Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி

Featured Replies

இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி கருத்து

திமுக தலைவர் கருணாநிதி இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவி அளிக்காது என்றே தாம் நினைப்பதாகக் கூறியிருக்கிறார்.

சென்னையில் இன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கப்படக்கூடாது என பாமக, மற்றும் மதிமுக கட்சிகள் குரல் கொடுத்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசும் அதற்கு மாறாக சிந்திப்பதாக தெரியவில்லை என்றார் கருணாநிதி.

தொடர்ந்து திமுக வெளிநாட்டுப் பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையினை ஏற்று செயல்படுவதாகத் தெரிகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதிலும் மாற்றமில்லை, இலங்கைத் தமிழர்கள் எந்தத் துயரத்திற்கும் ஆட்படுத்தப்படக்கூடாது என்ற திமுகவின் கொள்கையிலும் மாற்றமில்லை என்றார் அவர்.

சில தினங்களுக்குமுன் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தி, இலங்கையின் புதிய அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்தும், அந்நாட்டிற்கு ராணுவ உதவி அளிக்க்க்கூடாது எனக் கோரியும் தீர்மானம் இயற்றியது.

அக்கூட்டத்தில் திமுகவின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக, பாமக நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்நிலையிலேயே இன்றை செய்தியாளர் சந்திப்பில் கருணாநிதி ராணுவ உதவி தவறு என்ற ரீதியில் பேசியிருக்கிறார். பொதுவாகவே திமுக இலங்கைப்பிரச்சினையில் தீவிரமாகப் பேசுவதை பல ஆண்டுகளாக தவிர்த்து வந்தாலும்கூட, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரானதாக கருதப்படும் விஷயங்களில், தாங்கள் ஒன்றும் அவர்கள் நலனுக்கு எதிரானவர்களல்ல என்பதை தெளிவுபடுத்தியிருக்ககிறது என்பதை நாம் இங்கே நோக்கலாம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட அதிபர் ராஜபக்சேயை சந்திப்பதை தவிர்த்திருக்கிறார். முதலில் அதிபர் தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயலலிதாவை சந்திப்பதாகத்தான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று அவரது வருகை ரத்தானது. காரணம் தெரிவிக்கப்படவில்லை.

சட்டமனறத் தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தனக்கு எதிராக பயன்படுத்தவேண்டாம் என நினைத்தே முதல்வர் ஜெயலலிதா அதிபர் ராஜபக்சவை இங்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருப்பார் என்கின்றனர் நோக்கர்கள்.

¿ýÈ¢:À¢À¢º¢தமிழோசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா சரியான அரசியல்வாதிதான்...............

தமிழ்நாட்டில் தமிழ்தேசியத்திற்கு ஆதராவான நிலைதோன்றியுள்ளதால் தானும் முந்துகிறார்....

ஆதாயம் இல்லாமல் நரி நாட்டாமை

பண்ணுமா? :P

மிக மிக சந்தோஸமான செய்திகள் தமிழ்த் தாய்த்திரு நாட்டிலிருந்து வந்து கொன்டிருக்கிறது! அரசிலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தமிழ்த் தலைவர்கள்/அமைப்புக்கள்/கட்சிகள் எல்லாம் முன்வரவேண்டும்!

தேவையற்ற விவாதங்கள்/கருத்துக்களைத் தவிர்த்து, எம் ஆதரவுக் கரங்கள் அணைத்தையும் இறுகப்பற்றுவோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசு செய்வதனையும் ஆதரிப்பாராம். அதேவேளை தமிழர்கள் கொடுமைக்கு ஆளாகக்கூடாது என்பதிலும் எங்கள் நிலைப்பாடு என்கிறார்.

இது உங்களுக்கு குழப்பமான விடயமாக தெரியவில்லையா?

இதிலும் பார்க்க இந்த கருணாநிதி வாய்திறக்காமல் விட்டிருக்கலாம் அல்லவா?

வாய்திறக்காமல் இருக்கிற ஜெயலலிதா எவ்வளவோ மேல்.

கருணாநிதி எப்போதும் தனது வார்த்தை ஜால விளையாட்டின் மூலம் ஈழத்தமிழர்கள் மீது சவாரி செய்கிறார்.

தமிழ் நாட்டில தேர்தல் வரப்போகுது ஆதலால் ஆதரவு மட்டுப்படுத்தியே வளங்கப்படும். தேர்தல் முடிந்தபின் மொத்தமாக வளங்கப்படும்.... யாருக்கு ஆதரவு எண்டதுதான் சிக்கலே....

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி என்ன சொன்னாலும், என்ன செய்வார் என்று தெரியும் தானே. அது தான் இங்கு யாரோ சொன்னார்களே!! "நம்ப நட நம்பி நடவாதே" என்று :P :D

கலைஞரைப் பொறுத்த வரையில் எப்போதுமே இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு வராத வகையிலேயே முடிவுகள் எடுப்பார்....

ஈழத்தமிழருக்காக அவர் போராடி ஆட்சியை இழந்தார்.... மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தார்.... ராஜீவ் கொலைப் பழியை சுமந்தார்....

இனியும் அவர் தேவை இல்லாமல் இந்த விவகாரத்தில் மூக்கை நிழைத்து தமிழகத்தில் திமுகவை முகவரி இல்லாமல் செய்து விடக்கூடாது என்பதே தமிழ் நாட்டு தமிழரின் விருப்பம்.....

இங்கு போர்ட்தக்கு என்ன ஆதரவு என்று கள தோழர்கள் தமிழ் நாடு வந்து பார்த்து கொள்ளட்டும்.

தமிழ் நாட்டு அரசியலில் ஈழ பிரச்சனை ஒரு தேர்தல் பிரசாரம் செய்யகூடிய விழயம் இல்லை.

ஏன் நீங்கள் ஒருவரும் தமிழ் நாட்டின் உன்மையான் கருத்துகளி செவி மடுப்பதே இல்லை. அங்கு ஒருவரும் மத்திய அரசாங்த்தை கருத்தை ஏற்காதவர் கிடையாது. உடனே பொடா ,தடா என்று பேச வேண்டாம். தேச பக்தியின் காரணமாக அனைவரும் மத்திய அரசின் கருத்தை ஏற்று கொண்டுள்ளனர்.

ஈழத்தில் போர் மூண்டு தமிழர்கள் மடிவதை தாய்த்தமிழர்கள் என்றுமே விரும்ப மாட்டார்கள்... ஆனால் இங்கு போர் மூள வேண்டும் என்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு போர் முரசு கொட்டுபவர்களின் நோக்கம் என்ன என்பதை அனைவரும் உணர வேண்டும்....

இதில் என்ன குழப்பம் இதுதானே அவரது பழயபல்லவி,

புலிகளை ஆதரிக்கமாட்டேன் தமிழீழம் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்,

இதைத்தான் மற்றவர்கள் கூறினார்கள், கலைஞர் தனது மகள் கனிமொழிக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் ஆனால் குழந்தை பிறந்தால் சந்தோஷப்படுவாராம். :P :P :P

teasin148fx.gif

கலைஞர் விடுதலை புலிகளை ஆதரித்தது இல்லை என்பது உண்மைதான்.... அவர் வன்முறை ஆதரவாளர் அல்ல.... அவர் ஜன நாயக வழிமுறையில் போராடிய சில ஈழ இயக்கங்களை ஆதரித்ததுண்டு....

அப்ப எதுக்கு எம்ஜிஆர் விடுதைபுலிகளுக்கு பணம் கொடுத்தவுடன், கலைஞரும் கொண்டு போய் கொடுத்தார், அதை புலிகள் வாங்க மறுத்ததும் தெரியாதா? அல்லது மறந்துவிட்டீரா? அல்லது மறைத்துவிட்டீரா?

À¢Õó¾ý,¯í¸Ç¢ý ¸ÕòÐìÌ ²¾¢Ã¡ö «Å÷ þÕì¸Ä¡õ,«¾ü¸¡¸ ¾Ãõ ¾¡úóРŢÁ÷º¢ì¸ §Åñ¼¡õ.¯í¸ÙìÌ À¢Ê츢ȧ¾¡ þø¨Ä§Â¡ «Å÷ ¾Á¢ú¿¡ðÊý Á¢¸ Ó츢 ¾¨ÄÅ÷,50ÀÐ ¬ñÎ ¾Á¢ú¿¡ðÎ «Ãº¢Âø «Å¨Ã ÍüÈ¢ò¾¡ý ¿¼ì¸¢ÈÐ.Áì¸Ç¢ý ´Õ º¡Ã¡÷ þô§À¡Ðõ «Å¨Ã ¬¾Ã¢ì¸¢ýÈÉ÷. «ó¾ Áì¸¨Ç ÁÉõ §¿¡¸ ¦ºö¾£÷.þÐ ±ÉÐ §ÅñΧ¸¡û

என்ர குஞ்சு நாங்கள் அவரை தரம் தாழ்த்தேல்லை உங்கட முதலமச்சர் அம்மா தான் 50 வருச அரசியலில இருந்தவரை அடித்து உதைத்து இழுத்துப்போனவா ??????

அங்கை கேக்க வேண்டிய கேள்வியை இங்கை கேக்கிறீர்

என்ன ஊரில நல்ல சூடா இல்லை தலை கால் தெரியாமல் கதைக்கிறீர் அது தான் நல்ல பனங்கள்ளா வாங்கி அடியும் சூடு தானா இறங்கும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அம்மா இழுத்து போனால் நீங்களும் அவரை இப்படி பேசலாமா?

அதே முதலமைச்சர் 15 நாள் காவலை இரண்டே நாளில் வாபஸ் வாங்க நேர்ந்தது சின்னப்பு அவர்களுக்கு தெரியாதா?

தமிழ் போரடதக்கு சிறை சென்றவர் தான் அந்த சிறை கொடுமைகளை அறிய முடியும்.

அம்மா இழுத்து போனால் நீங்களும் அவரை இப்படி பேசலாமா?

நாங்கள் பேசவில்லை ராசா எங்களுக்கு 2 கடமைகள் இருக்கு

1. எமது விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க ஏலாது

2.அதனுடைய தரம் என்ன என்பதை விளங்கியும் விளங்காத மாதிரி நடிக்கும் உங்களைப்போன்றவர்களுக்கு திருப்பித்திருப்பி ஏதாவது ஒரு வளியில விளங்கப்படுத்திறது

உதத்தான் திருப்பித்திருப்பிச்சொல்ல

அதே முதலமைச்சர் 15 நாள் காவலை இரண்டே நாளில் வாபஸ் வாங்க நேர்ந்தது சின்னப்பு அவர்களுக்கு தெரியாதா?

அது உங்கட அரசியல் சுத்துமாத்து எல்லா இடமும் செய்யிறது தான்

15 நாள் காவலை 2 நாளில் வாபஸ் வாங்கினால் அடித்தது சரியா புரியவில்லையே லுக்கு

:wink: :wink: :wink: :wink: :wink:

நாங்கள் யாரும் உங்கள் போராட்தை இழிவாக பேச இங்கு வரவில்லை. இந்திய தலைவர்களை பற்றி தெளிவு படுத்தவே வந்தோம்.

தமிழ் போரடதக்கு சிறை சென்றவர் தான் அந்த சிறை கொடுமைகளை அறிய முடியும்.

முதலில தமிழரை மதியும் சிறை சென்ற அனுபவம் நமக்கு அதிகம் இருக்கு :wink: :wink: :wink:

சிறை எப்படி என்றும் எமக்குத்தெரியும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

சிறையின் கொடுமைகளை உங்கட ராணுவத்திடம் இருந்து அதிகமாக கற்றவர்கள் நாங்கள்

:wink: :wink: :wink: :wink: :wink:

தமிழக அரசியல் ஈழத்தமிழர் பிரச்சினையை மட்டுமே மையம் கொண்டு இயங்குவதாக நினைக்காதீர்கள்.... அங்கேயும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கிறது.....

தமிழக அரசியல் ஈழத்தமிழர் பிரச்சினையை மட்டுமே மையம் கொண்டு இயங்குவதாக நினைக்காதீர்கள்.... அங்கேயும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கிறது.....

அப்ப அந்த வேலையைப்பாருங்கப்பாாாாாாா

ஏனப்பா பக்கத்து நாட்டுக்கை மூக்கை நுளைக்கிறீங்கள்

1008 பிரச்சனையை விட்டுட்டு 1 பிரச்சனையை பாக்கிறது

:P :P :P :P :P :P :P :P :P

இப்பத்தான் நம்மட லுக்கு விசயத்துக்கு வந்திருக்கிறார்

:wink: :wink: :wink: :wink:

அவங்கட நாட்டில அரசியல் வாதிகள் அடிக்கிறதோ எங்க வைப்பம் என்டு முழசிறாங்கள் அப்பிறம் இதில வேற எங்கட பிரச்சனையா பார்க்க பேறாங்கள் இன்றைய அரசியல் சந்தையில் தமிழிழ பிரச்சனை தான் சூடான வியாபாரம் இதை தவறவிட்டால் அவர்களுக்கு உழைப்பு இல்லை அதனால் தான் இதை துாக்கி பிடிக்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.