திட்டு அத வெட்டி மடிச்சு ஏதாவது ரமூலை முடுக்கில வச்சினம். இப்ப ஐஸ்வர்யா ராயின்ர முதல் தொட்டு ஏஞ்சலஸ் எண்டு அவையின்ர படத்த எல்லாம் ஸ்கிறீன்சேவரா கணனித் திரையில பாவிக்கினம். கணனிய போட்ட கண்ணுக்கு முன்னால வாறது உந்த கறுமங்கள் ஐஸ்வர்யா ராயின்ர படமும் அசினின்ர படமும் தான். அம்மா அப்பான்ர படத்த எத்தின பேர் போட்டு வைக்கினம்.

ஐயா எதிரணித் தலைவர் அவர்களே, சினிமாப் படங்களைத் தரவிறக்குவதும், கல்யாணக்காட் அடிப்பதும் (இது கணினி சார்ந்தது, இணையம் இல்லாமலே இதை செய்யலாம்.) தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரும், வானொலிகளில் மணிக்கணக்கில் அரட்டையடிக்கும் பெற்றோரும் இதைத்தான் வித்தகமாக நினைத்து பெருமையடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் வட்டம் குறுகியது. ஆனால் உண்மையில் அதனையும் தாண்டி பிள்ளை நிறைய பயனுள்ள விடயங்களை செய்து பயனடைகிறது.... வலைப்பதிவுகளை வாசிக்கிறார்கள்... தமக்கான ஒரு இணையப்பக்கத்தை செய்து தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள். யேர்மன் எழுத்தாளர் சோழியான் அண்ணா, சுவிசில் வசிக்கும் ஒளிப்பதிவுக் கலைஞர் அஜீவன் அண்ணா, போன்ற இன்னும் பல இலக்கியவாதிகளுடனும் கலைஞர்களுடனும் தொடர்புகளைப் பேணுகிறார்கள். என்னைப் போன்றவர்கள் கூச்சமில்லாமல் கவிதைகளை எழுதிப் பழகுகிறார்கள். தாயக செய்திகளை உடனுக்குடன் படிக்கிறார்கள். உலக நடப்புக்களை அறிந்து அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள். இவை பெற்றோருக்கு தெரியாது தான் ஏனென்றால் அவர்கள் குறுகிய வட்டத்துக்குள்ளே இருக்கிறார்கள். எனவே பெற்றோரின் குறுகிற பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு இளைஞர்கள் இணையத்தால் சீரழிகிறார்கள் என்ற வாதம் குழந்தைப்பிள்ளைத்தனமானது....!

அனிதா அக்கா செவ்வாயில குடியேறி எத்தின காலம்? இல்ல நீங்க இந்த உலகத்தில இருக்கிற மாதிரி எனக்கெண்டாத் தெரியல. தமிழ் வலைப்பதிவின்ர காலம் ஒரு ஒண்டரைல இருந்து இரண்டு வருசம் இருக்குமா? அத வாசிக்கிறாக்கள் ஒரு 1000 இல இருந்து 3000க்குள்ள வருமா? அந்த 3000க்குள்ள இளைஞர்கள் ஒரு 1900ம் பேர் வருமா? அதில புலம்பெயர்ந்து வாழுற ஈழத் தமிழ் இளைஞர்கள் 300 பேர் வருமா? மொத்தமா இணையத்தளம் பாக்கிற இளைஞர்களுக்குள்ள இந்த 300 பேர் எல்லாம் ஒரு கணக்கா?

தங்களுக்கான இணையப்பக்கங்கள செய்யிற ஆக்கள் எத்தின பேர்? அந்த இணையத்தளங்களில வாற விசயங்கள் என்ன எண்டு பாப்பமா? இலவசமா குடுக்கிற வழங்கிகள வச்சுக்கொண்டு தனக்கு பிடிச்ச நடிக நடிகை யாரெண்டும் அவையின்ர படங்களையும் போட்டு வைக்கிறத தாகே செய்யினம்? நீங்க சொன்ன ஆக்களோட எல்லாம் தொடர்ப வச்சிருந்தா நீங்க எல்லாம் பெரியாக்களாகிடுவீங்களா? நீங்க சுயமா ஏதாவது செய்தாத்தான் உங்களுக்கு புகழ். அதவிட்டிட்டு அவையோட தொடர்பு வச்சிருக்கிறன் இவையோட தொடர்பு வச்சிருக்கிறன் எண்டா என்ன அர்த்தம்?

உலக நடப்புகள அறிஞ்சு கொள்ளுற ஆக்கள பாப்பம்? இணையத்த திறந்தோடன போறது முதல்ல இண்டைக்கு எந்த நடிகைக்கும் எந்த நடிகருக்கும் கல்யாணம் எண்டு பாக்கவும் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் எண்டு பாக்கவும் தானே? இதுக்கும் யாழ் களத்தில உதாரணஞ் சொல்லவா? அல்வா கொடுத்த ஐஸ்வர்யா ராயெண்டு புது தலைப்பு தொடங்கி அதுக்கு கீழ கண்ணீர் வடிக்கிறதுக்கெண்டு ஒரு கூட்டமும் விசிறிவிடுறதுக்கு ஒரு கூட்டமும் திரியிறது இங்க நடக்குதே. உதுகள கவனிக்கிறேலயா? ஐஸ்வர்யா ராய் யாரக் கட்டினா உங்களுக்கு என்ன வந்திச்சு? அவான்ர பிள்ளைக்கு உங்கட பேர வைக்கிதெண்டு சொன்னாவோ? மானங்கெட்ட பிழைப்பு நடத்துற எங்கட இளசுகளுக்கு இணையம் உதவி செய்து எண்டுறது இதில இருந்தே தெரியலயா?

படம் இறக்கிறதயும் கல்யாணக்காட் அடிக்கிறதயும் விட்டா பெரும்பாலான இளைஞர்களுக்கு என்ன தெரியுமெண்டுறீங்க? அதவிடுங்க கணனியே பாவிக்கத் தெரியாததுகளுக்கெல்லாம் வீட்டில இணையத்தளத்த பூட்டிக்குடுத்திட்டு இருக்கினம் தாய்தகப்பன். கணனிய ஒழுங்கா பாவிக்கத் தெரியாதவை இணையத்தில என்ன பிரயோசனமா செய்து கிழிக்கப் போயினம்?

எதிரணித் தலைவர் அவர்களே, மனதிலுள்ள வக்கிரங்கள் என்று நீங்கள் சொன்னதன் மூலம் ஏற்கனவே அவர்கள் சீரழிந்துதான் உள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்... இணையப் பரவலாக்கத்துக்கு முன்னரே மனதில் உள்ள வக்கிரங்களை சுவர்களிலும், பேருந்துகளிலும் இறக்கி வைத்தார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

ஏற்கனவே சீரழிஞ்சிருக்கட்டும். சீரழிஞ்சு போனதுகள இன்னும் சீரழிக்கிறதும் சீரழிவு தானே? ஏதோ ஒரு மூலையில இருக்கிற சீரழிவ உலகமெல்லாம் காவி தொற்றுநோய்போல பரப்புறதும் சீரழிவுதானே? இந்தியாவில பெரியார் எண்டு ஒருத்தர் இருந்தவர். அவரின்ர சில வரியள இங்க உங்களுக்கு நினைவுபடுத்துறது பொருத்தமா இருக்குமெண்டு நினைக்கிறன். கடவுள கற்பித்தவன் முட்டாள்......கடவுள பரப்பியவன் அயோக்கியன்.....கடவுள வணங்குறவன் காட்டுமிராண்டி எண்டு சொல்லியிருக்கிறார். அதத்தான் நாங்களும் சொல்லுறம். சீரழிவுகள பரப்புற இணையமும் அயோக்கியத்தனமானது எண்டு.

யாகூ சாற் ரூம்கள் பற்றி எதிரணித் தலைவர் குறிப்பிட்டார்.... அவர் கெட்டதை மட்டுமே ஒலிவடிவில் கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.... அது ஒரு சிறு துளிதான். யாகூ அரட்டை அறைகளிலே ஒலிவடிவிலான பட்டிமன்றங்கள் நடந்தனவே அவற்றை நீங்கள் அறியவில்லையா? ஒரு சில கெட்டவர்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்று வெளிநாட்டவர்கள் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது உங்கள் வாதம்..... எதிரணித் தலைவர் யாழ் போன்ற தமிழ்த் தளங்களை மட்டுமே மையமாக வைத்து தனது வாதத்துக்கு வலுச்சேர்க்கிறார்..... யாழுக்கும் அப்பால் பல வேற்றுமொழித் தளங்களின் மூலம் தமிழ் இளைஞர்கள் பயனடைகிறார்கள் என்பதுவும் அதன் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதுவும் எதிரணியினர் அறியவில்லைப் போல் உள்ளது....

அனிதாக்கா அனிதாக்கா....ஒலிவடிவில நடந்த பட்டிமன்றங்கள் எத்தின பேரால நடத்தப்பட்டிருக்கு? அது எவ்வளவு காலத்துக்கு தொடர்ந்த நடந்தது? இப்பவும் அது தொடருதா? இந்த கேள்வியளுக்கு உங்களால என்ன பதில் தரமுடியும்? இவ்வளவு பட்டியலிட்டா பிறகும் ஒருசில கெட்டவைகள் தான் நடக்குது எண்டு நீங்க இனியும் சொல்லுவீங்க எண்டா உங்களுக்காக நான் மிக வருந்துறன். வேற மொழித் தளங்கள பற்றி முதலில சொல்லிட்டன். தமிழ்ச்சினிமால அரைவாசிப்பேர் மூழ்கி இருக்கினமெண்டா மேற்கத்தய பாட்டு மோகத்தில (கெட்ட கெட்ட வார்த்தைகளில படிக்கிறதுகளெல்லாம் பாட்டாகிட்டு) மிச்சப்பேர் திரியினம்.

இன்று பெரும்பாலான பயனுள்ள தமிழ் இணையத்தளங்களை நிர்வகிப்பவர்கள் யார்? தாங்கள் கற்ற தொழில்நுட்பத்தின் மூலம் இணையத்தளங்களை வடிவமைத்து வழங்குபவர்கள் யார்? இளைஞர்கள் தான் என்கிற உண்மையை மறுக்கப் போகிறீர்களா? இன்று இந்த பயனுள்ள இணையத்தளமான யாழ் இணையத்தை வடிவமைத்தும் நிர்வகித்தும் வருகின்ற மோகன் அண்ணா இளைஞர் இல்லையா? இன்று உடனுக்குடன் செய்தியை ஓடிப்போய் புதினம் செய்தித்தளத்தில் பார்க்கிறீர்களே அதனை நிர்வகிப்பவர் யார்? ஒரு இளைஞர் தானே? வலைப்பதிவுகள் பலவற்றில் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதையும் அதன்மூலம் தமிழில் பல நல்லவிதயங்களை அவர்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எப்படி மறந்துபோனீர்கள்? இலக்கிய இதழ்களான அப்பால் தமிழ், தமிழமுதம், பதிவுகள் போன்ற இணையத்தளங்களை மூத்தவர்கள் நெறிப்படுத்த தொழில்நுட்ப உதவிகள் செய்பவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழ் சமூகத்துக்கு எதனைச் செய்தார்கள் என்று கேட்கிறீர்களே தமிழ்த்தேசியத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உறுதுணையாக பல தளங்களை உருவாக்கி நெறிப்படுத்துபவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழீழப் இலக்கியப் படைப்புகள் பல வெளிஉலகத்துக்கு தெரியாமல் இருந்ததே அவற்றையெல்லாம் இணையம் ஊடாக உலகத்தமிழர்கள் அறியும் வகை செய்தவர்கள் யார்? html கற்போம், java கற்போம், வீடியோத் தொழில்நுட்பம் கற்போம், விஞ்ஞானம் அறிவோம் வாருங்கள் என்று தமிழ்சமூகத்தை தொழில்நுட்ப அறிவையும், அறிவியலையும் வளர்க்க இணையம் ஊடாக வழிசெய்தவர்கள் யார்? இன்னும் இன்னும் நிறைய சொல்லலாம்....

இணையத்தளங்க நிர்வகிச்சா போதாது. தொழில்நுட்பங்கள படிச்சா போதாது. இதெல்லாம் செய்தாபோல நன்மையடையினமெண்டு யார் சொன்னது? கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக எண்டு வள்ளுவன் சொல்லி வச்சானே அதுமாதிரி நடக்கோணும். அப்பதான் பயனடையினமெண்டு அர்த்தம்.படிச்ச தொழில்நுட்பத்த வச்சு என்னத்த பெருசா செய்திட்டினம்? இலட்சக்கணக்கில இணையத்த பாக்கிற இந்த தமிழ் இளைஞர்களில எத்தின பேராம் இணையப்பக்கத்த உருவாக்கினம். அவை உருவாக்கினதில எத்தின பக்கங்கள் பயனுள்ள பக்கங்கள்? ஒரு கணக்கெடுத்த நடத்திப் பாப்பமா? தமிங்கிலத்தில இருக்கிற தளங்கள் 30 விழுக்காடுகளத் தாண்டும். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில இருக்கிறதுகள் 50 வீழுக்காடத் தாண்டும். மிச்சமிருக்கிற 20 ல 10 விழுக்காடு தமிழில இருந்தாலும் பயனில்லாத சினிமாக் குப்பயைள காவி வாற தளங்கள். கடைசியா மிஞ்சி இருக்கிறதில எத்தன வீதமான பக்கங்கள் உண்மையான தகவல்கள தாங்கி வருது? எத்தின வீதம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுது? அனித்தாக்கா நீங்க சொன்ன அந்த மூன்று இலக்கிய பக்கங்கள விட வேற ஒரு நாலு புலம்பெயர் ஈழத்தமிழர்களால அதுவும் இளைஞர்களால தொழில்நுட்ப உதவி செய்யப்படுற இலக்கிய பக்கங்கள பட்டியலிட முடியுமா உங்கட அணியால? முடியாது. ஆக உலகத்தில எண்ணிக்கைல ரண்டாவது இடத்தில இருக்கிற தமிழ் இணையப் பக்கங்களில மூன்றே மூன்று இலக்கிய தளங்கள வச்சுக்கொண்டு நன்மையடையினம் எண்டு சொல்லி வாதாட வந்திருக்கிற உங்கள நினைச்சு அழவா சிரிக்கவா எண்டு தெரியல. தமிழீழ விடுதலை போராட்டுத்துக்கான பக்கங்கள ஈழத்தில இருந்தே செய்யினம். அப்பிடி இங்க இருக்கிறாக்கள் செய்யிறதுகள எண்ணினாலும் ஒரு 20 இல இருந்து 30 க்குள்ளதான் வரும். அதில உண்மையாவ தேசித்துக்கு துணையா இருக்கிறதெண்டு பாத்தா ஒரு கை விரல்களுக்குள்ள அடக்கலாம். தமிழீழ இலக்கியத்த உலகத்துக்கு எப்பிடி அறிய வச்சவை? மொழிபெயர்த்து மற்ற மொழிகளில மற்ற நாட்டுக்காரரின்ர பக்கங்களில போட்டு ஈழத்தமிழ் இலக்கியத்த பரப்பினவையா? இலக்கியமெண்டா சூரியக்குடும்பம் தாண்டி ஓடுறவை தான் இந்த இணையம் பாக்கிற 90 வீத இளைஞர்கள். இதில இவை இலக்கியத்த உலகம் முழுக்க வெளிச்சம் போட்டுக் காட்டினவையாம் (அய்யோ அய்யோ). HTML JAVA VIDEO பற்றி எங்கயாவது முழுமையா இருக்கா? எல்லாம் அரைகுறை. இதுக்குள்ள இத வச்சு நாங்க என்னத்த படிச்சு கிழிக்கிறது? விஞ்ஞானத்த பிபிசில போய் வாசிச்சா விளக்கமா இருக்கு. அத மொழிபெயர்த்து போடுறத வாசிக்கிறவ எத்தின பேர்.

எதிரணித் தலைவர் அவர்களே கூத்தடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் டிஸ்கோ இருக்கிறது. டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... !

இணையமில்லாமல் இதெல்லாம் நடக்குதெண்டு யார் சொன்னது. கைத்தொலைபேசி இலக்கத்த கடவுளென்ன கனவில கொண்டுவந்து குடுக்குறாரோ? முதலில அரட்டை அறை வழிய தான் கைத்தொலைபேசி இலக்கங்கள் மற்றாக்களிட்ட பரவுது எண்டுற விசயம் அனித்தா அக்காக்கு தெரியேல போல. அதுக்கு பிறகு தொலைபேசில கதைச்சு ஏதாவது ஒரு நிகழ்ச்சில சந்திச்சு பிறகு அங்கால நடக்குறதெல்லாம் சீரழிவுகள். அரட்டை அறையில ஓராளுக்கு கிடைக்கிற இலக்கம் பிறகு அவரின்ர நண்பர் நண்பரின்ர நண்பர் எண்டு அப்பிடியே பரவி ஆளாளுக்கு மாறி மாறி கடைசில என்ன நடக்கும் எண்டு நான் இங்க சொல்லத் தேவையில்ல எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

o விஸ்ணு அண்ணா

நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம். இணையத்திலும் அதே தான்.... மனக்கட்டுப்பாடின்மை தான் இணைய போதைக்கு காரணமே தவிர எத்தனையோ நன்மைபயக்கும் விடயங்களை தந்து கொண்டிருக்கும் இணையம் எவ்வகையிலும் காரணம் இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அழிவுக்கு மட்டுமே வழிசமைக்கும் குடி, போதைவஸ்து போன்றவைகளுடன்... எத்தனையோ சாதனைகளைப்படைக்க வழிசமைக்கும் இணையத்தையும் சேர்த்து கொள்வது எவ்வகையில் பொருத்தமாகும்??

விஸ்ணு அண்ணா மனக்கட்டுப்பாடின்மைதான் அடிமைத்தனத்துக்கு காரணமெண்டுறியள் சரி அப்பிடியே வைச்சுக்கொள்ளுவம். மனக்கட்டுப்பாடின்மை எண்டுறது எப்பிடி வருது? மனக்கட்டுப்பாட்ட உடைச்சாத்தானே வரும். அப்பிடியெண்டா மனக்கட்டுப்பாட்டை உடைக்கிற அளவு பாதிப்பு தாற ஏதோண்டு இணையத்தில இருக்குத்தானே. ஏதோண்டு எண்டுறத விட நிறைய இருக்கு எண்டுறது சரியா இருக்கும். மனுசரின்ர பலவீனங்கள பாவிச்சு மனுசரின்ர மனச குழப்பி தன்னை நம்பி மட்டுமே வாழவைக்கிற ஒரு சீரழிவுச்செயல இணையம் செய்யுது. நானில்லாம உன்னால இருக்க முடியாது எண்டுற எண்ணத்த மனசுக்குள்ள விதைக்குது.

இதனால் நான் கூறவிரும்புவது நடுவர் அவர்களே....... தாயகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாயக உணர்வுகள் இருக்கிறது என்று பிரியசகி கூறுகிறார். ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களுக்கு தாயக உணர்வை ஊட்டுவதில் இணையம் எத்தகைய ஒரு பணியை ஆற்றுகிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக இணையத்தளத்தினூடாக தமது சேவைகளை விரிவு படுத்தும் TYO அமைப்புகளில் இணையத்தளங்களையும் நேரம் இருக்கும் போதுபார்க்குமாறு எதிரணியினரை கேட்டுகொள்கிறேன்.

tyo அமைப்பில இருக்கிற ஆக்களின்ர எண்ணிக்கை எத்தினை? அதில இணையத்த பாக்கிற ஆக்கள் எத்தின பேர்? tyo அமைப்பின்ர இணையப்பக்கங்களால என்னத்த செய்யினம்? அதில எத்தின பேர் பங்குபற்றுகினம்? அரட்டை அறைகளிலயும் படங்கள் இறக்கிற இடங்களிலயும் பங்குபற்றுற ஆக்களோட ஒப்பிடேக்க இந்த எண்ணிக்கை எதுவுமில்ல. அடுத்ததா பார்த்தமெண்டா இணையத்தினூடாக என்ன சேவையை விரிவுபடுத்தியிருக்கினம்? ஒரு online community இருக்குதா? இல்ல. ஒரு ஆரோக்கியமான கருத்து பகிர்வ செய்யிற மாதிரி ஒழுங்கான கருத்துக்களங்கள் இருக்கா? அப்பிடி இருந்தாலும் அதில ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யப்படுதா? இல்லையே.

காலையில் தாயகத்தில் என்ன நடந்தது ?? என்று பார்த்து... தாயக செய்திகளை அன்றாடம் பெற்றுக்கொண்டு தாயக உணர்வில் எப்போதும் இருக்கவும்.... அது மட்டும் அன்றி உலகதில் எந்த மூலையில் என்ன நடந்தது என்பதை அறிந்து உலக அறிவை பெற்றுக்கொள்ளவும்.. நாளை 10 பேர் மத்தியில் ஒரு பூரணமான ஒருவனாக தன்னை தயார்படுத்திக்கொள்ள இனையம் துணைபுரிகிறது.

அப்பிடியா? செய்திகள உடனுக்குடன பெறலாம் எண்டுறது உண்மைதான். அதில இருக்கிற திரிபுத்தன்மைகளால செய்திகளில உண்மையள் இல்லாம போகுது. உடனுக்குடன செய்திய குடுக்கோணுமெண்டு எல்லாரும் ஆசைப்படுறதால உண்மை பொய் ஆராயுறேல. ஒராள் போட்டத அந்தப் பிழையோடயே மற்றாளும் பிரதியெடுத்து போடுறது எல்லாம் நானாந்தம் நடக்குறதுதானே. இதுக்கும் உதாரணம் வேணுமா. யாழில இருக்கு.

இவ்வாறாக கல்வி, பொழுதுபோக்கு, வர்த்தகம், தொடர்பாடல், விளம்பரம் போன்ற இன்னும் பல விடயங்களில் நமது இளையோர் இணையத்தின் மூலம் பல நன்மைகளை பெற்று தம்மை மெருகேற்றி விருகிறார்கள். இவ்வாறாக பயன் கொடுக்கும் ஒரு இணையத்தை.. ஒரு சிலர் சரியான வழி நடத்தலின்றி.. அல்லது தமது தனிப்பட்ட பலவீனங்களால் கேட்டுப்போவதை சாட்டி குறை கூறுவது எந்தவகையில் நியாயமானது??

பலவீனங்கள் தானா உருவாகுறேல எண்டுற சின்ன உண்மைய பெரிய அண்ணா விஸ்ணு தெரிஞ்சுகொள்ளேலயோ? பலவீனங்கள் உருவாக்கப்படுறது. ஒண்டில ஒராள் பலவீனமா இருந்தா சரி அவர விலகியிருக்க சொல்லலாம். ஒட்டுமொத்தமா இளைஞர்கள் சமூகம் ஒரு விசயத்தில பலவீனமா இருந்தா அந்தப் பலவீனம் வெளில(இணையத்த சொல்றன்) இருந்து தான் உருவாக்கப்படுது அண்ணா. விளம்பரத்தால இளைஞர்கள் என்ன நன்மை பெறுகினம்? வியாபாரம் செய்யினமா? சரி தமிழ் இளைஞர்கள் நடத்துற online shops எத்தினை இருக்கெண்டு சொல்லுங்கோ? வர்த்தகம் போன்ற துறைகளில நன்மையடைகினம் எண்டு சொன்னாப் போதாதே. என்ன எப்படி அடையினம் எண்டு சொல்லுங்கோவன்? பொழுதுபோக்கு எண்டியள். பொழுதுபோக்கால நன்மையடையினமெண்டா சந்தோசப்படலாம். பொழுதுபோக்கெண்டு எங்கட ஆக்கள் சொல்லுறது எத? அரட்டையடிக்கிறதையா? சினிமா செய்தியள வாசிக்கிறதயா? படங்கள் இறக்கிறதையா? சினிமா நடிகர்களின்ரயும் நடிகைகளின்ரயும் படங்கள சேர்த்து வைக்கிறதயா? இல்லாட்டி online games விளையாடுறதையா? எத? எத? எத? இதெல்லாத்தையும் நன்மையளெண்டு சொன்னா உலகம் தாங்காது அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

o சிநேகிதி அக்கா

இணையத்தால எனக்கு என்ன நனமையென்று சொல்றன்.ஒரு நாள் விரிவுரைக்குப் போக முடியவில்லை என்றால் ஒன்றில் பாடத்தளத்தில் விரிவுரைக்கான வாசிப்பன்.அல்லது பதிவு செய்யப்பட்ட ஒலிவடிய விரிவுரைய ஒரு நண்பர் மூலம் இணையத்தினூடு பெற்றுக் கேட்பேன்.ஒரு ஒப்படையைச் சமர்ப்பிக்கத்தான் அன்று கல்லூரிக்குப் போகவேண்டியிருந்தால் ஒரு ஈமெயில்ல விசயம் முடிஞ்சிடும்.முன்னர் மாதிரி பாடஅட்டவணை எடுக்கவோ புத்தகம் எடுக்கவோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.எக்ஸாம் முடிஞ்ச உடனே டிஸ்கஸனுக்குப் போய் யாருக்கு என்ன விடை வந்தது என்று அறியலாம்.ஒன்லைன் குயிஸ் செய்யலாம்.நூல் நிலைய புத்தகங்களை ஹோல்ட்ல போடலாம் றினியு பண்ணலாம்.யுனி தொடங்க முதலே கோர்ஸ் அவுட்லைன் பார்க்கலாம்.பேராசிரியர் அவேன்ர உதவியாளர்களோட நேரில கதைக்க சந்தர்ப்பம் கிடையாதபோது டிஸ்கஸன் போர்டுக்குப் போய்க்கதைக்கலாம். இவ்வளவு ஏன் ஒன்லைன் டிகிறீ படிச்சு எடுக்குதுகள் சனம்.வேற நாட்டில இருக்கிற உறவினரோட நண்பர்களோடு வெப்காமில சற் பண்ணலாம்.ஸ்கைப் பயன்படுத்தி உரையாடலாம்.இன்னும் நிறைய இருக்கு.

மொத்தத்தில சோம்பேறியாகுறீங்க எண்டு சொல்லுங்கோ. நோய் ஏதாவது வந்து விரிவுரைக்கு போகாட்டி அத பாடத்தளத்தில இருந்து எடுத்து வாசிக்கிற வசதி பிறகு எதுக்கு விரிவுரைக்கு போகணும் பிறகு ஆறுதலா வீட்ட இருந்தே படிக்கலாம் எண்டுற எண்ணத்த கொண்டுவரும். பிறகு பிறகு எண்டு கடைசில படிக்காமலே சோம்பேறித்தனமா விட்டிருவினம். இதான் இப்ப நடக்கிறது. நீங்க சொன்ன புத்தக விசயமெல்லாம் ரெலிபோனிலயும் வீட்டில இருந்து செய்யலாம். இதுக்கு இன்ரர்நெட் தேவையெண்டில்ல. எல்லாம் செய்யலாம் செய்யலாம் எண்டு சொல்லுறியளே ஒழியே எத்தினை தமிழ் இளைஞர்கள் உப்பிடியெல்லாம் உதால பயனடையினம் எண்டு சொல்லவேயில்லை. வெப்காமில முகத்த காட்டலாம் பிறகு அத ஸ்கிறீன்சொடு் எடுத்து வேறமாதிரி ஆபாசமா மாத்தி உலகமெல்லாம் ரசிக்க அனுப்பலாம். என்னக்கா சொல்றீங்க? ஸ்கைப் பயன்படுத்துறதில இளைஞர்களுக்கு என்ன சிறப்பா நன்மையெண்டு சொல்லுங்கோவன்?

கணனிக்கு முன்னாலயே இருந்தால் நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கு எண்ணுபவர்கள் ஏர்கோனோமிக்ஸ் தளபாட வசதியைப் பயன்படுத்துங்கோ.இன்னும் பத்து வருடங்களில் வங்கி நடவடிக்கைகள் குறைக்கப்பட்டால் எல்லாரும் இணையத்தினூடுதான் காசுப்பரிமாற்றம் எல்லாம் செய்ய வேண்டி வந்தால் அப்ப என்ன செய்வம்.தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைக்கும் அனுகூலங்களை இருகரம் சேர்த்துப் பெற்றுக்கொண்ட நாங்கள் பிரதிகூலங்களையும் சமாளிக்கத்தான் வேண்டும்.

இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டினம். இருந்தாலும் எனக்கும் சில விசயங்கள சொல்லோணும் போல இருக்கு. அக்கா நீங்க வசதியா இருக்கிறீங்க போல. உதுகள வாங்குவீங்க. ஆனா எல்லாரும் அப்பிடி இல்லத்தானே. மற்றது இன்னொரு பக்கத்தால பொருளாதார ரீதியா உது சிக்கல கொண்டு வருதுதானே. நீங்க சொல்லுறத பார்த்தா நன்மையடையோணுமெண்டா சீரழியோணுமெண்டுற மாதிரியெல்லோ கிடக்கு.

அதே போலதான் இணையத்தில ஆபாசப்படமிருக்கு கெட்டுப்போக வழியிருக்கு என்று புலம்பாம அன்னம் மாதிரி பாலைமட்டும் குடியுங்கோ தண்ணியை விடுங்கோ.ஆபாசம் வன்முறையெல்லாம் தொலைக்காட்சியிலும் இருந்தது தானே அங்க எப்பிடி

பெற்றோர் கட்டுப்பாட்டு வசதி இருந்ததோ அத மாதிரி கணனியிலும் இருக்குப் பாவியுங்கோ.ஒரு கொஞ்சக்காசோட அந்நிய நாட்டில பிழைக்க முடியும் என்று நம்பி வந்த பெற்றோருக்கு குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் நம்பிக்கை வேணும்

மொத்தத்தில இளைஞர்கள் இணையத்தால சீரழியினம் எண்டுறத ஒத்துக்கொள்ளுறியள். அதாலதான் அதுக்கு தீர்வு சொல்ல வெளிக்கிடுறியள். நடுவர்மாரே கவனியுங்கோ. சீரழிகிறார்கள் என்பதை சிநேகிதி அக்கா ஒத்துக்கொண்டு அதில இருந்து பாதுகாத்துக்கொள்ளுறதுக்கு வழி சொல்லுறா. பிள்ளையள கவனிக்கிறதுக்கு நேரமில்லாம ஓடி ஓடி உழைக்கிற புலம்பெயர் பெற்றோருக்கு மேலும் ஒரு வேலைய சிநேகிதி அக்கா கொடுக்க சொல்லுறா. பாவம் ஊரில இருக்கிற சொந்தங்கள கவனிக்கோணும் அதவிட நாட்டுக்கு உதவுறதுக்காக உழைக்கோணும். இப்பிடி எல்லாத்துக்கும் உழைச்சு தேய்ஞ்சு போற பெற்றோர மேல மேல கஸ்ரப்படுத்த சொல்லுறா சிநேகிதி அக்கா. இவை சீரழிஞ்சு போவினமாம் ஆனா இவையள பிறகு பாதுகாக்க வேணுமாம். நல்லா இருக்கு உங்கட தத்துவம்.

நீங்கள் சொல்ற மாதிரி இணையத்தில உள்ளதைக் கொண்டே குடுக்க அதை வாங்கி திருத்துற அளவுக்கு யாரும் முட்டாள்கள் அல்ல.எங்க எப்ப எந்தத்த தளத்தில இருந்து சுடப்பட்டிருக்கு என்று துல்லியமாகச் சொல்லும் மென்பொருள்கள் பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் எல்லாமுண்டு.சில பாடங்களுக்கு இணையத்தளங்களை தகுந்த சைற்றேசனோடு பயன்படுத்தலாம். சில பாடங்களுக்கு புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் மட்டுமே பாவிக்கலாம்.இணையத்தை கட்டாயம் மற்றவருடைய வேலையக் களவாடத்தான் பாவிக்கவேண்டுமா அவர்கள் ஒரு கடினமான விளக்கத்ததை இலகுவான நடையில் எழுதியிருந்தால் அதை வாசிச்சு அறிவை வளர்க்கலாமே தமிழினியக்கா.

நீங்க சொல்றதெல்லாம் பல்கலைக்கழக மட்டத்தில சரியா இருக்கலாம். ஆனா பள்ளிக்கூட மட்டத்தில உதுகள கவனிக்கிறல. ஆனாலும் பல்கலைக்கழக மட்டத்திலயும் பாருங்கோ இணையத்தில இருந்து எடுத்து கொஞ்சமா மாத்திப்போட்டு குடுத்தா அத பல்கலைக்கழகத்திலயும் கண்டுபிடிக்கிறது சிக்கலான வேலை. நீங்க நினைக்கிற அளவொண்டும் தொழில்நுட்பம் வளரேல்லக்கா. முதல்ல இணையத்தில ஒரு விசயத்த தேடி இலகுவா எப்பிடி கண்டுபிடிக்கிறதெண்டுறது எங்கட இளைஞர்களுக்கு தெரியிறேல. அதால ஒண்ட தேடியெடுக்க கனநேரம் செலவளிக்கினம். இப்ப பார்த்தீங்க எண்டா இணையத்தில இன்னொராளின்ரய எடுத்த தன்ர ஆக்கமெண்டு வெளில சொல்லித் திரியிற சீரழிவுகளும் நடக்குது. உங்க யாழிலயும் ரண்டு மூண்டு பேர் பிடிபட்டவை. இன்னொண்டையும் சொல்லோணும். இணையத்தில பொறுக்கியெடுக்கிறதுகள கொண்டுவந்து ஒரிடத்தில போடுவினம். அத எங்க எடுத்தவை எப்ப எடுத்தவை அத யாரெழுதினது எண்டறத பற்றின ஒரு தகவல்களும் இல்லாம. இதெல்லாம் தகவல் திருட்டுத்தானே. இதுகளெல்லாம் சீரழிவுகள் தானே?

இளம்பெண்கள் எத்தின பேரை சுதந்திரமா எழுத விடுறியள்.ஒரு கருத்துச் சொன்னா அதைத் திரிச்சு அவேன்ர குடும்பத்தோட பொருத்திப்பாத்து என்னல்லாம் நடக்குது.நான் இப்பிடி போன வைகாசிலதான் இணையத்தில ஏதோ எழுதத்தொடங்கினான்.ஆனால் பதினேழு வயசில முதல்க்கதை ஒரு பத்திரிக்கைல வர சொந்தக்காரர் எல்லாம் கதை நல்லாத்தானிருக்கு ஆனால் உனக்குது வேண்டாம்.உது உனக்கு சோறு போடாது அது இது என்று வியாக்கியானம் செய்தவை.நான் இப்பிடியெல்லாம் எழுதுறது என் குடும்பத்தில யாருக்குமே தெரியாது.இது பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பொருந்தும்.இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகம்தானே.வசதியும் தானே நாங்களே எழுதி நாங்களே பதிவு செய்து அதில ஒரு சந்தோசம் இருக்கெல்லோ.

ஓமக்கா இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகந்தான். அதால என்னத்த எழுதுறதெண்டு தெரியாமல் கண்ட கண்ட குப்பையளையும் எழுதிக் கொட்டுகினம். உங்க வலைப்பதிவு வழிய நடக்கிற கூத்துகள பாக்கிறம்தானே. ஆபாசமா பின்னூட்டம் எழுதுகினம். ஒராளின்ர குடும்பத்த பற்றி கண்டபடி கதைப்பினம். ஏன் இங்க யாழிலயே சுதந்திரமா ஒண்ட எழுதமுடியுமா. எழுதினா உடன தனிப்பட தாக்க வெளிக்கிடுவினம். சுதந்திரமா எழுதக் கிடைச்சோடன சுயதம்பட்டம் அடிக்கிற கூட்டம் தான் அதிகரிச்சிருக்கு. இணையத்தில எழுதிறெண்டா கூட வீட்டுக்கு தெரியாமத் தான் நீங்க எழுதவேணு்டிக் கிடக்கு. அப்பிடி எழுதிக் கிழிச்சு என்னத்தக் கண்டியள்? ஏதாவது நன்மையடைஞ்சியளா? உங்கட முகத்த காட்டிக்கொண்டு உங்கட சொந்தப்பேர வைச்சுக்கொண்டு உங்களால சுதந்திரமா உங்கட கருத்த வெளிப்படையா இந்த யாழ்களத்தில வைக்கமுடியுமா? வைச்சுக்காட்டுங்க. அதுக்கும் அடுத்ததா போய் பெண்கள் திருமணத்துக்கு முதல்ல பாலியல் உறவு வைச்சுக்கொள்ளலாமா வேண்டாமா எண்டுறத பற்றி உங்கட ஒரு கட்டுரைய எழுதுங்கோ. அப்ப பெண்கள் சுதந்திரமா எழுதுகினம் எணு்டு ஒத்துக்கொள்ளுறன். சும்மா விசுக்கியடிச்சுக்கொண்டு சுதந்திரமா எழுதுறமெண்டு கதையளக்காதேங்கோ.

நீங்க சொன்ன இந்தியாவில தான் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மலிவான விலையில் 700 சானல்கள் கொண்ட ஒரு டிஸ்க்கை விற்பனைக்கு விட்டது.சன் ரீவி செய்தியிலை பார்த்தது.பெயர்கள் ஞாபகம் இல்லை.அந்த டிஸ்க் ஏனிப்பிடி மலிவாக விற்கப்பட்டடு எப்பிடி இவ்வளவு விற்பனையானது என்று ஆராய்ந்ததில் அதில் பல வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட சானல்கள் இருந்ததாம்.அதால பார்க்கிறதுக்கு இணையம்தான் கதி என்றில்லை.இப்பெல்லாம் ஹிந்திப்படத்திலெல்லாம் எல்லாம் காட்டினமே கெட்டுப்போகணும் என்றால் நிறைய வழியிருக்கு. ஈராக் படங்கள் பத்திரிக்கைகளில் ஒரு அமெரிக்க அதிகாரி ஆண்கைதிகளை பிறப்புறுப்பில் சிகரெட்டால் சுடும் படங்கள் வந்திருந்தனதானே.

அக்கா முதலாவது நாங்க இங்க புலம்பெயர்ந்த நாடுகளில வாழுற இளைஞர்கள பற்றிக் கதைக்கிறம். இரண்டாவது நாங்க இணையத்தால சீரழிஞ்சுபோறத பற்றிகஇ கதைச்சா நீங்க ஏன் அதுகும் கெடுக்குது தர்னெ இதுகும் கெடுக்குது தர்னே எண்டுகொண்டு இருக்கிறியள். இங்க சிலபேரின்ர வியாதி உங்களுக்கும் தொத்திட்டுது எண்டு நினைக்கிறன். ஒண்டப் பற்றிக் கதைச்சா ஏன் அதபற்றிக் கதைக்கல ஏன் இதப்பற்றிக் கதைக்கல எண்டு தங்கட பலவீனத்த காட்டுறது. நாங்க கதைக்கிறது இணையத்தின்ர சீரழிவுகள பற்றி. தொலைக்காட்சியளின்ர சீரழிவுகள பற்றி வேணுமெண்டா பிறகொரு தலைப்பத் தொடங்கிக்க கதைப்பம். சரியா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

o அஜீவன் அண்ணா

அஜீவனண்ணா இணையத்தின்ர பொதுவான நன்மையத்தான் சொல்லியிருக்கிறார். அதெல்லாத்தாலயும் புலம்பெயர்ந்த நாடுகளில வாழுற தமிழ் இளைஞர்கள் நன்மையடையினமா எண்டுறதுக்கு ஆதாரங்களயோ உதாரணங்களயோ அவர் வைக்கல.

அது போலவே நல்லவைகளை விட தீமைகளே பலரது கண்ணையும் மனதையும் வசீகரிக்கின்றன. எதுக் கெடுத்தாலும் அதன் நன்மைகளை பார்ப்பதையும் ஆராய்வதை விடுத்து தீயவற்றை ஆராய்வதிலேயே பல உள்ளங்கள் காலத்தைச் வீணடிக்கின்றனவே? அது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.

சரியாச் சொன்னியள். பாருங்கோ நீங்களும் எங்கட அணிக்கு சார்பாத்தான் கதைக்கிறியள். அதான் நல்லதெல்லாத்தையும் விட்டிட்டு இணையத்தில இருக்கிற தீயதுகளத்தான் எங்கட தமிழாக்கள் தேடிப் போகினம். தீயதுகளில தான் கவர்ச்சி கூடப்போல இருக்கு. இதில புரியாத புதிரா என்ன இருக்கு.

மரணப்படுக்கையில் இருந்த தமிழ் கூட இணையத்தின் வழி பிராணவாயு கொடுக்கப்பட்ட நோயாளியின் நிலையில் தற்போது பிழைத்துள்ளது என்றே கூற வேண்டும்.

மரணப்படுக்கையில கிடந்த தமிழ் இப்ப சுடுகாட்டுக்கு போய்க்கொண்டிருக்கெண்டுறத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

o மதன் அண்ணா

ஆக தப்பு இணையத்தில் இல்லை பார்வையில் தான்.

அப்ப உங்களுக்கெல்லாம் என்ன பார்வைக்கோளாறா? சரி விடுங்க விடுங்க. ஒரு கதை சொல்றன் கேளுங்க. ஒரு பெரிய பெட்டிக்குள்ள குப்பையள் இருக்கு. அழுக்காவும் கெட்ட மணத்தோடயும் அழுகிப்போனதாவும் நிறைய இருக்கு. பெட்டிய சுத்தி பரிசு குடுக்கிற சாமான்களுக்கு சுத்துற பேப்பரால வடிவா சுத்தி அலங்காரமெல்லாம் செய்திருக்கு. வாசனைக்காக சுத்தி சுத்தி சென்ற் எல்லாம் அடிச்சிருக்கு. இப்ப அத கொண்டு வந்து பட்டிமன்றம் நடக்கிற இடத்தில ஒரு அறைக்குள்ள வைச்சாச்சு. அத எங்கட அணித் தலைவரும் எதிரணித் தலைவரும் ஒருக்கா போய் பார்த்திட்டு வரலாம். அப்ப எதிரணித் தலைவர் போறார் உள்ளுக்க. உள்ளுக்க போய் அவர் எல்லாத்தையும் பாத்திட்டு அதின்ர வெளித்தோற்றத்திலயும் வாசனையிலயும் மயங்கி இவ்வளவு வடிவா இருக்கே. எங்கட ஆக்களுக்கு இதுக்குள்ள நிறைய விசயங்கள் பயன்படுற விசயங்கள் இருக்குதே எண்டு யோசிச்சார். அவர் அப்பிடியே கற்பனை உலகத்துக்குள்ள போட்டார். அப்பிடியே வெளில வந்து -அம்மாடியோ இது என்ன அதிசயமா கிடக்கு. இதப்போல புதுமையான ஒரு விசயத்த இதுவரைக்கும் பாக்கலயே. இது எங்கட ஆக்களுக்கு நிறையத் தரப்போது. இதால பெரிய புரட்சியே நடக்கப்போகுது- எண்டு கதையளக்கிறார். அடுத்ததா எங்கட அணித்தலைவர் உள்ளுக்க போறார். அவருக்கு வெளித் தோற்றத்த பார்த்தோடன ஒரு சின்ன சந்தேகம் வந்திட்டு. வடிவா இருந்தாலே ஆபத்தாச்சே. என்ன விசயமிருக்கும் எண்டு அலசிப் பாக்கிறார். பெட்டில சாதுவா ஓட்டை போட்டு பாத்தா உள்ளுக்குள்ள இருந்து அழுகின மணம் வரத்தொடங்கிட்டு. எங்கட அணித்தலைவருக்கு விளங்கிட்டு. ஓட்டைக்குள்ளால தன்ர பேனாவ விட்டு கிளறிப்பாக்கிறார். புழு ஒண்டு வெளில விழுந்திச்சு. எங்கட அணித்தலைவர் அவசர அவசரமா வெளில வந்தார். -அந்தப் பெட்டிக்குள்ள நிறைய கெட்ட சாமான்கள் எல்லாம் கிடக்கு. அழிகிப்போன மணமெல்லாம் வருது. இது எங்கட ஆக்களுக்கு கூடாது. சீரழிக்கிறதுக்க பேர்குது. அந்த நாத்தம் எல்லாரையும் மயக்க நிலைக்கு கொண்டு போகப் போகுது. எல்லாரும் கவனமா இருங்கோ- எண்டு எச்சரிக்கிறார். அதுக்கு எதிரணில இருக்கிற மாதவன் -சீ மன்னிக்கோணும் அவரின்ர அடையாளமே மறந்து போச்சு- மதனண்ணா பெட்டில தப்பில்லையாம் பார்வையில தான் தப்பாம். அப்ப யாரின்ர பார்வையில தப்பெண்டு நடுவர்மார்களே சொல்லுங்கோ.

எதிர்காலத்தில் இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தால் அதையும் நல்ல முறையில் உபயோகித்து நன்மையடைவார்கள் நமது இளையோர்.

நல்ல நம்பிக்கை. உங்கட அணித் தலைவரின்ர புதுமையான கற்பனையள் எல்லாம் உங்களுக்குள்ளயும் வந்திட்டு போல. சும்மா சும்மா எதிர்காலத்த பற்றி கற்பனையள கதைச்சுக்கொண்டிருக்காம நிகழ்காலத்த கொஞ்சம் பாருங்கோவன். நிகழ்காலத்தில நடக்கிற சீரழிவுகள பார்த்த பிறகுமா உந்த கற்பனையள். எதிர்காலத்தில இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தாலும் அதையும் தாங்கள் சீரழிவுக்காகத்தான் எங்கட இளைஞர்கள் பயன்படுத்துவினம். அதால அந்த சக்திவாய்ந்த ஊடகத்தாலயும் மேலதிகமா கெட்டுச் சீரழிஞ்சு போவினம்.

இப்போதாவது எப்படி இளையோர் இணையம் மூலம் வாழ்க்கை துணையை தேர்தெடுக்கின்றார்கள் மற்றும் வேறு வழிகளில் அறிமுகமானோரை திருமணம் செய்ய முன்பு இணையம் மூலம் புரிந்து கொண்டு நன்மையடைகின்றார்கள் என்று எதிரணி நண்பர்களுக்கு புரிந்ததா அல்லது இன்னும் புரியாதது போல் நடிக்க போகிறீர்களா?

நாங்க ஒண்டும் புரியாத மாதிரி நடிக்கல அண்ணா. ஆனா இணையத்தில புரிஞ்சுகொண்டமாதிரி நடிச்சு ஏமாத்துற வேலையள் தான் நிறைய நடக்குதுங்கோ அண்ணா. நேரில சந்திச்சே ஒண்டையும் ஒழுங்கா புரிஞ்சுகொள்ள முடியேல. 10 வருசங்களா பக்கத்தில சேர்ந்திருந்தவையே விவாகரத்து வாங்குகினம். இதுக்குள்ள இணையத்துக்குள்ளால புரிஞ்சுகொள்ளப் போகினமாம். நல்ல கதையாத்தான் இருக்கு. உங்கட அணித்தலைவர்தானே ஏதோ கணனில செய்த படங்கள் கொஞ்சத்த போட்டு எழுதியிருந்தவர்.

...பல சட்டவிரோதமான வேலைகளைச் செய்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்பது கவலைக்குரியதே.

இன்று பொழுதுபோக்கு சஞ்சிகைகள், விளம்பர இதழ்கள், உடற்பயிற்சி சார்ந்த சஞ்சிகைகள் போன்றவற்றிற்கான படங்கள் இந்தமுறையிலேயே செய்யப்படுகின்றன. முகத்தில் ஒரு பருக்கூட இல்லாத, தோல் மென்மையாக இருக்கிற, கண்கள் ஒளிர்கிற படங்களைப் பார்த்து ஏமாருபவர்கள் பலர். நாம் அப்படி இல்லையே என்று தமக்குள் ஏங்குபவர்கள் பலர். ஆனால் உண்மையில் ஒரு பருக்கூட இல்லாத, ஒரு காயமோ, கீறலோ இல்லாத முகம் அல்லது மேனி எங்கும் இல்லை என்பதே உண்மை. digital imaging மூலம் தேவதைகளையும் மன்மதன்களையும் விளம்பர இதழ்கள் உருவாக்கிவிட்டுள்ளன.

இப்பிடி படங்கள மாத்தி செய்து அனுப்பியும் ஒராள ஏமாத்தலாந்தானே. நேரில சந்திக்கேக்க தான் ஏமாந்து போனத நினைச்சு தற்கொலை செய்தவையின்ர கதையளும் இணையத்தால நடந்திருக்கிறத நீங்க தெரிஞ்சும் தெரியாத மாதிரிக் கதைக்கிறியள்.

அடுத்து மென்பொருள் திருட்டு பற்றி சொல்லியிருக்கின்றார். உரிய வகையில் வாங்கப்படும் மென்பொருட்கள் சட்டத்துக்கு புறம்பாக பிரதி செய்யப்பட்டு நடைபாதையில் வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன நண்பர்களிடையே மென் தகடுகளாக பரிமாறப்படுகின்றன். இணையம் இன்றியே நடக்கும் ஒரு விட்யம் இது. ஆனால் இது இணையம் வழியால் தான் நடப்பதாகவும் அதனால் இளையோர் சீரழிவதாக புது கதை சொல்கின்றார் அருவி.

இணையமில்லாமல் நடக்கிறது குறைவாத்தான் இருந்திருக்கும். இணையத்தாலதான் அது அதிகரிச்சு இருக்கு. இப்ப லண்டனில இருக்கிறவர் தனக்கு கிடைச்ச ஒரு மென்பொருள பிரான்சுக்கு அனுப்புறாரெண்டா அது இணையத்தால தானே நடக்குது. கடிதத்தால அனுப்பலாந்தர்னெ எண்டு சொல்லுவியள். ஆனா கடிதத்தால எத்தின பேருக்கு அனுப்பேலும். இணையத்துக்குள்ளால வேகமா பரவுது.

இதற்கு பதிலை நீட்டி முழக்கி எழுத போவதில்லை சுருக்கமாகவே சொல்கின்றேன். தாயக செய்திகளை அறிய புலம் பெயர் இளையோர் உபயோகிக்கும் முக்கிய தளங்கள் தமிழ் நெட் மற்றும் புதினம்.

தமிழ்நெட்டையும் புதினத்தையும் தவிர வேறொண்டும் உங்களால சொல்ல முடியாது. சொன்னாலும் அதுகளில நம்பிக்கைத்தன்மை இருக்கா எண்டா அதையும் சொல்ல முடியாது. மொத்தத்தில எத்தனையோ இளைஞர்கள் பார்க்கிற இணையத்தில இரண்டே இரண்டு தளங்கள் தான் உங்களுக்கு நம்பிக்கையா இருக்கு.

வலைப்பதிவுகள் அண்மைகாலங்களில் ஆரம்பமாகி இப்போது தான் பிரபல்யமாகி வருகின்றது. அவற்றை புலம்பெயர்ந்த இளையோர் தமது கருத்துக்களை எண்ணங்களை தங்குதடையின்றி வெளிப்படுத்த உபயோகிக்கின்றார்கள். தமிழில் தோன்றும் வலைப்பதிவுகளை எடுத்து கொண்டால் அவை தமிழ் நன்றாக தெரியாத புலம் பெயர்ந்த இளையோரினால் தமிழில் எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் ஆரம்பிக்கபடும் போது இலக்கண தவறுகள் ஏதும் நிகழலாம். அவை வேண்டுமென்றே செய்யப்படுவன அல்ல. இன்று இந்த வலைப்பதிவு மூலம் தமிழில் தனது புலமையை அதிகரித்து நன்மையடையும் இளையோர் நாளை அந்த இலக்கண தவறுகளையும் மற்றவர்களின் வழிகாட்டலுடன் சரி செய்வார்கள் என்பதை க்ருத்தில் கொள்ளுங்கள். இங்கு இளைன்யோரின் நோக்கம் தமிழில் எழுதுவதே அன்றி இலக்கண விதிகளை மீறுவது அல்ல.

வலைப்பதிவுகள பற்றி உங்கட அணில எத்தினை தரந்தான் திரும்பத் திரும்ப சொல்லுவியள். இலக்கணப் பிழையள நாளைக்கு திருத்துறது இருக்கட்டுமண்ணா. இண்டைக்கு யாரு திருத்திறது? இண்டைக்கு சீரழிஞ்சுகொண்டும் சீரழிச்சுக்கொண்டுமெல்லோ இருக்கினம். தாமே ராசா தாமே மந்திரி எண்ட கணக்கா வலைப்பதிவில எழுதுறாக்கள ஆரு வழிநடத்துறது? இலக்கணமில்லாட்டி தமிழில்ல எண்டுறதா யாரோ சொல்லிக் கேள்விப்பட்டன். அது உண்மையா இருந்தா -இளையோரின் நோக்கம் தமிழில் எழுதுவதுதான் ஆனா இலக்கணப் பிழையள் விடுறது ஒண்டும் பெரிய பிழையில்லையெண்டுறது- சின்னப்பிள்ளத்தனமான வாதமண்ணா. தட்டச்சுறதில பிழையள விட்டா சரி பறவால்ல தட்டச்சி பழகப் பழக அது திருத்தமா வருமெண்டு சொல்லலாம். ல ள ழ வில பிழையள விட்டா எழுதுற விசயத்தின்ர அர்த்தமே மாறிப்போகுதெண்டு செல்வமுத்து அண்ணாவே அண்டைக்கு பட்டிமன்றத்தில எழுதினது உங்கட பார்வையில விழலயோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

o வர்ணன் அண்ணா

நன்மைகளை மட்டுமே அடுக்கிக்கொண்டு போனாக் காணுமா? நன்மையடைகிறார்களா எண்டுறத் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். சரி பறவால்ல. என்ன செய்யிறது சொல்றதுக்கு இருந்தாத்தானே சொல்லலாம். இல்லாட்டி நீங்க என்ன செய்வீங்கள் பாவம்.

சாட்டிங்கும் அதன் பிறகு டேற்றின்கும் என்று வாதாடுறீங்கள்.

சாட் பண்ண இணையம் வழி செய்யுதுதான்.. அதற்காக

24 மணி நேரமும் சாட் பண்ண முடியுமா?

அது ஒரு வகை பொழுதுபோக்கு... '

இயந்திரமயமான புலம் பெயர்வு வாழ்க்கை அதுக்கு இடம் கொடுக்குமா?

என்ன இப்பிடிக் கேட்டுப்போட்டியள் அண்ணா. 24 மணிநேரமென்ன ஒருநாளில 48 மணித்தியாலம் இருந்தாலும் எங்கட இளைஞர்கள் அவ்வளவு நேரமும் அரட்டையடிப்பினம் இணையத்தில. அட சாப்பாடு தண்ணி எதுவுமில்லாமலும் அதில இருப்பினம் தெரியுமோ? பொழுதுபோக்கெண்டுறது சரி. ஆனா பொழுதே -அரட்டையில- போக்குறதுக்கு தான் எண்டு நினைச்சுகொண்டெல்லோ எங்கட இளமாக்கள் இருக்கினம்.

* இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா?

இணையத்தளங்கள் வாறதுக்கு முதலும் காதல் இருந்திச்சுத்தான். ஆரும் எங்கட அணில இல்லையெண்டு சொன்னியளா? இல்லத்தானே. எங்கட அணிலயே வித்தியாசமான புதுமையான புரட்சியான -பறக்கிற- -மலருற- காதல்கள் இருக்கு. அதால நாங்க ஒண்டும் காதல பற்றி தப்பா சொல்லமாட்டம். ஆனா இணையத்தால காதலெண்டுற சொல்லின்ர அர்த்தமே கெட்டுப்போச்சு எண்டுதான் சொல்லுறம். ஒரு பக்கத்தில அக்காவோட அரட்டையடிச்சு கடலைபோட்டு கவுத்து காதலிக்கிறதெண்டுறது. மற்றப்பக்கத்தில தங்கச்சியோட கடலை போட்டு காதலிக்கிறதெண்டுறது. பிறகு அக்காவும் தங்கச்சியுமா ஒருத்தருக்கொருத்தர் தெரியாம ஒராளையே காதலிக்கிற கொடுமைய என்னவெண்டுறது. உதாவது பறவால்ல. ஒரு வீட்டில வேற வேற கணினியில இருந்துகொண்டு அண்ணனும் தங்கச்சியுமே -அண்ணன் தங்கச்சி எண்டு தெரியாம- கடலைபோட்டு காதலிச்ச கொடுமையளும் நடந்திச்சு. கேள்விப்படலயா அண்ணாமாரே அக்காமாரே. எதுக்கும் உங்கட வீட்டில கவனமா இருங்கோ.

*இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா?

மொத்தத்தில திரும்ப திரும்ப ஒத்துக்கொள்ளுறியள் இணையத்தளத்திலயும் வக்கிரங்கள இறக்கி வைக்கினமெண்டுறத. அப்ப அதின்ர அர்த்தமென்ன? இணையத்தளங்களாலயும் சீரழிஞ்சு போகினம் எண்டுறதுதானே?

*கண்காணிப்பாளர்களற்ற ???????? சாட்ரூம் என்ற ஒன்று வந்தபின்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா?

*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?

நீங்கள் இணையதளங்களில் உள்ள பாதிப்பு என்று சொல்லவந்தது ...

அதன் மொத்த பகுதியின் சிறு அம்சம்! ஆகவே ஒன்றை வைத்து பலதை தீர்மானிப்பது எப்படி இருக்கிறதென்றால்...

காகங்கள் கறுப்பானவை-ஆகவே

கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!

என்பது போல் உள்ளது!

சரி ஏற்கனவே இளைஞர்கள் குப்பையா இருந்தவை எண்டுறியளா? அப்பிடியே வைச்சுக்கொள்ளுவம். அப்ப குப்பையள அழுகி நாறவைச்சது இணையம் எண்டு நாங்கள் சொல்லுறம். இப்ப சரியா? ஓ ஏற்கனவே அழுகி நாறிக்கொண்டு இருந்தவை எண்டு சொல்லுறியளா? அப்ப அந்த நாத்தத்தில நஞ்சைக் கலந்துவிட்டிருக்கு இணையம் எண்டு நாங்க சொல்லுறம். இப்ப இது சரியா இருக்கா?

நாங்க சொன்ன தீமையள் நீங்க சொன்னமாதிரி இணையத்தின்ர மொத்தப்பகுதில ஒரு சிறிய பங்காக இருக்கலாம். ஆனா அதனால ஏற்பட்டிருக்கிற சீரழிவு இல்லாட்டி அதால சீரழிஞ்சு போனவையின்ர எண்ணிக்க நன்மையடைஞ்சவையின்ர எண்ணிக்கையவிட பலமடங்கு பெருசாக்கும். புரிஞ்சுதா அண்ணா?

காகம் கறுப்பு எல்லாம் இருக்கட்டும். நானொண்டு சொல்லுறன் கவனியுங்கோ.

பால் வெள்ளையானது-ஆகவே

வெள்ளையானவை எல்லாம் பால்!!

என்பதுபோல் உள்ளது உங்கள் கதை! கள்ளும் வெள்ளை எண்டுற அரும்பெரும் உண்மை வர்ணன் அண்ணாக்கு நான் சொல்லவேண்டிக்கிடக்கு எண்டுறத நினைச்சா கவலையாக் கிடக்கு.

அதுவும் பிறந்து வளர்ந்த தேசத்தில் அவர்களின் பெற்றோர்கள் ..மிக நீண்டகாலமாக அங்கு வாழ்ந்தும் எட்டி பிடிக்க முடியாத உயரங்களை.. புலம்பெயர்ந்த்து வந்த இளையோர் மிக சொற்ப காலத்தில் சாதித்தார்களே எதனால் ? இணைய தளங்களினால் ஏற்பட்ட தீங்கினாலா?அல்லது நவீன உலகின் அசுர வேகத்தின் இடையே சகல துறைகளிலும் நீங்கள் விரும்பினாலோ.. விரும்பாவிட்டாலோ நடுவீட்டு நாட்டாமையாக வந்து உட்கார்ந்துவிட்ட இணையதளங்களின் நன்மையினாலா?

அதுவும் பிறந்து வளர்ந்த தேசத்தில அவர்களின் பெற்றொர்கள் ..மிக நீண்டகாலமாக அங்கு வாழ்ந்தும் தடக்கி விழ முடியாத பள்ளங்களை.. புலம்பெயர்ந்து வந்த இளையோர் மிக சொற்ப காலத்தில் சீரழிந்து அடைந்தார்களே எதனால்? இணையத் தளங்களினால் ஏற்பட்ட நன்மையினாலா? அல்லது நவீன உலகின் அசுர வேகத்தின் இடையே சகல துறைகளிலும் நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ நடுவீட்டு நாட்டாமையாக(நடுவர்களே கவனியுங்கோ) வந்து உட்கார்ந்துவிட்ட இணையத்தளங்களின் தீமையினாலா?

அவர்கள் அர்த்தப்படுத்துவதுதான் என்ன? சீரழிந்து போகிறார்கள்தான்! மிக சொற்ப சிலர்! அதே நேரம் இலட்சக்கணக்கானவர்கள் பயனடைகிறார்களே - அதை ஏன் இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை? ஒரு விமானம் சிதறி விழுகிறதென்றால்- விமானமே அபாயம் என்று சொல்கிறீர்களா? பயணம் இடைவழியில் நிற்கும்! - அதை தவிர உங்கள் விவாதத்தில் பயன் ஒன்றும் இல்லை!!

அட இவ்வளவு விடயங்களை அள்ளி உங்களுக்கு முன்னால வைச்ச பிறகும் இனியும் மிகச் சொற்ப சிலர்தான் சீரழியினம் எண்டு சொல்றது சரியில்ல. சீரழியிறவையின்ர எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருது. அதனால திக்கிமுக்காடிப்போயிருக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

o குறுக்காலபோவான் அண்ணா

இலத்திரனியல் தகவல் களஞ்சியங்களை இணைக்கும் பாலமாக, சுயகருத்துக்களை குழுமங்களில் குடில்களில் பலரோடு பகிர்ந்து விமர்சனம் பெற்று முன்னேறவும், கல்வித்துறையில் ஆசிரியரோடு சக மாணவர்களோடு, பொழுதுபோக்கும் துறையிலும் சமூகச்சேவையிலும் சகாக்களுடன் வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறையாகவும் எமது புலம் பெயர்ந்த இளையவர்கள் பயன்படுத்தி தம்மையும் வளம்படுத்தி எமது தேசியத்திற்கு வலுச்சேர்க்கிறார்கள். இவற்றை எனக்கு முன் வந்த எனது அணியினர் விபரமாக உதாரணத்தோடு தந்திருந்தார்கள்.

குறுக்காலபோவான் அண்ணா எங்க உப்பிடி நடக்கெண்டு சொல்லுங்கோவன். நாங்களும் போய் கதைச்சு எங்கட தேசியத்துக்கு வலுச்சேர்ப்பம். சும்மா அபஇபிடி நடக்கு இப்பிடி நடகஇகெண்டா கர்ணுமா? எங்க எப்ப எப்பிடி நடக்கெண்டு சொன்னாத்தானே அதின்ர தன்மையள நாங்க புரிஞ்சுகொள்ளமுடியும்.

இன்னுமொரு 5...10 வருடங்களில் கைத் தொலைபேசியில் இணையத்திற்கு செல்லக்கூடியது என்பது சர்வசாதாரணமாகப் போகிறது. அது மாத்திரமல்ல தொலைக்காட்சி உரையாடல் (video conference) கூடச் செய்யலாம். தனியே பேச்சு எழுத்துக்கள் மாத்திரம் அல்ல பங்குபற்றுபவர்களின் அசையும் படங்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். இங்கே ஒருவரின் வக்கிர எண்ணங்கள் இன்னெருவரினால் அறைக்குள் மாத்திரம் ஒளிந்திருந்து பகிரப்படப்போவதில்லை அணிந்திருக்கும் ஆடைகளுக்குள் ஒளித்துவைக்கும் கைத்தொலைபேசியால் எங்கும் என்னேரமும் நிறைவேற்றலாம்.

அப்பாடியோ. கடைசில ஒத்துக்கொண்டிட்டீங்களே. அதுபோதும். ஒண்டு அறைக்குள்ள இருந்து வக்கிரங்கள் பகிர்ந்துகொள்ளப்படுது. இரண்டு இனி இதவிட கனக்க சீரழிவுகள் இணையத்தாலயும் அதஒட்டி இருக்கிற மற்றத் தொழில்நுட்பங்களாலயும் நடக்கப் போகுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

o மேகநாதன் அண்ணா

நன்மையடைகிறார்கள் என்பதற்கான எந்த வாதமும் இவர் முன்வைக்கவே இல்ல. தனிய எங்கட அணியின்ர வாதங்கள பற்றி தன்ர தனிப்பட கருத்த சொல்லியிருக்கிறார். நன்மையடைகிறார்கள் எண்டுறதுக்கு காரணத்த சொல்லாம ஆதாரத்த முன்வைக்காம எங்கட அணியின்ர கருத்த பற்றி கருத்து சொல்லுகினமெண்டுறதில இருந்தே விளங்குது. நன்மையணில சொல்றதுக்கு வேற வாதங்களே இல்லையெண்டுறது.

"மதவடி கலாசாரத்தை" மீளப் போட்டு "பண்பாட்டுச் சிரழிவுக்கு" ஆலாபணை செய்கிறார்....நடுவர்கள் உறவுகள் இவ்வாவறானவற்றை நுணுக்கமாக கவனிப்பார்கள் என்பதை அவர் அறியார் போலும்.சீரழிவைக் கதைக்க வந்தவராகத் தன்னை இனம் காட்டியவரே அச் சீரழிவை ஊக்குவிப்பது "அமைதி காப்பதாக சொல்லி வந்தவர்(கள்) ஆக்கிரமிப்புக்குத் துணை போவது போல" அபாய சமிக்கை காட்டுகிறது...

நன்மையடைகிறார்கள் என்பதற்கான கருத்தா இது? என்ன கருத்து வறட்சி வந்திட்டு போல கிடக்கு. ஆழ்ந்த அனுதாபங்கள். நடுவர்கள் கவனிக்கோணும். வார்த்தைகளால கோலம் போட்டா போதாது வாதத்த வைக்கோணுமெண்டு ஒருக்கா எதிரணிக்கு சொல்லிவிடுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.