Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமளவான புலி உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவான புலி உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிக் குறிப்பிடாமல் நாட்டின் பாதுகாப்புக் குறித்து பேச முடியாத நிலை இன்னும் தொடர்வதாக பிரதமர் டி.எம்.ஜயரத்தின தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விட்டு வெளிநாடு சென்றுள்ள மற்றும் இன் னும் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காது மறைந்து வாழ்கின்ற புலனாய்வு மற்றும் தாக்குதல் படை உறுப்பினர்கள் முன்னைய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும்பிரேரணையில் கலந்து கொண்டு நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளிலிருந்து தற்போதைக்கு நாடு முழுமையாக மீட்கப்பட்டுள்ள போதிலும், யுத்தத்தின் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட பின்விளைவுகளின் பாதிப்புக்கள் நாட்டில் இன்னும் புரையோடிப் போயுள்ளன.

முப்பத்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக நாட்டைப் பிடித்தாட்டிக் கொண்டிருந்த பயங் கரவாதம் மற்றும் வன்முறைகளின் ஸ்தாபர் களான விடுதலைப்புலிகள் அமைப்புக் குறித்துக் குறிப்பிடாது நாட்டின் பாதுகாப்புக் குறித்துப் பேசமுடியாத நிலை இன்னும் தொடர்கின்றது.யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நாட்டின் தென்பிரதேசங்களுக்குத் தப்பி வந்த பெருந்தொகையான விடுதலைப் புலி உறுப்பினர்களில் கணிசமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பெருமளவானவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்புக்குப் பொருத்தமான வழிமுறைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் நன் கறிந்து வைத்துள்ளதுடன் அதற் கேற்றவாறே அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=18861

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெருமளவான புலி உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு

தமிழினத்தை அழிப்பதற்கு நல்லதொரு அறிக்கை.
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும், இனியும் பிறக்காத..... தமிழ் பச்சைபால்குடிகளும் அடக்கம்.

ஆயுதங்களை மௌனித்து விட்டு தொடரும் போருக்கும்... வழமையான முறையில் பதிலடி தருவெதெண்டு முடிவெடுத்துவிட்டது சிங்களம்.. புடிபட்டவனுக்கெல்லாம் நிச்சயம் தர்ம அடி விழும்...

இதன் நாம் உலகிற்க்கு எடுத்துக்காட்டுவோம் என நினைத்தோம்.. காட்டினோம்.. அவர்களும் பார்த்தார்கள், அறிந்த்தார்கள்.. சிங்களத்திடம் விசாரிக்கத்தொடங்கினார்கள். நாம் மோடயன் என அழைக்கும் சிங்களவர், அறிக்கை மேல் அறிக்கை விட்டு கடைசியில் அமெரிக்கவையே போர்குற்றவாளியாக்கி, ஐ. நா அறிக்கையை விசர்க்கூத்தாக்கி விட்டார்கள்..

கேள்வி என்னவெண்டால்.. இனி என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போலை....

திண்ணையில...குந்தியிரிந்து... வீராப்பு காட்டுவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.