Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமாவின் அதிர்ச்சி வைத்தியம்

Featured Replies

ஒபாமாவின் அதிர்ச்சி வைத்தியம்

இதுவரை காலமும் அமெரிக்க அதிபர்கள் இஸ்ரேலை வெளிப்படையாகவும் வேறுவழிகள் மூலமும் ஆதரித்து வந்தனர். இன்று அதிரடியாக பாலஸ்தீனத்தை, அரபு மக்களை ஆதரித்து ஒரு செய்தி வெளியிட்டார்: "இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு எல்லைகளை மதிக்கவேண்டும்".

குடியரசு கட்சி உட்பட இஸ்ரேல் வரை இது கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரபு உலகத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

Obama Urges Israel to Go Back to 1967 Borders

Edited by akootha

  • தொடங்கியவர்

பாலஸ்தீனம் என்ற நாடு உருவாகுமா?

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

.

ஒசாமா பின்லாடனை சுட்டுக் கொன்றதன் மூலம், இஸ்லாமிய நாடுளுக்கு உள்ள கோபத்தை அடக்க....

ஒபாமா, காயை நகர்த்தியுள்ளார்.

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

தற்போது இஸ்ரேலின் கோபத்திற்கு அமேரிக்கா உள்ளாகியுள்ளது. இது உண்மையா நாடகமா என வெளிக்கிழமை தெரியவரும், அன்று இஸ்ரேல் அதிபர் வெள்ளை மாளிகைக்கு வருகிறார்.

மேலும், ஒபாமா "அமெரிக்கவின் நீண்ட கால நலன்களுக்கு இந்த நகர்வு முக்கியமானது" என கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும், ஒபாமா "அமெரிக்கவின் நீண்ட கால நலன்களுக்கு இந்த நகர்வு முக்கியமானது" என கூறியுள்ளார்.

நாங்கள் தீர்வுகளைப் (தமிழர் கூட்டணி உட்பட) பூதக் கண்ணாடி மனநிலையில் பார்க்கின்றோம்!

அவர்கள் தீர்வுகளைத் தொலைநோக்குக் கண்ணாடி மனநிலையில் பார்க்கின்றார்கள்!

அவ்வளவு தான் வித்தியாசம்!

  • தொடங்கியவர்

ஒபாமா யோசனையை நிராகரித்தது இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்த யோசனையை நிராகரித்தது இஸ்ரேல். நேற்று மத்திய கிழக்கு நாடுகள் பற்றி அமெரிக்காவின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.

அப்பொழுது, அரபு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் நடக்கும் மக்கள் புரட்சிக்கு தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்த அமெரிக்க அதிபர், இஸ்ரேல தன்னுடைய படைகளை 1967 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். தற்பொழுது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகள் 1967 வரை அதன் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அதிபர் ஒபாமா தெரிவித்த யோசனையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டால், அது தன்னுடைய தற்பொழுதைய நிலப்பரப்பு சிலவற்றை இழக்க வேண்டிவரும்.

எனினும், அமெரிக்காவின் இந்த யோசனையை உடனடியாக நிராகரித்துள்ளது இஸ்ரேல். ஒபாமாவின் இந்த யோசனை பற்றி கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யஹு, அதிபர் ஒபாவின் கருத்து, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு கடிதம் மூலம் அளித்திருந்த உறுதிமொழிக்கு முரணானது என்று கூறியிருக்கிறார். மேலும், 1967 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு திரும்புவது என்பது, தற்பொழுது அவ்விடத்தில் வாழ்ந்து வரும் சுமார் 3 லட்சம் இஸ்ரேலியர்கள் தங்கள் இடங்களை இழக்க வைக்கும் என்று கூறினார்.

கடந்த 2004 ஆம் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இஸ்ரேல் பிரதமருக்கு எழுதுதிய கடித்ததில், மாறி வந்திருக்கும் சூழ்நிலைகள் கருத்தில் கொள்ளப்படும் என்றும், 1967 ஆம் ஆண்டு வரையிலான எல்லை நடைமுறையில் இனி சாத்தியமில்லை என்றும் தெரிவித்து இருந்தார். தற்பொழுது, ஒபாமா, முன்னாள் அமெரிக்க அதிபரின் கருத்துக்கு மாறான கருத்தை வெளியிட்டுள்ளார். ஒபாமாவின் யோசனை பற்றி கருத்து தெரிவித்துள்ள பாலஸ்தீனின் ஹமாஸ் இயக்கம், "அமெரிக்க அதிபர் ஒபாமா, வெறும் வாய் வார்த்தைகளை விட்டுவிட்டு, பாலஸ்தீனம் மற்றும் அரபு நாடுகளின் உரிமைகளைப் பாதுகாக்க உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளது. ஒபாமாவின் யோசனையை நிராகரித்துள்ள இஸ்ரேல் பிரதமர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இஸ்ரேலின் நிலை பற்றி ஒபாமாவுடன் விவாதிக்க இன்று அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bharathnewsonline.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D107.php

  • தொடங்கியவர்

பராக் ஒபாமா உரைக்கு ஜேர்மனி ஆதரவு

வரும் தேர்தலில் பாலஸ்தீன பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்ட அதிபராக களமிறங்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விரும்புகிறார். நேற்று பாலஸ்தீன ஸ்ரேற் குறித்து அவர் முக்கிய உரையொன்றை ஆற்றினார். அந்த உரையில் பாலஸ்தீனா என்ற நாட்டுக்கும், இஸ்ரேல் என்ற நாட்டுக்கும் இடையே 1967 ம் ஆண்டு என்ன எல்லை இருந்ததோ அதே எல்லைக்கு இஸ்ரேல் பின்வாங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதன்படி இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிக்குள் அமைத்த புதிய கட்டிடங்கள் யாவற்றையும் விட்டு வெளியேற வேண்டும் என்பதாகும்.

இக்கருத்தை ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலும் ஏற்பதாக அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு இஸ்ரேலிய தரப்பில் இருந்து பென்ஜமின் நெட்டன் யாகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த இடத்திற்கு நகர்ந்தால் இஸ்ரேல் முற்றாக பலம் இழந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை பாலஸ்தீன ஸ்ரேற்றை தானும் ஆதரிக்கப் போவதாக பிரான்ஸ் கூறிவிட்டது. நேற்று முன்தினம் டென்மார்க் எதிர்க்கட்சிகள் தாம் ஆட்சிக்கு வந்தால் பாலஸ்தீன ஸ்ரேற்றை ஆதரிக்க இருப்பதாகக் கூறியுள்ளன.

இந்த விவகாரம் சிறீலங்கா அரசியல் தீர்விலும் பிரதி பலிக்கும் 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற இடத்திற்கு இரு தரப்பும் இணங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படலாம்.

மேலும் பாலஸ்தீனம் போல 1967 ற்குப் போனால் அனுராதபுரமே தமிழர் வசம் என்ற நிலை வந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=71028

  • தொடங்கியவர்

இன்று ஒபாமா மீண்டும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் பற்றி ஒரு முக்கிய உரையை ஒரு அமெரிக்க இஸ்ரேல் அமைப்பில் உரையாறினார். தனது முன்னைய உரையை மீண்டும் விளக்கத்துடன் தெளிவுபடுத்தினார்.

- பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஹமாஸ் உட்பட

- இஸ்ரேல் ஆம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்ட எல்லைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்

- பலஸ்தீனிய மக்களுக்கு தனிநாட்டு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்

Obama sticks to Mideast vision, seeks to calm Israel

President Barack Obama on Sunday refused to back away from his new Middle East peacemaking vision that has angered Israel, as he addressed the Jewish state's staunchest American supporters amid a deep rift in U.S.-Israeli ties.

But Obama, seeking to soothe Israeli fury over his stance that peace talks should start on the basis of Israel's 1967 borders, made clear he expected Israel and the Palestinians to negotiate land swaps that would allow Israel to keep some Jewish settlements.

http://ca.reuters.com/article/topNews/idCATRE74L1M820110522

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பசியொடு இருக்கும் ஒருவனிடம், உன்னைப்போல் பெரும்பசியோடு இருப்பவனுக்கு ஆறுசுவையுடன் கூடிய அமுது பரிமாறப்போவதாகச் சொல்கிறார்கள், ஆகையால் உன்பசியும் தீர்ந்துவிடும் என்பதுபோல் நாம் உளமகிழ்வடைய முடியாது.

ஒபாமாவின் அதிர்ச்சி வைத்தியமானது இஸ்ரேலைப் பகைத்தவாறு பலஸ்தீனத்தினது பிரச்சினையைத் தீர்ப்பதனூடாக அரபுலகில் பலநாடுகளின் செல்வாக்கை தனதாக்குவதோடு, தனது கட்டுப்பாட்டு வளையத்துள் வராத அரபு நாடுகளை தனிமைப்படுத்திவிடுவதோடு, ஹமாஸையும் செயலிழக்க வைக்கலாம் என்பதே அமெரிக்க அதிபரின் நகர்வாக உள்ளது. அதேவேளை பலஸ்தீனக் குழந்தை ஒரு பிரசவநிலையை அடைவதற்கான முதிர்நிலையைப் பெற்று, அது ஐநாவிலும் உலக அரசுகளாலும் தனியரசுக்கு நிகரான அவதானிப்பைப் பெற்றுள்ளதோடு, அவர்களுடைய இராசதந்திர நகர்வுகள் காத்திரமாக உள்ளது.அத்தோடு தன்னைச் சுற்றியுள்ள அரபுநாடுகளின் பெரும் ஆதரவோடு, மலேசியா, கிந்தியா போன்ற நாடுகளினது ஆதரவையும் கொண்டதே பலஸ்தீனமாகும். எமக்காக அயலகமாம் தமிழகத்திற்கூடக் கட்சியரசியலுக்கப்பால் ஒன்றிணைந்து நிற்கின்றார்களா? ஆனால், நாம் எந்தநிலையில் நிற்கிறோம்! எம்மை எந்த ஒரு நாடாவது அங்கீகரித்துள்ளதா? அதற்கான காத்திரமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? நா.க.அரசு, த.ம.அவை, மாற்றுக்குழு, மாறாதகுழு, அவை, இவை என்று முண்டியடிப்போர் என்ன செய்துள்ளார்கள்.வெறுமனே கையெழுத்துகள், துக்கநாள்கள், அறிக்கைகள் என்பனவோடு உலகம் எம்மைப்பார்த்து இரங்கிவிடுமா?

ஒரு தனியரசுக்கான அத்தனை கட்டுமானங்களோடு அங்கீகாரத்துக்காகக் காத்த நின்ற தமிழீழக்குழந்தை கருவிலே சிதைக்கப்பட்ட நிலையிலே கேட்பாரற்ற நிலையிலே நின்றவாறு இன்றும் என்ன நடக்கிறது. குழிபறிப்புகளும்,குழு மோதல்களாகவும் தமிழினம் சிதைந்து கொண்டுபோகும் அவலமல்லவா நிகழ்கிறது. ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக நின்றதோடு, தனியரசுக்கான அத்தனை திட்டங்களையும் வகுத்துச் செயற்படுத்திக் காட்டினானே ஒரு தலைவன் எதற்காக. இப்படி ஒருவருக்கொருவர் குழிபறித்து அழியவா? இந்த நிலையிலே மாறிவரும் உலகினது சாதகமான சூழலைப் பயன்படுத்தி எமது மக்களின் சகவாழ்வுக்கும் அமைதிக்கும் ஆவன செய்ய இனியேனும் ஒன்றுபடாவிடில் இவர்களை மக்கள் அடித்துவிரட்டிவிட்டு காத்திரமான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர வேறுதெரிவுகள் இருக்காது.

  • தொடங்கியவர்

ஒபாமா இதை அரபு உலகத்தை வளைத்துப்போட செய்தாலும், ஒரு துணிச்சலான முதலாவது அமெரிக்காவின் அதிபதி. அங்கு பலமாக உள்ள யூத அமைப்புக்களையும் மீறி அவர் இவ்வாறு செய்ய நினைப்பது பாராட்டப்பட வேண்டியதே.

அதேவேளை பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படுவது எமக்கும் ஒரு உந்துசக்தியாக அமையும். உலக நாடுகளின் கவனத்தை எமது பக்கம் ஈர்க்கவும் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.