Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன:

Featured Replies

வரலாற்றுப் பெரும் துயராக உலகத் தமிழர் நெஞ்சங்களில் உறைந்துள்ள முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வார் நிகழ்வுகள் .இன்று ஆரம்பமாகின்றன. மே 12 வியாழக்கிழமை முதல் மே 18 வரையிலான காலப்பகுதியை நினைவேந்தல் வாரமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

சிறிலங்கா அரசினது திட்டமிட்ட இனக்கருவறுப்பு யுத்தத்துக்கு இரையாகிய உறவுகளை நெஞ்சில் இருத்தி சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செய்யப்படும். நினைவேந்தல் வாரம் முழுவதும் தமிழ்மக்கள் கறுப்பு பட்டியணிந்து சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை குறியீட்டுரீதியாக வெளிப்படுத்துமாறு கோரப்பட்டிருப்பதோடு - தமிழ் வர்த்தக நிலையங்கள் பொது இடங்களில் கறுப்பு கொடியினை கட்டி வாரத்தை கடைப்பிடிக்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரப்பட்டுள்ளது.

நினைவு நிகழ்வுகள் - கவனயீர்ப்பு பரப்புரைகள் - கண்காட்சிகள் - சர்வமத வழிபாடுகள் - கருத்தரங்குகள் - இரத்தானம் - உறுப்புதானம் என பலவகையிலும் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

மே-18ம் திகதி நியூ யோர்க் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கு முன்னால் மாபெரும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முள்ளிவாயக்காலின் பின்னர் இயல்பாக தோற்றம் பெற்ற குழப்பங்கள் அவநம்பிக்கைகளை கடந்து நம்பிக்கையும் விடுதலையை வென்றெடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அமெரிக்காவில் ஒபாமா, ஹிலாரி கலந்து கொள்ளலாம்! மகிந்த கலக்கம்..!

[ வியாழக்கிழமை, 12 மே 2011, 12:48.15 AM GMT ]

இலங்கை இனவாத சிங்கள அரசினால் சிறுபான்மைத் தமிழர்கள் அவர்தம் விடுதலைக்காக போராடிய மக்கள் எண்பதாயிரம் பேர் வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி தமிழினத்தை அழித்தது ஹிட்லர் மகிந்த ராஜபக்ச அரசு.

இதே காலப் பகுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற தலைமை செயலர் பதவி தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக ஒபாமா தமிழர் அமைப்பு என ஒன்று உருவாக்கம் பெற்று பெரும் பங்காற்றியது .

இதன் அடிப்படையில் இம்முறை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்கநாளில் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், சட்டாமா அதிபர்கள், ரொபேர்ட் பிளேக் போன்றவர்கள் கலந்து கொண்டு அந்த மக்களின் துயரில் பங்கேற்று கொள்வதுடன் ஐ.நாவினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இந்த நிகழ்வில் முக்கிய சிறப்பாளராக முன்னாள் ஐ.நாவுக்கான பேச்சாளர் கலந்து கொள்ள உள்ளதும் அவர் அங்கு மேலும் பல தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இந்த ஒருங்கிணைப்பு பணிகளை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் நேரடியாக செய்து வருவதாக சிங்கள உளவு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டு பரப்பரை ஏற்படுத்தியுள்ளது .

நாடு கடந்த தமிழீழ அரசினை முடக்கி அதன் கட்டமைப்பை சீர்குலைக்க இலங்கை அரசு பலத்த முயற்சி எடுத்து வருவதும் அதன் பின் புலத்தில் தமிழர்களை வைத்து அதற்கான மோதல்களை உருவாக்கி சீர்குலைவு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதை அண்மைக்காலச் சம்பவங்கள் பல கோடிட்டு காட்டுகின்றன.

இந்த முக்கியமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால் நாடு கடந்த அரசு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாக திகழும் என்பதும் உலகளாவிய ரீதியில் இவை தமிழர்களின் விடுதலைப் போருக்கு கிடைத்த முதல் வெற்றியுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அமெரிக்காவில் ஒபாமா, ஹிலாரி கலந்து கொள்ளலாம்! மகிந்த கலக்கம்..!

[ வியாழக்கிழமை, 12 மே 2011, 12:48.15 AM GMT ]

இதன் அடிப்படையில் இம்முறை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்கநாளில் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், சட்டாமா அதிபர்கள், ரொபேர்ட் பிளேக் போன்றவர்கள் கலந்து கொண்டு அந்த மக்களின் துயரில் பங்கேற்று கொள்வதுடன் ஐ.நாவினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இந்த நிகழ்வில் முக்கிய சிறப்பாளராக முன்னாள் ஐ.நாவுக்கான பேச்சாளர் கலந்து கொள்ள உள்ளதும் அவர் அங்கு மேலும் பல தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது .

பல தமிழ் ஊடகங்களில் வந்துள்ள இந்த செய்தியானது உண்மையாக இருக்கவேண்டும் என இதயமும் மூளையும் (Heart and Head) விரும்புகின்றன. ஏனெனில் இவர்கள் எமது நிகழ்வுக்கு வந்தால் எமக்கு இது ஒரு பாரிய வெற்றி மட்டுமல்லாமல் எமது உரிமைகளையும் வென்றெடுக்கும் காலம் கனிந்து வந்துள்ளதாக பார்க்கலாம். ஆனால் ஏனோ மூளை(head) சொல்லுகிறது இந்த நிலைமையை கொண்டுவர நாம் நிறையவே உழைக்கவேண்டும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
KUDAL.jpg:(
  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தினரிடம் சரணடைந்த "பொது மக்களை" சுட்டுக்கொன்ற இனவெறி பிடித்த ராணுவம்-புதிய போர் குற்ற ஆதாரம்

வன்னியில் சிங்கள ராணுவத்தினரால் நாற்புரங்களிலிருந்தும் மக்கள் குடியிருப்புக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த கொலைவெறி தாக்குதல்களையடுத்து தமது உயிர்களை காப்பாற்றிக்கொள்வதற்காக ராணுவத்தினரிடம் சரணடைந்த அப்பாவி பொதுமக்களை ராணுவத்தினர் விசாரணையின் பின் சுட்டுக்கொன்றமைக்கான அதாரம் உயர்வுக்கு கிடைத்துள்ளது.

முதியவர்கள்,குழந்தைகள் என்று ஒரு குறுகிய தொகை அப்பாவி தமிழ் மக்கள் விசுவமடுவை அண்டிய பகுதியில் 2009.எப்ரல் மாதமளவில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.

சரணடைந்த இவர்களை ராணுவத்தினர் புலிகள் அப்போது நிலைகொண்டிருந்த பகுதிகள் தொடர்பாகவும் புலிகளின் முக்கிய அணிகள் எங்கு உள்ளார்கள் என்பது தொடர்பாகவும் மற்றும் தளபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எங்கு உள்ளார்கள் என்பது தொடர்பாகவும் கடுமையாக விசாரணை செய்த பின் குறிப்பிட்ட ஆப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்.

நாம் இங்கு இணைத்துள்ள படத்தில் உள்ளவரை இன வெறி பிடித்த இலங்கை ராணுவத்தினர் சித்திரவதை செய்தபின் கழுத்தில் சுட்டு கொலை செய்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக படத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

z.opor%20kuththam.jpg

எமது அன்பிற்குரிய புலம்பெயர் மக்களே எதிர்வரும் மே 18 ஆம் திகதி அன்று இங்கு கனடா உட்பட தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெறவுள்ள போர் குற்ற நாள் கண்டனப்பேரணிகளில் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்களுக்கு நீதி கோரியும் போர் குற்றத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை ராணுவத்தினரையும் மகிந்த அரசையும் சர்வதேச நீதிமன்ற கூண்டில் ஏற்றுவதோடு உலக சட்டதிட்டங்களின் பிரகாரம் தன் இன மக்களையே குண்டு போட்டு கொலைசெய்த நாட்டுடன் கொல்லப்பட்ட இன மக்கள் இணைந்து வாழமுடியாது என்பதோடு பாதிக்கப்பட்ட இன மக்கள் தனிநாடு அமைத்து பிரிந்து செல்லும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக அக்கிய நாடுகள் சபையே ஏற்றுக்கொண்டுள்ளது.

எனவே தன் நாட்டு மக்களான தமிழ் மக்களை போர் விதி முறைகளை மீறி நச்சுவாயு குண்டுகள் போட்டும் கொத்துக்குண்டுகள் பொட்டும் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இன அழிப்பு செய்த இலங்கை அரசுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற கோரிக்கையை திடமாக முன்வைத்து தமிழர்களாகிய நாம் தமிழீழ தனி நாட்டை அமைத்து இலங்கைத்தீவிலிருந்து பிரிந்து செல்லும் உரிமையை ஜ.நா ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று மே 18-டை முன்னிறுத்தி உலகமெங்கும் நடைபெற உள்ள போர் குற்ற நாளில் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொண்டு ஓங்கி குரல் கொடுக்குமாறு உயர்வு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறது.

உயர்வு இணையத்தில் தொடர்ந்தும் சிங்கள இனவாத படைகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த போர் குற்ற ஆதாரங்களை வெளிக்கொண்டுவருவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

2ஆம் இணைப்பு

குறிப்பிட்ட செய்தியை நாம் வெளியிட்டதன் பின் இது தொடர்பான மேலதிக தகவல்கள் சில எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.இந்த சம்பவம் விசுவமடுப்பகுதியில் 2009 ஆண்டு சில மக்கள் ராணுவத்தினரிடம் சென்றவேளை அந்த மக்களுடன் சென்ற ஒரு கரும்புலி போராளியே தன்னை ராணுவத்தினர் இனம்கண்டு கொண்டதனால் குண்டை வெடிக்கவைத்ததாகவும் அதில் பல மக்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் மகிந்தவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்ஷவின் கிழ் இயங்கும் டெபென்ஷ் இணையம் செய்தி வெளியிட்டு ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த அப்பாவி மக்களை தாமே படுகொலை செய்துவிட்டு அதை புலிகள் மீது சுமத்தி புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலிலேயே இந்த மக்கள் கொல்லப்பட்டதாக நிழற்படங்களுடன் செய்தி வெளியிட்டு புலிகளை ஒரு வன்முறைவாதிகளாக உலக அரங்கில் காட்ட இலங்கையின் பாதுகாப்பு மையம் முனைந்திருந்தது.

இதனையடுத்தே புலிகளின் பகுதிகளிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் செல்லும் மக்களை புலிகள் சுடுவதாக ஒரு கதையை இலங்கை அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டு, அது தற்போது ஜ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் புலிகளுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாக பதிவாகியுள்ளமை வெளிச்சம்.

சரணடைவதற்காகவோ அல்லது மக்களுடன் மக்களாக ராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்வதாக இருந்தால் ஒரு கரும்புலி போராளி கரும்புலி உபகரணங்களோடும் வெடிபொருட்களோடுமா செல்வார்?அதிலும் வன்னியில் நாற்புரங்களிலும் கடும் சமர் நடந்துகொண்டிருக்கும் பொழுது ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பொதுமக்களை கடுமையாக உடல் சோதனைகளுக்கு உற்படுத்தியிருந்தமை அதிலும் ஆண்களை உள்ளாடைகளை தவிர உடலில் உடுத்தியிருந்த அனைத்து உடுப்புக்களையும் அகற்றியே தமது கட்டுப்பாட்டுக்குள் வருமாறு ராணுவத்தினர் மக்களிடம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் ஒரு கரும்புலி போராளி வெடி குண்டுகளுடன் ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் மக்களுடன் சென்றார்.அதை இனம் கண்டுகொண்ட போதே கரும்புலி போராளி குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்த போதே குறிப்பிட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று இலங்கை அரசு முன்பு செய்திவெளியிட்டிருந்தமையை வைத்து பார்க்கும் போது இலங்கை அரசே திட்டமிட்டு தம்மிடம் வந்த அந்த மக்களை கொலை செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

அத்தோடு நாம் வெளியிட்டுள்ள படத்தில் உள்ள நபர் குண்டுவெடித்து இறந்ததற்கான அறிகுறி 1% வீதம் கூட தென்படவில்லை என்பதோடு கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான அறிகுறியே தென்படுகிறது என்பது இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதி செய்யப்படுகிறது.

http://uyarvu.com/index.php?option=com_content&view=article&id=9566:-q-q-&catid=48:2009-11-26-06-25-44&Itemid=69

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

வெல்லும் எங்கள் ஈழத்தில் நீங்கள் இல்லையென்ற மனத்தொல்லை கொல்லுதே எம்மைக்கொல்லுதே.

எல்லை தாண்டி வந்து உம்மைக்கொன்றவர்க்குப் பதில் சொல்ல வேங்கைகள் அணி செல்லுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KUDAL.jpg:(

இங்கே ஈழத்தமிழனின் விடுதலைபோராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்களுக்கும் அல்லது விடுதலைக்காக முன்னின்றவர்களை விமர்சனம் செய்பவர்களுக்கும் இந்த காட்சி சமர்ப்பணமாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.