Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக சட்டசபைத் தீர்மானம் தமிழர்களுக்கே ஆபத்து-புலம்புகிறார் கருணா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரசுரித்தவர்: NILAA June 10, 2011

கள நிலைமைகளை அறியாமல் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு எழுந்தமானமாக எடுத்துள்ளமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களையே பாதிக்கும்.

உண்மை நிலையை அறிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக பிரதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழகத்தின் முதல்வராக மீண்டும் செல்வி ஜெயலலிதா அம்மையார் பதவியேற்றுக் கொண்டமையை இட்டு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறிய பிரதியமைச்சர் முரளிதரன் இலங்கைக்கு பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவதை விடுத்து வடக்கு கிழக்கில் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு வீடமைப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் ஏற்கனவே யுத்தத்தின் கொடுமையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வீடு வாசல்களை இழந்து நிற்கும் உறவுகளுக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும்.

கள நிலைமைகளை அறியாமல் அறிந்துகொண்ட சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வாறான ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதால் தமிழ் மக்கள் இன்னமும் பாதிக்கப்பட்டு விடுவார்கள்.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக அக்கறை இருப்பது கண்டு நான் வரவேற்பதுடன் நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.

இவ்வாறான ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு தவறான கருத்துப் பரிமாற்றமும் ஒரு காரணம். இந்த நிலையில் தமிழக முதல்வரின் உயர் மட்டக் குழுவொன்று இலங்கை வரும் பட்சத்தில் அவர்களை மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் தமிழ் மக்களுடன் வாழ்ந்தவன் என்ற வகையில் களத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவன் என்ற வகையிலும் சில உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியவனாகவும் இருக்கின்றேன். நேரடியாக தமிழ் மக்களின் வாழ்விடங்களை அவர்களுக்கு காண்பிக்கவும் முடியும்.

எனவே தமிழக முதல்வர் அவரது பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்றை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

source:Mykathiravan.

கெஹலிய அந்தத் தீர்மானம் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்கிறது. இந்த வாலை ஆட்டும் ஜந்து ஏன் குதிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

<_< ஒன்றைக் கவனித்தீர்களா?? தான் மக்களின் விடுதலைக்காகக் களத்தில் நின்று போராடினவராம்!!!!! அப்ப, மக்கள் விடுதலை கிடைத்து விட்டதா?? யாரிடமிருந்து விடுதலை??

என்னதான் மறைத்தாலும் மனசாட்சி என்று இருக்கல்லவா?? அது உண்மையை ஒருநாள் சொல்லியே தீரும்.

"சிங்கள இராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட ஒட்டுக்குழுக்களான கருணா, டக்ளஸ் ஆகியோர் புலிகளின் சீருடையில் வந்து எமது மக்களை சுட்டுக் கொன்ற குற்றங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது" - சிறீதரன் எம்.பி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக சட்டசபைத் தீர்மானம் தமிழர்களுக்கே ஆபத்து-புலம்புகிறார் கருணா!

இப்ப ஆருக்கும் ஒருசதத்துக்குமே உதவாமல் அவளவையின்ரை மடியிலை சுகம் காணுற உனக்கு......புலம்பல் தான் தஞ்சம்

இப்பவும் கருணாவை நினைச்சு.... இஞ்சை கிளறிகிண்டிக்கொண்டிருக்கிறவை மன்னிக்கோணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எசமானிடம் மூன்று நாலு நாய்கள் இருந்தால் அவற்றில் கூட குரைச்சு தான்தான் பெரிய விசுவாசியாக காட்ட முயல்வது போல் இவர்களிலும் கருணா..ய்,பிள்ளையான் ..ய்,டக்ளசு ..ய் இப்படி ய்.. ல யார் இசமான் விசுவாசி பார்த்தால் இப்போது கருநாய் ரொம்ப விசுவாசம்.

Edited by தமிழ் அரசு

akootha வின் கூற்றுக்கு:...

இது முரசுமொட்டையில் தை மாதத்தின் இறுதி வாரத்தில் நடந்தது....... அதில் நான்கு பொது மக்கள் புலிகள் சீருடை அணிந்த கருணாவின் ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்......

ஜெயசிக்குறுவில் சீறிப் பாய்ந்து சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜெயந்தன் படையணியின் ராணுவ முகாமை அழிக்க ரசாயன குண்டுகளை பாவிக்க திட்டமிட்டிருந்தது சிங்கள ராணுவம்.... இதனை முன்பே அறிந்த புலிகள் குறுகிய காலத்திற்குள் பின்வான்கியிருந்தார்கள்....

புலிகளை காடுகளுக்குள் முடக்கி ரசாயன குண்டுகளை பாவித்து சத்தமில்லாமல் ஒட்டுமொத்தமாக பஸ்பமாக்கிவிடவே சிங்கள ராணுவம் முயன்றது.... புலிகள் அதற்கு இடம் கொடுக்கவில்லை..... இருந்தாலும் ஆனந்தபுரச் சமரிலே பாவித்திருந்தார்கள்..... இந்திய தேர்தல் பிரச்சாரத்திட்கு முன்பே போரை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது..... புலிகள் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் முடங்கியதட்கும் காடுகளில் நிலை கொள்ளாமைக்கும் சிங்களத்தின் ரசாயன பாவனைகளே காரணம்.... புலிகள் முள்ளிவாய்க்காலில் முடங்கிய பின்பு, அவர்களால் மிதி வெடியினால் உருவாக்கப் பட்ட ஐந்து சுற்று பாதுகாப்பு வலயத்தினால் போர் ஆகஸ்ட் வரை நீடிக்கும் என ராணுவத் தலைமையால் கணிக்கப் பட்டது....... இரட்டை வாய்க்கால் ஊடறுப்பு போன்று இதுவும் உள்ளிருந்த சில கருணாவின் கூட்டத்தால் காட்டிக்கொடுப்பிட்கு உள்ளானது.....

Edited by Rudran

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கை கிழக்கில் நடைபெற்றபோது அவனின் பின்னால் சென்ற பல போராளிகளை புலிகள் பின்னர் உள்வாங்கிக் கொண்டார்களாம். இவ்வாறு உள்வாங்கப்பட்டவர்களில் பலர் அவனுக்கு தொடர்ந்தும் விசுவாசமாக இருந்திருக்கிறார்கள். இவர்கள்மூலம்தான் பெருமளவிலான உள்வீட்டுச் சதிகள் அரங்கேறியுள்ளன. அத்துடன் மாத்தையா காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், " மாத்தையா குறூப்" எனும்பெயரில் தொடர்ந்தும் ராணுவத்தின் ஆதரவுடன் இயங்கி வந்திருக்கிறார்கள். இவர்கள் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் சிங்கள ராணுவத்தின் துணை ராணுவக்குழுக்களாக இயங்கி வந்திருக்கிறார்கள். யாழ்க்குடாவில் கடந்த வருட பிற்பகுதியிலும், இவ்வருட ஆரம்பத்திலும் நடந்த படுகொலைகள் மற்றும் கடத்தல்களில் இவர்களது கைவரிசை தெரியவந்தது. புலிகளுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளில் பெருமளவில் பாவிக்கப்பட்ட இந்தப் பச்சோந்திகளே ஊடுருவல் அணியில் இடம்பெற்றிருந்தார்கள். பலாலிப் பகுதியில் தமிழ்பேசும் குடும்பங்களைச் சிலர் அண்மையில் பார்த்திருக்கிறார்கள். ராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வசிக்கும் இந்த தமிழ்பேசும் குடும்பங்களின் இருக்கை பற்றி முன்னர் பரவலாகச் செய்திகள் வந்ததும் நினைவுகூறத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் சொல்லை யார் கேட்கப்போகிறார்கள்? மக்களுக்காக போராடியவர் அதே மக்களை காட்டிக்கொடுத்ததை மற்ந்து விட்டாரா?. ஆனால் மக்கள் மறக்கத் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரின் 'கருணா' என்ற வாள், கூர்மையையும் பள பளப்பையும் வெகு விரைவாக இழந்து கொண்டு வருகின்றது!

வெகு விரைவில் இது நிரந்தரமாக, உறையில் போடப் பட்டு விடும்!!!

மானங்கெட்டவனின் செய்தியை யாழில் இணைப்பதனால் யாழின் புனிதத்தன்மை கெட்டுவிடும்.

மன்னிக்கவும் உறவுகளே, ஆத்திரம் அடக்கமுடியவில்லை ............................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.