Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாடு தேர்தல் திருவிழா ஈழத்தமிழருக்கு என்ன பயன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May 9, 2011 / பகுதி: செய்தி /

தமிழ் நாடு தேர்தல் திருவிழா ஈழத்தமிழருக்கு என்ன பயன்?

புல்லுக்கு இறைத்த நீரில் நெல்லுக்குப் பங்கு உண்டா?

தமிழ் நாட்டு சட்ட சபைத் தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 13ம் திகதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மே 13ம் திகதி வரை நடைபெறும், அதாவது ஒரு மாதம் முற்றாக எண்ணும் பணி நடக்கும். முடிவுகள் 14ம் திகதி தெரியவரும்.

அடுத்த சட்ட மன்றம் 17ம் திகதி தொடங்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட மன்றத்தின் காலம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. தமிழ் நாட்டுத் தகவல்களின்படி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

அப்படியாயின் தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. கருணாநிதி கட்சியினர் பதவி இழக்கத் தயாரில்லை. பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. ஜெயலலிதா பதவியேறினால் வஞ்சம் தீர்க்கத் தயங்க மாட்டார் என்பது நாடறிந்த விடயம்.

உளவுத் துறையினர் வழங்கிய தகவலின் படி கருணாநிதியின் கூட்டணி 94 தொகுதிகளை மாத்திரம் கைப்பற்றலாம் என்று தெரியவருகிறது. பதவியில் தொடர்வதற்காக வழமையான “குதிரை வியாபாரத்தில்” அவர் இறங்கிவிட்டார். உறுப்பினர்களை விலை பேசி வளைத்து போடும் பேரங்கள் தொடங்கி விட்டன.

கருணாநிதி இம்முறை பின்னடைவைச் சந்திப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி நினைவுக்கு வருகிறது. அவர் மக்கள் பணத்தில் தனது குடும்பத்தை வளர்த்துள்ளார்.

ஈழப்பிரச்சினையில் அவர் ஆடிய நாடகம் மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம். மேடை தோறும் அவருடைய உண்ணாவிரதம் பற்றிய கேலிப் பேச்சு அமர்க்களப் பட்டது. எல்லாவற்றிற்க்கும் சிகரம் வைத்தாற் போல் ஆசை மகள் கனிமொழி அமைச்சர் ராசாவுடன் இணைந்து சுருட்டிய 214 கோடி ரூபா பற்றிய செய்தி அம்பலமாகிவிட்டது.

கடந்த திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்காக கருணாநிதி ஒரு உத்தியைக் கையாண்டார். நூறு குடும்பங்களைக் கவனிப்பதற்கு ஒரு தொண்டர் என்ற விகிதத்தில் முழுத் தேர்தல் தொகுதியையும் திமுக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

இந்தியாவை ஒரு கலக்கு கலக்கிய திருமங்கலம் “போமியுலா” என்ற தேர்தல் உத்திமூலம் பணப் பற்றுவாடா இலகுவாக்கப்பட்டது. இலஞ்சம் முறைப்படுத்தப்பட்டது. ஊழல் முறைகேடு நகாரீகமாகியது.

திருமங்கலம் இடைத் தேர்தலுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டது. சட்டசபைத் தேர்தலில் இந்த உத்தியைக் கருணாநிதி பயன் படுத்துவதைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் ஏறத்தாழப் பூரண வெற்றி பெற்றது. கருணாநிதியின் மகன் அழகிரி அரசாண்ட மதுரை மாவட்டத்தில் நிர்வாக மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் மாற்றஞ் செய்யப்பட்டனர்.

இரவு பகலாக தமிழ் நாடு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல்துறையும் தேர்தல் அதிகாரிகளும் மக்களுக்கு விநியோகம் செய்யப்படவிருந்த பல கோடி ரூபாய்களைப் பறிமுதல் செய்தனர். திருச்சியில் ஒரு பெண் அதிகாரி சங்கீதா வயது 33 நள்ளிரவில் கடத்தப்பட்ட 5 கோடியே 11 இலட்சத்து 27 ஆயிரம் லஞ்சப் பணத்தைக் கைப்பற்றிச் சாதனை படைத்தார்.

அதிமுகவினர் கைகளும் கட்டில் போடப்பட்டன. அவர்களால் பணமாகவும் பொருளாகவும் கொடுக்க முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகள் கூடுதலாகத் திமுகாவைப் பாதித்துள்ளன.

சீமானின் பிரசாரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ்காரர்களில் 10 பேர் வெற்றி பெற்றால் சாதனையாக இருக்கும்.கருணாநிதி வென்றால் என்ன ஜெயலலிதா வென்றால் என்ன ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கும் இலாபம் பூச்சியமே. ஜெயலலிதா வெளிப்படையான எதிரி. கருணாநிதி உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுயநலவாதி. வெளிப்படையான எதிரி எவ்வளவோ மேல்.

கருணாநிதியை விட அம்மையார் ஈழத்தமிழருக்கு துரோக செய்யாதே அவர்களின் உரிமை பெற்றுக்கொடு என்று துணிச்சலுடன் குரல் கொடுப்பார் என்று எல்லோராலும் நம்பப்படுகின்றது. வை.கோ, சீமான் போன்றோர் எண்ணிக்கை பன்மடங்காகும். அப்போது தனது பலத்தை அறிந்த புதிய தமிழகம் உதயமாகும்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சட்ட மன்றம் 17ம் திகதி தொடங்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட மன்றத்தின் காலம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. தமிழ் நாட்டுத் தகவல்களின்படி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

pathivu

இன்னும் ஒருவருக்கும் தெரியாது யார் வெல்லப் போகினம் என்று. ஆனால் பதிவுக்கு மட்டும் எப்படி அம்மையார் வெற்றி பெற்றது உறுதியாகிவிட்டது என்று தெரிந்திருக்கிறது?.

கருணாநிதியை விட அம்மையார் ஈழத்தமிழருக்கு துரோக செய்யாதே அவர்களின் உரிமை பெற்றுக்கொடு என்று துணிச்சலுடன் குரல் கொடுப்பார் என்று எல்லோராலும் நம்பப்படுகின்றது.

அம்மையாருக்கு மகிந்தா காசு கொடுத்தால் நிலமை அவர் மாறிக்குரல் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை விட அம்மையார் ஈழத்தமிழருக்கு துரோக செய்யாதே அவர்களின் உரிமை பெற்றுக்கொடு என்று துணிச்சலுடன் குரல் கொடுப்பார் என்று எல்லோராலும் நம்பப்படுகின்றது.

jayalalitha_sapporter_20080.jpgCho_Ramaswamy.jpg

தமிழக அரசியல் வாதிகளை நம்பும் போக்கை நாம் முற்றாக கைவிடவேண்டும். கருணாநிதியோ, ஜெயலலிதாவா தங்களுக்கு அதனால் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுத்தான்..... எமக்காக ஏனோ..... தனோவென்று குரல் கொடுத்து வந்துள்ளார்கள். அதிலும் ஜெயலலிதா, "சோ" வின் அறிவுரைப் படியே நடப்பவர். அவரிடம் ஈழத்தவர்களுக்கு ஆதரவான கருத்தை எதிர்பார்ப்பது, எம்மை நாமே... ஏமாற்றிக் கொள்வதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: கனிமொழி மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 14 ஆம் தேதி வரை மத்திய அரசின் அழுத்தத்தால் பிற்போடப்பட்டுள்ளது. 13 ஆம் தேதி வரவிருக்கும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், திமுக வெற்றி பெற்றால் கனிமொழி மீதான வழக்கு காலத்தவணையின்றியே பிற்போடப்படும். அதேவேளை திமுக மண்கவ்வினால், நிச்சயம் கனிமொழி மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு அவர் களி தின்ன வேண்டி வரும் என்று சொல்லப்படுகிறது.

கருநாயையும், கனிமொழியையும் பொறுத்தவரை திமுக வென்றே ஆகவேண்டும், தோற்றால் ஒருபக்கம் சோனியா, மறுபக்கம் ஜெயா என்று ஒரே ஆப்புத்தான் !!!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: கனிமொழி மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 14 ஆம் தேதி வரை மத்திய அரசின் அழுத்தத்தால் பிற்போடப்பட்டுள்ளது. 13 ஆம் தேதி வரவிருக்கும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், திமுக வெற்றி பெற்றால் கனிமொழி மீதான வழக்கு காலத்தவணையின்றியே பிற்போடப்படும். அதேவேளை திமுக மண்கவ்வினால், நிச்சயம் கனிமொழி மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு அவர் களி தின்ன வேண்டி வரும் என்று சொல்லப்படுகிறது.

கருநாயையும், கனிமொழியையும் பொறுத்தவரை திமுக வென்றே ஆகவேண்டும், தோற்றால் ஒருபக்கம் சோனியா, மறுபக்கம் ஜெயா என்று ஒரே ஆப்புத்தான் !!!

இந்தத் தேர்தலில் கருணாநிதி வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. தான்... முதலமைச்சராக வந்து.... துணை முதலமைச்சசர் ஸ்டாலினுக்கு முடிசூட்ட வேண்டும். இந்த முறை முதலமைச்சராக வராதவிடத்து, ஜெயலலிதா வந்தால் கருணாநிதியின் கனவு எல்லாம் நொறுங்கிப் போகும், பிறகு வரும் 2016ம் ஆண்டுத் தேர்தல் வரை கருணாநிதி நின்று தாக்குப் பிடிப்பாரா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

quote name='கறுப்பி' timestamp='1304885962' post='658097']

May 9, 2011 / பகுதி: செய்தி /

தமிழ் நாடு தேர்தல் திருவிழா ஈழத்தமிழருக்கு என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு வரும் 2016ம் ஆண்டுத் தேர்தல் வரை கருணாநிதி நின்று தாக்குப் பிடிப்பாரா என்று தெரியவில்லை.

உப்பிடித்தான் ஒரு பத்துவருசமா யோசிச்சுக்கொண்டிருக்கிறன்..! :blink: யோசிச்சுக்கொண்டேயிருக்கிறன்.. ஒண்டும் நடந்ததா தெரியேல்லை..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.