Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ட மீன் தொட்டி..... பாகம் 2.. புதிய முயற்சி.. பக்கம் 6 இல் இருந்து.....

Featured Replies

எண்ட மீன் தொட்டி வீடியோ.....

6'x 2'x 2'... 700 லீட்டர்.

6 தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்..

4x 250w உலோக வாயு லைட்டுக்கள்..

2x ஊதா கதிர்வீச்சு தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்..

அலை உருவாக்கும் பம்புகள்..

ஒக்ஸிஜென் பம்புகள்.

கார்பன் வடிகட்டும் இயந்திரம்.

காலநிலை கட்டுப்படுத்தும் இயந்திரங்கள் ( அமசொன் காலநிலை)

[/media]

மிக மிக அரிதான மீன்கள்... உங்களுக்கு சமமான இன்ட்ரெஸ்ட் இல்லாதபட்ச்சத்தில். மீன்களை பற்றி சொல்வதில் அர்த்தமில்லை.. ஆனாலும் ஒரு உதாரணத்துக்கு சொன்னா.. பச்சையும் மஞ்சலும் கலந்த கருப்பு வரிகளுடன் கானப்படும் மீன்.. இது கிழக்கு அமெரிக்காவில் டேபே நதியில் குறிப்பிட்ட அடர்ந்த்த காடும் நதியும் சார்ந்த இடத்தை சேர்ந்தது.. இதை அங்குள்ள காட்டுவாசிகளினால் புடிக்கப்பட்டு விமானம் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு.. சும்மார் 2 மாதங்கள் தனியாக வைத்து இயற்கை முறிக்கப்பட்டு எனக்கு விக்கப்பட்டது... 200 பவுனுக்கு....

Edited by Panangkai

  • Replies 159
  • Views 19.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீன்களும் அழகு மீன் தொட்டியும் அழகு.

மீன்களைப்பார்த்துக்கொண்டிருந்தால் மனதில் அப்படி சந்தோசம் நிலவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீன் தொட்டி நல்லாருக்கு.. பின்னணி இசையைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்..! :D

  • தொடங்கியவர்

ஓம்.. இசையை மாத்தவேணும்.... :lol:

மீன்கள் மிக அருமையாக உள்ளன.

சிறிய வயதிலேயே மீன் வளர்ப்பில் ஈடுபாடு. ஊரில் விபரம் அறியாத வயதில் ஆற்றில் பிடித்த மீன் குஞ்சுகளையும் உறவினர் தந்த தங்க மீன்களையும் கிணற்றில் வளர்த்துள்ளேன்.

தங்க மீன்களை ஆற்று மீன் பிடித்து சாப்பிட்டு விட்டது.

இங்கு வீட்டு தோட்டத்தில் சிறு தடாகம் (pond) கட்டி 30 மீன்கள் மட்டில் வளர்க்கிறேன்.

வீட்டிற்குள் பெரிய தொட்டி கட்டி உலர்வலய மீன்கள் வளர்க்க ஆசை. நிறைய நேரமும் பணமும் தேவைப்படும்.

மீன் வளர்ப்பது மனதுக்கு ஆறுதலை (relaxation) தரும்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.. இசையை மாத்தவேணும்.... :lol:

இசையை மாத்தவேணுமா.. மொத்த வேணுமா? :lol:

மீன்கள் மிக அருமையாக உள்ளன.

சிறிய வயதிலேயே மீன் வளர்ப்பில் ஈடுபாடு. ஊரில் விபரம் அறியாத வயதில் ஆற்றில் பிடித்த மீன் குஞ்சுகளையும் உறவினர் தந்த தங்க மீன்களையும் கிணற்றில் வளர்த்துள்ளேன். இங்கு வீட்டு தோட்டத்தில் சிறு தடாகம் (pond) கட்டி 30 மீன்கள் மட்டில் வளர்க்கிறேன்.

வீட்டிற்குள் பெரிய தொட்டி கட்டி உலர்வலய மீன்கள் வளர்க்க ஆசை. நிறைய நேரமும் பணமும் தேவைப்படும்.

மீன் வளர்ப்பது மனதுக்கு ஆறுதலை (relaxation) தரும்.

தப்பிலி..

குளிர்காலத்துக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய மீன்வகைகளையா வளர்க்கிறீர்கள்? எப்படிப் பராமரிக்கிறீர்கள்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அழகான மீன் தொட்டி. நல்ல, கொழுத்த டிஸ்கஸ், ஸ்காலரை மீன் எல்லாம் நீந்துது.

முன்பு நானும்.... மீன் தொட்டிகள் பல வைத்திருந்தேன்... யாழில் இணைந்த பின்பு... அதனை பராமரிக்க நேரம் கிடைக்கவில்லை.

உங்களையே... பார்த்துக் கொண்டு இருக்கலாம் போலை கிடக்குது. :rolleyes::D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

200 பவுனுக்கு.... என்றால் நல்ல மலிவு.

மீன் வளர்ப்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான மீன் தொட்டி. நல்ல, கொழுத்த டிஸ்கஸ் மீன் எல்லாம் நீந்துது.

முன்பு நானும்.... மீன் தொட்டிகள் பல வைத்திருந்தேன்... யாழில் இணைந்த பின்பு... அதனை பராமரிக்க நேரம் கிடைக்கவில்லை.

உங்களையே... பார்த்துக் கொண்டு இருக்கலாம் போலை கிடக்குது. :rolleyes::D

தமிழ்சிறீ மனதிற்கு இதமான பொழுதுபோக்கை விட்டிட்டு பிரசர் ஏறுகிற விடயத்தை பார்த்துக் கொண்டிருக்க நல்லா இருக்கா?

சரியான இயந்திரங்கள் இருக்கும் பட்ச்சத்தில் சாதரனமா 6 மாதங்களின் பின் பெரிசா பராமரிப்புகள் தேவயில்லை.. திரும்ப தொடங்கலாமே..?

  • கருத்துக்கள உறவுகள்

அழகான மீன் தொட்டி. நல்ல, கொழுத்த டிஸ்கஸ் மீன் எல்லாம் நீந்துது.

முன்பு நானும்.... மீன் தொட்டிகள் பல வைத்திருந்தேன்... யாழில் இணைந்த பின்பு... அதனை பராமரிக்க நேரம் கிடைக்கவில்லை.

உங்களையே... பார்த்துக் கொண்டு இருக்கலாம் போலை கிடக்குது. :rolleyes::D

யாரை

  • தொடங்கியவர்

மீன் வளர்ப்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

மீன் வளர்ப்பு சிறு வயதில் இருந்து வரவேணும்.. நடுவில் தொடங்கினால்.. சரியான அறிவுறைகள் தேடிக்கொள்ளுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாத்தனும்

  • தொடங்கியவர்

மீன்கள் மிக அருமையாக உள்ளன.

சிறிய வயதிலேயே மீன் வளர்ப்பில் ஈடுபாடு. ஊரில் விபரம் அறியாத வயதில் ஆற்றில் பிடித்த மீன் குஞ்சுகளையும் உறவினர் தந்த தங்க மீன்களையும் கிணற்றில் வளர்த்துள்ளேன்.

தங்க மீன்களை ஆற்று மீன் பிடித்து சாப்பிட்டு விட்டது.

இங்கு வீட்டு தோட்டத்தில் சிறு தடாகம் (pond) கட்டி 30 மீன்கள் மட்டில் வளர்க்கிறேன்.

வீட்டிற்குள் பெரிய தொட்டி கட்டி உலர்வலய மீன்கள் வளர்க்க ஆசை. நிறைய நேரமும் பணமும் தேவைப்படும்.

மீன் வளர்ப்பது மனதுக்கு ஆறுதலை (relaxation) தரும்.

அங்கு நாம் குளத்துமீன் எனப்படும் ஸ்னேக் கெட் மீன்கள் இங்கு அனுபவமுள்ளவர்களுக்கு மட்டும் ரக மீன்கள்.. தொடங்குவது செலவுதான்.. ஆனால் ஒருமுறைதான் செலவு..

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாத்தனும்

கிழமைக்கு ஒருமுறை கால்வாசி தண்ணீர் மாற்றினால் போதும்..! :unsure:

  • தொடங்கியவர்

தண்ணீர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாத்தனும்

ஒவ்வொரு ஞாயிரும்.. 25% மாத்துவேன்... சனி இரவு புதிய தண்னி கெமிகள்களினால் சுத்திகரிக்கப்பட்டு.. அமசொன் ஆத்து மண்டல் களி கலந்து.. கீட்டர் போட்டு இரவு முழுக்க குமிழ் அடிக்க விடுவேன்.. நாயிரு காலை தண்ணியை டெஸ்ட் பண்ணி விட்டு மாத்திவிடுவேன்..

அழகான மீன் தொட்டி. நல்ல, கொழுத்த டிஸ்கஸ்,எல்லாம் நீந்துது.

முன்பு நானும்.... மீன் தொட்டிகள் பல வைத்திருந்தேன்... யாழில் இணைந்த பின்பு... அதனை பராமரிக்க நேரம் கிடைக்கவில்லை.

உங்களையே... பார்த்துக் கொண்டு இருக்கலாம் போலை கிடக்குது. :rolleyes::D

ஸ்காலரை மீன் ??

தப்பிலி..

குளிர்காலத்துக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய மீன்வகைகளையா வளர்க்கிறீர்கள்? எப்படிப் பராமரிக்கிறீர்கள்? :unsure:

தங்க மீன்கள் (gold fish) நல்ல குளிருக்கும் தாக்குப் பிடிக்கும். (தடாகத்தின் ஆழத்தைப் பொறுத்தது - குறைந்தது 60 cm (முழங்கை அளவு தண்ணி) ஆழம் தேவை. ஆழம் கூடினால் குளிர் காலங்களில் அடியில் சென்று உயிவாழும்.

ஐப்பசியிலிருந்து பங்குனி ஆரம்பம் மட்டும் உணவுகள் கொடுக்கக் கூடாது. குளிர்காலங்களில் உறங்கு நிலைக்கு சென்று விடும். தங்க மீன்கள் cold blooded ஆகையால் குளிர் காலத்தில் உண்ணும் உணவுகள் சமீபாடடையாமல் இருந்து பின்பு அழுகி நோய்கள் வரும். அதிகமாக இறந்து விடும். குளிர் காலங்களில் கொடுப்பதற்கென்றே விசேடமான weed grain இல் தயாரிக்கப்பட்ட உணவுகள் உண்டு. அவை தேவையில்லை.

இங்கு சென்ற குளிர்காலத்தில் - 10 இற்கு சென்றது. வடக்கு இங்கிலாந்தில் இன்னும் குளிர். அங்கும் மீன் வளர்க்கிறார்கள். பனிஉறை காலங்களில் சில பந்துகளை (football , teniss ball) தடாகத்தில் மிதக்க விட்டால் சிறு ஒட்டைகளிநூடாக சுவாசித்துக் கொள்ளும்.

கோடை காலங்களில் கட்டாயம் ஒரு pump ம் (குறைந்த மின்சார வலு 12v -25v ), uv filter ம் (பாசி பிடியாது) தேவை. வாரத்திற்கு ஒருமுறை filter ஐ சுத்திகரிக்க வேண்டும். விருப்பமானால் மின்குமிள்களும் நீரிற்கு அடியில் பொருத்தலாம். குறைந்த மின்சார வலு சாதனங்கள் பாவித்தால் செலவும் குறைவு. ஆபத்துமில்லை. விலையும் அதிகமில்லை.

filter இல் இருந்து வரும் நீர் தடாகத்திற்கு செல்லும் முன் சிறிய மலை, நீர்வீழ்ச்சி மாதிரி அமைத்து பூக்களும் நட்டு அழகுஊட்டலாம்.

தங்க மீன்களைப் பராமரிப்பது இலகு. வீட்டுத் தொட்டியில் வளர்ப்பதை விட இலகுவானது. சிலர் பெரிதாகக் கவனிப்பதேயில்லை. koi மீன்கள் பார்க்க அழகாகவும் பெரிதாகவும் இருக்கும். ஆனால் கூடிய பராமரிப்புத் தேவை.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ மனதிற்கு இதமான பொழுதுபோக்கை விட்டிட்டு பிரசர் ஏறுகிற விடயத்தை பார்த்துக் கொண்டிருக்க நல்லா இருக்கா?

என்னவோ... தெரியாது வல்வைசகாரா,

யாழில் இணைந்த பின் எனது பொழுது போக்குகள் மிகக்குறுகி விட்டது.

முன்பு தோட்டம், மீன் வளர்ப்பு, சைக்கிள் ஓடுதல், நண்பர்களுடன் சந்திப்பு என்று எனது பொழுது போக்கு விரிந்து இருந்தது.

இப்போது... எதுவுமே... பிடிப்பதில்லை.

மனைவி கூட, "லீவு கிடைச்சால்.... கொம்புயூட்டருக்குள்ளை தலை ஓட்டிக் கொண்டிருக்கிறதே... இந்த மனுசனுக்கு வேலையாய் போச்சுது" என்று பேசுவா. ஆரை நோக.

ஸ்காலரை மீன் ??

4-orinoco-altum425.jpg

Edited by தமிழ் சிறி

கிழமைக்கு ஒருமுறை கால்வாசி தண்ணீர் மாற்றினால் போதும்..! :unsure:

:lol::lol::lol:

  • தொடங்கியவர்

:lol::lol::lol:

கால்வாசிக்கு அதிகம் மாத்தினால்.. பாசி புடிக்கும்..

4-orinoco-altum425.jpg

விஞ்ஞான பெயர்...

என்னவோ... தெரியாது வல்வைசகாரா,

யாழில் இணைந்த பின் எனது பொழுது போக்குகள் மிகக்குறுகி விட்டது.

முன்பு தோட்டம், மீன் வளர்ப்பு, சைக்கிள் ஓடுதல், நண்பர்களுடன் சந்திப்பு என்று எனது பொழுது போக்கு விரிந்து இருந்தது.

இப்போது... எதுவுமே... பிடிப்பதில்லை.

மனைவி கூட, "லீவு கிடைச்சால்.... கொம்புயூட்டருக்குள்ளை தலை ஓட்டிக் கொண்டிருக்கிறதே... இந்த மனுசனுக்கு வேலையாய் போச்சுது" என்று பேசுவா. ஆரை நோக.

தோட்டம் செய்வதும் மீன் வளர்ப்பதும் நல்ல பொழுது போக்கு. உடற்பயிற்சியுடன் மனதுக்கும் ஒரு ஆறுதலைத் தரும்.

பை தி வே நீங்கள் சொன்ன மாதிரி 'கோல்ரபி' பயிரிட்டு நேற்றுத்தான் சமைத்து சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. :)

  • கருத்துக்கள உறவுகள்

தங்க மீன்கள் (gold fish) நல்ல குளிருக்கும் தாக்குப் பிடிக்கும். (தடாகத்தின் ஆழத்தைப் பொறுத்தது - குறைந்தது 600mm ஆழம் தேவை) ஆழம் கூடினால் அடியில் சென்று உயிவாழும்.

ஐப்பசியிலிருந்து பங்குனி ஆரம்பம் மட்டும் உணவுகள் கொடுக்கக் கூடாது. குளிர்காலங்களில் உறங்கு நிலைக்கு சென்று விடும். தங்க மீன்கள் cold blooded ஆகையால் குளிர் காலத்தில் உண்ணும் உணவுகள் சமீபாடடையாமல் இருந்து அழுகி நோய்கள் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம். குளிர் காலங்களில் கொடுப்பதற்கென்றே விசேடமான weed grain இல் தயாரிக்கப்பட்ட உணவுகள் உண்டு. அவை தேவையில்லை.

இங்கு சென்ற குளிர்காலத்தில் - 10 இற்கு சென்றது. வடக்கு இங்கிலாந்தில் இன்னும் குளிர். அங்கும் வளர்க்கிறார்கள். பனிஉறை காலங்களில் சில பந்துகளை (football , teniss ball) தடாகத்தில் மிதக்க விட்டால் சிறு ஒட்டைகளிநூடாக சுவாசித்துக் கொள்ளும்.

கோடை காலங்களில் கட்டாயம் ஒரு pump ம் filter ம் தேவை. வாரத்திற்கு ஒருமுறை filter ஐ சுத்திகரிக்க வேண்டும்.

தங்க மீன்களைப் பராமரிப்பது இலகு. வீட்டுத் தொட்டியில் வளர்ப்பதை விட இலகுவானது. சிலர் பெரிதாகக் கவனிப்பதேயில்லை. koi மீன்கள் பார்க்க அழகாகவும் பெரிதாகவும் இருக்கும். ஆனால் கூடிய பராமரிப்புத் தேவை.

நல்ல தகவல் தப்பிலி. 600 mm என்பதை, 60 cm (முழங்கை அளவு தண்ணி) என்று மாற்றினால் எம்மவர்களும் தோட்டத்தில் தங்க மீன் வளர்ப்பார்கள். s-tiere-goldfisch.gif :)

மீன் தொட்டி நன்றாக உள்ளது பகிர்ந்தமைக்கு நன்றி.

எண்ட மீன் தொட்டி வீடியோ.....

...

மிக மிக அரிதான மீன்கள்... உங்களுக்கு சமமான இன்ட்ரெஸ்ட் இல்லாதபட்ச்சத்தில். மீன்களை பற்றி சொல்வதில் அர்த்தமில்லை.. ஆனாலும் ஒரு உதாரணத்துக்கு சொன்னா.. பச்சையும் மஞ்சலும் கலந்த கருப்பு வரிகளுடன் கானப்படும் மீன்.. இது கிழக்கு அமெரிக்காவில் டேபே நதியில் குறிப்பிட்ட அடர்ந்த்த காடும் நதியும் சார்ந்த இடத்தை சேர்ந்தது.. இதை அங்குள்ள காட்டுவாசிகளினால் புடிக்கப்பட்டு விமானம் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு.. சும்மார் 2 மாதங்கள் தனியாக வைத்து இயற்கை முறிக்கப்பட்டு எனக்கு விக்கப்பட்டது... 200 பவுனுக்கு....

கீத்துரு விமான நிலையத்துக்குள்ளால் எப்படி அனுமதித்தார்கள்? :unsure:

ஊரில் பல விதமான மீன்கள் பொலித்தீன் பையில் நீரூற்றி வீட்டுக்குக் கொண்டு வருவேன், இரண்டு ஆமைகள் கூட கிணற்றில் விட்டு வளர்த்தேன்.. எனது அண்ணன் 'இன்றைக்கு மீன்பொரியலும், ஆமைக்கறி சமைப்பமா' என்று கேட்டு அடிக்கடி என்னை வெறுப்பேத்துவான்.

வளர்ப்பு மீன்கள், வளர்ப்புப் பறவைகள் (love birds) வீட்டில் இறந்தால் அது குடும்ப பிரிவுகளுக்கு/ மரணத்திற்கு காரணமாகிவிடும் என்று சிலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன். உண்மையோ பொய்யோ தெரியாது... வளர்ப்புப் பறவைகள் கொஞ்சக் காலம் வளர்த்தேன் அது சிறிது காலத்தில் இறந்துவிடவே மனம் தளர்ந்து போய், பொழுது போக்கிற்காக உயிரினங்களை வளர்ப்பதை கைவிட்டு விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டம் செய்வதும் மீன் வளர்ப்பதும் நல்ல பொழுது போக்கு. உடற்பயிற்சியுடன் மனதுக்கும் ஒரு ஆறுதலைத் தரும்.

பை தி வே நீங்கள் சொன்ன மாதிரி 'கோல்ரபி' பயிரிட்டு நேற்றுத்தான் சமைத்து சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. :)

தப்பிலி, நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் வேலைப்பழுவும் கூடிவிட்டதால்....

எல்லாவற்றையும் துறக்க வேண்டியாய்ப் போச்சுது. கொலராபியை பற்றிய தகவலை உங்களிடளிடம், கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நீங்களே... சொன்னதில் மகிழ்ச்சி. :)

கொலராபி பற்றிய தகவலை பார்க்க... கீழே.... அழுத்தவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79489&st=20

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.