Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம்

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வைத்தீஸ்வரா கல்லுரிக்கு முன்பாகவுள்ள அபுபக்கர் வீதியில்வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுட

  • Replies 126
  • Views 24.6k
  • Created
  • Last Reply

:evil: :evil: :evil: எனக்கு என்ன சொல்ல்வென்றே தெரியல..இவற்றை எல்லாம் கேட்க..ரொம்ப கஷ்டமா இருக்கு...வீணாக இளையோர்கள் பலர் பலியாகிறார்கள்.. :cry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூலோகசுந்தரம் :செல்வக்கிருஸ்ன் அவருக்கு

எனது கண்ணீர் அஞ்சலி :cry: :cry: :cry: :cry:

சிங்கள காடையரின் இன அளிப்பின் பசிக்கு இங்கே இன்னும் ஒரு தமிழ்மகன் இரையாக்கப்பட்டுள்ளான்.

அந்த தமிழ் மகனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். :cry: :cry: :cry: :cry: :cry: எத்தனை நாளைக்கு இப்படி நீடிக்கும்??????

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு மாதத்தில் 22 அப்பாவி பொதுமக்கள் படுகொலை:

யாழில் சிறிலங்கா இராணுவத்தால் கடந்த ஒரு மாதத்தில் 22 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதியுடன் யாழ். மாவட்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர் மற்றி வெய்னியொன்பா இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

பளையில் உள்ள யாழ். மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைச் செயலகத்தில் முற்பகல் 11 மணியளவில் இச்சந்திப்பு நடந்தது.

இச்சந்திப்பில் யாழ். மாவட்ட நிலைமைகள் தொடர்பாக கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவரிடம் சி. இளம்பரிதி கூறியதாவது:

- சிறிலங்கா அரசாங்கம் மற்றும் உயர் படை அதிகாரிகளின் ஒப்புதலுடன் சிறிலங்கா படையினர் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினால் முதியோர்இ பெண்கள்இ சிறுவர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் முதலாம் நாள் முதல் ஜனவரி 5 ஆம் நாள் வரை ஒரு மாத காலத்தில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

- சுற்றிவளைப்புத் தேடுதல் என சிறிலங்கா படையினர் மேற்கொள்ளும் தேடுதல்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். ஒரு மாத காலப் பகுதிக்குள் இது போல் 6 சம்பவங்கள் வெளிவந்துள்ளன.

- கைது செய்யப்பட்டு கடத்தப்படும் அப்பாவிப் பொதுமக்கள் குறித்த எதுவிதத் தகவல்களும் வெளிவராது காணாமல் போவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதுவரைக்கும் 45-க்கும் மேற்பட்டோர் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

- படையினரது அடாவடித்தனங்களில் சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர்.

- சுதந்திரமான போக்குவரத்துக்கு இடர் ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா இராணுவ நோக்கில் வீதித் தடைகளை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் வெள்ளங்கள் நிறைந்த சுற்றுவழி வீதிகளை நாடவேண்டியுள்ளது. வறணிப்பகுதியில் கொடிகாகம்- பருத்தித்துறை வீதி மக்கள் இப்படியான வெள்ளம் சூழ்ந்த வழிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

- வலி மேற்குஇ வடமராட்சி வடக்குப் பிரதேசங்களில் கடற்றொழில் செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். இது பற்றி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இதனால் பல மீனவக் குடும்பங்கள் பசி பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.

- பொதுமக்களைக் கொண்டு வேலி மரங்களையும்இ பனைகளையும் படையினர் கட்டாயமாகத் தறிக்க உத்தரவிட்டு வருகின்றனர். அடையாள அட்டைகள்இ கையடக்கத் தொலைபேசிகள்இ உடைமைகள் ஆகியவையும் மக்களிடமிருந்து சிறிலங்கா படையினரால் பறிக்கப்பட்டுள்ளன.

- வர்த்தக நிறுவனங்களின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

- பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள்இ துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் மக்களின் வீடுகள் சோதனையிடப்பட்டு அவர்கள் மீது வீண்பழி சுமத்தும் நோக்குடன் கைக் குண்டுகள்இ ஆயுதங்கள் இராணுவத்தால் வைக்கப்பட்டு எடுக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதால் மக்கள் மரண பீதியுடன் வாழ்கின்றனர்.

- கூட்டுறவுத் துறையினரது களஞ்சியங்கள் உடைக்கப்பட்டு தளபாடங்கள் எரிக்கப்படுகின்றன.

இத்தகைய அத்துமீறல்கள் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 1.2 விதிஇ 2.1இ 2.2இ 2.3இ 2.4இ 2.5இ 2.11இ 2.12இ 2.13 விதிகள் முற்றாக மீறப்பட்டுள்ளன.

இந்தச் செயற்பாடுகள் போர் நிறுத்த உடன்படிக்கை மீதும்இ சமாதான செயற்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் நம்பிக்கையை இழக்க வைத்துள்ளதால் யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமடைந்துஇ மரண பீதிக்குள் தள்ளப்பட்டுனர்.

படையினரது மனித உரிமை மீறல் செயற்பாடுகளை அனைத்துலகத்துக்கும் வெளிப்படுத்துவது அவசியம். படையினரது அத்துமீறல்கள் நிறுத்தப்பட்டு மக்களது இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சி. இளம்பரிதி.

வலி. மேற்குஇ வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள படையினரது தடைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன என்றும் தமது தலைமைப் பீடத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றுள்ளதாகவும் கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர் மற்றி கூறினார்.

இச்சந்திப்பின் போது கடல் கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர் லாஸ் பிளேய்மன்இ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட ஊடக இணைப்பாளர் இ.இமையவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்: புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கத்தில் இளம் சமுதாயம் அழிந்து போய்க்கொண்டு இருக்க,, மறுபக்கத்தில் தந்தை தாய்களை இழந்து குடும்பங்கள் அநாதைகளாக போய்க்கொண்டு இருக்கிறது,, இதற்கு முடிவு வெகு விரைவில் எட்டப்படாவின் அதாவது உலக நாடுகளின் கண்டனங்கள், எச்சரிக்கைகளை கேட்டுக்கொண்டு இருந்தால் நிலைமை மோசமாகிச்செல்லும்,,,, சிங்களப்பிரதேசங்களில் சிங்கள மக்கள் என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்? யாழ்ப்பாணகுடா நாட்டிலேயே இந்த நிலை என்றால் மட்டக்களப்பு அம்பாறை வவுனியா மன்னார் பிரதேசங்களில் நிலை அதிகமாக இருக்கும், :roll: :? :idea: :idea:

அப்பாவி பொதூமக்களை சிங்கள் பேரினவாதிகள் கொன்றொளிப்பதை ஐக்கிய நாடுகள் கண்மூடி பார்த்துக்கொண்டிருப்பதா??? இதுதான் நீதியா???

தகப்பனுக்கும் மகளுக்கும் சாவகச்சேரியில் வாள்வெட்டு

சாவகச்சேரியில் நேற்று சனிக்கிழமை தகப்பனும் மகளும் வாள் வெட்டுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாவகச்சேரி தபாற் கந்தோர் வீதியில் உள்ள பொலிசன் கப்பலோட்டிய தமிழன் (வயது 47) அவரது மகள் செல்வி க.பிறேமிளா (வயது 18) ஆகிய இருவருமே தலையில் வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் எடுத்து வரப்பட்டுள்ளார்கள்.

மனைவி க.சந்திரமதி அடி காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நண்பகல் 2 மணியளவில் முகத்தை இராணுவத்தினர் போன்று துண்டினால் மறைத்துக் கட்டிக் கொண்டு வந்தவர்களே இவ்வாறு தங்களை வாளினால் வெட்டியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thinakural

ஞாயிறு 08-01-2006 17:25 மணி தமிழீழம் [நிருபர் தவச்செல்வன்]

பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் சுட்டுக்கொலை.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர் இன்று பிற்பகல் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லபட்டடுள்ளார்.

சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இவருடைய வெதுப்பகத்திற்குள் பிரவேசித்த ஆயுதாரிகள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

வெதுப்பக உரிமையாளர் பெயர் விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.தாக்குதலை சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களே நடத்தியிருப்தாக சந்தேகிக்கப்படுகிறது.

இவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணமும் இதுவரை அறியமுடியவில்லை.

பதிவு

பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவ உளவாளி சுட்டுக்கொலை

யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவ உளவாளியான சின்னராசா இராசையா (வயது 47) இன்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.

பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளரான சின்னராசா இராசையா மீது வெதுப்பகத்திற்குள் வலுவில் உள்நுழைந்த அடையாளம் தெரியாதவர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இந்த வெதுப்பகம், சிறிலங்கா இராணுவத்தின் 52-4 ஆம் படையணியின் தலைமையகத்துக்கு 100 மீற்றர் அருகாமையிலும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது.

சின்னரா இராசையாவின் உடலை மந்திகையில் உள்ள பருத்தித்துறை அரச மருத்துவமனைக்கு சிறிலங்கா காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.

கடந்த 2 நாளில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்டுள்ள 3 ஆவது துப்பாக்கிச் சூடு இது. கடந்த வியாழக்கிழமை இரவு ஈ.பி.டி.பி. ஆதரவாளரான மதன், சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஐயாத்துரை பாஸ்கரன் ஆகியோர் பருத்தித்துறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன் 11-01-2006 16:11 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

தென்மராட்சி மட்டுவிலில் இளம் பெண் சுட்டுக்கொலை.

இன்று நன்பகல் 1.15 மணியளவில் இனம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு சமுர்த்திஅபிவிருத்த உத்தியோகத்தர் ஒருவர் பலியானார். சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரியாக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

மட்டுவில் தெற்கு தோப்பு என்னும் இடத்தைச் சேர்ந்த செல்வி. கணபதிப்பிள்ளை பவளராணி வயது 32 என்பவரே பலியானவராவார். இவரின் வீட்டிற்குச் சென்ற இனம் தெரியாதவர்கள் இவரை அழைத்துக் சென்று கதைத்து விட்டு மோட்டார் சையிக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கு அருகில் இவரைச் சுட்டுவிட்டு ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவருடைய துப்பாக்கிப் பிரயோகத்தியகான காரணம் தெரியவில்லை. இவர் கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி அமைப்பினருடன் இயங்கியதன் மூலம் குறிப்பிட்ட வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பிட்ட இடத்திற்கு இராணுவத்தினரும் சாவகச்சேரிப் பொலிசாரும் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன் சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிக்கும் பொலிசாரினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பார்வையிட்ட நீதிபதி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வையித்திய சாலையில் ஒப்படைக்கும் படி பணித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

புதன் 11-01-2006 15:57 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

இராணுவப் புலனாய்வாளரின் துப்பாகிச் சூட்டிற்கு ஒருவர் பலி.

puthurdethi1101061.jpg

புத்தூர் பகுதியில் இரவு நேரம் வீட்டிற்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் காலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பற்றையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சூட்டுக்காயங்களுடன் மீட்க்கப்பட்டவர் புத்தூர் சரஸ்வதி சனசமூகநிலையப் பகுதியைச் சேர்ந்த தம்பு நடேசு வயது 50 என்பவரே சிறுப்பிட்டி மடத்தடியில் உள்ள பற்றையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டவராவார்.

நேற்று இரவு 9.00 மணியளவில் குறிப்பிட்டவரின் வீட்டிற்குச் சென்ற ஆயுததாரிகளான இராணுவப் புலனாய்வாளர்கள் இவரை விசாரனை செய்து விட்டு விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள.; இரவு குறிப்பிட்டவர் வீட்டிற்குத் திரும்பாததைத் தொடர்ந்து விசாரனை செய்த போது காலையில் இவரின் சடலம் கிடப்பதாகக் தெரியவந்ததைத் தொடர்ந்து அச்சுவேலிப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொலிசார் சடலம் கிடந்த இடத்திற்கு மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஐpனி இளங்கோவனுடன் சென்றனர் சடலத்ரதப் பார்வையிட்ட மாவட்ட நீதிபதி மரணவிசாரனையை மேற் கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனாவையித்திய சாலையில் ஒப்படைக்க கட்டளையிட்டதைத் தொடர்ந்து சடலம் வையித்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

இதற்கு என்று தான் ஒரு முடிவுவருமோ ? :oops: :oops: :oops:

  • 2 weeks later...

அல்வாய் மாலுசந்தியில் விடுதலைப்புலி ஆதரவாளர் என்று ஒருவர் ஈ.பி.டிபி தேசவிரோதிகளால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

13 வயது மாணவியையும் கடத்தியதாக தகவல்.

பருத்தித்துறை மாயக்கையில் ஒருவர் சுட்டுக்கொலை

[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 04:25 ஈழம்] [ந.ரகுராம்]

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி மாயக்கையில் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த தாமோதிரம்பிள்ளை சுந்தரலிங்கம் (வயது 53) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் யாழ். மருத்துவமனையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். துன்னாலையில் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப இயக்குநர் இளையதம்பி இராமகிருஸ்ணன் (வயது 61) நேற்று சனிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை கரவெட்டி தாமரைக்குளம் பகுதியில் இராமகிருஸ்ணன் வீட்டுக்குள் நேற்று இரவு 10.50 மணியளவில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் இந்தப் படுகொலையை செய்துள்ளனர்.

இராமகிருஸ்ணனை வீட்டை விட்டு வெளியே வருமாறு ஆயுதக்குழுவினர் அழைத்துள்ளனர். ஆனால் இராமகிருஸ்ணன் மறுத்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த ஆயுதக் குழுவினர் கைத்துப்பாக்கி மூலம் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர்.

யாழ்ப்பாண அரச அலுவலகத்தி தொழிநுட்ப இயக்குநராக பணியாற்றி வந்த இராமகிருஸ்ணன் அண்மையில் ஓய்வு பெற்றவராவார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்துள்ள 3 ஆவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

இராணுவ புலனாய்வாளர்களால் முன்னை நாள் அரச உத்தியோகத்தர் துன்னாலையில் சுட்டுக்கொலை.

முன்னைநாள் அரச மாவட்ட செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கோரமான முறையில் இன்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முன்னை நாள் அரச செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான இளையதம்பி இராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு அரச புலனாய்வுப் பிரிவினரால் கோரத்தனமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராகச் செயற்பட்டு வந்த இவர் தினமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று வருவதால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பின்தொடரப்பட்டு வந்துள்ளார். காட்லிக் கல்லூரியின் முன்னைநான் மாணவர் தலைவனும் பிரித்தானியாவின் பிரபல சர்வதேச தொலைபேசி அட்டை நிறுவனமொன்றின் பிரதம பொறியிலாளருமாகக் கடமையாற்றும் கடம்பன் (மொறட்டுவ பல்கலைக்களகத்தில் 1993 ம் ஆண்டு பொறியில் பீடமாணவனாக இணைந்தவர் 1992 ஆண்டு காட்லி உயர்தர மாணவன்) மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மருத்துவர் கேசவன் (காட்லிக் கல்லூரியின் 1991 ஆண்டு உயர்தர மாணவர் பிரிவு) ஆகியோரின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நிதர்சனம்

திருமலையில் சுடரொளி பத்திரிகையின் நிருபர் சுட்டுக்கொலை

திருகோணமலையில் சுடரொளி பத்திரிகையின் நிருபரான சுப்ரமணியம் சுகிர்தராஜன் (வயது 35) இன்று செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  • 2 months later...

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் தலைவர் வ.விக்னேஸ்வரன் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் எழுச்சிகள் பலவற்றிற்கு மூல கர்த்தாவாக திகழ்ந்த திரு விக்னேஸ்வரன் அவர்களின் இழப்பு தமிழ் மக்களிற்கு பேரிழப்பாகும்.

அன்னாருக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் திரு.வ. விக்னேஸ்வரன் அவர்கள் இன்று காலை 9.20 மணியளவில் திருகோணமலை பிரதான வீதியில் உள்ள மக்கள் வங்கி கிளைக்கு அருகில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

(மேலதிக விபரம் இணைப்பு)

வழமைபோல தனது அலுவலக கடமைக்கு சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் வந்தவர்கள் இவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடுகளை நடத்தியுள்ளனர்.

தலையில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் இவர் பணிபுரிந்த வங்கியான திருகோணமலை இலங்கை வங்கியின் நுழை வாயிலிலேயே இவர் உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்துள்ளது. அந்த வீதியில் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 100 மீட்டர் தொலை சிறீலங்கா காவல்துறை வீதித்தடையுடனான சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. இந்தச் சோதனைச் சாவடியிலிருந்து 50 மீட்டர்கள் தொலைவில் சிறீலங்கா கடற்படையின் சோதனைச் சாவடியும், அடுத்த 50 மீட்டர் து}ரத்தில் துறைமுக காவல்துறையினரின் சோதனைச் சாவடியும் உள்ளது. இம் மூன்று சோதனைச் சாவடிகள் ஊடகவும் கொலையாளிகள் இலகுவாகத் தப்பிச் சென்றதி லிருந்து இக்கொலையில் சிறீலங்கா படைகளின் முழுமையான ஒத்துழைப்புடன் புலனாய்வுப் பிரிவினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுகிறது.

51 அகவையுடைய திரு. விக்னேஸ்வரன் அவர்கள், யாழ். நயினாதீவை பிறப்பிடமாகக் கெண்டவர். கலைப்பட்டதாரியான இவர் திருமண பந்தத்தின் மூலம் திருமலையில் குடியேறினார். தற்போது அன்புவழி புரத்தில் வசித்து வந்த இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளிற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த விக்னேஸ்வரன் அவர்கள் திருமலை தமிழ் மக்களின் மத்தியில் தமிழ் தேசியத்திற்காக உழைத்து வந்தவர்.

கடந்த டிசப்பரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இடத்திற்கு திரு.விக்னேஸ்வரன் அவர்களே நியமிக்கப்பட இருந்த நிலையில், இன்று சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

செய்திகள்: சங்கிதி

  • கருத்துக்கள உறவுகள்

அன்னார் திருகோணமலையில் புத்தர் சிலை தொடர்பாகவும், தமிழ்மக்களுக்கு நடக்கும் அட்டூழியங்கள் தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்தவர். மீண்டும் ஒரு முறை சிங்கள தீவிரவாதம் தமிழ்மக்களின் குரல்வளையை நசுக்க முயற்சிக்கித்துள்ளது.

தேசப்பற்றாளர்கள் அவதானமாகத் திரியுங்கள். சிங்கள அரச பயங்கரம் குள்ளநரித்தனமானது.

அன்னார் விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருமலை இலங்கை வங்கியின் பிரதான கிளைக்குள் அவர் நுழைந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

திருகோணமலை துறைமுக காவல்நிலையம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இடையில் உள்ள துறைமுக உள்வீதியில் இந்த வங்கி அமைந்துள்ளது. இது சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாகும்.

இரண்டு இராணுவ சோதனைச் சாவடிகளுக்கு இடையிலும் திருமலை துறைமுகத்துக்கு எதிரே உள்ள கடற்படை முகாமுக்கு அருகாமையிலும் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு தேசியப் பட்டியலுடாக விக்கினேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினராக இன்று அறிவிக்க இருந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விக்கினேஸ்வரன் படுகொலையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் திடீரெனத் திணிக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றக் கோரும் போராட்டங்களை கடந்த ஆண்டு விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை முனைப்புடன் முன்னெடுத்து நடத்தியது.

அனைத்து தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான குரலை உரத்து முழக்கமிட்டவர் விக்கினேஸ்வரன்.

-புதினம்

விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலி

ம்ம்....... நடக்க போகுது என்று நினைத்தது

நடந்து விட்டுது- சிங்களவனுக்கு - மத்தியில நிண்டு கொண்டு - உரிமை குரல் எழுப்பினால் சாவுதான் பரிசு-

என்று ஆகி

குமார் பொன்னம்பலம் - சிவராம்- ஜோசப்- வரிசையில் - இப்போ விக்னேஸ்வரன் -

சில நிமிடம் முன்னாலதான் - ஒரு `'அறிவு ஜீவி ' கூட வாக்குவாத பட்டேன் இந்த களத்தில - எங்க இனம் அடிமை பட்டதில்ல என்று சொன்னார்-இது எப்பிடி ஆச்சு?

மக்களை நேசித்த - விக்னேஸ்வரன் ஐயாவுக்கு - கண்ணீர் அஞ்சலிகள்! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.