Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

Featured Replies

விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

ஜனவரி 06, 2006

சென்னை:

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் இருந்தபோது, இரவு 11 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மிஷன் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பல சோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க டாக்டர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

கல்யாண மண்டப பிரச்சனை:

கோயம்பேட்டில் உள்ள தனது கல்யாண மண்டபத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இடிக்க முடிவு செய்ததால் விஜய்காந்த் மனச்சோர்வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சென்னை கோயம்பேட்டில் கட்டப்படவுள்ள அடுக்கு மேம்பாலத்தின் வரைபட நகலை தனக்கு வழங்க வேண்டும் என்று விஜயகாந்த், மத்திய நெடுஞ்சாலைத் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் 3 அடுக்கு மேம்பாலம் கட்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை (அமைச்சர்: டி.ஆர்.பாலு) முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.

முதலில் திட்டத்திற்குத் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக 41 இடங்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். அதில் விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டப¬ம் ஒன்று.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நில உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை ÷நிõட்டீஸ் அனுப்பியுள்ளது. இந் நிலையில், நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் தங்களது அசல் பத்திரங்களுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி நில உரிமையாளர்கள் 40 பேரும் தங்களது பத்திரங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று, ஆய்வுக்கென நியமிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெகந்நாதனிடம் பத்திரங்களைக் கொடுத்தனர்.

ஆனால் விஜயகாந்த் மட்டும் நேரில் வரவில்லை. மாறாக அவரது சார்பில் 2 வழக்கறிஞர்கள் வந்திருந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், ஆண்டாள் அழகர் கல்யாண மண்டப சொத்து எனது (விஜயகாந்த்) பெயரிலும், எனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ளது. மேம்பாலம் கட்டுவதற்காக எனது திருமண மண்டபத்தின் எந்த இடத்தை கையகப்படுத்தப் போகிறீர்கள் என்பது இதுவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை.

பத்திரிகை விளம்பரம் மூலம் மட்டுமே இது எனக்குத் தெரிய வந்தது. எனக்கு எந்தவித நோட்டீஸும் வரவில்லை. நிலத்தின் உரிமையாளர் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதால் எனது சார்பில் வழக்கறிஞர்களை அனுப்பியுள்ளேன்.

மேம்பாலம் கட்ட எனது நிலத்தின் எந்தப் பகுதியை கையகப்படுத்தப் போகிறீர்கள், கல்யாண மண்டபத்தின் எந்தப் பகுதியை இடிக்கப் போகிறீர்கள் என்ற விவரம் அடங்கிய வரைபடத்தை என்னிடம் கொடுத்தால், அதைப் பரிசீலித்து, எந்தப் பகுதி மேம்பாலம் கட்டும் பகுதியில் வருகிறது என்பதை அறிந்து அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்கிறோம்.

அதேபோல, மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட வரைபடத்தை என்னிடம் கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மனுவுடன் எனது நிலம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட 17 ஆவணங்களின் நகல்களை உங்களின் பரிசீலனைக்காக தாக்கல் செய்துள்ளோம். விரைவில் எங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடிய பகுதியின் வரைபடம் மற்றும் பீல்டு மேப் ஆகியவற்றை தந்தால் நலமாயிருக்கும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

நன்றி : Thatstamil.com

http://thatstamil.indiainfo.com/news/2006/...vijaykanth.html

பாவம் நல்லதொரு தமிழ்பற்றுள்ள மனுசன் .............அந்த மனுசனும் தீவரவாதிகளை பிடிச்சு நல்லாக் களைச்சுப் போச்சு.........

பாவம் நல்லதொரு தமிழ்பற்றுள்ள மனுசன்

ஐயா அவர் அரசியலுக்கு வந்த பிறகு. தமிழ் பற்று போய் ஹிந்திப் பற்று வந்திட்டுது. கட்டாயம் எல்லோரும் ஹிந்தி கற்க வேண்டும் என்ற தோறணையில் கருத்துக்களை அவர் வெளியிட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

ஐயா அவர் அரசியலுக்கு வந்த பிறகு. தமிழ் பற்று போய் ஹிந்திப் பற்று வந்திட்டுது. கட்டாயம் எல்லோரும் ஹிந்தி கற்க வேண்டும் என்ற தோறணையில் கருத்துக்களை அவர் வெளியிட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

அது மட்டும இவர் சொன்னாரம் தான் தமிழ்ழை விட வேற் படங்களில் நடிக்க மாட்டன் எண்டு எல்லாரும் நினைச்சவை சா என்ன ஒரு தமிழ் பற்று எண்டு

இவருக்கு தமிழை விட்டா வேற பாசை தெரியாதம் ஆங்கிலம் கூட அப்படி இப்படியாம்?

:P :P :P :P :P

  • தொடங்கியவர்

ஐயா அவர் அரசியலுக்கு வந்த பிறகு. தமிழ் பற்று போய் ஹிந்திப் பற்று வந்திட்டுது. கட்டாயம் எல்லோரும் ஹிந்தி கற்க வேண்டும் என்ற தோறணையில் கருத்துக்களை அவர் வெளியிட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

அதில் என்ன தவறு , ஹிந்தி கற்று கொள்ள கூடாதுன்னு சொன்ன தலவர்களே ஹிந்திலே நல்லா பேசறாங்க.கடைசியில் மக்கள் முட்டாள் ஆனது தான் மிச்சம்.

அதில் என்ன தவறு , ஹிந்தி கற்று கொள்ள கூடாதுன்னு சொன்ன தலவர்களே ஹிந்திலே நல்லா பேசறாங்க.கடைசியில் மக்கள் முட்டாள் ஆனது தான் மிச்சம்.

நிச்சியமா ராஜா..........இங்சை நிறைய தமிழ்நாட்டு ஆட்களை சந்திச்சிருக்கிறன் தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர வேறை ஒரு மொழியும் அவர்களுக்கு தெரியுதில்லை அதே நேரம் ஒரு மலையாளி 4 5 மொழியிலை பிச்சு உதறுறான் தமிழனுக்கு மலையாளம் கூட தெரியாமல் இருப்பது வேடிக்கை அதே நேரம் இலங்கைதமிழர் மலையாளம் சரளமாக கதைக்கிறார்கள் ஆனபடியால் ஒருவருக்கு மொழிபடிக்க வேணும் எண்ட ஆர்வம் வேண்டும்................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்காக பிறந்த நாளே கொண்டாடாமல் இருக்கிறார்.

விரைவில் குணமடைய வேண்டுகின்றோம் :cry:

  • தொடங்கியவர்

நிச்சியமா ராஜா..........இங்சை நிறைய தமிழ்நாட்டு ஆட்களை சந்திச்சிருக்கிறன் தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர வேறை ஒரு மொழியும் அவர்களுக்கு தெரியுதில்லை அதே நேரம் ஒரு மலையாளி 4 5 மொழியிலை பிச்சு உதறுறான் தமிழனுக்கு மலையாளம் கூட தெரியாமல் இருப்பது வேடிக்கை அதே நேரம் இலங்கைதமிழர் மலையாளம் சரளமாக கதைக்கிறார்கள் ஆனபடியால் ஒருவருக்கு மொழிபடிக்க வேணும் எண்ட ஆர்வம் வேண்டும்

சரியாக சொன்னீர் !! வேறு மொழி ஏது தெரியாமல் தமிழ் நாட்டை தாண்ட பயந்து தமிழ் நாட்டிலே தன் திறமையே முடக்கி கொள்ளும் தமிழ்ர்கள் பல லட்சம்.

தமிழ் போல் இனிதானது வேறில்லை, தமிழ் தவிற பிற மொழி கற்பதில் தவறில்லை.

எங்களுக்காக பிறந்த நாளே கொண்டாடாமல் இருக்கிறார்.

விரைவில் குணமடைய வேண்டுகின்றோம் :cry:

உங்களுக்கு நல்ல மனசு :P

அவருக்கு ஏன் நெஞ்சு வலி ஏற்பட்டது என்று தெரியும?

இதை பார்க்கவும்

http://thatstamil.indiainfo.com/news/2006/...vijaykanth.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இவரும் அவசியல்வாதியாயிட்டாரே அது தான்.....

எனக்கா.. நெஞ்சு வலியா?: விஜயகாந்த்

ஜனவரி 07, 2006

சென்னை:

எனக்கு நெஞ்சு வலி என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று நடிகர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம் இடிபடப் போவதாக வெளியாகி வரும் செய்திகளால் விஜயகாந்த் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நிலத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பான பணிகள் தொடங்கி விட்டன.

இந் நிலையில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் விஜயகாந்த் திடீரென மெட்ராஸ் மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை டாக்டர்களும் உறுதிப்படுத்தினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று பிற்பகலுக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். வீடு திரும்பிய விஜயகாந்த்தைத் தொடர்பு கொண்டு பேசியபோது, எனக்கு நெஞ்சு வலி ஏதும் இல்லை. அப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை.

கட்சி ஆரம்பித்த பின்னர் சுற்றுப்பயணத்தில் உள்ள நான் பொதுவான ஒரு செக்கப்பை செய்து கொண்டால் நல்லது என்று வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் அறிவுரை கூறினர். இதனால்தான் அனைவரிடமும் சொல்லி விட்டுத்தான் மருத்துவனைக்கு சென்றேன்.

அங்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்து பார்த்தனர். எனக்கு ஒன்றும் இல்லை, நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து வீடு திரும்பி விட்டேன். நெஞ்சு வலி வந்திருந்தால் இப்படி சாதாரணமாக பேசிக் கொண்டிருக்க முடியுமா.? எனவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும், நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்.

இதற்கிடையே விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விஜயகாந்த்துக்கு நெஞ்சு வலி ஏதும் இல்லை. அப்படி வெளியான செய்திகளில் உண்மை இல்லை. தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றார். தற்போது வீடு திரும்பி விட்டார். ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 20ம் தேதி முதல் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று கூறியுள்ளார்.

Thatstamil

வினித்

இவருக்கு தமிழை விட்டா வேற பாசை தெரியாதம் ஆங்கிலம் கூட அப்படி இப்படியாம்?

:P :P :P :P :P

:roll: இதில் இப்படி சிரிப்பதற்கு என்ன இருக்கிறது வினித்? அவர் தமிழ்நாட்டில்தானே இருக்கிறார். இங்கிலாந்தில் இல்லையே. ஒரு கதைக்கு நீங்கள் இங்கே (ஜேர்மனி) வந்தால் ஆங்கிலத்தை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. தமிழ்நாட்டில் வசிப்பவருக்கு தமிழ் தெரியாவிட்டால் வெட்கப்படலாமேதவிர ஆங்கிலமோ அல்லது வேறுமொழி தெரியாவிட்டால் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அட நாங்கள் ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்தனாங்களெல்லோ அதனால எங்களுக்கு ஆங்கிலம் தெரியும்..........

யார் என்ன சொன்னாலும் எங்கட அடிமைப்புத்தி விட்டுப்போகாது பாருங்கோ....

ம்..... அடிமை அதுதானே எங்கள் வாழ்கையில் அன்றுதொட்டு இன்றுவரை ஒட்டிக்கொண்டு வருகிறது. ஆங்கிலேயனுக்கோ அல்லது சிங்களவனுக்கோ அடிமையாய் இருப்பதில் தவறில்லை. ஆனால் அதை எதிப்பவனை ஒரு அடிமையே அவமானப்படுத்துவதும் அழகு அல்ல. ஆங்கிலம் தெரியாதது ஒரு அறியாமையே தவிர அது அவமானமல்லவே.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு தமிழை விட்டா வேற பாசை தெரியாதம் ஆங்கிலம் கூட அப்படி இப்படியாம்?

:P :P :P :P :P

:roll: இதில் இப்படி சிரிப்பதற்கு என்ன இருக்கிறது வினித்? அவர் தமிழ்நாட்டில்தானே இருக்கிறார். இங்கிலாந்தில் இல்லையே. ஒரு கதைக்கு நீங்கள் இங்கே (ஜேர்மனி) வந்தால் ஆங்கிலத்தை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. தமிழ்நாட்டில் வசிப்பவருக்கு தமிழ் தெரியாவிட்டால் வெட்கப்படலாமேதவிர ஆங்கிலமோ அல்லது வேறுமொழி தெரியாவிட்டால் அல்ல.

ஆமாம். ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன? தாய்மொழி தெரியாதவனைக் கண்டு தான் சிரிக்க வேண்டும்.

விஜய காந்த் குமணாக ஆண்டவனைப்பிரார்த்திக்கிறேன

நிச்சியமா ராஜா..........இங்சை நிறைய தமிழ்நாட்டு ஆட்களை சந்திச்சிருக்கிறன் தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர வேறை ஒரு மொழியும் அவர்களுக்கு தெரியுதில்லை அதே நேரம் ஒரு மலையாளி 4 5 மொழியிலை பிச்சு உதறுறான் தமிழனுக்கு மலையாளம் கூட தெரியாமல் இருப்பது வேடிக்கை அதே நேரம் இலங்கைதமிழர் மலையாளம் சரளமாக கதைக்கிறார்கள் ஆனபடியால் ஒருவருக்கு மொழிபடிக்க வேணும் எண்ட ஆர்வம் வேண்டும்

சரியாக சொன்னீர் !! வேறு மொழி ஏது தெரியாமல் தமிழ் நாட்டை தாண்ட பயந்து தமிழ் நாட்டிலே தன் திறமையே முடக்கி கொள்ளும் தமிழ்ர்கள் பல லட்சம்.

தமிழ் போல் இனிதானது வேறில்லை, தமிழ் தவிற பிற மொழி கற்பதில் தவறில்லை.

டம்பீ ஐ ஆம் யுவர் சைட்டுமா !!!!

:P யு நோ வை

உப்பிடித்தான் நம்மட அமிர்தலிங்கம் ஐயாவும் சொன்னவராம் தமிழ் படியங்கோ தமிழை மட்டும் படியங்கோ எண்டு பிறகு பாத்தா ஐயாவின்ர குடும்பம் புல்லா லண்டனில நல்லா ஆங்கிலம் படிச்சு நல்ல அகதியாகீட்டினம்

அவையை நம்பின நாங்கள் படிச்ச ஆங்கிலம் என்ன தெரியுமோ

நம்ம லூசு வாத்தி போல

பெஸ்ட் யங்சன் நோ யங்சன்

செக்கன்ட் யங்சன் நோ யங்சன்

தேட் யங்சன் யங்சன் யங்சன்

ஓய் ராஐா உது ஒரு வைட் மான் சந்தி எங்கையிருக்கு எண்டு கேட்டதுக்கு பதில்மாாாா !!

அதணால் தான் சொல்லுறன் மொழிகள் படிப்பதில் தப்பில்லை ஆணால் தன்மொழியையும் தன் இனத்தையும் மறக்காமல் இருக்குமட்டும்

நன்றியங்கோ

:wink: :wink: 8) 8) 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டம்பீ ஐ ஆம் யுவர் சைட்டுமா !!!!

யு நோ வை

இது அதிகம் சின்னப்பு.. இதை தமிழில சொன்னா என்ன?? :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.