Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிட்டத்தட்டப் பத்து வருடத்தின் பிறகு பதிலடி. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May 5, 2011 / பகுதி: செய்தி /

கிட்டத்தட்டப் பத்து வருடத்தின் பிறகு பதிலடி. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா.?

9-11 என்ற எண்கள் 2001ம் ஆண்டின் நியூயோர்க் இரட்டைக்கோபுர அழிப்புச் சின்னமாகியுள்ளன. வரலாற்றில் ஒரு விமானத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் உத்தி இதற்கு முன்னர் நடந்ததில்லை. ஓசாமா பின் லாடன் உருவாக்கிய அல்- குவெய்தா இயக்கம் இந்த உத்தியை உருவாக்கிக் கையாண்டது.

2001 செப்ரம்பர் 11ம் நாள் அமெரிக்காவில் விமான ஓட்டுனர் பயிற்சி பெற்ற அல்- குவெய்தா போராளிகள் நான்கு பயணிகள் விமானங்களைப் பயணிகளோடு கடத்தினர். அந்த நான்கில் இரண்டு நியூ யோர்க் வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீது மோதச் செய்யப்பட்டன.

கோபுரங்கள் முற்றாக அழிந்தன. 3,000 வரையலான கோபுரங்களில் பணியாற்றினோரும் விமானங்களில் பயணித்தோரும் கொல்லப்பட்டனர். இன்னொரு விமானம் அமெரிக்கப் படைத்துறைச் செயலகம் பென்ரகனில் மோதியதில் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டன.

நான்காவது விமானத்தைக் கடத்தியோருடன் பயணிகள் போரிட்டதில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் வீழ்ந்து நொருங்கியது. அமெரிக்கா மீது இந்த வகையில் போர் தொடுத்த ஒசாமா பின் லாடன் வேறு யாருமல்ல. அவர் அமெரிக்கர்களால் தமது தேவைக்காகத் தெரிவு செய்து பயிற்றப்பட்டவர்.

1979ல் சோவியத் ஒன்றியப் படைகள் அப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது அமெரிக்க அரசு நேரடியாக எதிர் யுத்தத்தில் இறங்காமல் முஐhகிடீன் என்ற மதப் போராளிகளுக்குப் பாக்கிஸ்தான் ஊடாக ஆயதங்களையும் இராணுவப் பயிற்சியையும் வழங்கியது. இஸ்லாமுக்கு ஆபத்து என்ற கோசத்தையும் அமெரிக்கா எழுப்பியது.

இஸ்லாமிய இளைஞர்களைச் சோவியத் ஒன்றியப் படைகளுக்கு எதிரான புனிதப் போரில் பங்கு பற்ற வருமாறு அமெரிக்க அறைகூவல் விடுத்தது. சவுதி அரேபியாவின் கோடீஸ் வர குடும்பத்தில் பிறந்த ஒசாமா பின் லாடன் இந்த அறைகூவலுக்கு அமைவாக அப்கானிஸ்தானுக்குப் போராளியாக வந்து சேர்ந்தார்.

1989ல் சோவியத் ஒன்றியப் படைகள் அப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் வரை ஒசாமா பின் லாடன் களத்தில் நின்றார.அமெரிக்கர்களின் சதியை அவர் அப்போது உணர்ந்தார். இஸ்லாமியர்களைத் தனது தேவைக்குப் பயன்படுத்திய அமெரிக்கா மீது போர் தொடுக்கும் அல் – குவெய்தா இயக்கத்தை அவர் தோற்றுவித்தார்.

அல் – குவெய்தா என்றால் அரபு மொழியில் ‘தளம்”(The Base என்று பொருள். அமெரிக்கா இஸ்லாமியர்களைப் பலிக்கடாவாக்கித் தனது தேசிய நலனை முன்னெடுக்கிறது. அதற்காக அமெரிக்கா மீது உலகளாவிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் மூர்க்கத்தனமான கொள்கையை இந்த இயக்கம் நடைமுறைப் படுத்தியது.

இரட்டைக் கோபுரத் தாக்குதல் இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய கட்டம். அதன் தாக்கம் உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த காலத்தின் அமெரிக்க ஐனாதிபதி ஜார்ஜ் புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” (War On Terror) என்ற வரலாற்றைத் திரிபு படுத்தும் போராட்டத்தைத் தொடங்கினார்.

புஷ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உலக நாடுகளுக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான கட்டுப் பாடற்ற போரை நடத்தும் அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை ஐநாவில் நிறை வேற்றினார். தமது மக்கள் மீது வன்முறையைக் கட்ட விழ்த்து விடுவதற்கு இந்தப் பிரேரணை சட்டபூர்வ அனுமதி வழங்கியது.

விடுதலை கோரிப் போரிட்ட விடுதலை அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக இந்த ஐநாத் தீர்மானம் மாற்றியது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பயங்கர அமைப்புக்கள் பட்டியலைத் தயாரித்தன. அதில் பயங்கரவாத அமைப்புக்களையும் விடுதலை இயக்கங்களையும் ஒன்றாக பட்டியலிட்டன.

அதிபர் புஷ் முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தவறான கொள்கை பயங்கரவாத அமைப்புக்களையும் விடுதலைக்காகப் போரிட்ட அமைப்புக்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தவறியதால் ஈழத் தமிழர்கள் நடத்திய மக்கள் விடுதலைப் போர் பாரிய பின்னடைவைச் சந்தித்தது.

“ வரலாற்றை நேர் செய்தல்” என்ற பதங்கள் (To Straighten The Record ) பாவனையில் உள்ளன. இதன் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் 2009ல் சந்தித்த பின்னடைவிற்கும் 2001ம் ஆண்டின் இரட்டைக் கோபுர இடிப்பிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதை உணர முடியும்.

புஷ் அல்-குவெய்தாவுக்கு எதிரான போரின் அங்கமாக அப்கானிஸ்தான், ஈராக் மீதான் போர்களைத் தொடுத்தார். இன்று வரை நிறுத்த முடியாத கட்டத்தில் இரு நாட்டுப் போர்களம் தொடர்கின்றன. அமெரிக்காவின் பொருளாதார நலிவுக்கு இந்தப் போர்கள் முக்கிய காராணமாக அமைகின்றன.

அதிபர் புஷ் ஒசாமாவை உயிரோடு அல்லது சடலமாகப் பிடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்தச் சாதனையை இப்போதைய அதிபர் பராக் ஒபாமா நிகழ்த்தியுள்ளார். அவருடைய ஆதரவுத் தளம் சுருங்கி வரும் இந்தக் காலகட்டத்தில் ஒசாமாவின் கொலை பெரும் வரப்பிரசாதமாக அவருக்கு அமைந்துள்ளது.

மலைக் குகையில் பதுங்கி வாழ்கிறார் என்று எண்ணப்பட்ட ஒசாமா பின் லாடன் பாக்கிஸ்தான் அரசின் பாதுகாப்பில் தலைநகர் இஸ்லாமபாத்தின் 60 கி.மீ தொலைவில்லுள்ள அபொட்டோபாத் நகர் மூன்று அடுக்கு உல்லாச மாளிகையில் பாதுகாப்பாக வாழ்ந்தார்.

அமெரிக்காவின் உளவுப் பிரிவு இதைக் கண்டுபிடித்து அதிபர் ஒபாமாவுக்கு அறிவித்த போது அவர் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். பாக்கிஸ்தான் அரசுக்குத் தெரியாமல் உலங்கு வானூர்தியில் வந்து சேர்ந்த அமெரிக்கக் கடற் படையின் சீல் (Seal ) விசேட தாக்குதல் பிரிவினர் வெற்றிக் கனியைச் சுவைத்தனர்.

புஷ் முன்னெடுத்த தவறான கொள்கை திருத்தப்படுமா என்ற வினாவை ஈழத் தமிழர்கள் எழுப்புகின்றனர். புகழின் உச்சாணியில் இந்தச் சாதனை மூலம் ஏறியுள்ள அதிபர் ஒசாமா பாராட்டுக்குரியவர். அதே சமயம் வரலாற்றுத் தவறை நேராக்கும் கடப்பாடும் அவருக்கு உண்டு.

pathivu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓசாமா கொன்றது 5000. அமெரிக்கா ஒசாமாவைத்தேடுதல் என்ற வேட்டையின் பேரில் கொன்றது லட்சோ லட்சம். இழந்த அமெரிக்கவீரர்கள் 6000க்கு மேல் காயமடைந்தது 14,000க்கு மேல் செலவழித்தது கோடி டொலர்கள். செலவழிக்கப்போவது.???????. இவை எல்லவற்றிற்கும் அமெரிக்காவே காரணம். வல்லரசுகள் திருந்தி தங்கள் கொள்கைகளை மாற்றி அமைக்கும் வரை உலகில் இந்த பிரச்சனை புதிது பதிதாக உருவாகிக்கொண்டே இருக்கும். இதைத்ததான் இந்த உலகம் முன்மொழிகின்றது.. அல்லது வல்லரசுகளின் சக்தி இதற்குரிய ஆயுதசெயற்பாடுகளினால் அழிந்து போய்விடும் நிலைதான் உலகில் மிஞ்சும். அமெரிக்கா இப்பேர்தே ஆட்டம் கண்டுவிட்டது. இன்னும் போர் என்று சென்றால் போர்களுக்கே முதன்மை காரணியாக இருக்கும் அமெரிக்காவால் இனிமேல் போர்களை நடத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படும். எல்லாம் எல்லாம் வல்ல இறைவனின் ஆட்டத்தின்படியே நடைபெறுகின்றது. குற்றம் செய்த யாருமே இறைவனின் கணக்கிலிருந்து தப்பமுடியாது. இறைவனின் கணக்கும் தப்பாது. இதில் அமெரிக்கர்கள் செய்த பாவம் அமெரிக்காவைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆயுதத்ததைச் செய்தவனும், பயங்கரமானோர் கைக்கு விற்பனை செய்தவனும், போர்களை உருவாக்கி உலகில் அமைதியைக் குலைத்தவனும், அமைதிக்கான போர் என்று லட்லோ லட்சம் அப்பாவி மக்களைக்கொன்று குவித்தவனும், போட்ட அதிரும் குண்டுகளால் உலகமே அதிர்ந்து புவி நடுக்கங்களும் சுனாமிகளும் உருவாகியமைக்கும், சதாம், ஒசாமா, கடாபி, முபாரக் போன்ற பயங்கமானவர்களை ஆட்சிக்கட்டில் ஏற்றியவர்களும், அவர்கள் தேவையில்லாதபேர்து அழிப்பதற்கு அந்த நாட்டையே குட்டிச்சுவர் ஆக்கியதும் வல்லரசுகளில் முதன்மை இடத்தைப்பிடிப்பது அமெரிக்காதான். உலகில் பயங்கரத்திற்கான சக்தி எங்கிருந்து உருவாகின்றது? என்று பார்த்தால் இன்றைய காலத்தில் அமைதிக்குப் பயங்கரமானவர்கள் அமெரிக்க அரசியல்யாளர்களே. நாம் குற்றம் செய்து கொண்டு மற்றவர்களைக்குறை கூறி அழிப்பதில் எந்தமாற்றங்களும் வந்துவிடமுடியாது. இவர்களும் தாங்களாக அழியும் விளிம்பில் வந்துவிட்டார்கள். இதுதான் உலகின் சுழற்சி. அமெரிக்கர்கள் ஒருபோதும் திருந்த இறைவன் விடமாட்டான். திருந்தினால் இறைவன் அவர்களை இலகுவில் அழிக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட ஆக்களின் அறிவை நினைச்சு புல்லரிக்குது..!

1983 இல் அமெரிக்க படை உதவியை ஜே ஆர் அரசுக்கு அளித்து சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆரம்பித்தவர்.. அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன். தமிழர்களை அழித்தால் அன்றி சிறீலங்காவில் பயங்கரவாதப் பிரச்சனை தீராது என்று ஜே ஆரை தமிழர்களுக்கு எதிராக ஏவி விட்டவரும் இவரே.

அதன் நீட்சி.. பல ஆட்சியாளர்களாலும் தொடர்ந்தது..

1995 இல் சந்திரிக்கா அம்மையாருக்கு கிரீன் பரேட் மூலம் நேரடிய இராணுவ ஒத்துழைப்பை வழங்கி தமிழர்களின் நிலத்தை முற்றிலுமாக ஆக்கிரமிக்கும் ஜெயசிக்குறு போரை அமெரிக்கா நடத்தியது.

1997 இல் தமிழீழ விடுதலைப்புலிகளை சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் இட்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச பயங்கரவாதமாகச் சித்தரித்தது அமெரிக்கா.

2006 இல் மீண்டும்.. அமெரிக்காவின் முழு ஒத்துழைப்போடு பயங்கரவாததிற்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழர்கள் மீதான அடக்குமுறைப் போர் திணிக்கப்பட்டு அது பல்லாயிரக்கணக்கான உயிர் அழிவுகளோடு 2009 முள்ளிவாய்க்காலில் நிறைவு கண்டது.

இப்படி எல்லாம் இருக்க.. எம்மவர்கள் அலன் தம்பதிகளின் கடத்தல் நாடகத்தில் இருந்து ஒசாமா பின்லேடனின் அமெரிக்க வேட்டை வரை அமெரிக்கா மீது தங்கள் விசுவாசத்தை பறைசாற்றும் கட்டுரைகளை வரவதை என்றும் கைவிட்டதில்லை.

அமெரிக்கா மீதான எமது அழுத்தம் என்பது அமெரிக்கா மீது வெட்டிப் புகழ்பாடுவதில் அல்ல. அமெரிக்காவின் கொள்கைகளில் எமது இன ஒற்றுமை மற்றும் பிராந்திய நடவடிக்கைகள் தாக்கம் செய்யும் அளவுக்கு இருக்கும் போதே அமெரிக்கா எமது சொல்லையும் செவி மடுக்கும். அதைச் செய்யாமல்.. அமெரிக்கா செய்வதற்கு எல்லாம் புகழ் மாலை சூடிக்கொண்டு திரிந்தால் அமெரிக்கா என்ற ஏகாதிபக்தியம் எம்மை சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டு போகும். அமெரிக்க ஏகாதபக்தியமும்.. இந்திய வல்லாதிக்கம்.. சிங்களப் பேரினவாதமும் வெவ்வேறானவை அல்ல. எல்லாமே.. பெரும் பூதங்கள். அவற்றை சரியாக கையாளாது விட்டால் அழிவு நமக்கே..!

Edited by nedukkalapoovan

உளவியல் ரீதியாக நாம் எமது எதிரிக்கு, சிங்களத்திற்கு, எம்மை அழிக்க உதவியவர்களை தற்காலிகமாக என்றாலும் மறக்கவேண்டிய தேவை உள்ளது. இப்படி செய்தே பல நாடுகள் தமது இருப்பை பலப்படுத்தியுள்ளன. அமெரிக்காவுடனான வியட்னாம், ஜப்பான் உறவுகளை குறிப்பிடலாம். அதேவேளை கியூபாவை பார்த்தால் முப்பது வரு அமெரிக்க எதிர்ப்பு கொள்கை பாரிய பின்னடைவை தந்துள்ளது.

விடுதலைப்புலிகள் உட்பட தமிழர்கள் அமெரிக்காவுக்குஅவர்கள் நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியாவுக்கும், அவர்கள் நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எமக்கு தேவை எம்மை நாமே ஆளும் உரிமை.

ஆனால் எமக்கில்லாத இராசதந்திர அணுகுமுறைகளை சிங்களம் தனக்கு சாதகமாக பாவித்து உலக அரங்கில் இருந்த நிலைமையை சிங்களம் (கதிர்காமர்) தனக்கு சாதகமாக பாவித்தது. இந்த ஐ.நா. அறிக்கை மூலம் எமக்கு ( கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவை) ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எமது கொள்கையை விளக்க, சிங்களத்தின் கபடத்தை சொல்ல கிடைத்த நிலைமையை தவறவிட கூடாது.

தனிமனித வாழ்விலும்,சமூகங்கிடையிலும்,இனங்களுக்கிடையிலும்,நாடுகளுக்கிடையிலும் இதுதான் நடைக்கின்றது.

அதிகாரத்தில் இருப்பவன் வைப்பதுதான் சட்டம்.இது அமெரிக்கா தொடக்கம் எனது முதலாளிவரைப் பொருந்தும்.நியாயம்,நீதி,தர்மயுத்தம் இதெல்லாம் சினிமாவுடன் சரி.

எங்களுக்கு பாதிப்பு வந்தபடியால்தால் நாம் இவற்றை எல்லாம் இப்போ அலசுகின்றோம்.காலனித்துவகாலத்தில் இருந்ததைவிட நாடுகளுகான உறவு முன்னேற்றம் அடைந்துள்ளதே தவிர மற்றப்படி தனக்கொருதேவையென்றால் அதிகாரத்தில் இருப்பவன் எப்படியும் சாதித்தே விடுவான்.பின் லாடனைபிடிக்க பாகிஸ்தானுக்குள் நுளைந்த உதாரணமே போதும்.

உலகிகிற்கு கியுமன் ரைட்ஸ்,எங்களுக்கு கியுமன் ரிசோசர்ஸ் இரண்டும் அவன் தான் கண்துடைப்பிற்கு வைத்திருக்கின்றான்.எப்போது எமது பிரச்சனையை நாம் தீர்க்கமுடியாமல் அடுத்தவனை உள்ளே வர அனுமதித்தோமோ அன்றே எல்லாம் அவர்கள் கையிலேயே போய்விட்டத்து.

இதற்குத்தான் சிறுவயதில் குரங்கு அப்பம் பங்கிட்டகதை படிப்பித்தார்கள்.

குமுத்தத்தில் வந்த துணுக்கு---" உன்னை எப்படி மகளிர் அணி தலைவர் ஆக்கினாங்கள்? உனக்கு கட்சியியோட கிஸ்டரி தெரியுமா?"

" இல்லை எனக்கு தலைவரோட கெமிஸ்ட்ரி தெரியும்."

நம்மட ஆக்களின் அறிவை நினைச்சு புல்லரிக்குது..!

1983 இல் அமெரிக்க படை உதவியை ஜே ஆர் அரசுக்கு அளித்து சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆரம்பித்தவர்.. அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன். தமிழர்களை அழித்தால் அன்றி சிறீலங்காவில் பயங்கரவாதப் பிரச்சனை தீராது என்று ஜே ஆரை தமிழர்களுக்கு எதிராக ஏவி விட்டவரும் இவரே.

அதன் நீட்சி.. பல ஆட்சியாளர்களாலும் தொடர்ந்தது..

1995 இல் சந்திரிக்கா அம்மையாருக்கு கிரீன் பரேட் மூலம் நேரடிய இராணுவ ஒத்துழைப்பை வழங்கி தமிழர்களின் நிலத்தை முற்றிலுமாக ஆக்கிரமிக்கும் ஜெயசிக்குறு போரை அமெரிக்கா நடத்தியது.

1997 இல் தமிழீழ விடுதலைப்புலிகளை சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் இட்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச பயங்கரவாதமாகச் சித்தரித்தது அமெரிக்கா.

2006 இல் மீண்டும்.. அமெரிக்காவின் முழு ஒத்துழைப்போடு பயங்கரவாததிற்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழர்கள் மீதான அடக்குமுறைப் போர் திணிக்கப்பட்டு அது பல்லாயிரக்கணக்கான உயிர் அழிவுகளோடு 2009 முள்ளிவாய்க்காலில் நிறைவு கண்டது.

இப்படி எல்லாம் இருக்க.. எம்மவர்கள் அலன் தம்பதிகளின் கடத்தல் நாடகத்தில் இருந்து ஒசாமா பின்லேடனின் அமெரிக்க வேட்டை வரை அமெரிக்கா மீது தங்கள் விசுவாசத்தை பறைசாற்றும் கட்டுரைகளை வரவதை என்றும் கைவிட்டதில்லை.

அமெரிக்கா மீதான எமது அழுத்தம் என்பது அமெரிக்கா மீது வெட்டிப் புகழ்பாடுவதில் அல்ல. அமெரிக்காவின் கொள்கைகளில் எமது இன ஒற்றுமை மற்றும் பிராந்திய நடவடிக்கைகள் தாக்கம் செய்யும் அளவுக்கு இருக்கும் போதே அமெரிக்கா எமது சொல்லையும் செவி மடுக்கும். அதைச் செய்யாமல்.. அமெரிக்கா செய்வதற்கு எல்லாம் புகழ் மாலை சூடிக்கொண்டு திரிந்தால் அமெரிக்கா என்ற ஏகாதிபக்தியம் எம்மை சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டு போகும். அமெரிக்க ஏகாதபக்தியமும்.. இந்திய வல்லாதிக்கம்.. சிங்களப் பேரினவாதமும் வெவ்வேறானவை அல்ல. எல்லாமே.. பெரும் பூதங்கள். அவற்றை சரியாக கையாளாது விட்டால் அழிவு நமக்கே..!

சரி, அப்ப இவ்வளவு காலமும் அமெரிக்கா எம்க்கு எதிராக இயங்கியது!!!! அப்ப என்ன செய்கிற நோக்கம்???? .... எங்களுக்கு மூன்று வல்லரசு, 300 நாடுகள் பின்னும் இருக்குத்தானே?????? <_<

  • கருத்துக்கள உறவுகள்

சரி, அப்ப இவ்வளவு காலமும் அமெரிக்கா எம்க்கு எதிராக இயங்கியது!!!! அப்ப என்ன செய்கிற நோக்கம்???? .... எங்களுக்கு மூன்று வல்லரசு, 300 நாடுகள் பின்னும் இருக்குத்தானே?????? <_<

நாங்கள் 2002 ம் ஆண்டு சர்வதேச மத்தியஸ்தத்தோடு பேச்சுக்கள் நடத்தி இருக்கிறோம். அமெரிக்காவையோ ரஷ்சியாவையோ சீனாவையோ இந்தியாவையோ நாம் கொண்டு வந்து நிறுத்தவில்லை. ஏனெனில் இவர்கள் எல்லோருமே எமக்கு எதிராக செயற்பட்டு கொண்டிருந்திருக்கிறார் என்பதில் நாம் தெளிவாக இருந்திருக்கிறோம்.

ஏன் நாங்கள் போய்.. ஸ்கண்டிநேவியன் நாடுகளை கொண்டு வந்து போர் நிறுத்த கண்காணிப்புக்கு நிறுத்தினோம். அமெரிக்காவை இந்தியாவை ரஷ்சியாவை சீனாவை நேட்டோவை கொண்டு வந்து நிறுத்தல்ல.

ஏன் நாங்கள் இணைத்தலைமை நாடுகளின் ஒத்துழைப்பை ஏற்றோம். ஏன் நாங்கள் நோர்வேயை அனுசரணையாளராக ஏற்றுக் கொண்டோம்...! பிரிட்டனை.. பிரான்ஸை... ஜேர்மனியை என்று தனிய தனிய ஒவ்வொருத்தரையும் கொண்டு வரல்ல.

ஏன் நாங்கள் ஓரளவு நடுநிலைத் தன்மை உள்ள நாடுகளை தேடி ஓடி ஓடி.. இடைக்கால நிர்வாக அலகுக்குரிய தீர்வுத் திட்டத்தை வரைந்து முன் வைத்தோம்..???! வல்லரசுகளின் உதவியை தேடிப் போகேல்ல..???

அப்போதெல்லாம்.. ஏன் நாங்கள் பெரிய வல்லாதிக்க சக்திகளை நம்பி போகல்ல..????!

எம்மீது தடைகள் கொண்டு வரப்பட்டு அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதும் ஏன் நாங்க இறங்கிப் போகேல்ல..???!

அமெரிக்கா 13 திருத்தச் சட்டத்தை விட்டு வெளில போகாது.. என்று அறிந்ததால இருக்குமோ...????!

அமெரிக்காவின் பின்னால் போனால் போல எமக்கு அது விடுதலையை பெற்றுத் தரப் போறதில்லை. அமெரிக்காவின் தேவைகளை நாம் எந்தளவுக்கு தீர்க்க முன் வருறமோ அந்தளவுக்கு தான் அதன் ஒத்துழைப்பு கிடைக்குமே அன்றி நமக்கு.. அமெரிக்கா வலிந்து உதவப் போவதில்லை. எம்மை விட்டு சிங்களவர்களோடு நட்புப் பாராட்டிய காலமே அமெரிக்காவிற்கு அதிகம்.

அமெரிக்காவை தனிய நம்பி நிற்பதிலும் மீண்டும் இணைத்தலைமை நாடுகளோடு.. இந்திய பிராந்திய சக்தியையும் ஒருங்கிணைத்து ஐநாவையும் உள்ளிளுத்து புலம்பெயர் தமிழ் மக்களும் பங்களிக்கும் வகையில் சர்வதேச மத்தியஸ்தோடு தமிழர்கள் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமே தவிர.. வெறுமனவே சம்பந்தனும்.. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிரான ஜனநாயக அணியினரும் போய் அமெரிக்காவோடு பேசி கிடைக்கும் பலன் சொற்பமாகவே இருக்கும்..! அது சிங்கள அரசோடு சேர்ந்து அமெரிக்கா எம்மை மீண்டும் ஏமாற்றவே வழி செய்யும்..!

2009 வரை நாம் ஒரு நிழல் அரசை கொண்டிருந்தோம்,எமது கையில் பலமும் நிலமும் மக்களும் இருந்தனர். இன்று அவை இல்லை.

சில உலக உறவுகளை வளர்த்து வைத்திருந்தோம் , அவை உதவும் என எண்ணினோம். எமது உரிமைப்போராட்டத்தை உலகம் சில சிங்கள அழுத்தங்களால் ஏற்கவில்லை.

இன்று நாம் ஒரு நிச்சயமில்லாத எதிர்காலத்தை நோக்கியவர்களாக உள்ளோம்.

கொசவாவை கூட அமேரிக்கா எதிர்த்தது. ஆனால் இந்தியா, உருசியா, சீனா அங்கீகரிக்காத நிலையிலும் அது அமேரிக்கா ஆதரவில் வாழுகின்றது.

இன்று அமேரிக்கா எதோ ஒரு தேவைக்காக எம்முடன் அரசியல் செய்ய விரும்புகின்றது. இதை வைத்து இந்தியாவையும் எமது பக்கம் இழுத்து ஒரு அரசியல் தீர்வை பெறுவது மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

2009 வரை நாம் ஒரு நிழல் அரசை கொண்டிருந்தோம்,எமது கையில் பலமும் நிலமும் மக்களும் இருந்தனர். இன்று அவை இல்லை.

சில உலக உறவுகளை வளர்த்து வைத்திருந்தோம் , அவை உதவும் என எண்ணினோம். எமது உரிமைப்போராட்டத்தை உலகம் சில சிங்கள அழுத்தங்களால் ஏற்கவில்லை.

இன்று நாம் ஒரு நிச்சயமில்லாத எதிர்காலத்தை நோக்கியவர்களாக உள்ளோம்.

கொசவாவை கூட அமெரிக்கா எதிர்த்தது. ஆனால் இந்தியா, உருசியா, சீனா அங்கீகரிக்காத நிலையிலும் அது அமேரிக்கா ஆதரவில் வாழுகின்றது.

இன்று அமேரிக்கா எதோ ஒரு தேவைக்காக எம்முடன் அரசியல் செய்ய விரும்புகின்றது. இதை வைத்து இந்தியாவையும் எமது பக்கம் இழுத்து ஒரு அரசியல் தீர்வை பெறுவது மேல்.

எம்மிடம் எதுவும் இல்லாத நேரத்தில் தான் இந்தியா இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் சிறீலங்காவில் அமெரிக்க தலையீட்டை மையப்படுத்தி எமக்கு உதவ முன் வந்தார்.

1987 ஒப்பரேசன் லிபரேசனை சந்தித்து கரும்புலித் தாக்குதலால்.. அதனை இடைமறித்து நின்ற போதும் இந்தியத் தலையீடு இருந்தது.

2000ம் ஆண்டு ஆனையிறவை மீட்டு யாழ் குடாவை நாம் கைப்பற்ற இருந்த சமயத்தில் இந்திய.. அமெரிக்க அழுத்தங்கள் எம்மீது எழுந்தன.

ஆனால் 2009 ம் ஆண்டு எம்மை அழித்த போது யாரும் வரவில்லை. அமெரிக்கா மனிதாபிமான மீட்புப் பணிக்கே இந்தியாவை பார்த்துக் கொண்டிருந்தது. 2004ம் ஆண்டு சுனாமியின் போது அமெரிக்க கடற்படை செய்த மனிதாபிமான உதவியைக் கூட வன்னிப் பெரும்போரின் போது வழங்க இந்தியப் பிராந்திய வல்லரசு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில்...

அமெரிக்காவின் சில கொள்கைகள் தமிழர்களைப் பொறுத்து ஏற்புடையவை அல்ல.

முதலாவது தமிழீழ விடுதலைப்புலிகளை அமெரிக்கா பயங்கரவாதிகளாக உச்சரிப்பதில் தமிழ் மக்களுக்கு உடன்பாடில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து பிரித்துக் காட்டும் அல்லது பிரிக்க நினைக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தமிழ் மக்களுக்கு உடன்பாடில்லை.

13ம் திருத்தச் சட்டம் போன்றவற்றின் மூலம் தமிழ் மக்களுக்கு சம அரசியல் உரிமையும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்பட முடியும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகக் கோட்பாடு பற்றி அமெரிக்கா சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.

இப்படி அமெரிக்கா பல விடயங்களில் எமது நிலைப்பாட்டுக்கு மாறான நிலைகளையே எடுத்து நிற்கிறது. இதற்கிடையே.. எம்மை வைத்து எமது துயரை வைத்து தனது பிராந்திய நலன் நோக்கிய நகர்வுகளை செய்யவும் முனைகிறது.. அந்த வகையில் அதன் நடவடிக்கைகள் எமக்கு முழுத் திருப்தி தருவனவாக இல்லை.

நேற்றைய தேசிய தலைவர் - ஒசாமா பில்லாடன் ஒப்பீடு ஒரு அநாவசியமானது. அது தமிழர்களுடன் அமெரிக்க நல்லுறவை பேணுவதற்குரிய கருத்தாக தெரியவில்லை. மாறாக சிங்கள ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தவே அது அதிகம் வகை செய்யும்.

இப்படியான அமெரிக்காவின் செயற்பாடுகள்.. தமிழ் மக்களின் விருப்புக்கு ஏற்றபடி இன்றி.. அல்லது தமிழ் மக்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்புக்களைக் கூட திருப்திப்படுத்தும் நிலையில் இல்லாது போய்க் கொண்டிருக்கும் நிலையில்..

நேட்டோ தலைமை ஏற்று கொசவோவில் அமெரிக்க செயற்பட்டதற்கு ஒப்பீடாக எமது நிலையை வைத்துப் பார்ப்பது அவ்வளவு புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. அல்பேனிய மக்கள் மீதான சேர்பியாவின் படுகொலைகளை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க நேட்டோ தலைமையில் அமெரிக்கா முற்பட்டதற்கு காரணம்.. கருங்கடல் பிரதேசத்தில் ரஷ்சியாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கே ஆகும். அந்த வகையில் தான் அது ஜோர்ஜியாவின் பிரச்சனையையும் கையாண்டது.

ஆனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன.

1. சீனாவின் ஆதிக்கம்.

2.இந்தியாவின் பிராந்திய நலன்.

3. பாகிஸ்தானில் பெருகி வரும் அமெரிக்க மேற்குலகிற்கு எதிரான இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் அதன் தீவிரவாதமும்.

4. மத்திய கிழக்கில் ஆபிரிக்காவில் அமெரிக்கா தெடுத்திருக்கும் போர்.. மற்றும் ஆட்சியாளர்களை தூக்கி எறியும் நடைமுறைகள்.

5. கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து வரும் கப்பல் வழி கடத்தல்கள்.. மற்றும் தீவிரவாதம்.

எமது பிரச்சனையில் அமெரிக்கா அக்கறை செய்ய இருக்கும் காரணங்களில் பிரதானமானவை...

1. சிங்கள ஆட்சியாளர்களை சீனாவின் தயவை நாடுவதில் இருந்து இயன்றவரை தடுத்தல்.

2.இந்திய தலையீட்டை கட்டுப்படுத்தல்.

3. விடுதலைப்புலிகள் இயக்கத்தினை தமிழ் மக்களிடம் இருந்து மேலும் அரசியல் ரீதியிலும் தனிமைப்படுத்தல். அதன் மீள் புத்துயிர்ப்புக்கு சாத்தியமற்றதாக்குதல். இதன் மூலம் தனக்கு பிராந்தியத்தில் எழக்கூடிய நெருக்கடிகளை குறைத்தல்.

4. இஸ்லாமிய தீவிரவாதத்தை கண்காணித்தல்.

5. ரஷ்சியாவின் அதிகரித்து வரும் பிராந்திய செல்வாக்கு.

6. துரித பொருளாதார வளர்ச்சி காணும் ஆசியாவில் தனது கட்டுப்பாட்டை உறுதி செய்தல்.

இதில் எதுவுமே அமெரிக்கா எமக்காக சண்டை போட்டு தனது தேவையை பெற வேண்டும் என்ற நிலையில் அதனை வைக்கவில்லை. அதற்கான தேவையை ஏற்படுத்தும்.. ஒற்றுமையோ.. பலமோ தற்போது எம்மிடமும் இல்லை. இந்த நிலையில்.... எப்படி அமெரிக்காவின் செயற்பாடுகளால் எமக்கு விடிவு வரும் என்று எதிர்பார்ப்பது..?????????!

விடுதலைப்புலிகளின் இருப்பு குறிப்பாக அவர்களின் இராணுவ பலம் என்பது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எமக்கு ஒரு மறைமுக பலத்தை தந்திருந்தது. அதாவது threat for benefits என்ற நிலையை எமக்கு ஏற்படுத்தி இருந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக அதனை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அந்த எமக்கு சாதகமான ஆனால் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலான threat ஐ அவர்கள் இல்லாமல் செய்வதில் செயற்பட்ட அல்லது காட்டிய ஒற்றுமை எமக்கு அதை தக்க வைக்க இருக்கவில்லை. அதுவே எமது மிகப் பெரிய இராஜதந்திர தோல்வியாகும். இருந்தாலும் எமது பிராந்திய அரசியல் மற்றும் சனத்தொகை எமக்கு சாதமாக இருப்பினும் அதனை பாவிக்க கூடிய சரியான செயற்பாடுகள்.. அரசியல் தலைமைகள்.. ஒற்றுமை இவை எம்மிடம் இல்லை. குறிப்பாக தமிழக.. ஈழ தமிழர்களிடையே ஒரு இணக்க அரசியல் தேவை. எதிரும் புதுருமான எதிர்ப்பு அரசியலை நாம் காட்டி பிரிந்து நிற்பது எமது இனத்திற்கே இன்றைய வேளையில் அதிக நட்டத்தை இழப்பை உண்டு பண்ணும். இது தொடர்பில் நாம் சிந்தித்து உலகத் தமிழினம் ஒற்றுமையாக பலமாக சர்வதேச அழுத்தங்களை சந்திக்க முன் வருவதே அமெரிக்காவோ அல்லது எந்த நாடோ எமக்கா தான் சவால்களை சந்திக்கக் கூடிய நிலையை உண்டு பண்ணும்.

இன்றேல்.. எதிர்பார்த்து எதுவும் கிடைக்காமல்.. ஏமாற்றங்களோடு அடிமைகளாக வாழும் நிலையே எமக்கு ஏற்படும்.

Edited by nedukkalapoovan

முதலில் பதிலுக்கு நன்றி, உங்கள் கருத்துக்களில் பல புதியனவற்றை அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

இன்றேல்.. எதிர்பார்த்து எதுவும் கிடைக்காமல்.. ஏமாற்றங்களோடு அடிமைகளாக வாழும் நிலையே எமக்கு ஏற்படும்.

எனது கருத்துப்படி இன்று நாம் இந்த நிலையில் உள்ளோம் இல்லை அதை நெருங்கி வநதுவிட்டோம்.

இந்த நிலையில் நாம் எமது கைகளில் என்ன உள்ளது? அதை வைத்து நாம் எமது நலன்களை முன்னகர்த்தலாம்? என்பனவே ஆராய்ந்து முன் செல்லவேண்டும்.

அமெரிக்காவோ இல்லை இந்தியாவோ அரசியல் பிழைகள் விடுகின்றன, ஆனால் அவை போன்ற நாடுகளுக்கு அந்த தவறுகளால் மீழும் வலிமை உள்ளது, அவை வல்லரசுகள். நாமோ இன்று 'கரணம் தப்பினால் மரணம்' என்ற அரசியல் நிலையில் உள்ளோம். போர்குற்ற அறிக்கையை வைத்து சில கசப்பனா செய்திகளை / யதார்த்தங்களை உள்வாங்கி, உறுதியோடு எமது நலன்களை நோக்கி அரசியல் ஆதரவை பெறவேண்டும்.

நாம் மீண்டும் ஒரு பலமான நிலைக்கு வரும்வரை இதை செய்ய வேண்டும். அடுத்த தலைமுறைக்காக இதை செய்யவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.