Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமா - இல்லையா.. பிரித்தானிய வாக்கெடுப்பு - உங்கள் வாக்கு..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியவின் அநேக உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரு சில பாராளுமன்றத்துக்கான உறுப்பினர் தெரிவுக்கும் ஆன வாக்குப் பதிவோடு எதிர்காலத்தில் பிரித்தானியாவில் புதிய விருப்பு வாக்களிப்பு முறை மூலம் உறுப்பினர்களை தெரிவு செய்வதா அல்லது தற்போதைய தெரிவு முறையை தொடர்ந்து பின்பற்றுவதா என்பது தொடர்பிலும் மக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 10 மணி வரை உங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

லண்டன் மாநகரத்தை பொறுத்தவரை அங்கு உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனால் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் லண்டனர்கள் வாக்களிக்க உள்ளனர்.

லண்டன் வாழ் மற்றும் முழுப் பிரித்தானியா வாழ் சிறுபான்மை இன மக்கள் எந்தத் தேர்தல் முறையை தெரிவு செய்வது அவர்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றிலும் இதர சபைகளிலும் உறுதிப்படுத்தும் என்பது தொடர்பில் ஒரு தெளிவான விளக்கம் பெருமளவில் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய தேர்தலில் விருப்பு வாக்கெடுப்பு முறைக்கான தெரிவில் ஆமா, இல்லையா என்று வாக்களிக்க வேண்டும்.

விருப்பு வாக்களிப்பு அல்லது மாற்று வாக்காளர் தெரிவு (alternative vote) முறைமை கூடிய ஜனநாயகத் தன்மையை கொண்டிருக்கிறதாக நான் உணர்கிறேன். ஆனால் சிறுபான்மையினர்கள் வாழும் தொகுதிகளில் இதனால் அவர்களுக்கு பாதிப்பு என்று பிரச்சாரங்கள் சில முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அது எந்த வகையில் என்று சரியாக புரியவில்லை அல்லது புரிய வைக்கப்படவில்லை. இவை தொடர்பில் விபரங்கள் அறிய கீழுள்ள இணைப்புக்களை பாருங்கள்.

http://www.bbc.co.uk/news/uk-politics-12892836

http://www.bbc.co.uk/news/uk-politics-13284737

Edited by nedukkalapoovan

எனக்கு இப்பொழுது இருக்கும் முறையே நல்லதாகப்படுகிறது. மாற்று வாக்காளர் தெரிவு முறையில் இனவாதக் கட்சி உறுப்பினர்களும் பதவிக்கு வர வாய்ப்புள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பொழுது இருக்கும் முறையே நல்லதாகப்படுகிறது. மாற்று வாக்காளர் தெரிவு முறையில் இனவாதக் கட்சி உறுப்பினர்களும் பதவிக்கு வர வாய்ப்புள்ளது.

எப்படி..??!

50% வாக்கு மட்டுறுத்து எல்லை இருக்கும் நிலையில்.. முதல் தெரிவுக்கு முன்னுரிமை என்ற நிலையில்.. இது எந்தளவுக்கு அவர்களுக்கு வாய்ப்பாக அமையும்..?!

Edited by nedukkalapoovan

எப்படி..??!

50% வாக்கு மட்டுறுத்து எல்லை இருக்கும் நிலையில்.. முதல் தெரிவுக்கு முன்னுரிமை என்ற நிலையில்.. இது எந்தளவுக்கு அவர்களுக்கு வாய்ப்பாக அமையும்..?!

முதலாவதாக வரும் வேட்பாளர் 50 சதவீத வாக்குகள் எடுக்காவிட்டால், இரண்டாவதாக வந்த வேட்பாளரின் முதல் தெரிவு வாக்குகளையும் அவருக்கு விழுந்த விருப்பு வாக்குகளையும் கூட்டி 50 சதவீதம் வந்தால் அவர்தான் தெரிவு செய்யப்படுவார். அவரும் 50 வீத வாக்குகள் எடுக்காவிட்டால் அடுத்தடுத்ததாக வந்த வேட்பாளரிற்கும் இந்த முறை தொடரும்..……

உதாரணமாக முதல் இரு வேட்பாளர்களும் 50 சதவீத வாக்குகள் எடுக்காத பட்சத்தில் மூன்றாவதாக வரும் இனவாத வேட்பாளருக்கு விழும் முதல் தெரிவு வாக்குகளும் விருப்பு வாக்குகளும் கூட்டி 50 சதவீதம் வந்தால் அவர் உறுப்பினராக தெரிவு செய்யப்படலாம்தானே.

ஒருவர் இனவாதக் கருத்தைச் சொல்லி மக்கள் அவரின் கருத்தை ஆதரித்து வாக்களித்து அவர் மற்றவர்களை விட குறைந்தது இரண்டாம் ஸ்தானம் வரை முதலாம் தேர்வில் வாக்குப் பெற்றும் பின்னர் இரண்டாம் தேர்விலும் குறிப்பிடத்தக்க வாக்குப் பெற்றால் மட்டுமே 50% மட்டுறுத்து எல்லையை தாண்ட முடியும். அப்படி அவரின் கருத்து மக்கள் மத்தியில் செல்வாக்குச் செய்யுதென்றால் அவர் மக்கள் அநேகரின் விருப்பை பிரதிபலிக்கிறார் என்று தானே அர்த்தம். ஜனநாயகம் மக்கள் விருப்பு அதிகம் பெறும் ஒருவரை மக்கள் பிரதிநிதியாக ஆக்குவதற்கு தானே. இல்லை வாக்கெடுப்பு முறைக்குள் சூட்சுமம் வைச்சு மக்கள் விரும்பாதவர்களையும் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதா..??!

இப்போதைய நடைமுறையின் கீழ் ஒரு தொகுதில் 4 வர் போட்டியிட்டு அவர்கள் முறையே 32%, 31.9%, 31..8% , 4.3% வாக்குப் பெற்றால் 32% வாக்குப் பெற்றவர் வெற்றி பெறுவார். உண்மையில் அவர் 68% மக்களால் அந்தத் தொகுதியில் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் புதிய நடைமுறையின் கீழ் இப்படி ஒரு நிலை வந்தால் இரண்டாம்.. தெரிவு நிலையில் அதிகம் வாக்குப் பெற்றவர்.. மொத்தமாக 50% ஐ கடக்கும் நிலையில் அவருக்கு வெற்றி வரும். அந்த வகையில் அவர் அதிகம் மக்கள் தெரிவை கொண்டவர் ஆகிறார்... இல்லையா..??!

இப்பொழுது உள்ள தேர்தல் முறை பூரணமானதல்ல. ஆனால் இந்த புதிய வாக்கெடுப்பு முறை பழைய வாக்கெடுப்பில் உள்ள குறைபாடுகளை களைந்து சீர் திருத்தியமைக்கப்பட்ட முறையாகமும் தெரியவில்லை. நிலையைமையை இன்னும் சிக்கலாக்கும் போலதான் உள்ளது.

இதை ஆதரிக்கும் லிபரல் கட்சி போன்ற மூன்றாம் நாலாம் இடத்திற்கு வரும் கட்சிகளுக்குத்தான் நன்மை பயற்கும். BNP போன்ற இனவாத கட்சிகள் அதிகளவு உறுப்பினர்களை பெறுவது ஆசிய ஆப்பிரிக்க இனமக்களுக்கு தீமையாகவே முடியும்.

Edited by thappili

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்.

தப்பிலி, வெள்ளை இனத்தவரிடம் BNP கட்சி பற்றி அவர்களின் அபிப்பிராயம் கேட்டுப் பாருங்கள், முகம் கோணுவதை காணலாம். அப்படியான ஒரு கட்சிக்கு பல இனத்தவர்கள் வாழும் பகுதியில் இருந்து ஆதரவு கிடைப்பது மிகக் குறைவாகவே இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இந்த இணைப்பில் போய் BNP கட்சியை பற்றி உங்கள் அபிப்பிராயத்தை வாக்களித்துப் பாருங்கள்.

Are the BNP Racists Poll?

Posted in BNP Policies Debate, Political Polls, UK Politics

This websites 2010 General Election Poll has received over 1,000 votes for the BNP (British National Party) and hundreds of supporting comments from BNP supporters who argue (amongst other things) that the BNP are no longer (or has never been) a racist political party.

That sort of discussion isn’t really what I created the general election poll page for, so hoping to bring that sort of debate to this page.

So open question to all, are the BNP Racists?

And what the hell, lets have a poll :-)

British National Party Racism Poll

Are the BNP a Racist Political Party?

Yes, the BNP are racist (57%, 2,518 Votes)

No, the BNP are not racist, but they used to be racist (18%, 798 Votes)

No, the BNP are not racist and never have been racist (25%, 1,083 Votes)

Total Voters: 4,399

http://www.general-election-2010.co.uk/votes/bnp-policies

கடந்த 2010 பொதுத் தேர்தலில் BNP 564,331வாக்குகள் எடுத்தும் ஒரு இடம் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

http://news.bbc.co.uk/1/shared/election2010/results/

இந்த நிலையில் இந்தக் கட்சிக்கு ஆதரவு மிகமிகக் குறைவு என்றே கூறலாம்.

நீங்கள் வாக்களித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தேர்தல் சீர் திருத்ததம் தற்போதைய முறையை விட கூடுதல் ஜனநாயகத் தன்மை உள்ளது என்றே நினைக்கிறேன்.இனவாதக் கட்சிகளுக்கு சில ஆசனங்கள் கிடைக்குமாக இருந்தாலும் அதுவும் அந்தக் கட்சியை ஆதரிக்கும் மக்களுக்கும் பிரதிநிதிகள் இருப்பது ஜனநாயக முறையில் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியது தானே.இப்போதுள்ள முறையில் சிறிய கட்சிகளுக்கு சந்தர்ப்பமே இல்லை.விகிதாசார முறையில் அநேகமாக கூட்டணி அரசாங்கம் அமைவதற்கே சந்தர்ப்பம் அதிகம்.தனியொரு கட்சி தன் விருப்பப்;படி சட்டங்களை இயற்ற முடியாது.இந்த வாக்கெடுப்பே கூட்டணி ஆட்சி அமைந்ததனாலே ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றுதானே!

தப்பிலி, வெள்ளை இனத்தவரிடம் BNP கட்சி பற்றி அவர்களின் அபிப்பிராயம் கேட்டுப் பாருங்கள், முகம் கோணுவதை காணலாம். அப்படியான ஒரு கட்சிக்கு பல இனத்தவர்கள் வாழும் பகுதியில் இருந்து ஆதரவு கிடைப்பது மிகக் குறைவாகவே இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

குட்டி இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். என்னுடன் வேலை செய்யும் வெள்ளை இனத்தவரோ அல்லது தெரிந்த வெள்ளையின நண்பர்களோ BNP இற்கு ஆதரவாக கதைப்பதில்லை.

அவர்களுக்கு ஆதரவு அதிகமாகவே Barking , Blackburn, Leicestershire, Oldham மற்றும் வட இங்கிலாந்துப் பகுதிகளிலேயே அதிகம். அதற்கு காரணம் வந்தேறு குடிகளே. வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவிக்கும் அவர்களுக்கு வந்தேறு குடிகள் மீது காழ்ப்புணர்ச்சி வருவதை பிழையென்று நான் கூறவில்லை.

நீங்கள் வாக்களித்தீர்களா?

முன்னொரு காலத்தில் நான் வாக்களிப்பதில் ஈடுபாடு காட்டியதில்லை. அதிகம் துப்பாக்கிகளிலேயே நம்பிக்கை வைத்திருந்தேன். இப்பொழுது வாக்களிப்பதன் மூலம் ஒரு சிறிய மாற்றமாவது கொண்டுவரலாம் என்ற நம்பிக்கையில் வாக்களிக்கத் தவறுவதில்லை.

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.