Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கூர்வும் நிகழ்வு நேற்று கோலாலம்பூர் சாரணியர் மண்டபத்தில் நடைபெற்றது.

இரவு மணி 8 அளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தோடு ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான விளக்கப்படமும் திரையிடப்பட்டது.

அதன் பிறகு சிறப்பு பிரமுகர்களின் எழுச்சி உரை இடம்பெற்றதுடன், தமிழீழ பாடல்களுக்கு அம்பிகா பரதநாலயம் குழுவினரின் நடனம் மற்றும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம்பெற்றன.

தமிழர் வரலாற்றில் காலா காலமாக இனவழிப்பு நடைபெற்று வந்தாலும் 2009ஆம் ஆண்டு மே மாதமே தமிழினத்தையே நடுங்கவைக்கும் அளவிற்கு சிறுவர், பெரியோர், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடின்றி கொத்துக்கொத்தாக 100,000க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டதன் அடையாளமாய் போர் முடிவுற்ற நாளான மே 18 இரத்தம் தோய்ந்த நாளாகவும், ‘தமிழர் இனவழிப்பு நினைவுநாள்’ ஆகவும் உலகமெங்கும் பரந்துவாழும் தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது.

செம்பருத்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டிய தேவையே இன்றும் என்றும் வெற்றாக உள்ளது.................

பலமும் சக்தியும் தாராளமாக இருக்கிறது!

இணையத்தை பயன்படுத்தி ஒருவரோடு ஒருவர் உறாவாட வேண்டும். உயரிய இலட்சியங்கள் எமதாக இருப்பின் உறவுகளில் உண்மைகள் தானக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.