Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை..!

Featured Replies

இலங்கை ராணுவத்துக்கு உதவக் கூடாது: மத்திய அரசுக்கு மதிமுக, பாமக, திக எச்சரிக்கை

டிசம்பர் 30, 2005

சென்னை:

இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்துள்ள நிலையில் சென்னையில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டம் நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இதற்கு முன்னிலை வகித்தார்.

பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வைகே பேசுகையில்,

முதலில் எங்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றோ, புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கூட்டம் என்றோ யாரும் நினைக்கக் கூடாது. நடுநிலையுடன் இந்த கூட்டத்தைப் பார்க்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட காரணத்தால்தான் தனி ஈழம் என்ற கோரிக்கை பிறந்தது. தமிழர்களின் வீரம், பண்பாடு, கொடை, குணம், கலாச்சாரம், மானம் ஆகியவற்றைக் கட்டிக் காத்து வருபவர்கள் ஈழத் தமிழர்கள். அவர்களுக்கு கொடுமை இழைக்கப்படுவதைக் கண்டு எந்தத் தமிழனும் அமைதியாக இருக்க முடியாது.

நமது உணர்வுகளை வெளிப்படுத்தினால், நம்மை பிரிவினைவாதிகள் என்கிறார்கள். தனி நாடு வேண்டுமா, வேண்டாமா என்பதை வெளியுலகில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது. அதை அங்குள்ள தமிழர்கள்தான் தீர்மானிக்க முடியும்.

இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்தவிதமான உதவியையும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால், இந்த வைகோவைப் போல, தமிழ் இளைஞர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கட்டும். நாம் என்ன செய்து விடப் போகிறோம் என்று மத்திய அரசு தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டாம்.

இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சை உடனடியாக தொடங்க இந்தியா நெருக்குதல் கொடுக்க வேண்டும். நார்வே நாட்டு மத்தியஸ்தம் தொடர இந்திய அரசு உதவியாக இருக்க வேண்டும்.

ஈழத்தில் தமிழினத்தில் கொடி பறக்க வேண்டும், தமிழீழம் கட்டாயம் மலரும். அது காலத்தின் கட்டாயம். அதற்கு நாங்கள் துணை நிற்போம் என்றார் வைகோ.

ராமதாஸ்:

ராமதாஸ் பேசுகையில், நமது வேண்டுகோள் தெளிவாக உள்ளது. இலங்கை அரசுக்கு இந்தியா எந்தவித உதவியையும் செய்யக் கூடாது. சமரசப் பேச்சுவார்த்தை தொடர இந்தியா, இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்.

மத்திய அரசில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம் என்பதாலோ, வைகோ தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதாலோ, நமது கொள்கையிலிருந்து, உறுதியிலிருந்து பிரள முடியாது.

கடந்த முறை போகாத இடத்துக்குச் சென்று ஆட்சியில் அங்கம் வகித்தபோது நல்ல மனிதரான வாஜ்பாயை சந்தித்தும்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி நான் பேசாமல் வந்ததில்லை. அவரும் ஆதரவாகவே இருந்தார். அதே போல இந்த மத்திய அரசும் இருக்க வேண்டும்.

இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இங்கே கூடியுள்ள தமிழர்கள் மட்டுமல்ல, ஆறரை கோடி தமிழர்களும் வழிமொழிந்திருக்கிறார்கள். தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர் வேண்டுமானால் வழிமொழியாமல் இருக்கலாம்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் நாம் என்றும் துணை நிற்போம். அது தொப்புள் கொடி உறவு என்றார் ராமதாஸ்.

கி. வீரமணி:

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில்,

தமிழர்கள் வாழும் இடம் சுடுகாடு ஆகிவிடக் கூடாது என்பதை சிந்திக்க வைக்க முதல் கூட்டம் நடக்கிறது. விடுதலைப் புலிகளை நாம் காப்பாற்ற வேண்டும். அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்குத் தெரியும்.

நாம் வக்கீலாக இருந்து அவர்களுக்காக வாதாட வேண்டும். அங்கே சிறந்த வக்கீல்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு நாம் கேடயமாக இருக்க வேண்டும், அவ்வளவு தான் என்றார்.

இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவி, தளவாட உதவி, தொழில்நுட்ப உதவி என எதையும் வழங்கக் கூடாது. அப்படி வழங்கப்பட்டால் அது தமிழர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும். எனவே இதை அனுமதிக்க முடியாது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தற்ஸ்தமிழ்.கொம்

ஆனையிறவு கைப்பற்றப்பட்ட போது எழுந்தது போல மீண்டும்..பார்ப்பர்ணிய மேலாதிக்கத்தை விரும்பும் ஊடகங்களின் குரல்களையும் தாண்டி தமிழகத்தில் ஈழத்தமிழர் பற்றிய உண்மை ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. உணர்வு பொங்கத் தொடங்கி இருக்கிறது. நாம் எல்லாம் தமிழர்கள். ஒரே உறவுகள் என்ற உண்மை நிலைநாட்டப்படத் தொடங்கி இருக்கிறது. இந்த உண்மைகளை ஈழத்தமிழர்களில் சிலரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்..! இந்திய மத்திய மாநில அரசுகளின் ஈழத்தமிழர் தொடர்பான நயவஞ்சகக் கொள்கைகளை எதிர்ப்பதை தவறாக விளங்கிக் கொண்டு இந்திய மக்களை பெரியவர்களை மதிக்காது மிதிக்கும் எண்ணங்கள் தகர்க்கப்பட வேண்டும்..! சிங்கள தேசத்தையும் விட ஈழத்தமிழனின் உண்மை உணர்வுகளை உள்வாங்கக் கூடியவன் தமிழகத் தமிழனே..! அவனிடம் உண்மைகள் போய்ச் சேர ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் ஈழத்தமிழர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு...உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்..! :idea:

  • Replies 56
  • Views 7.4k
  • Created
  • Last Reply

ஈழ தமிழர் சார்பான எழுச்சி அலை நிச்சயமாக இது தான் முதல் முறையல். இருந்தாலும் நல்ல விடையம் தான்.

அமைதிப்படைக்கு முன்னரே தமிழகத்தில் மக்களின் அனுதாபத்தை ஆதரவை முளையில் கிள்ள பல நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. அமைதிப்படையின் சாகசங்களுக்கு பின்னையகாலத்திலும் இதை தொடர்வதற்கு மேலாண்மை வாதிகளுக்கு அதிகமா சிந்தித்து உழைக்க வேண்டியதாக இருக்கவில்லை. இன்று மீண்டும் தோன்றியுள்ள ஆதரவுகளை கட்டுப்படுத்தி தேவை ஏற்படும் போது மீண்டும் கிள்ளி எறிய பின்னிக்கப் போவதில்லை. அதற்கும் தேவைக்கேற்ப சதி(கள்) நிறைவேற்றப்படும். இந்த சதிகளை அம்பலப்படுத்தி வெற்றி கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோமா? அப்படி ஒரு நிலை எம்மால் அடைய முடியுமா?

உதாரணத்திற்கு கிழக்கில் முஸ்லீம் தமிழ் உறவுகள் அவ்வப் போது பலப்படும், பின்னர் பல சதிகள் நிறைவேற்றப்பட்டு சிதைக்கப்படும் என்ற நீண்ட வரலாறு ஒன்று உள்ளது. கடந்த 2..3 வருடங்களில் தான் நிலமை கொஞ்சம் கட்டுப்பாட்டிற்;குள் வந்திருக்கிறது.

இவற்றை கருத்தில் கொண்டு எமது எதிர்பார்ப்புக்களை சரி செய்யவது நல்லது அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.......

உதுக்குள்ளே, அம்மாவாவை ஆதரிக்கும் ஒருவரும் நிற்கிறார்!!!!! அதுமட்டுமல்ல முன்னிலை வகிக்கிறார்!! உதுவும் அம்மாவின் தற்போதைய மனமாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்குமோ??????????

ரோகரா!! அரோகரா.........

ஓம் ஓம் அரசியலிலை உதுகள் வழமை.

முந்தி ஒரு காலத்திலை சந்திரிக்காவும் போய் டெல்கியிலை கட்டிப்பிடிச்சு அழுதவ நீயும் நானும் விதவையாக இருக்கிறம் எண்டும்.

அப்படியே தமிழ்நாட்டிலை வந்து பருமனிலையும் ஊழலிலையும் நீயும் நானும் உடன்பிறவா சகோதரிகள் எண்டு விட்டிருப்பா.

இந்த வருட ஆரம்பத்திலை தானே அநுராதபுரம் திருகோணமலை பிரதான வீதிக்கு யாற்றையே பெயரிலை புனருத்தாரணம் செய்யப் போறம் எண்டவை. அதுக்கு முதல் எண்ணைத் தாங்கிகளை குத்தகைக்கு எடுத்த கர்வத்திலை வந்து ஒரு அதிகாரி திருகோணமலையை வேறுயாரும் இனி உரிமை கோரமுடியாது என்று திருகோணமலை முழுவதையை உரிமையாளர் வித்து அவை வேண்டிப்போட்டினம் மாதிரி புலம்பிப் போட்டு போனவர்.

பாதுகாப்பு காரணங்களை காட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சென்னை விஜயம் இரத்து செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா மகிந்த ராஜபக்சவின் சந்திப்பும் இரத்தாகியது. மற்றும்படி ஜெயலலிதா சந்திப்பை தவிர்த்தார் என்பது சுத்த கம்பக். சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் சிலருடன் கூட்டணி அமைப்பதற்காக இப்படி எத்தனையோ நாடகங்களை அவர் நடாத்துவார்.

இல்லை ஐயா,

ஜெயலலிதா தோழியுடன் சிறுதாவூர் பங்களாவுக்கு புதுவருடம் கொண்டாடச் சென்றிருக்கிறார்.... அவர்தான் ராஜபக்சேவைச் சந்திப்பதைத் தவிர்த்திருக்கிறார்....

  • கருத்துக்கள உறவுகள்

பாதுனாப்பு காரணம் என்பது சுத்த பொய்...

ஜெயலிதாவினுடைய நிகழச்சிப்பட்டியலி;ல் சந்திப்பிற்க்காக நேரம் ஒதுக்கபடவில்லை இல்லது நேரம் இல்லை என்று தான் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பத்திரிகையாளருக்கு கூறி இருந்தார்... :(:(

சுண்டல் அவர்கள் கூறுவது உண்மை தான்.... ஒரு நாட்டின் அதிபரையே புறக்கணிக்கும் அளவுக்கு ஒரு மாகாண முதல்வருக்கு இந்திய ஜன நாயகம் உரிமை அளித்து இருக்கிறது.... அம்மையார் சொந்த வேலை பொருட்டு இந்த சந்திப்பை ரத்து செய்திருக்கிறார்....

நான் நினைக்கிறன்....மத்தியஅரசாங்கம

ஏதோ நடக்கிறது. 2 நாM முன்பு தினமலர் தினசரியில் "வைகோவிற்க்கு கூட்டணி வலை விரிக்கும் ஜெயா" என்று ஒரு கட்டுரை படித்தேன். அந்த விழ்யத்திற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

வைகோ மட்டும் ஜெயலலிதா பக்கம் இந்த முறை சாய்ந்தால் தமிழ் நாட்டில் நாய் கூட அவரை மனிதராக மதிக்காது.....

அரசியல் பண்ண பணம் வேண்டும். சன் தொலைகாட்சியில் அவரின் தகவல்கள் இருடடிப்பு செய்ய படுகின்றன. இன்னும் சில நாளில் தெரிந்துவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

சிலது அவருடைய அரசியல் ஆலோசகர்களும் கூறிஇரக்கலாம்...சந்திக்கவெண்

வை.கோவை தனது கட்சியின் கூட்டணிக்கு இழுக்க அ.தி.மு.க பலகோடிகள் பேரம் பேசியதாக புலம்பெயர் வானொலி ஒன்றில் திரு.அப்துல் ஜபார் அவர்களின் இந்தியக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் அவரால் சொல்லப்பட்டது. அரசியலில் எதுவும் நடக்கலாம். முன்பு ஜெயலலிதாவை மும்மூரமாக எதிர்த்த வை.கோ பின்பு அவருடன் சங்கமமானதும் நடந்தது தானே. இதற்கும் விரைவில் பதில் கிடைத்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்ய் என்ன லொள்ளா? பின்ன எல்லோரும் லாம் லாம் எண்டு கேள்வி குறி போடுறீங்க?

புலநாய் என்ன சொல்லுதெண்டால், ஜெயா நினைச்சவாம் மிஸ்ரர் ராஜபக்ஷா இந்திய விஜயத்தின் போது திருமதி ராஜபக்ஸாவை கூட்டிக்கொண்டு வரமாட்டார் எண்டு,, ஏனெண்டால் பொதுவா நம்ம தோஸ்துகள் அதுதான் ஆப்பு இழுத்தவர், விசா எடுத்து பரலோகம் போன கதிர்காமர் எல்லாரும் சிங்கிளாத்தானே இந்தியாவுக்கு போறவே? அந்த நினைப்பில எண்ட செல்லம், பாப்பா, பீப்பா ராஜபக்ஷாவை சந்திக்கிறதா சொல்லிட்டா,, பிறகு எயார் போட்டில வந்து இறங்கைக்கதான் தெரிஞ்சுது, மிஸ்ஸீஸ் மிஸ் ஆகாமல் மிஸ்ரரோடு இந்தியாவுக்கு வந்துருக்கிறா எண்டு,, அதுதான் திடிரெண்டு நேரமில்லை எண்டு அவைட் பன்னிட்டா,,, :(:(:( :idea:

சந்திரிகாவும் ஜெ.வும் பெஸ்ட் பிரண்ட் என்று தெரியாதா?

பிறகு எப்படி மகிந்தவை சந்திப்பார் ஜெ? :P :wink:

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவும் ஜெ.வும் பெஸ்ட் பிரண்ட் என்று தெரியாதா?

பிறகு எப்படி மகிந்தவை சந்திப்பார் ஜெ? :P :wink:

அட்டட்டட்டடா அரசியல்லாம் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா,,,, :evil: :evil: :evil: :evil: எண்ட கறவை மாட்டை ஆப்பு இழுத்தவர் எத்தனை நாள் குத்தகை எடுத்து வைச்சிருந்தவர் தெரியுமோ? முழு டிரையில்சையும் சொன்னால் அந்த பிஞ்சு மனசிண்ட மனம் நொருங்கிடும்,,,, :cry: :(:( (அட நான் பிஞ்சு உள்ளம் எண்டு சொன்னது நம்ம சங்குவை)

சந்திரிகாவும் ஜெ.வும் பெஸ்ட் பிரண்ட் என்று தெரியாதா?

பிறகு எப்படி மகிந்தவை சந்திப்பார் ஜெ? :P :wink:

சந்திரிகாவும் ஜெ,யும் பெஸ்ட் பிரண்டுங்களா...சேசே..சசிகலாக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://thenseide.com/cgi-bin/ETPKindex.asp

கூட்டத்தின் புகைப்படங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக தமிழ்நாட்டு அரசியலை பொருத்த வரை நிரந்தர பகையும் இல்லை நிரந்தர நட்ப்பும் இல்லை..ஆனால் வைகோ ஜெ கூட்டனியில் சேருகின்ற வாய்ப்பு மிக குறைவு..தொகுதி பங்கிடும் போது தெரிய வரும் அத வரை பொருமை plzz

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மதராசி றொம்ப நாளா காணம் நல்லா இருக்கிங்கலா?

வணக்கம் மதராசி றொம்ப நாளா காணம் நல்லா இருக்கிங்கலா?
வணக்கம் சுண்டல்...தாங்ஸ்ங்க.....என்னங்க ...ஏங்க இப்ப சுட்டு போடுறதை ரெம்ப குறைச்சிட்டீங்க..... :(
  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு பொட்டாலும் திட்டுறாங்கப்பா சொந்தமா போடதெரியாதானு எதுக்க வம்பு.. :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

அட்டட்டட்டடா அரசியல்லாம் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா,,,, :evil: :evil: :evil: :evil: எண்ட கறவை மாட்டை ஆப்பு இழுத்தவர் எத்தனை நாள் குத்தகை எடுத்து வைச்சிருந்தவர் தெரியுமோ? முழு டிரையில்சையும் சொன்னால் அந்த பிஞ்சு மனசிண்ட மனம் நொருங்கிடும்,,,, :cry: :(:( (அட நான் பிஞ்சு உள்ளம் எண்டு சொன்னது நம்ம சங்குவை)

சொல்லன்டா? இப்பயான கதை கேட்கின்றதே தனி அலாதிதான் :wink: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.