Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை கூட்டமைப்பு இந்தியாவிடம் முறைப்பாடு

Featured Replies

ஞாயிற்றுகிழமை, மே 15, 2011

சிங்கள அரசுடன் நடத்தி வரப்படும் பேச்சுவார்த்தையில் ஒரு துளி கூட ஆக்க பூர்வமாக அமையவில்லை என கூட்டமைப்பு இந்தியாவிடம் முறைப்பட்டுள்ளது.

இதுவரை பேச்சின் 6 சுற்றுக்கள் முடிவடைந்துவிட்டன. எனினும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுசிறு விடயங்களுக்குக் கூடத் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிக்கும் போக்கையே அரசு கடைப்பிடிக்கிறது. தலைமையுடன் பேசி முடிவு தெரிவிப்பதாக முதல் சுற்றுக்களில் கூறப்பட்ட விடயங்களுக்கே இதுவரை தீர்க்க மான பதிலை அரசு கூறவில்லை என்கிற விடயங்களை இந்தியாவுக்கு விளக்கி உள்ளோம் என்றார் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

.

கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசுடன் 6 ஆம் கட்டப் பேச்சை முடித்துக்கொண்ட கூட்டமைப்பு பேச்சுக்குழு, நேரடியாக இந்தியத் தூதரகம் சென்று தூதர் அசோக் கே.காந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியது. இப்படி கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

.

அரசுடன் நடத்தப்பட்ட ஆறுசுற்றுப்பேச்சுத் தொடர்பாக கூட்டமைப்பினர் தூதரிடம் தெரிவித்த விடயங்கள் வருமாறு:

.

பேச்சுக்களில் மாகாணத்துக்கு அதிகாரங்களைப் பகிர்வது குறித்து ஆராயப்பட்டது. எனினும், இன்ன மும் தெளிவான இணக்கம் ஏற்படவில்லை. அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் இலங்கைத் தரப்பிடம் உற் சாகத்தைக் காணவில்லை. தீர்மானங்களை மேற்கொள் ளக் கூடிய வகையில் அரசுத்தரப்பு செயற்படவில்லை.

* உடனடியாகச் செய்ய வேண்டிய விடயங்களில் கூட இதுவரை இணக்கம் ஏற்படவில்லை. சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோர், தடுப்பு முகாம்களில் இருப்போர், மீளக்குடியமர்வு போன்ற விடங்களில் கூட இன்னமும் அரச தரப்பு தீக்கமான பதில் தரவில்லை. ஒவ்வொரு பேச்சிலும் இவை தொடர்பாக நாம் எடுத்துக்கூறியும் அரசு பதில் தரத் தயங்குகிறது.

* இணங்கிய ஒரு சில விடயங்களைக் கூட நடை முறைப்படுத்துவதில் கால இழுத்தடிப்புத் தொடர் கிறது. ஒரு தடவை ஆராயப்படும் விடயம் குறித்து உயர்மட்டங்களுடன் பேசியபின் அடுத்த தடவை பதிலளிப்பதாக அரச தரப்பினர் கூறுகின்ற போதும் அப்படி நடைபெறுவதே இல்லை.

* பேச்சு நடைபெறும் திகதிகளுக்கு இடையில் நீண்ட இடைவெளி காணப்படுகிறது. விரைந்து பேச்சை முடிக்கும் நோக்கம் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

கூட்டமைப்பினர் தெரிவித்த விடயங்கள் குறித்து டில்லிக்கு தான் விளக்குவார் என்று தூதர் அசோக் கே.காந்த் தெரிவித்துள்ளர்.

பெரும் இடைவெளியின்றிப் பேச்சை நடத்த வேண்டியதன் அவசித்தை இந்தியா உணர்ந்துள்ள தாகவும் அவர் கூறினார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

சுயாட்சி இல்லையேல் நாங்கள் ஒன்றும் ஏற்க மாட்டோம் .என்று திறந்து சொல்ல வேண்டியது தானே.

அதை விட்டுட்டு சும்மா பேசுறம் என்டா என்னத்தை பேசுறியள்.

ஒஸ்லோ பேச்சு வார்த்தையில் பாலா சொன்னார் இடைக்கால நிர்வாக அமைப்பை நடை முறைப்படுத்த நாங்கள் ஒத்து கொண்டுள்ளோம்.

இடைக்கால கட்டமைப்பில் என்னென்ன அடங்கும் என்று தான் இனி பேசுவோம்.

அதே போல்தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒரு கட்டமைப்பு எதுவென முதல் முடிவு எடுத்து விட்டு அதணுள் சேர வேண்டியதை பற்றி பேசலாம் என்று சொல்வதே சிறந்தது.

இப்ப போறதை பார்த்தால் மாகாண ஆட்சி முறையை ஏற்று கொண்ட மாதிரி கிடக்கு.

அண்மையில் பிளேக் கூட்டமைப்பை சந்தித்ததும் அப்போது அவர் தமிழரின் பிரதிநிதிகள் இவர்கள் தான் என்ற தொனிப்பட கூறி உள்ளதும் கூட்டமைப்புக்கு ஒரு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை காட்டுகின்றது.

அத்துடன் டெல்லி ஊடகவே அமேரிக்கா தமிழர் தீர்வை ஆதரிக்கும் என்பதும் உண்மை. எனவே டெல்லியுடன் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை சம்பந்தமான தொடர்புகளை பேணுவது முக்கியம். அதைவிட தமது நியாயமான கோரிக்கைகளை சிங்களம் தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருவதுடன், சிங்களம் தனது நிகழ்ச்சி நிரலை இடைவிடாது அரங்கேற்றி வருகின்றது என்பதையும் சர்வதேசத்திற்கு கோடிட்டுக்காட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசும் தமிழ் கூட்டமைப்புடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு வைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் மற்றும் விடயங்களையும் பரிமாறவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.