Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை அடுத்து நிபுணர்குழு அறிக்கையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு

Featured Replies

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை அடுத்து நிபுணர்குழு அறிக்கையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு

தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தக்கதான அதிகாரப் பகிர்வொன்று குறித்த இலங்கையின் வாக்குறுதியையடுத்து நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே பிரஸ்தாப வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை என்பது குறித்து கடும் தொனியில் இந்தியப் பிரதமர் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறைந்த பட்சம் எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று உறுதியாக வாக்களித்தால் மட்டுமே நிபுணர் குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்குச் சார்பாக செயற்பட முடியும் என்று இந்தியப் பிரதமர் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான வாக்குறுதியை அளித்த பின்னரே நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இந்தியா ஓரளவுக்கு இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. ஆயினும் அதனை முழுமையாக ஆராய்ந்த பின்பே இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

http://news.lankasri.com/view.php?22cIBB3035jQe4e2sGpLcb3T92sdd0W293bceXpG3e4bUQj402dLLcc2

  • கருத்துக்கள உறவுகள்

<_< அட !!

இதைத்தானேடா கடந்த 25 வருடகாலமாகச் சொல்லி வருகிறீர்கள்?? இந்தியா உறுதிமொழி கேட்பதும், சிங்களம் ஒத்துக்கொள்வதும், பின்னர் இந்தியா அதைப்பற்றி மறந்துவிடுவதும்...இன்னும் எத்தனைகாலம்தான் ஏமாற்றப்போகிறார்கள் ??

இதில் உண்மை என்னவென்றால், இனக்கொலையை செய்தது இவர்கள் இருவரும் சேர்ந்துதான். இதில் ஒருவருக்கொருவர் முண்டுகொடுத்து போர்க்குற்றங்களை மறைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

அப்படி ஏதாவது இந்தியா நல்லது செய்யும் என்று எதிர்பார்த்திருந்தால் அது நமது முட்டாள்த்தனமேயன்றி வேறில்லை !!!!!

Edited by ragunathan

  • தொடங்கியவர்

நடப்பவை இதய சுத்தியுடன்தான் நடக்கிறதென்றால் இம் முறை இந்தியாவும் சுற்றி வளைப்புக்குள் வரும். என்ன நடக்கிறது என்றுதான் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்தின் ஆபத்து -உதவி "இந்தியா" தன் கடமைக்கு எப்படி எல்லாம் பெயர் சூடுகின்றது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.