Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல் பள பளக்க..

Featured Replies

beautyskin3sx.jpg

மனிதர்களுக்கு தோல் பளபளப்பு உபயத்தை அளிப்பது செல்கள்தான். வறட்சியான செல்கள்தான் தோலின் சொரசொரப்புக்கும், பளபளபின்மைக்கும் காரணமாக இருக்கின்றது.

வெண்மையாக்கும் சிகிச்சைக்கு (Whitening treatment) அடுத்தபடியாக, இளம் பெண்களின் மனங்கவர்ந்த சிகிச்சை என்னும் அந்தஸ்தைப் பெற்றிருப்பது ஸ்கின் - பாலிஷ் சிகிச்சை தான். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தச் சிசிச்சை அறிமுகமாயிருந்தாலும், இப்போதுதான் இளம் பெண்களிடையே உச்சக் கட்ட கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இந்தச் சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும் சில குறிப்பிட்ட அழகு நிலையங்களிலும் செய்யப்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் சுருக்கம், பொலிவிழப்பு ஏற்படுகிறது. ஸ்கின் - பாலிஷ் செய்வதன் மூலம் சருமத்திற்குப் பொலிவும், புத்துணர்வும் கிடைக்கும். பருவினால் ஏற்படும் தழும்புகள் மறையவும் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் தீ விபத்தினால் சருமம் பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளில் சிக்கி மேல் தோல் பாதிப்படைந்திருப்பவர்கள் சிகிச்சை செய்வதற்கும் இந்த முறை பயன்படுகிறது.

பொதுவாக இறந்த செல்களை நீக்கிப் புதிய செல்களின் வழியாக புத்துணர்ச்சியான சருமம் உண்டாவதற்கு வழி வகுப்பதுதான் இந்த சிகிச்சையின் அடிப்படை. இதற்காக மருத்துவமனைகளில் ''டெர்மடிரேஷன்'' செய்கிறார்கள். அங்கு 70 சதம் க்ளைகாலிக் அமிலம் (கரும்பிலிருந்து எடுக்கப்படுகிறது) உபயோகப்படுத்துகிறார்கள். சிகிச்சையை மூன்று நிமிடங்களில் முடித்து அனுப்பி விடுகிறார்கள். ஆனால் சில அழகு நிலையத்தில் 10 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே ''க்ளைகாலிக்'' அமிலம் உபயோகபடுத்துகிறார்கள். சிகிச்சையின் பின்னும், அவரவர் சருமத்திற்கேற்பப் பிரத்யேகக் கவனம் எடுக்க வேண்டும்.

ஸ்கின் பாலிஸ் முறை அறிமுகமாவதற்கு முன் பொடி செய்யப்பட்ட சர்க்கரையைச் சருமத்தில் தேய்த்து, இறந்த செல்களை நீக்குவோம். அல்லது சோப், க்ரீம் இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தி அதன் மேல் உப்புத் தூளைத் தேய்ப்போம். ஏனென்றால் உப்பை நேரிடையாக சருமத்தில் தடவக் கூடாது. இந்த முறைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை.

ஸ்கின் பாலிஷ் முறை சமீபத்தில் நவீனமாக்கப்பட்டிருப்பதால் சிகிச்சை எடுத்துக் கொள்வதும் சுலபம். பலனும் அதிகம். இந்தச் சிகிச்சையை வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்கள் செய்யக் கூடாது. பருவ வயதான பெண்கள் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். அவர்களும் தகுதியான அழகுக் கலைஞரின் ஆலோசனைப்படி மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்யலாம்.

இந்தச் சிகிச்சையை ப்ரசிங் முறையிலும் சிலிகான் கற்கள் கொண்ட உபகரணங்களை வைத்தும் செய்யப்படுகிறது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப உபகரணங்களை பயன்படுத்துவார்கள். க்ளைகாலிக் அமிலத்தைக் கொண்டு மூன்று நிமிடம் மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள். நேரம் அதிகமானால் சருமத்தில் எரிச்சல் தோன்றும். இந்தச் சிகிச்சைக்குப் பின் ஒரு வாரம் வரை சருமத்தில் சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடனடியாக தண்­ரில் நீந்தக் கூடாது. ஃபேசியலும் செய்துக் கொள்ள கூடாது. கடினமான சோப், பவுடர்களை உபயோகிக்கக் கூடாது. பரு இருப்பவர்கள் இந்தச் சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது. மணப்பெண்கள் தகுந்த ஆலோசனையின்பேரில் இருமுறை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இறந்த செல்கள் அதிகமாக சருமத்தில் உருவாவதற்குக் காரணம் அதிகப்படியான தூசியே. படுக்கை, தலையணை, உறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள பாக்டீரியாவினாலேயே தொற்று உருவாகி பொடுகு, பரு இவை உருவாகின்றன.

தரமான பொருட்களைச் சருமத்திற்கு உபயோகிப்பதன் மூலம் அவ்வப்போது உருவாகும் இறந்த செல்களைப் போக்கலாம். பப்பாளியில் என்சைம் இருப்பதால் அந்தப் பழத்தின் கூழைச் சருமத்தில் தடவினால், பளபளப்பும், நிறமும் அதிகரிக்கும். ஆனால் அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல மேனியிலும் தெரிவதற்கு உதவும் ஸ்கின் பாலிஷ் இந்தத் தலைமுறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான்.

இதையெல்லாம் விட..சினிமா நடிகை திரிசா சொன்னது:

தோடம்பழசாறு குடித்து வந்தால்...தோல் பள பளப்பு பெறும் என்பது.

நன்றி கூடல் அன்ட் திரிசா :P

  • Replies 56
  • Views 11.7k
  • Created
  • Last Reply

பிள்ளை ஆராயோ சொல்லிச்சினம் தேங்காய் போச்சுப் போட்டு தேய்ச்சுக் குளிச்சா தோல் மளமள.......சா...பளப்பளப்பா வரம் எண்டு உண்மையோ

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை ஆராயோ சொல்லிச்சினம் தேங்காய் போச்சுப் போட்டு தேய்ச்சுக் குளிச்சா தோல் மளமள.......சா...பளப்பளப்பா வரம் எண்டு உண்மையோ

அடிக்கடி பேத்தியை நக்கல் அடித்தால் உங்கள் கன்னம் பளபளக்கப் போவது மட்டும் உறுதி. :wink: :lol:

அடிக்கடி பேத்தியை நக்கல் அடித்தால் உங்கள் கன்னம் பளபளக்கப் போவது மட்டும் உறுதி. :wink: :lol:

:P :P :P :P :P :P :P

முகம் நானும் கேள்விப்பட்டனான் தான் ஆனால் அது உங்கள போல ஆக்களுக்கு (எருமைமாட்டுக்கு) பொச்சால தேச்சால் பள பளப்பா வரும் என்று :wink: :P :P :P

சகி தகவலுக்கு நன்றி.

நல்லா பழங்கள் ஊட்டச்சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டால் தோல் பள பள என்று இருக்கும். அதை விட்டுட்டு உந்த சிகிச்சை எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது :roll:

அப்பாடி அடுத்த பட்டிமன்றத்திற்கு தலையங்கம் கிடைத்துவிட்டது.

அழகுசாதனப் பொருட்களால் உடம்பிற்கு நன்மை அதிகமா?? தீமை அதிகமா??

  • தொடங்கியவர்

மு.அங்கிள்.. :evil: பொச்சு போடுறது அக்கா சொன்னது போல எருமை,மாடு, யானைக்கு. மனிசருகிலை...(உங்களுக்கெப்பிட

அது சரிக்கா...பட்..இறந்து போன செல்களை உணவு அகற்றும் என்பது கஷ்டம். சிகிச்சைகள்..எல்லாம் கெட்டவை எண்டில்லை..சில ஆயுள் வேதமான சிகிச்சை சிலருக்கு தேவை..முகபருவால கஷ்டபடுபவர்களுக்கு..இன்னும் தோல் பிரச்சனை ஆக்களுக்கு.. :D

ம்ம் நீங்கள் சொல்லுறதும் சரி தான். நல்ல காலம் எனக்கு உந்த பிரச்சினை ஒன்றும் இல்லை :P

ஓம் ஓம் இரசிகைக்கு வெறும் பொச்சுத் தும்பு போதும்.

ஓம் ஓம் இரசிகைக்கு வெறும் பொச்சுத் தும்பு போதும்.

தனிய நிண்டு முழிசிக் கொண்டு இருந்தன் வா.....அப்பு எனக்கொரு துணை கிடைச்சிட்டு இனி வாங்கோ பாப்பம்.....

என்னத்தை போட்டாலும் நாங்கள் கறுப்பர் கறுப்பர் தான் :lol::lol:

ஊமை எழுதியது:என்னத்தை போட்டாலும் நாங்கள் கறுப்பர் கறுப்பர் தான் :lol::lol:

ஊமை கறுப்பு கறுப்பு என்று கவலைப்படுகின்றீர். ஆனால் அந்தக் கறுப்பு பளபளத்தால் எந்த வெள்ளையும் அருகில் நிற்க முடியாது. உதாரணம் மாடலிங் நவோமி. :wink: :wink:

தமிழ் நாட்டில் ஒரு பழமொழி கிராமங்களில் கூறப்படுவது உண்டு....

"கறுப்புக்கு நகை போட்டு, கண்ணால பாக்கணும்,

செகப்புக்கு நகை போட்டா, செருப்பால அடிக்கணும்"

சிகப்பாக இருக்கும் உறுப்பினர்கள் யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம்.... அது பழமொழி என்பதால் என் தவறு ஏதுமில்லை..... (குறிப்பு : நானும் சிகப்பு தான்)

:P :P :P :P :P :P :P

முகம் நானும் கேள்விப்பட்டனான் தான் ஆனால் அது உங்கள போல ஆக்களுக்கு (எருமைமாட்டுக்கு) பொச்சால தேச்சால் பள பளப்பா வரும் என்று :wink: :P :P :P

இது ரெம்ப ஓவர்...அவர் எருமை மாடு என்றா அவரோட பேசுற நீங்கள் மட்டும் என்னவாம்..??! மாடு மாட்டோடதானே பேசும்..! :wink: :P :lol: :shock:

மு.அங்கிள்.. :evil: பொச்சு போடுறது அக்கா சொன்னது போல எருமை,மாடு, யானைக்கு. மனிசருகிலை...(உங்களுக்கெப்பிட
  • கருத்துக்கள உறவுகள்

இது ரெம்ப ஓவர்...அவர் எருமை மாடு என்றா அவரோட பேசுற நீங்கள் மட்டும் என்னவாம்..??! மாடு மாட்டோடதானே பேசும்..! :wink: :P :( :shock:

அது தான் நீங்களும் அவரோடு பேசுகின்றீர்களா!!

:wink: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :(:( :?:

  • கருத்துக்கள உறவுகள்

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :(:( :?:

ஏன் உங்களுக்கும் புரிகின்றதா?? உடனே கூட்டணி அமைக்கின்றது தானே :wink: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண வீடு, சாமத்திய வீட்டுக்கு அடிக்கிற காட்டிருக்கெல்லோ அதை யெடுத்து முகத்தில தேய்தால் தோல் பளபளக்கும் கண்டியளோ? :(:( :wink:

  • தொடங்கியவர்

கல்யாண வீடு, சாமத்திய வீட்டுக்கு அடிக்கிற காட்டிருக்கெல்லோ அதை யெடுத்து முகத்தில தேய்தால் தோல் பளபளக்கும் கண்டியளோ? :(:( :wink:

ம்ம் அப்பிடிச்சொல்லுங்கோ...நான் ஒரு நன்மைக்காக எடுத்து அக்கறையா போட..எவ்ளோ கதைக்கிறாங்க..பொச்சு எண்டுறாங்க...போட்டோ போடுறாங்க..அதில உள்ள விசயத்தை பார்ப்பியளா...அதை விட்டுட்டு..மாடு மாட்டோட தான் கதைக்கும்..அது இதுன்னுக்குட்டு :evil:

இது ரெம்ப ஓவர்...அவர் எருமை மாடு என்றா அவரோட பேசுற நீங்கள் மட்டும் என்னவாம்..??! மாடு மாட்டோடதானே பேசும்..! :wink: :P :( :shock:

குருவி ஏன் டென்சன் ஆகுறீங்கள். :P :P :P

நாங்கள் இப்படித்தான் தாத்தாவும் பேர்த்தியும்

மாறி மாறி கடிபடுவம் கண்டுக்காதீங்கோ :wink: :wink: :wink:

அது தான் நீங்களும் அவரோடு பேசுகின்றீர்களா!!

:wink: :(

:P :P :P :P :P :P :lol::lol::lol:

ம்ம் அப்பிடிச்சொல்லுங்கோ...நான் ஒரு நன்மைக்காக எடுத்து அக்கறையா போட..எவ்ளோ கதைக்கிறாங்க..பொச்சு எண்டுறாங்க...போட்டோ போடுறாங்க..அதில உள்ள விசயத்தை பார்ப்பியளா...அதை விட்டுட்டு..மாடு மாட்டோட தான் கதைக்கும்..அது இதுன்னுக்குட்டு :evil:

அதுதானே சா ஒன்டு உருப்படியா சொன்னால் கேட்டாதானே.. அதுசரி ஏதோ ஒன்றுல (எருமைமாட்டுல) மழை பெய்தால் அதுக்கு உணர்ச்சி இருக்காதுதானே.

குருவி ஏன் டென்சன் ஆகுறீங்கள். :P :P :P

நாங்கள் இப்படித்தான் தாத்தாவும் பேர்த்தியும்

மாறி மாறி கடிபடுவம் கண்டுக்காதீங்கோ :wink: :wink: :wink:

என்னதான் தாத்தா பேத்தி என்றாலும் மரியாதை...இருக்கனும்..! :wink: :P :(

என்னதான் தாத்தா பேத்தி என்றாலும் மரியாதை...இருக்கனும்..! :wink: :P :(

மரியாதை மனசுல இருந்தால் காணும். அப்படித்தானே முகம் :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.